Sunday, August 21, 2011

கோலாகல கோகுலாஷ்டமி











































கல்யாணரூபாய கலௌ ஜனானாம் கல்யாணதாத்ரே கருணாஸுதாப்தே
கம்ப்வாதி திவ்யாதஸத்கராய வாதாலயாதீஸா நமஸ்தே //......



நாராயண நாராயண நாராயண நாராயண


தேவகி, வசுதேவர், உத்தவர் முதலியவர்களால் பூஜிக்கப்பட்டு, ப்ரஹஸ்பதி மற்றும் வாயுவால் பிரதிஷ்ட்டை செய்யப்பட்ட ஸ்ரீ கிருஷ்ண விக்ரஹம் குருவாயூரில் சிரிக்கும் குருவாயூரப்பன் .  ஸ்ரீ குருவாயூரப்பன் பஞ்சரத்னம் ஒவ்வொரு நாராயணீய பாராயணத்திலும் சொல்லி வணங்கும் அற்புத ஸ்தோத்திரம்.


பாலான் ஸ்வகீயான் தவ ஸன்னிதானே திவ்யான்னதானாத் பரிபாலயத்பி: 
ஸதா படத்பிஸ்ச புராணரத்னம் ஸம்ஸேவிதாயாஸ்து நமோ நமஸ்தே.


நாராயண நாராயண நாராயண நாராயண
நாராயண நாராயண நாராயண நாராயண..(16 முறை)


குருவாயூரப்பா! உன் சன்னிதானத்தில் குழந்தைகளுக்கு அன்னப்ராசனம் செய்து வைத்து, தங்கள் குழந்தைகளை ரக்ஷிக்கிறவர்களாலும், எப்போதும் ஸ்ரீபாகவதத்தை பாராயணம் செய்கிற பக்தர்களாலும் நன்கு பூஜிக்கப்படும் உனக்கு நமஸ்காரம்.

அசுரர்களை அழித்து மக்களைக் காக்க மகாவிஷ்ணு பல அவதாரங்களை எடுத்ததில் எட்டாவது அவதாரம் ஸ்ரீகிருஷ்ணரின் அவதாரத் திருநாள்தான் கிருஷ்ண ஜெயந்தியாகக் கொண்டாடப்படுகிறது. ஸ்ரீஜெயந்தி, ஜென்மாஷ்டமி, கோகுலாஷ்டமி என பல பெயர்களில் கொண்டாடப்படுகிறது.
god krishna

கிருஷ்ண பகவான் ரோகிணி நட்சத்திரத்தில் அஷ்டமியன்று பிறந்தார்.  அதனால் இது இருவிதமாகக் கொண்டாடப்படுகிறது.ஆவணி மாதம் ரோஹினி நட்சத்திர நாளில் கோகுலாஷ்டமி வருகிறது. கிருஷ்ணர் அஷ்டமி திதியன்று நள்ளிரவில் பிறந்ததால் -என்று அஷ்டமி நள்ளிரவில் வருகிறதோ அன்று கோகுலாஷ்டமி கொண்டாடப்படுகிறது.ரோகினி நட்சத்திரமும் அஷ்டமியும் சேர்ந்து வந்தால் அது இரட்டிப்பு கோலாகலத்துடன் கொண்டாடப்படுகிறது.


இந்த கோகுலாஷ்டமி நாளன்று வீட்டில் வாசலிலிருந்து பூஜை அறை வரை அரிசி மாவை நீரில் கரைத்து அந்த மாவைக் கொண்டு சிறு குழந்தையின் காலை வரைவதற்கு குழந்தை கிருஷ்ணர் வீட்டிற்குள் வருவதாகப் பொருள்.

செல்வத்தை அள்ளித் தரும் அலங்காரத்தில் பிரியம் கொண்ட அழகுக் குழந்தை வெண்ணெய் என்றால் மிகவும் இஷ்டம் என்பதால் ஆயர்பாடியில் ஒவ்வொரு வீடாக சென்று வெண்ணெய் திருடித் தின்றக் கதையை எத்தனை தடவைக் கேட்டாலும் அலுக்காது. அதன் அழகே தனியழகு. அதனால் கிருஷ்ண ஜெயந்தியன்று வெண்ணெய் நிச்சயம் உண்டு. அதேப் போல குசேலர் தந்த ஒருபிடி அவலுக்கு கிருஷ்ணர் செல்வத்தை அள்ளித் தந்ததால் அன்று அவலுக்கும் தனி இடம் உண்டு.  குழந்தைகள் இருக்கும் வீட்டில் சாக்லேட், ஐஸ்கிரீம், இனிப்பு பண்டங்கள் என இனிப்பு வகைகள் நிறைந்திருக்குமல்லவா? கிருஷ்ணர் அனைவருக்கும் பிடித்த செல்லக் குழந்தை என்பதால் கண்ணனுக்கு பிடித்தமான வெண்ணெயும் அவலும் வெல்லச்சீடை, உப்புச்சீடை போன்ற நிவேதனப் பொருளுடன் சிறப்பான இடம் பிடித்திருக்கும். 
Dessert Clip Art


