Tuesday, August 23, 2011

ஆனந்தமாய் அருளும் ஆறுபடைவீடு முருகன்





பன்னிரு விழி அழகை, முருகா 
பார்த்தால் பசி வருமா? - உன் 
பனிமொழி வாய்த் தமிழை, முருகா 
கேட்டால் துயர் வருமா?


ஓசைகள் எதற்காக - ஓம்
ஓம் என்று ஒரு தரம் பாடாமல்?
ஆசைகள் எதற்காக - உன் 
அருள் பெறும் வழியை நாடாமல்?


முருகா ... முருகா ...
முருகா ... முருகா ...

சுவாமி நாத சுவாமி திருக்கோயிலில் ஆறுபடை வீடு முருகனும் ஒரே இடத்தில் தனிதனி சன்னதிகளில் அருள்பாலிப்பது மிகப்பெரும் விசேஷம்  

திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி, திருத்தணி, சுவாமிமலை, சோலைமலை மண்டபம் ஆகிய ஆறுபடைவீடுகளில் முருகப்பெருமான் எந்த பெயரில் எந்த திசை நோக்கி வீற்றிருந்து அருள்பாலிக்கிறாரோ, அதே பெயரில் அதே திசையில் இங்கும் அருள்பாலிக்கிறார்.
சுவாமிநாத சுவாமி திருக்கோயிலுக்கு வந்து இங்குள்ள ஆறு முருகப்பெருமானை தரிசித்தால் ஆறுபடைவீடும் சென்று தரிசித்த திருப்தி ஏற்படும்.

ஆறு திருப்பதியில் வளர் பெருமான் ஒரேதிருத்தலத்தில் அற்புதமாக அருளும் தலம்.
  தமிழ் மறை நூல்களில் ஆறுமுகனின்ஆறுபணிகள்

1. அறியாமை அகற்றி ஞானம் வழங்குகிறது.

2. பிரார்த்தனைகளை  நிறைவேற்றுகிறது.

3. பக்தர்களுக்கு வலிமையையும், ஊக்கத்தையும் அளிக்கிறது.

4.மறைந்துள்ள ரகசியங்களை வெளிக் கொணர்ந்து மனதில் வைராக்கியத்தை உண்டாக்குகிறது.

5.நல்லவர்களைக்காத்து தீயவர்களை அழிக்கிறது.

6.எல்லா உயிர்களுக்கும் மகிழ்ச்சியை அளிக்கிறது.

முருகன் படைத்தல், காத்தல்,  அழித்தல் மற்றும் எல்லாத்தொழில்களையும் செய்கிறார் என்பது 12 கரங்களில் உள்ள ஆயுதங்களால் விளங்குகிறது.

இந்த பூவுலகிலுள்ள ஒவ்வொரு மனிதப்பிறவியும் ஐம்பூதங்களாலும்
உள்ளே இருக்கும் ஆன்மாவாலும் ஆனது.

முருகப்பெருமானுக்கு, சிவனின் நெற்றியிலிருந்து தோன்றிய தீப்பொறிகள் ஆன்மாவாவும், உடல் ஐம்பூதங்களாலும் அமைந்திருக்கிறது.

இது இறைவன் மனிதப்பிறவி எடுக்கும் போது அதற்கேற்ற முறையில் அவரது உருவம் அமைவதை உணர்த்துகிறது.
தந்தைக்கே குருவானவன்
நாடறியும் நூறு மலை நான் அறிவேன் சுவாமிமலை
கந்தன் ஒரு மந்திரத்தை
தந்தையிடம் சொன்ன மலை
சுவாமிமலை... சுவாமிமலை
முருகப்பெருமானின் ஆறுபடைவீடுகளில் நான்காம் படைவீடு சுவாமிமலை.

தந்தையாகிய சிவ பெருமானுக்கு குருவாக இருந்து, "ஓம்' என்னும் பிரணவ மந்திரத்திற்கு பொருளை உபதேசித்தவர் முருகன்.

இந்த சுவாமிநாத சுவாமியை வணங்கினால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவதோடு ஞானமும் கிடைக்கும்.

ஒரு மனிதனுக்கு மிகவும் முக்கியமானது கல்விச்செல்வம்.

இத்தகைய கல்வி செல்வம் வற்றாமல் கிடைப்பதற்காகத்தான்
குமரன் கோட்டத்தில் சுவாமிநாதசுவாமி கோயில் எழுந்தருளியிருக்கிறது.

