காவிரி போற்றுதும்! காவிரி போற்றுதும்’!!
கங்கே சயமூனேனசவா, கோதாவரி சரஸ்வதி, நர்மதே, சிந்து, காவேரி ஜலேஸ்மின் சன்னதி குரு'' எனப் போற்றுகிறது ரிக்வேத வரிகள்..
காவிரி நதி முதன்முதலில் உற்பத்தியாகும் இடம், பிரம்மகிரி மலையின் அடி வாரத்திலுள்ள தலைக்காவிரியில். த்லைக்காவிரியே நதிமூலம்.
காவிரி நதி உற்பத்தியாகும் இடத்தில், அலகாபாத்தில் திரிவேணி சங்கமம் இருப்பது போன்று, ஒரு திரிவேணி சங்கமம் இருக்கிறது.
தலைக்காவிரியில் பாகமண்டலம் என்னும் இடத்தில் காவிரியுடன், கனகா என்ற நதியும் இணைகிறது. கண்ணுக்குப் புலப்படாத சுஜ்ஜோதி என்ற மூன்றாவது நதியும் இணைகிறது.
ஸ்ரீரங்கத்தின் புகழ் பெற்ற காவிரி,மாயூரத்தில் அகண்ட காவிரியாக பிரவாகித்து ஓடுகிறாள். இதற்கு `மயிலாடுதுறை’ என்னும் ஒரு பெயருண்டு.
“ஆயிரம் ஆனாலும் மாயூரம் போல ஆகுமா?” என்பார்கள். இங்கு வேத நாயகன் விநாயகப் பெருமான், முருகன் வந்து பூஜித்திருக்கிறார்கள். நந்தி தேவரின் சாபம் விலகிய தலம். திருமகளும், கலைமகளும் தொழுத தலம். இதன் வழியே பெருகி ஓடிய பொன்னி நதி பூம்புகாரில் கடலோடு சங்கமிக்கிறாள்.
ஐப்பசி திங்கள் (மாதம்) முதல் துலாக்காவிரி நீராடுவது தலை சிறந்தது. குடகில் பிறந்த காவிரிப் பெண் அகண்ட காவிரியாக ஏறத்தாழ 1760 அடி அகலத்தில் பரந்து விரிந்து ஓடுவதை திருச்சி அருகில் திருப்பராய்த்துறையில் காணலாம்.
ஐப்பசி மாதம் முழுதுமே புண்ணிய தினங்கள்.
உண்ணாமல், உறங்காமல் நோன்பு நோற்க வேண்டிய அவசியம் இல்லை. வீட்டிற்கு வரும் சுமங்கலிக்கு தாம்பூலம், ரவிக்கைத் துணி வைத்துத் தந்தாலே புண்ணியம்தான்.
உண்ணாமல், உறங்காமல் நோன்பு நோற்க வேண்டிய அவசியம் இல்லை. வீட்டிற்கு வரும் சுமங்கலிக்கு தாம்பூலம், ரவிக்கைத் துணி வைத்துத் தந்தாலே புண்ணியம்தான்.
தலைக் காவிரியில் கோயில்:
தலைக் காவிரியில் கோயிலில் நாள்தோறும் பூசைகள் செய்ய, அப்போதைய மைசூர் மகாராஜா 400 பிராமணர்களைத் தலைக் காவிரியில் குடியமர்த்தினார். அந்தக் குடும்பங்களைச் சேர்ந்த ஒரு பிராமணக் குடும்பம் மட்டும் இன்றும் தலைக் காவிரியில் இருக்கிறது.
தலைக் காவிரியில் வருடந்தோறும் தீர்த்தோத்பவ விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
மத்தியரங்கம்
ஸ்ரீரங்கப்பட்டணத்தில் உள்ள அரங்கனை ஆதிரங்கன் என்றும் சிவசமுத்திரத்தில் உள்ள அரங்கனை மத்தியரங்கன் என்றும் திருவரங்கத்தில் (ஸ்ரீரங்கம்)உள்ள அரங்கனை அந்தரங்கன் என்றும் அழைப்பர்.