கோகுலத்தில் கண்ணன் கோபியர் வீடுகளில் வெண்ணெய் திருடித் தின்று லீலைகள் செய்தவன். கண்ணனது பால்ய சிநேகிதன் குசேலர் கண்ணனைக் காண வரும் போது, அவர் கொண்டுவந்த அவலை கண்ணன் உண்ட போது குசேலரது வறுமை மறைந்து வளம் பெற்றதாகவும் புராணங்கள் மூலம் அறிகிறோம். எனவேதான் வெண்ணெய்க்கும் அவலுக்கும் நிவேதனத்தில் சிறந்த இடம்.

இந்த பண்டிகை தினத்தன்று கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். கிருஷ்ணர் நள்ளிரவில் பிறந்ததாக கூறப்படுவதால் நள்ளிரவு 12 மணிக்கு விசேஷ பூஜைகள் நடைபெறும்.

அன்றைய தினம் கிருஷ்ணனுக்கு மலர் மாலைகள் சூட்டி வழிபடும் போது துளசி மாலையும் அணிவிப்பது சிறந்தது.

அறிவாற்றல், நற்புத்தி, நேர்மை, சமயோசித புத்தி (presence of mind) ஆகியவற்றின் மொத்த வடிவமான பகவானை வழிபட்டு அவர் காட்டிய கீதை வழி காட்டுவதே இப்பண்டிகையின் தத்துவார்த்தம்.
[krishna_baal.jpg]

ஜகதோ தாரண.. அடிசிதளெசோதா..’ இந்த உலகத்தைத் தாங்குகிற பகவான் கிருஷ்ணனுடன் அது எதுவும் தெரியாமலே யசோதை விளையாடினாள்-நாமும்...

ஆயர்பாடி கண்ணனை ஆராதிப்போம்!

ஆனந்தம் அடைந்து மகிழ்வோம்! “
[8.BMP][5.BMP]

[13.jpg]


49 comments:

  1. அழகான கடவுள் படங்களுடன் பதிவு..
    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. நாளுகேற்ற பதிவு.

    ReplyDelete
  3. அருமையான விளக்கம் .
    பரவசமூட்டும் படங்கள் .வாழ்த்துக்களோடு ,நன்றியையும் தெரிவிக்கிறேன்.

    ReplyDelete
  4. கோகிலாஷ்டமியில் சிறப்புப் பதிவு
    மிக சிறப்பாக இருக்கும் என எதிர்பார்த்தே
    தங்கள் பதிவுக்குள் நுழைந்தேன்
    நான் எதிர்பார்த்தபடியே ஏராளமான
    படங்களுடன் அசத்திவிட்டீர்கள்
    மிகச் சிறந்த பதிவைத் தந்தமைக்கு நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. கோலாகல கோகோலாஷ்டமிதான்.உங்கள் பதிவால் எங்களுக்கும்.!

    ReplyDelete
  6. @ vidivelli said...
    அழகான கடவுள் படங்களுடன் பதிவு..
    வாழ்த்துக்கள்...//

    கோகுலாஷ்டமி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. @ SANKARALINGAM said...
    நாளுகேற்ற பதிவு.//

    நன்றி.

    ReplyDelete
  8. @ goma said...
    அருமையான விளக்கம் .
    பரவசமூட்டும் படங்கள் .வாழ்த்துக்களோடு ,நன்றியையும் தெரிவிக்கிறேன்.//

    பரவசமூட்டும் கோகுலாஷ்டமி வாழ்த்துக்கள்.நன்றி.

    ReplyDelete
  9. @ Ramani said...
    கோகிலாஷ்டமியில் சிறப்புப் பதிவு
    மிக சிறப்பாக இருக்கும் என எதிர்பார்த்தே
    தங்கள் பதிவுக்குள் நுழைந்தேன்
    நான் எதிர்பார்த்தபடியே ஏராளமான
    படங்களுடன் அசத்திவிட்டீர்கள்
    மிகச் சிறந்த பதிவைத் தந்தமைக்கு நன்றி
    தொடர வாழ்த்துக்கள்/

    அசத்தலான கோகுலாஷ்டமி வாழ்த்துக்கள்.நன்றி.