கோயில் அமைப்பு 

வெண்மை... தூய்மை.. என்பதற்கேற்ப கோயில் முழுவதுமே வெண்மைதான்.

ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரத்தின் உள்ளே சென்றதும் நான் உயர்ந்தவன் என்ற ஆணவம் நீங்கி, "நான்' என்பதை விட உயர்ந்தது இந்த ராஜகோபுரம் என்ற உணர்வு ஏற்படுகிறது. 
வலதுபக்கத்தில் வினைதீர்க்கும் விநாயகன் தனது தம்பியின் கோயிலில் முழுமுதற்கடவுளாக அருள்பாலிக்கிறார். 
குன்றிருக்கும் இடமெல்லாம் இருக்க கூடிய குமரன் சரவணப்பொய்கையில் அவதரித்ததை நினைவுகூறும் வகையில் பிரம்மாண்டமான தீர்த்த தொட்டியின் நடுவிலே தாமரை இதழ்களில் குழந்தை முருகனின் அவதார நிலை. 

இந்த சரவண பொய்கையை அஷ்டதிக் பாலகர்கள் 
காவல் காத்து வருகிறார்கள்.

நம்மிடம் உள்ள காமம், கோபம், பேராசை, பற்று, அகங்காரம் என்ற பஞ்ச விகாரங்களையும் பலியிட்டு விட்டு முருகனிடம் செல்வதற்காக பலிபீடம் அமைக்கப்பட்டுள்ளது.

கொடிமரத்தையும் மயில் வாகனத்தையும் தாண்டி சென்றால் உலக நாயகனான தந்தை ஈசனுக்கே பாடம் சொன்ன சுவாமிநாத சுவாமி சந்தனக்காப்புடன் ராஜ அலங்காரத்தில் "நானே அழகு' என்பது போல் மூலஸ்தானத்தில்

மூலஸ்தான முருகன் ஒரு ஆள்உயரத்திற்கும் அதிகமான ஆகிருதியுட்ன் பேசும் தெய்வமாக அருள்பாலிக்கும் அழகுத்தலம்.

முருகனுக்கு மயில்தானே வாகனம்.

ஆனால் இங்கோ சுவாமிமலையில் இருப்பது போலவே
யானை வாகனமாக உள்ளது.

முருகனின் அழகை  பார்க்கலாம்... பார்க்கலாம்... பார்த்துக்கொண்டே இருக்கலாம். அப்படி ஒரு அழகு.

முருகனிடம் கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே நாம் செல்வோம்.  ஆனால் சுவாமிநாதனை பார்த்தவுடனேயே அவனைப்பார்த்தாலே போதும் அனைத்தையும் அடைந்து விட்ட திருப்தி ஏற்பட்டுவிடும்.
அறுபடை வீடு
மூலஸ்தான சுவாமிநாதனை தரிசித்து விட்டு வலம் வந்தால் திருத்தணிகை வேலன், வள்ளி- தெய்வானையுடன் தனி சன்னதியில் அருள்புரிவதை தரிசிக்கலாம். 
திருத்தணி சுப்ரமணியர்
சூரனை வதம் செய்த திருச்செந்தூர் செந்திலாண்டவர் 
வேலுடன் தனி சன்னதியில் காட்சிதருகிறார்.

தெய்வானையுடன் திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கேட்டதையெல்லாம் கொடுக்கும் வள்ளலாக வீற்றிருக்கிறார். 

தனக்கு வேண்டிய மாம்பழத்தை தன் அண்ணனுக்கு கொடுத்ததற்காக கோபித்து சென்ற பழநி தண்டாயுதபாணி, கையில் தண்டம் ஏந்தி, "எதற்கும் ஆசைப்படாதே' என நமக்கு அறிவுறுத்துவது போல் அவரே துறவியாக தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். 

இல்வாழ்க்கை இனிமையாக அமைய என்னை வணங்கு என்பதைப் போல், வள்ளி தெய்வானையுடன் கல்யாண சுப்பிரமணியர் தனி சன்னதியில் அருளாசி அள்ளி வழங்குகிறார்.