காவேரி தீரமு நன்னு பாவனமு ரங்க புரிநீ” என்று தியாகய்யர் தமது கிருதியில் பாடியுள்ளார்.
புனல் பெருகும் வழியெல்லாம் புது வெள்ளத்தினைக் கண்டு களித்து பூஞ்சோலையிலே மயில்கள் நாட்டியங்கள் புரிய, இன்னிசை பாடுகின்ற குயில்களும்” என்று சேர நாட்டினரான இளங்கோவடிகளும், கம்பனுக்கு இணையாக ரசித்திருக்கிறார்.
காவேரிக்கும், கொள்ளிடத்திற்கும் நடுவே ஸ்ரீரங்கம் இருக்கிறது.
இங்கு சுகமாக ஸ்ரீரங்கநாதர் பள்ளி கொண்டிருக்கிறார்.
“அவத்தடா காவேரி இவத்தடா கொள்ளிடம்”
ஆலமா மரத்தின் இலைமேல் ஒரு பாலகனாய்
ஞாலமேழும் உண்டான் அரங்கத்தரவின் அணையான்
கோலமா மணியாரமும் முத்துத் தாமமும் முடிவில்லதோர் எழில்
நீலமேனி ஐயோ! நிறை கொண்டது என் நெஞ்சினையே
திருப்பாணாழ்வார் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் அமலனாதிபிரான்’ என்று தொடங்கும் பத்துப் பாசுரங்களாக பெருமானின் அங்கத்தின் அழகை வருணிக்கிறார்.
கம்பரும் இதை அடியொற்றி இராமன் அழகை வருணிக்கும் பொழுது
மையோ! மரகதமோ! மறிகடலோ! மழைமுகிலோ!
ஐயோ! இவன் வடிவென்பதோர் அழியா அழகுடையான்
என்று வியந்து போகிறார்.
விந்திய மலையின் செருக்கை அடக்கிய மாமுனிவர் காவிரி அடங்கிய கமண்டலத்துடன் குடகு மலையில் சிவபூஜையில் ஈடுபட்டார்
காவிரி நீர் வெளியே வர வினாயகரின் உதவியை நாடினான் தேவேந்திரன்.
காக்கை வடிவம் எடுத்த வினாயகர் கமண்டலத்தின் மீது அமர அகஸ்தியர் “போ… போ” என்று விரட்ட, காக்கை கமண்டலத்தைக் கவிழ்த்தது.
காவிரியோ மாமுனிவர் தன்னைத்தான் போகச் சொல்கிறார் என்று எண்ணி பிரவாகித்து சோழவள நாட்டைப் புனிதப்படுத்தினாள்.
தான் பாயும் இடங்களைப் பொன் மயமாக்கி வளப்படுத்துவதினால் அவளுக்கு பொன்னி என்று பெயர் வந்தது.
ஒகேனக்கல்லில் தனி அருவியாக இல்லாமல் பல அருவிகளின் தொகுப்பாக அமைந்துள்ளது.
கன்னடத்தில் "ஹோகே' என்றால் "புகை'. "கல்' என்றால் பாறை.
பலத்த ஆரவாரத்துடன் 20 மீட்டர் உயரத்தில் இருந்து பாறைகளின் மீது நீர்விழுந்து வெண்மையான புகை மண்டலத்தை ஏற்படுத்துவதால் இப்பகுதி "ஹோகேனக்கல்' என்று அழைக்கப்பட்டு
பின்னர் ஒகேனக்கல்லானது. இருபுறமும் உயர்ந்த குன்றுகள்.
இடையில் காட்டாறாய் ஓடும் காவிரி. பரிசலில் சென்றால் பெரும் சப்தத்துடன் விழும் அருவிக்கு மிக அருகிலேயே சென்று கண்டு களிக்கலாம்.
கன்னடத்தில் "ஹோகே' என்றால் "புகை'. "கல்' என்றால் பாறை.