    ReplyDelete
  10. @ கோகுல் said...
    கோலாகல கோகோலாஷ்டமிதான்.உங்கள் பதிவால் எங்களுக்கும்.!//

    கோகுலுக்கு கோலாகல கோகோலாஷ்டமி வாழ்த்துக்கள். நன்றி.

    ReplyDelete
  11. கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல..

    குதூகலம் ததும்பும் கோகுலாஷ்டமி நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  12. கோலாகல கோகுலாஷ்டமி வாழ்த்துக்கள்.

    ஜொலித்திடும் படங்கள்.
    பிரமிக்க வைக்கும் வர்ணனைகள்.
    அசத்தும் அருமையான ஸ்லோகங்கள்.

    அன்றைய குழந்தைக் கண்ணனுக்கும் இன்றைய குழந்தைகளான கண்ணன்களுக்கும் பிடித்த பிரஸாதங்களைக் காட்டியிருப்பது தனிச்சிறப்பு.

    நல்ல நாளுக்கேற்ற அழகான பதிவுக்கும், பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

    //கல்யாணரூபாய கலௌ ஜனானாம் கல்யாணதாத்ரே கருணாஸுதாப்தே
    கம்ப்வாதி திவ்யாதஸத்கராய வாதாலயாதீஸா நமஸ்தே //......


    நாராயண நாராயண
    நாராயண நாராயண

    நாராயண நாராயண
    நாராயண நாராயண

    நாராயண நாராயண
    நாராயண நாராயண

    நாராயண நாராயண
    நாராயண நாராயண

    vgk

    ReplyDelete
  13. கோகுலாஷ்டமி உங்கள் தளத்திலேயே கொண்டாடியது போல் உள்ளது .

    ஒளிரும் விளக்கு ,கிருஷ்ணனை அர்சிக்கும் பூக்கள் அருமை .

    மற்ற படங்கள் தெளிவில்லை என்றாலும் அது சொல்லும் அர்த்தங்கள் அடடா அருமை .

    தேடிபிடித்து பதிவிடும் தங்கள் சேவை தொடரட்டும் ,தொடர்கிறேன் மேடம்

    ReplyDelete
  14. கோகுலாஷ்ட்டமியை இங்கியே
    கொண்டாடி மகிழ்ந்தோம்.

    ReplyDelete
  15. கண்ணன் பிறந்த நாளன்று சிறப்பான உங்களின் படைப்பு உள்ளத்தை கவர்ந்தது பாராட்டுகள் நன்றி

    ReplyDelete
  16. நாளுகேற்ற பதிவு.

    ReplyDelete
  17. மிகச் சிறந்த அழகான பதிவுக்கும், பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
    பாராட்டுக்கள்.

    கோலாகல கோகோலாஷ்டமி வாழ்த்துக்கள்!

    by Gokulakrishnan.A

    ReplyDelete
  18. அழகிய படங்களுடன் கூடிய பதிவிற்கு நன்றிகள். அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  19. மோகனக்கண்ணனின் அழகுப் படங்கள் பார்த்து ரசித்தேன்.

    ReplyDelete
  20. கடவுள் படங்களுடன் அழகான பதிவு..
    nice..

    ReplyDelete
  21. @ ரிஷபன் said...
    கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல..

    குதூகலம் ததும்பும் கோகுலாஷ்டமி நல்வாழ்த்துகள்.//


    குதூகலம் ததும்பும் கோகுலாஷ்டமி நல்வாழ்த்துகள். நன்றி.

    ReplyDelete
  22. வை.கோபாலகிருஷ்ணன் said...
    கோலாகல கோகுலாஷ்டமி வாழ்த்துக்கள்.

    ஜொலித்திடும் படங்கள்.
    பிரமிக்க வைக்கும் வர்ணனைகள்.
    அசத்தும் அருமையான ஸ்லோகங்கள்.

    அன்றைய குழந்தைக் கண்ணனுக்கும் இன்றைய குழந்தைகளான கண்ணன்களுக்கும் பிடித்த பிரஸாதங்களைக் காட்டியிருப்பது தனிச்சிறப்பு.

    நல்ல நாளுக்கேற்ற அழகான பதிவுக்கும், பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

    //கல்யாணரூபாய கலௌ ஜனானாம் கல்யாணதாத்ரே கருணாஸுதாப்தே
    கம்ப்வாதி திவ்யாதஸத்கராய வாதாலயாதீஸா நமஸ்தே //......


