பூத்தவளே,புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம்
காத்தவளே.பின் கரந்தவளே.கறைக்கண்டனுக்கு
மூத்தவளே.என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே
மாத்தவளே உன்னையேன்றி மற்றோர்தெய்வம் வந்திப்பதே !
…அபிராமி பட்டர் போற்றிய அன்னை ஈரேழு பதினான்கு லோகங்களையும் படைக்கும் தாய்..
தாய்மை என்பது பெண்களுக்கே உரித்தான ஒரு தனி சிறப்பு. உள்ளே உயிர் வளர்த்து உதிரத்தால் பால் கொடுக்க ஒரு தாயால்தான் முடியும்.
நம்முடைய மானிட வழக்கமான பெண்ணுக்கு வளை காப்பு நடத்துவது போல மறிகடல்கள் ஏழையும், திகிரி இரு நான்கையும்,
மாதிரக்கரி எட்டையும், மாநாகமானதையும்,
மாகூர்மமானதையும, மாமேரு என்பதையும்,
ஓர் பொறியரவு தாங்கி வரும் புவனமேழையும்,
புத்தேளிர் கூட்ட்டத்தையும், பூமகளையும்,
திகிரி மாயவானையும், புலியாடை உடையானையும், படைக்கும் அன்னையாய் இருந்தும் கன்னி என்று மறைகள் பேசும் அம்பிகைக்கு நாம் வளைகாப்பு நடத்தி கண்டு களித்திடுகிறோம்..
தாய்மை என்பது பெண்களுக்கே உரித்தான ஒரு தனி சிறப்பு. உள்ளே உயிர் வளர்த்து உதிரத்தால் பால் கொடுக்க ஒரு தாயால்தான் முடியும்.
நம்முடைய மானிட வழக்கமான பெண்ணுக்கு வளை காப்பு நடத்துவது போல மறிகடல்கள் ஏழையும், திகிரி இரு நான்கையும்,
மாதிரக்கரி எட்டையும், மாநாகமானதையும்,
மாகூர்மமானதையும, மாமேரு என்பதையும்,
ஓர் பொறியரவு தாங்கி வரும் புவனமேழையும்,
புத்தேளிர் கூட்ட்டத்தையும், பூமகளையும்,
திகிரி மாயவானையும், புலியாடை உடையானையும், படைக்கும் அன்னையாய் இருந்தும் கன்னி என்று மறைகள் பேசும் அம்பிகைக்கு நாம் வளைகாப்பு நடத்தி கண்டு களித்திடுகிறோம்..
ஆடிப்பூரம் என்னும் விழா ஆடி மாதத்திலே பூர நட்சத்திரத்தில் கொண்டாடப்படும் தேவிக்குரிய திருநாளாகும்.
மானிடத்தை இன்னல்களில் இருந்து மீட்பதற்கு உலகன்னை இவ்வுலகிலே தோன்றிய நாள் ஆடிப்பூரம்...
மானிடத்தை இன்னல்களில் இருந்து மீட்பதற்கு உலகன்னை இவ்வுலகிலே தோன்றிய நாள் ஆடிப்பூரம்...
சிவ சொர்ணாம்பிகை
அனைத்து உலகத்தையும் படைத்தும் காத்தும் கரந்தும் விளையாடும் அகிலாண்ட கோடி காக்கும் அன்னை உளம் மகிழ்ந்து அனைவருக்கும் தன் அருளை வழங்கி ஆடிப்பூர அம்மனாக எழுந்தருளியுள்ளாள்.
"தனம் தரும், கல்வி தரும், ஒரு நாளும் தளர்வறியா
மனம் தரும், தெய்வ வடிவுந்தரும் நெஞ்சில் வஞ்சமிலா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பரென்பவர்க்கே
கனம் தரும் பூங்குழளாள் அபிராமி கடைக்கண்களே"
நிலவின் ஒளியை மறைக்கும் ஒளி மிகுந்த திருமுகம், அருளும் கருணையும், வாத்ஸல்யத்தையும் வாரி வழங்கும் நீலத்திருக் கண்கள்.நிறைந்தவள்
அன்னை நீலாயதாக்ஷி
அம்மனுக்கு உகந்த ஆடி மாதம், இரவு அதிகமாகவும், வெப்பம் குறையும் காலம்
ஆடி மாதங்களில் எளிய உணவான கூழ் சாப்பிட்டால் உடம்பிற்கு நல்லது என்று ஜகத் ஜனனிக்கு, ஜகன் மாதாவிற்கு, அவளுக்கு கூழ் வார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்தினர் நமது முன்னோர்கள்.
ஆடி மாதத்தில் வெள்ளி, செவ்வாய் , ஞாயிறுகளில் அன்னையை வழிபட எல்லா நலன்களும் தந்து அருளுவாள் அந்த தயாபரி.