பலத்த ஆரவாரத்துடன் 20 மீட்டர் உயரத்தில் இருந்து பாறைகளின் மீது நீர்விழுந்து வெண்மையான புகை மண்டலத்தை ஏற்படுத்துவதால் இப்பகுதி "ஹோகேனக்கல்' என்று அழைக்கப்பட்டு
பின்னர் ஒகேனக்கல்லானது. இருபுறமும் உயர்ந்த குன்றுகள்.
இடையில் காட்டாறாய் ஓடும் காவிரி. பரிசலில் சென்றால் பெரும் சப்தத்துடன் விழும் அருவிக்கு மிக அருகிலேயே சென்று கண்டு களிக்கலாம்.
அர்க்கவதி ஆறு இணைந்தவுடன் காவிரியானது ஆழமான குறுகிய பாறைகளின் வழியாக பாய்ந்து தமிழகத்தை அடைகிறது.
ஆடு கூட இங்கு காவிரியை தாண்டிவிடலாம் என்பதால் இவ்விடத்திற்கு மேகேதாத் (Mekedatu) என்று பெயர்,
ஆடு தாண்டும் காவிரி ( தெய்வ ஆடு மட்டுமே தாண்ட முடியும் ) ஆகி
மிக குறுகிய அகலமுடைய ஆடு தாண்டும் காவிரியிலிருந்து தமிழகம் வரும் காவிரியானது கரூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் பாயும் காவிரி அகண்டு காணப்படுவதால் அங்கு பாயும் காவிரியை அகண்ட காவிரி யாக விரிகிறது..
தண்ணீர் ஆற்றில் ஓடும்போது பாட்டாகக் கேட்கும், இசையாக மலரும், பண்பாடாக வளரும், கோயிலாக உயரும்!
‘காவிரி போற்றுதும் காவிரி போற்றுதும்’
ஸ்ரீரங்கப்பட்டணம்
ஸ்ரீரங்கம்
ஒரு பதிவை நன்றாகப் படிக்க ஒரு வாரம் ஆகிறது. எப்போது உங்கள் பதிவுகளை முழுவதும் படித்து முடிப்பது என்று தெரியவில்லை?
ReplyDeleteஒருநாள் லேட்டாக
ReplyDeleteநண்பர்கள் தின வாழ்த்துக்கள் தோழி..
நீங்கள் உங்கள் பதிவுகளை தொகுத்து, ஒரு புத்தகமாக போடலாமே.
ReplyDeleteபாற்கடலில் 5 தலை பாம்பின் மேல் அனந்தசயனப்பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் உற்சவர், அருகே கருடாழ்வார், இரு புறமும் தீபங்கள்;
ReplyDeleteஎகிறிக் குதித்தோடிவரும் நதி நீரின் ஓட்டம் அசைவுடன் தலைக்காவிரியின் நதிமூலம்;
துலாஸ்நானம் செய்ய மிகவும் விசேஷமான திருப்பராய்த்துறை அகண்ட காவேரி;
தங்களின் பதிவுகளைப் போலவே தோன்றும் அழகிய அந்த மயில்;
ஆடு தாண்டும் காவிரி
ஸ்ரீரங்கப்பட்டிணம், நமது ஸ்ரீரங்கம் & அருவியாக் அழகினைக்கொட்டிடும் அந்த கடைசி படம்
அனைத்தும் அருமையோ அருமை!
பகிர்வுக்கும், கடும் உழைப்புக்கும் நன்றி.
This comment has been removed by the author.
ReplyDelete//கங்கே சயமூனேனசவா, கோதாவரி சரஸ்வதி, நர்மதே, சிந்து, காவேரி ஜலேஸ்மின் சன்னதி குரு'' எனப் போற்றுகிறது ரிக்வேத வரிகள்..//
ReplyDeleteஆம். தினமும் ஸ்நானம் செய்யும் போது (ஷவருக்கு அடியில் நின்றாலும்) அனைவரும் சொல்ல வேண்டிய அருமையான ஸ்லோகமிது.
//தலைக்காவிரியில் பாகமண்டலம் என்னும் இடத்தில் காவிரியுடன், கனகா என்ற நதியும் இணைகிறது. கண்ணுக்குப் புலப்படாத சுஜ்ஜோதி என்ற மூன்றாவது நதியும் இணைகிறது.//
ReplyDeleteஆஹா, காவிரியிலும் திரிவேணியா!