இப்படி ஆறுபடை வீடு திருமுருகனும் ஒரே இடத்தில் தனித்தனி சன்னதியில் வீற்றிருந்து அருள்பாலிப்பதை பார்க்க பார்க்க, நாம் வாழ்வதற்கு தேவையான அனைத்து வளங்களும் ஒரே இடத்தில் கிடைத்து விட்ட நிம்மதி ஏற்படும்.

ஆறுபடைமுருகனை தரிசித்து விட்டு வந்தால் முருகனின் பெற்றோர்கள் காசி விஸ்வநாதர் - விசாலாட்சி தனி சன்னதிகளில் நம்மை ஆசீர்வதிக்கிறார்கள்.

அத்துடன் 63 நாயன்மார்களும்,
ஒரே கல்லினாலான நவக்கிரகமும் அமைந்துள்ளது சிறப்பம்சமாகும்.

அருள்மிகு சுவாமி நாத சுவாமி திருக்கோயில்,
கோவை குமரன் கோட்டம்,
திருச்சி சாலை,
கோயம்புத்தூர் மாவட்டம்.
கோயம்புத்தூர்-641 402
Lotus BlossomingLotus BlossomingLotus Blossoming
Lotus BlossomingLotus BlossomingLotus Blossoming
சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமில்லை; 
சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமில்லை

ஆறு படை முருகன்

46 comments:

  1. முதல் பார்வையாக ஸ்வாமிமலை முருகன்
    தரிசனம் கண்டேன்
    வழக்கம்போல் விளக்கங்களும் படங்களும்
    மிக மிக அருமை
    இதழ் இதழாக விரியும் தாமரை அற்புதம்
    அற்புதமான ஆனந்தமான பதிவினைத்
    தந்தமைக்கும் நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. //சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமில்லை;
    சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமில்லை//

    திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு மிஞ்சிய ஆன்மீகப்பதிவுகள் இல்லை;

    அதனிலில் இல்லாத அற்புதப்படங்களும் இல்லை.

    பாராட்டுக்கள்.
    வாழ்த்துக்கள்.
    நன்றிகள்.vgk

    ReplyDelete
  3. Ramani said...
    முதல் பார்வையாக ஸ்வாமிமலை முருகன்
    தரிசனம் கண்டேன்
    வழக்கம்போல் விளக்கங்களும் படங்களும்
    மிக மிக அருமை
    இதழ் இதழாக விரியும் தாமரை அற்புதம்
    அற்புதமான ஆனந்தமான பதிவினைத்
    தந்தமைக்கும் நன்றி
    தொடர வாழ்த்துக்கள்//

    அற்புதமான ஆனந்தமான கருத்துரைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  4. @ Chitra said...
    nice.//

    கருத்துரைக்கு நன்றி

    ReplyDelete
  5. வை.கோபாலகிருஷ்ணன் said...
    //சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமில்லை;
    சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமில்லை//

    திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு மிஞ்சிய ஆன்மீகப்பதிவுகள் இல்லை;

    அதனிலில் இல்லாத அற்புதப்படங்களும் இல்லை.

    பாராட்டுக்கள்.
    வாழ்த்துக்கள்.
    நன்றிகள்.vgk//

    ஆழ்ந்த அற்புதமான கருத்துரைகளுக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  6. ஆஹா ஆறு முகமும் ஓரிடத்திலே .அருமை .

    படங்களை பார்க்கும் பொழுதே நேரில் செல்ல தூண்டுகிறது .

    பகிர்வுக்கு நன்றி மேடம்

    ReplyDelete
  7. அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலை பற்றி
    அழகான கட்டுரை, படங்கள் மிக அருமை.
    முருகன் அருள் பெற்றோம் சகோதரி

    ReplyDelete
  8. அருமையான பதிவு.
    வாழ்த்துக்கள் அம்மா.

    ReplyDelete
  9. முருகனின் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும்....

    நல்ல பகிர்வு.

    ReplyDelete
  10. ஆடும் பிள்ளையார் அருமை
    மலரும் மலரும் பெருமை
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  11. சுவாமிமலைக்கு சில முறை சென்றிருக்கிறேன்!அப்போது தெரியாதவற்றை இப்போது தெரிந்து கொண்டேன்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  12. முருகா...முருகா-என்றால் உருகாதா மனம்!

    அற்புதமான பகிர்வு.

    ReplyDelete
  13. ஆன்மீகபதிவு தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. வழக்கம்போல்
    விளக்கங்களும்..படங்களும்.. அருமை...