    நாராயண நாராயண
    நாராயண நாராயண

    நாராயண நாராயண
    நாராயண நாராயண

    நாராயண நாராயண
    நாராயண நாராயண

    நாராயண நாராயண
    நாராயண நாராயண

    vgk//

    நலம் தரும் நாராயண மந்திரத்துடன் கோகுலாஷ்டமி நல்வாழ்த்துக்கள். நன்றி.

    ReplyDelete
  23. @ M.R said...
    கோகுலாஷ்டமி உங்கள் தளத்திலேயே கொண்டாடியது போல் உள்ளது .

    ஒளிரும் விளக்கு ,கிருஷ்ணனை அர்சிக்கும் பூக்கள் அருமை .

    மற்ற படங்கள் தெளிவில்லை என்றாலும் அது சொல்லும் அர்த்தங்கள் அடடா அருமை .

    தேடிபிடித்து பதிவிடும் தங்கள் சேவை தொடரட்டும் ,தொடர்கிறேன் மேடம்//

    நன்றி அருமையாய் தொடர்வதற்கு.

    ReplyDelete
  24. @ Lakshmi said...
    கோகுலாஷ்ட்டமியை இங்கியே
    கொண்டாடி மகிழ்ந்தோம்//

    கோகுலாஷ்டமி நல்வாழ்த்துக்கள். நன்றி அம்மா.

    ReplyDelete
  25. @ ஆகுலன் said...
    அழகாக உள்ளது...

    நாலு கப் டீ......(கொஞ்சம் குடிச்சு பாருங்கோ)//

    நன்றி.

    நாலுகப் டீ நன்று.

    ReplyDelete
  26. @மாலதி said...
    கண்ணன் பிறந்த நாளன்று சிறப்பான உங்களின் படைப்பு உள்ளத்தை கவர்ந்தது பாராட்டுகள் நன்றி//

    நாளுகேற்ற பதிவு.//

    கோகுலாஷ்டமி நல்வாழ்த்துக்கள். நன்றி

    ReplyDelete
  27. @ KOMATHI JOBS said...
    மிகச் சிறந்த அழகான பதிவுக்கும், பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
    பாராட்டுக்கள்.

    கோலாகல கோகோலாஷ்டமி வாழ்த்துக்கள்!

    by Gokulakrishnan.A//
    கோலாகல கோகுலாஷ்டமி நல்வாழ்த்துக்கள். நன்றி

    ReplyDelete
  28. @
    பிரகாசம் said...
    அழகிய படங்களுடன் கூடிய பதிவிற்கு நன்றிகள். அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    கோலாகல கோகுலாஷ்டமி நல்வாழ்த்துக்கள். நன்றி

    ReplyDelete
  29. மகேந்திரன் said...
    மோகனக்கண்ணனின் அழகுப் படங்கள் பார்த்து ரசித்தேன்.//

    கோலாகல கோகுலாஷ்டமி நல்வாழ்த்துக்கள். நன்றி

    ReplyDelete
  30. குணசேகரன்... said...
    கடவுள் படங்களுடன் அழகான பதிவு.//

    நன்றி.கோகுலாஷ்டமி நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  31. அருமையான பதிவு.
    படங்களும் அருமை.
    மனப்பூர்வ வாழ்த்துக்கள்.
    http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_16.html

    ReplyDelete
  32. கோகுலாஷ்டமிக்காக வெளியிட்டிருக்கும் சிறப்புப்
    பகிர்வு அருமையிலும் அருமை!..படங்களை பார்க்கப்
    பார்க்க பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல் உள்ளது.
    கூடவே ஒரு சின்ன ஆசை என் தளத்தில் இந்தக் கண்ணன்
    படத்தில் பனிமழை பொழிவதுபோல் உள்ள காட்சியை எப்படியும்
    என் தளத்திலும் சேர்க்க வேண்டும்போல் உள்ளது சகோ .அருமையான
    படைப்பு .என்னை மகிழ வைத்த உங்களை சிரிக்க வைக்க என்
    தளம் காத்திருக்கின்றது வாருங்கள் சிரிப்போம் ......நன்றி பகிர்வுக்கு.

    ReplyDelete
  33. படங்கள் மிக அழகு.கோகுலஷ்டமி நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  34. அனைவருக்கும் இனிய கோகுலாஷ்டமி வாழ்த்துகள்.

    நல்ல படங்கள். ஒவ்வொரு நாளும் இத்தனை படங்களுடன் பதிவு எழுதும் உங்கள் உழைப்பு பிரமிக்க வைக்கிறது சகோ.