அருமையான புதிய தகவலுக்கு நன்றி.
(திருச்)
ReplyDeleteசிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி!
(திருப்)
பராய்த்துறை மேவிய பரணே போற்றி!!
இங்குள்ள பெரியவர்கள் வழிபடுவதுண்டு.
//ஸ்ரீரங்கப்பட்டணத்தில் உள்ள அரங்கனை ஆதிரங்கன் என்றும் சிவசமுத்திரத்தில் உள்ள அரங்கனை மத்தியரங்கன் என்றும் திருவரங்கத்தில் (ஸ்ரீரங்கம்)உள்ள அரங்கனை அந்தரங்கன் என்றும் அழைப்பர்.//
ReplyDeleteஆஹா, இதுவும் தகவல் களஞ்சியம் இன்று கொடுத்துள்ள அரியதொரு புதுத்தகவலே! நன்றி.
//காவேரி தீரமு நன்னு பாவனமு ரங்க புரிநீ” என்று தியாகய்யர் தமது கிருதியில் பாடியுள்ளார்.//
ReplyDeleteஅவரின் கீர்த்தனைகள் யாவும் அழகோ அழகு.
நம் தொந்திப்பிள்ளையார் காக்கை வடிவில் வந்து கமண்டல நீரை தட்டிவிட்டு காவிரி நதியாய் ஓடச்செய்த கதையும், பொன்னி & ஹோகேனக்கல் என்ற பெயர்க்காரணமும் நன்கு விளக்கப்பட்டுள்ளது.
//தண்ணீர் ஆற்றில் ஓடும்போது பாட்டாகக் கேட்கும், இசையாக மலரும், பண்பாடாக வளரும், கோயிலாக உயரும்!‘காவிரி போற்றுதும் காவிரி போற்றுதும்’//
இவையெல்லாமே உணரப்படும் உங்கள் பதிவினிலே! நன்றி! நன்றி!! நன்றி!!!
பின்னூட்டமிட்டு முடிப்பதற்குள் அடேங்கப்பா, இத்தனை கோபுரங்களையும் கட்டி (காட்டி) முடித்துள்ளீர்களே அதுவும் டபுள் ஆக்ட் போல நடுவே தங்கக்கும்பத்துடன். சபாஷ், சபாஷ், சபாஷ்.
ReplyDeleteஅவை மிகவும் சூப்பரோ சூப்ப்ர்!
காவிரியின் புகழ் பாடும் உங்கள் பதிவைக் கண்டு, திருச்சி காவிரிக்கரையில் பிறந்து
ReplyDeleteகாவிரித் தண்ணீரை அருந்தி வளர்ந்த நான் மகிழ்நதேன்.
மைசூர்பட்டினத்தில் இருக்கும் ரங்கனாதர் பெருமான் ஆதிரங்கன் என திரு நாமம்
கொண்டவர் என்பதும் எனக்கு செய்தியாக இருந்தது. திருத்துரைப்பூண்டி அருகில் முத்துப்பேட்டை
செல்லும் சாலையில் உள்ள கிராமத்தில் இருக்கும் பெருமாள் ஆதிரங்கன் என்பார்கள்.
சுப்பு ரத்தினம்.
கோபுர தரிசனம் கோடி புண்ணியம்
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி மேடம்
அருமையான பதிவு.
ReplyDeleteஉங்களது வேகம் பிரமிப்பாக இருக்கிறது.
வாழ்த்துக்கள்.
இனிய நண்பர் தின வாழ்த்துக்கள்.
ReplyDeleteகாவிரியுடன் பயணித்த அனுபவம்,
ReplyDeleteஅருமையான பகிர்வு.
காவிரி போற்றுதும்! காவிரி போற்றுதும்!!
ReplyDeleteநாங்களும் உங்களுடன் காவிரியை போற்றினோம்.
அருமையான படங்களை தேர்வு செய்து அளித்தமைக்கு வாழ்த்துக்கள், நன்றிகள்.
@
ReplyDeleteFOOD said...