    ReplyDelete
  15. எல்லாமே ஆறு.சண்முகம் என்றால் ஆறு முகம் என்று பொருள்.பதிவு வழக்கம்போல நன்று.

    ReplyDelete
  16. சென்னை பெசண்ட்நகரில் இதே போல் ஒரு கோவில் இருக்கிறது.நானும் போயிருக்கிறேன்.ஆனால் இப்படியெல்லாம் எழுத ஒரு தனித் திறமை வேண்டும்.தொடரட்டும் உங்கள் பணி!

    ReplyDelete
  17. அசத்தலாக இருக்கிறது...
    அழகாக இருக்கிறது....

    பகிர்வுகளில் கோவிலைப்பற்றிய விவரங்களும் அறிய முடிகிறது...

    படங்கள் எல்லாம் கொள்ளை அழகு.. முருகனே அழகாச்சே...

    வினாயகர் அழகா தலை அசைத்து எழுதுவது ரொம்ப க்யூட்...

    தாமரை இதழ் இதழாக விரிவது கண்கொள்ளா காட்சியாக இருக்கிறதுப்பா...

    அருமையாக இருக்கிறது... எனக்கு இப்போதெல்லாம் நேரம் இருப்பதில்லை :( ஒரு தடவையாவது பார்த்ததுமே பதிந்துவிடவேண்டும் என்று நினைக்கிறேன்....

    பார்த்துவிட்டாலும் பதிய நேரம் கிடைப்பதில்லைப்பா....ரொம்ப தாமதம் ஆகிவிடுகிறது எனக்கு இராஜராஜேஸ்வரி...

    உங்களின் இந்த சேவை தொடர என் பிரார்த்தனைகள் இறைவனிடத்து...

    அன்பு வாழ்த்துகள்பா....

    ReplyDelete
  18. M.R said...
    ஆஹா ஆறு முகமும் ஓரிடத்திலே .அருமை .

    படங்களை பார்க்கும் பொழுதே நேரில் செல்ல தூண்டுகிறது .

    பகிர்வுக்கு நன்றி மேடம்//

    கருத்துரைக்கு நன்றி

    ReplyDelete
  19. மகேந்திரன் said...
    அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலை பற்றி
    அழகான கட்டுரை, படங்கள் மிக அருமை.
    முருகன் அருள்பெற்றோம் சகோதரி//


    அழகான கருத்துரைக்கு நன்றி

    ReplyDelete
  20. Rathnavel said...
    அருமையான பதிவு.
    வாழ்த்துக்கள் அம்மா.

    அருமையான கருத்துரைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  21. @ வெங்கட் நாகராஜ் said...
    Thanks for sharing such a wonderful info and photos.//

    கருத்துரைக்கு நன்றி

    ReplyDelete
  22. @ கோவை2தில்லி said...
    முருகனின் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும்....

    நல்ல பகிர்வு.//

    நல்ல கருத்துரைக்கு நன்றி

    ReplyDelete
  23. @ புலவர் சா இராமாநுசம் said...
    ஆடும் பிள்ளையார் அருமை
    மலரும் மலரும் பெருமை
    புலவர் சா இராமாநுசம்//

    மலரும் மலராய் கருத்துரைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  24. @ கோகுல் said...
    சுவாமிமலைக்கு சில முறை சென்றிருக்கிறேன்!அப்போது தெரியாதவற்றை இப்போது தெரிந்து கொண்டேன்! பகிர்வுக்கு நன்றி!/

    கருத்துரைக்கு நன்றி

    ReplyDelete
  25. @ FOOD said...
    //கந்தன் ஒரு
    மந்திரத்தை
    தந்தையிடம்
    சொன்ன மலை
    சுவாமிமலை//
    அழகனைப் பற்றிய அழகிய பகிர்வு./

    அழகிய கருத்துரைக்கு நன்றி....

    ReplyDelete
  26. @ சத்ரியன் said...
    முருகா...முருகா-என்றால் உருகாதா மனம்!

    அற்புதமான பகிர்வு./

    அற்புதமான கருத்துரைக்கு நன்றி....

    ReplyDelete
  27. @ பிருந்தாவன் said...
    ஆன்மீகபதிவு தொடர வாழ்த்துக்கள்/

    வாழ்த்துக்களுக்கு நன்றி.