    ReplyDelete
  35. கடவுள் படங்களுடன் பதிவு ரசித்தேன் நன்றி

    ReplyDelete
  36. ."கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா கீதையின் நாயகனே..."
    முதல் படம் கொள்ளை அழகுகுழந்தையும் தெய்வமும் கொண்டாடுமிடத்தில் என்பது போல கண்ணனைக் குழந்தையாகக் கொண்டாடுவதில் ஆனந்தம்.

    ReplyDelete
  37. என் இனிய கோகுலாஷ்டமி வாழ்த்துகள்..,சகோ..,

    ஒவ்வொரு படங்களும் மிக அருமை..,சகோ

    பகிர்வுக்கு நன்றி..

    ReplyDelete
  38. முதல் அனிமேசன் படம் எப்படி செட் செய்தீர்கள் என்றே தெரியவில்லை அசத்தல் ... கோகுலாஷ்டமி வாழ்த்துகள்...

    ReplyDelete
  39. கோகுலாஷ்டமி நல்வாழ்த்துக்கள்.பதிவு மனத்தைக் கவர்ந்தது.

    ReplyDelete
  40. பதிவும் படங்களும் அருமை வாழ்த்துக்கள்

    ReplyDelete
  41. அழகான படங்களுடன் பதிவு..
    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  42. கண்ணன் என்றாலே கோலாகலம்தான்; குதூகலம்தான்.உங்கள் பதிவும் அது போலவே!

    ReplyDelete
  43. கோகுலாஷ்டமி வாழ்த்துக்கள்

    ReplyDelete
  44. மிக மிக அருமையான படங்களுடன் நல்ல பதிவு. சில படங்களை நான் சுட்டு விட்டேன் கோகுலக் கண்ணன் சுப்பர். வாழ்த்துகள் சகோதரி.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  45. அழகான படங்கள். இன்னும் மெருகு.

    ReplyDelete
  46. அழகான படங்கள் - சூபர்ப்!

    பண்டிகையை முடித்து பாடல்கள் கேட்டுக் கொண்டே ஐ-பாடில் பதிவுகளைப் பார்த்துக் கொண்டிருந்த போது உங்கள் அழகுக் கிருஷ்ணனின் படம் - கேட்டுக் கொண்டிருந்த பாடல், ஜேசுதாஸின் குரலில், 'ஸ்வாகதம் கிருஷ்ணா'!!

    ReplyDelete
  47. நம்பாத்துல நுழைந்து கண்ணனுடன் கொஞ்சி விளையாடி மகிழ்ந்த மனநிறைவு ஏற்படுகிறதுப்பா இராஜராஜேஸ்வரி....

    இப்படி ஒரு புண்ணியச்சேவை செய்கிறீர்கள்பா நீங்க... தினமும் இப்படி பதிவுகள் உங்களது தொடர்ந்துக்கொண்டே இருக்கவேண்டும்பா...

    எங்க தாத்தா வழக்கபடி தான் ஜென்மாஷ்டமி கொண்டாடுகிறோம்..க்ருஷ்ண ஜெயந்திக்கு முன் நாள்....

    நான் ஆபிசு முடிந்து வீட்டுக்கு வந்து பலகாரம் எல்லாம் செய்து முடிக்கவே ராத்திரி ஒன்பதரை ஆகிட்டுதுப்பா...

    அதுக்கப்புறம் தான் க்ருஷ்ணருக்கு அலங்காரம் எல்லாம் செய்து ஸ்வாமி கும்பிட்டோம்...

    ஒரு சந்தோஷ விஷயம் என்ன தெரியுமாப்பா.. தினமும் பாகவதம் பூஜையில காலைல உட்காரும்போது படிப்பேன்.. சரியா ஜென்மாஷ்டமி அன்னிக்கு தான் க்ருஷ்ணர் பிறக்கும் பகுதி படித்தேன்.. அம்மா கிட்ட கூட சொன்னேன் இதை....

    எனக்கு இங்கு வரும்போதே கோவிலுக்கு வருவது போன்று மனம் சிலிர்ப்பதை உணரமுடிகிறதுப்பா...

    குவைத்ல கோவிலே இல்ல தெரியுமாப்பா? எங்க பூஜை அறை தான் கோவில் எனக்கு...

    இப்ப தான் தினமும் ஒரு கோவில் தரிசிக்கிறேன் உங்க புண்ணியத்தால்...

    அன்பு வாழ்த்துகள்பா...அன்பு நன்றிகள் தான் சொல்லனும் உங்களுக்கு நான்...

    ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே

    ReplyDelete