படங்களோடு, பதிவு மிக அருமை.//
கருத்துரைக்கு நன்றி.
@ DrPKandaswamyPhD said...
ReplyDeleteஒரு பதிவை நன்றாகப் படிக்க ஒரு வாரம் ஆகிறது. எப்போது உங்கள் பதிவுகளை முழுவதும் படித்து முடிப்பது என்று தெரியவில்லை?//
ஒரு வாரமா...ஆச்சரியம் தான்.
வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.
@ !* வேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDeleteஒருநாள் லேட்டாக
நண்பர்கள் தின வாழ்த்துக்கள் தோழி../
என்றும் நண்பர் தினம் தான். வாழ்த்துக்கள்.
This comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete@ Chitra said...
ReplyDeleteநீங்கள் உங்கள் பதிவுகளை தொகுத்து, ஒரு புத்தகமாக போடலாமே.//
உற்சாக உரைக்கு நன்றி.
This comment has been removed by the author.
ReplyDelete@ வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteபாற்கடலில் 5 தலை பாம்பின் மேல் அனந்தசயனப்பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் உற்சவர், அருகே கருடாழ்வார், இரு புறமும் தீபங்கள்;.............//
அழகிய ரசனையான கருத்துரைகளுக்குப் பிறகு மீண்டும் ஒருமுறை பதிவினைப் படித்தும், பார்த்தும் நிறைய குறை நிறைகளைத்தெரிந்து பயன் பெற்றேன். நன்றி ஐயா.
@வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDelete//கங்கே சயமூனேனசவா, கோதாவரி சரஸ்வதி, நர்மதே, சிந்து, காவேரி ஜலேஸ்மின் சன்னதி குரு'' எனப் போற்றுகிறது ரிக்வேத வரிகள்..///
தினசரி ஸ்நாநத்தின் போதும், கண்டிப்பாக தீபாவளி ஸ்நானத்திலும் சொல்ல வேண்டிய வேத வரிகள்.
அனைத்து நதிகளும் நாம் குளிக்கும் நீரில் ஸ்லோகம் சொன்னால் ஐக்கியமாவதாக ஐதிகம்.
@
ReplyDeleteவை.கோபாலகிருஷ்ணன் said...//
ஆஹா, காவிரியிலும் திரிவேணியா!
அருமையான புதிய தகவலுக்கு நன்றி.//
பவானி கூடுதுறையிலும் திரிவேணி சங்கமம் தரித்திருக்கிறோம்.
கும்பாபிஷேகத்திற்குத்தீர்த்தம் சேகரித்து அளித்திருக்கிறோம்.
காவிரிக்கு பிறந்த வீடு கர்நாடகா, புகுந்த வீடு தமிழ்நாடு என்பது மிகச்சரி. கர்நாடகாவில் காவிரி மிக சுதந்திரமாக, அதிரடியாக பாயும், தமிழ்நாட்டின் காவிரி, அடக்கமாக மென்மையாக தவழும். என்ன பொருத்தம் பாருங்கள்.
ReplyDelete@ வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDelete(திருச்)
சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி!
(திருப்)
பராய்த்துறை மேவிய பரணே போற்றி!!
இங்குள்ள பெரியவர்கள் வழிபடுவதுண்டு.//
தென்னடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!
சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி!
பராய்த்துறை மேவிய பரணே போற்றி!!
நன்றி ஐயா.
@ sury said...//
ReplyDeleteஆதிரங்கன் தகவலுக்கு நன்றி.
@ M.R said...
ReplyDeleteகோபுர தரிசனம் கோடி புண்ணியம்
பகிர்வுக்கு நன்றி மேடம்//
கருத்துரைக்கு நன்றி.
@Rathnavel said...
ReplyDeleteஅருமையான பதிவு.
உங்களது வேகம் பிரமிப்பாக இருக்கிறது.
வாழ்த்துக்கள்.//
அருமையான கருத்துரைக்கு நன்றி,
@ கவி அழகன் said...
ReplyDeleteஇனிய நண்பர் தின வாழ்த்துக்கள்.//
இனிய நண்பர் தின வாழ்த்துக்கள்.நன்றி.