அம்பிகைக்கு மிகவும் உகந்த ஆடி மாதத்தில் வரும் பூர நாளில் அன்னைக்கு வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்து வழிபட்டு அந்த வளையல்கள் பெண்மணிகளுக்கு பிரசாதமாக வழங்கப்படுகின்றன.
ஆடிப்பூரம் முளைப்பாலிகை திருவிழாவாகவும் கொண்டாடபடுகிறது.
அவரவர் இல்லங்களில் நவதான்யங்களை விதைத்து முளைப்பாலிகையை தயார் செய்கின்றனர்.
திருஆடிப்பூரத்தன்று அம்மன் சன்னதியில் சேர்க்கப்படுகின்ற முளை வளர்ந்துள்ள விதத்தில் இருந்து வருடம் எவ்வளவு செழிப்பாக இருக்கும் என்பதை உணர்த்துகின்றது என்பது ஐதீகம்.
அவரவர் இல்லங்களில் நவதான்யங்களை விதைத்து முளைப்பாலிகையை தயார் செய்கின்றனர்.
திருஆடிப்பூரத்தன்று அம்மன் சன்னதியில் சேர்க்கப்படுகின்ற முளை வளர்ந்துள்ள விதத்தில் இருந்து வருடம் எவ்வளவு செழிப்பாக இருக்கும் என்பதை உணர்த்துகின்றது என்பது ஐதீகம்.
ஆடிப்பூரம் அம்மனுக்குரிய பிரம்மோற்சவமாக பத்து நாள் திருவிழாவாக வாகன சேவையுடன் சிறப்பாக நடைபெறுகின்றது.
திருவாரூரில் கமலாம்பாளுக்கு,
திருநாகையில் நீலாயதாக்ஷி அம்மனுக்கு,
திருக்கருகாவூரில் கர்ப்பரட்சாம்பிகைக்கு.
திருமயிலை கற்பகவல்லிக்கு ஆடிப்பூரத்தன்று வளை காப்பு உற்சவம்.
சைதை காரணீஸ்வரர் ஆலயத்தில் சொர்ணாம்பிகை அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி வரும் உற்சவம் ,.
திருவாரூரில் கமலாம்பாளுக்கு,
திருநாகையில் நீலாயதாக்ஷி அம்மனுக்கு,
திருக்கருகாவூரில் கர்ப்பரட்சாம்பிகைக்கு.
திருமயிலை கற்பகவல்லிக்கு ஆடிப்பூரத்தன்று வளை காப்பு உற்சவம்.
சைதை காரணீஸ்வரர் ஆலயத்தில் சொர்ணாம்பிகை அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி வரும் உற்சவம் ,.
மேல் மருவத்தூரில் ஆதி பரா சக்திக்கு ஆடிப்பூரம் மிகப்பெரிய பண்டிகையாக அம்மனுக்கு கூழ் வார்க்கும் பண்டிகையாக சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.
உயர் அரங்கருக்கு கண்ணி உகந்தளித்த
சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள்
சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாள், பூமி பிராட்டியார் மண்ணுலகில் உள்ள நாம் எல்லாரும் உய்ய பெரியாழ்வாரின் திருமகளாராய் திருஅவதாரம் செய்து எம்பெருமானுக்கு பாமாலையும், பூமாலையும் சாற்றி , நாம் எல்லாரும் உய்ய வேத சாரத்தை எளிய தமிழில் திருப்பாவையாகப் பாடினார்.
வைணவ தலங்களிலும் ஆடிப்பூரம் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது
வைணவ தலங்களிலும் ஆடிப்பூரம் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது
ஆடிப்பூரத்தன்று சந்தனக்காப்பும் வளைகாப்பும்
கண்டருளும் கற்பகாம்பாள்
சாகம்பரி (சாக - காய்கனி தொடர்பாக; அம்பரம் - ஆடை; காய் கனிகளையே ஆடையாகத் தரித்தவள்) ஆனாள்.
உலகின் தவிப்பைத் தீர்த்து உணவிடுவதற்காக, தாமே உணவுக் களஞ்சியமாக அன்னை அருள்பாலித்த வடிவமே, சாகம்பரி தேவி!
உலகின் தவிப்பைத் தீர்த்து உணவிடுவதற்காக, தாமே உணவுக் களஞ்சியமாக அன்னை அருள்பாலித்த வடிவமே, சாகம்பரி தேவி!