    ReplyDelete
  28. @ ரெவெரி said...
    வழக்கம்போல்
    விளக்கங்களும்..படங்களும்.. அருமை...//



    அருமையான கருத்துரைக்கு நன்றி....

    ReplyDelete
  29. @ shanmugavel said...
    எல்லாமே ஆறு.சண்முகம் என்றால் ஆறு முகம் என்று பொருள்.பதிவு வழக்கம்போல நன்று.//

    தெளிந்த கருத்துரைக்கு நன்றி....

    ReplyDelete
  30. @ சென்னை பித்தன் said...
    சென்னை பெசண்ட்நகரில் இதே போல் ஒரு கோவில் இருக்கிறது.நானும் போயிருக்கிறேன்.ஆனால் இப்படியெல்லாம் எழுத ஒரு தனித் திறமை வேண்டும்.தொடரட்டும் உங்கள் பணி!//

    திறமையான கருத்துரைக்கு நன்றி....

    ReplyDelete
  31. @ மஞ்சுபாஷிணி said...
    அசத்தலாக இருக்கிறது...
    அழகாக இருக்கிறது.//


    ஆத்மார்த்தமான அன்பான கருத்துரைக்கு நன்றி தோழி.

    ReplyDelete
  32. சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமில்லை;
    சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமில்லை//

    கேட்கவே ஆனந்தமாக இருக்கிறது... நன்றி

    ReplyDelete
  33. உனை பாடும் தொழிலின்றி வேரில்லை
    எனை காக்க உனையின்றி யாருமில்லை முருகா முருகா

    ReplyDelete
  34. ''...சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமில்லை;
    சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமில்லை//

    மிக அற்பதம். மகிழ்ந்தேன் நன்றி..நன்றி. வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  35. இந்த பூவுலகிலுள்ள ஒவ்வொரு மனிதப்பிறவியும் ஐம்பூதங்களாலும் உள்ளே இருக்கும் ஆன்மாவாலும் ஆனது.//

    இதை முருகனோடு ஒப்பிட்டு சொன்ன விதம் அருமை வாழ்த்துக்கள்

    ReplyDelete
  36. சுவாமிநாத சுவாமி திருக்கோயிலுக்கு வந்து இங்குள்ள ஆறு முருகப்பெருமானை தரிசித்தால் ஆறுபடைவீடும் சென்று தரிசித்த திருப்தி ஏற்படும்.//

    கண்டிப்பாக செல்ல வேண்டும்... இந்த பதிவு எமது முருகனைப்பற்றியது வணக்கத்துடன் மரியாதை நிமித்தம் நன்றிகள்

    ReplyDelete
  37. கோயில் அமைப்பு
    வெண்மை... தூய்மை.. என்பதற்கேற்ப கோயில் முழுவதுமே வெண்மைதான். ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரத்தின் உள்ளே சென்றதும் நான் உயர்ந்தவன் என்ற ஆணவம் நீங்கி, "நான்' என்பதை விட உயர்ந்தது இந்த ராஜகோபுரம் என்ற உணர்வு ஏற்படுகிறது. //

    படமும் பதிவும் கோவிலுக்கு செல்ல ஆவல் தூண்டுகிறது... அருமை நன்றிகள்

    ReplyDelete
  38. நேரில் சுற்றிப் பார்த்த உணர்வு. அழகிய படங்கள். முருகன் என் இஷ்ட தெய்வம்.

    ReplyDelete
  39. @ ஸ்ரீராம். said...
    நேரில் சுற்றிப் பார்த்த உணர்வு. அழகிய படங்கள். முருகன் என் இஷ்ட தெய்வம்.//

    இஷ்ட தெய்வம் இஷ்ட வரங்கள் அளிக்கட்டும்.
    கருத்துரைக்கு நன்றி....

    ReplyDelete
  40. @ மாய உலகம் said...//

    அனைத்து அருமையான தெளிவான விளக்கமான கருத்துரைகளுக்கும் நிறைந்த நன்றிகள்.

    ReplyDelete
  41. @ kovaikkavi said...
    ''...சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமில்லை;
    சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமில்லை//

    மிக அற்பதம். மகிழ்ந்தேன் நன்றி..நன்றி. வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.//

    மிக அற்பதமான கருத்துரைகளுக்கு நன்றி.

    ReplyDelete
  42. 929+2+1=932 ;)))))

    பதிலுக்கு மிக்க நன்றி

    ReplyDelete