@ கோகுல் said...
ReplyDeleteகாவிரியுடன் பயணித்த அனுபவம்,
அருமையான பகிர்வு.//
காவிரியுடன் பயணித்த அருமையான கருத்துரைக்கு நன்றி.
@ கோமதி அரசு said...
ReplyDeleteகாவிரி போற்றுதும்! காவிரி போற்றுதும்!!
நாங்களும் உங்களுடன் காவிரியை போற்றினோம்.
அருமையான படங்களை தேர்வு செய்து அளித்தமைக்கு வாழ்த்துக்கள், நன்றிகள்.//
காவிரி போற்றுதும்! காவிரி போற்றுதும்!!காவிரி போற்றிய கருத்துரை பாங்கிற்கு நன்றி.
பல புதிய தகவல்கள்.நன்று.
ReplyDeleteபல புதிய தகவல்கள்.அருமையான புகைப்படங்களுடன்,நன்று.
ReplyDeleteஅருமையான பகிர்வு! நன்றி.
ReplyDelete(தி.ஜானகிராமனும் சிட்டியும் இணந்து ”நடந்தாய் வாழி காவேரி” என்று ஒரு அருமையான புத்தகம் எழுதியிருக் கிறார்கள்)
அருமையான படங்களுடன் அழகான பதிவு.
ReplyDeleteஅதுவும் எங்கள் ஊர் பற்றியும் வருவதால் கூடுதலாய் மகிழ்ச்சி.
அருமையான பதிவு....
ReplyDelete"ஹோகேனக்கல்" பெயர் காரணம் தெரிந்துக்கொண்டேன்...
படத்தேர்வு அருமை.....
காவிரியுடன் பயணித்த அனுபவம்....அருமையான பகிர்வு...வாழ்த்துக்கள் தோழி...
ReplyDeleteஆஹா ஆன்மீக படங்களுடன் பதிவு...ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்க வைக்கிறது... நன்றி
ReplyDeleteஆஹா அருமையான தெய்வ தரிசனம்..
ReplyDeleteஅரங்கர் பள்ளிக்கொண்ட கோலமும் கோயிலின் அழகும் காவிரி பொங்கும் அனிமேஷன் படம் அருமை சகோதரி ராஜேஸ்வரி....
ஸ்ரீரங்கம் போய் வந்த திருப்தி இருந்தது படித்து முடித்தபோதுப்பா...
அன்பு நன்றிகள் பகிர்வுக்கு...
;)
ReplyDeleteசர்வ மங்கள மாங்கல்யே
சிவே சர்வார்த்த சாதிகே !
சரண்யே த்ரயம்பிகே கெளரி
நாராயணீ நமோஸ்துதே !!
872+8+1=881 ;)))))
ReplyDeleteநான்குமுறை பதில் அளித்துள்ளது அகம் மகிழ வைத்தது. மிக்க நன்றி.
தற்செயலாய் இந்தப் பதிவைக் காண நேர்ந்தது. கரூருக்கு அருகே ஆரம்பித்து, ஶ்ரீரங்கம், திருச்சிப் பகுதியில் தான் அகண்ட காவிரி. மாயவரத்தில் ஆடு மட்டுமே தாண்டும் அளவுக்கே அகலம் கொண்டது. காவிரி சமுத்திரத்தில் சேரும் இடத்துக்கு அருகே இருப்பதால் அங்கே செல்கையில் குறுகி விடும். :)))))
ReplyDeleteபதிவின் கடைசியில் காவிரி திருச்சியில் அகண்ட காவிரியாக ஓடுவதையும் குறிப்பிட்டிருக்கிறீர்கள். ஆனால் முதலில் மாயூரத்தில் அகண்டகாவிரியாகப் பிரவாகித்து ஓடுவதாய்க் குறிப்பிட்டிருப்பது கவனக்குறைவு என எண்ணுகிறேன். ஆகவே என் கருத்தைப் பிரசுரிக்க வேண்டாம். தொந்திரவுக்கு மிக மிக மன்னிக்கவும்.
ReplyDelete