பரதேவதை, சாகம்பரியாக ஆவிர்பவித்து,கோடி சூரியப் பிரகாசம் தன்னுள் ஐக்கியப்பட்ட அம்பிகை தன் கரத்தில் தாமரை ஏந்தியிருக்க அந்தத் தாமரையை வண்டுகள் சுற்றிச் சூழ்ந்திருப்பது போல் காய்கள், கனிகள், வேர்கள், கிழங்குகள் போன்றவற்றை அவளுடைய பற்பல கரங்களில் வைத்துக் கொண்டிருக்கும்அன்னை சாகம்பரி தேவி
பூத வாகனத்தில் முப்பெரும்தேவியாய்
அருள் பாலிக்கும் கருமாரியம்மன்
வளைகாப்பு முருகன்
முற்கால மனிதர்களின் முழு முதற் கடவுளாக முருகனே வணங்கப்பட்டிருக்கிறான்.
போர்க்காலங்களில் ஆண்களுக்கும், பெண்கள் கர்ப்பமாக உள்ள சமயங்களிலும் அவர்களுக்கு கந்தனே காத்து நிற்பான் என்ற நம்பிக்கை நிலவியது.
போர்க்காலங்களில் ஆண்களுக்கும், பெண்கள் கர்ப்பமாக உள்ள சமயங்களிலும் அவர்களுக்கு கந்தனே காத்து நிற்பான் என்ற நம்பிக்கை நிலவியது.
கலியுக தெய்வம் கந்தனை வழிபடுபவர்களை தன் தண்ணருளால் காத்து, மனம் குளிரும் வண்ணம் வாழ்வளிப்பான் அம்பிகை மகிழ்தளித்த பாலன் கலியுக தெய்வம் கந்தக்கடம்பன்.
ஆவணி மூல திருவிழா ஈசன்
வளையல் விற்ற லீலை.
நாளை ஆடிப்பூரத்தை முன்னிட்டு இன்றே பதிவிட்டுவிட்டீர்கள். தகவல்களுக்கு மிக்க நன்றி
ReplyDeleteஆடிப்பூரத்தின் சிறப்புகளை அறியத் தந்துள்ளீர்கள் ...நன்றி !நான் மேல் மருவத்தூருக்கு நான்கைந்து முறை சென்றுள்ளேன் ....சக்தியுள்ள தெய்வம் !
ReplyDeleteஅற்புதமான பதிவு...
ReplyDeleteமக்களோடு ஒன்றிப்போன பழக்கவழக்கங்களுக்கும், நம்முடைய கலாச்சாரத்தை பறைச்சாற்றும் சடங்குகளோடு தொர்ப்புடைய விஷயங்கயை பக்குவமாக சொல்லியிருப்பது பாராட்டுதலுக்கு உரியது..
வாழ்த்துக்கள்..
தகவல்களுக்கு நன்றி ...
ReplyDeleteவாழ்த்துக்கள்...இராஜராஜேஸ்வரி
வண்ணமயமான படங்களுடன் பதிவு. அருமை.
ReplyDeleteபக்தி மணம் கமழும் பதிவு.ஒரு நாள் முன்னதாகவே!நன்றி.
ReplyDeleteஅருமையான பதிவு.
ReplyDeleteமனப்பூர்வ வாழ்த்துக்கள்.
இன்று அன்னையின் அருளா?
ReplyDeleteசூடிக்கொடுத்த சுடர் கொடியாளின் வண்ணப்படம்
ReplyDeleteஅருமையிலும் அருமை
ஆடிப்பூரத்தின் சிறப்புப் பதிவு மிக மிகச் சிறப்பு
வாழ்த்துக்கள்
ஆஹா! நாளை ஆடிப்பூரத் திருவிழா. எங்கள் வீட்டருகே உள்ள ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பாள் வீதியுலா புறப்பாடு நடைபெற உள்ளது.
ReplyDeleteஅதற்கு முன் இன்றே பல அம்மன்களை தரிஸிக்கும் பாக்யம் தங்களால் பெற்றோம்.
அனைத்துப்படங்களும் அருமையாக உள்ளன. கோர்வையாக எழுதியுள்ள கட்டுரையும் வெகு ஜோர்.
நன்றி.
// தாய்மை என்பது பெண்களுக்கே உரித்தான ஒரு தனி சிறப்பு. உள்ளே உயிர் வளர்த்து உதிரத்தால் பால் கொடுக்க ஒரு தாயால்தான் முடியும்//
ReplyDeleteஆம். தாயிற்சிறந்ததோர் கோயிலும் இல்லை என்று சும்மாவா சொன்னார்கள்!
பசுவேறி அருள் கொடுக்கும் பரமேட்டி சிவ சொர்ணாம்பிகை,
ReplyDeleteதிருநாகை அன்னை நீலாயதாக்ஷி
ஜகத் ஜனனிக்கு, ஜகன் மாதா
திருவாரூர் கமலாம்பாள்,
திருநாகை நீலாயதாக்ஷி
திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை திருமயிலை கற்பகவல்லி
சைதை சொர்ணாம்பிகை
மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி
சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள்
பூதவாகனக் கருமாரியம்மன்
வளைகாப்பு முருகன்
காய்கறிகளை ஆடையாய் அணிந்த சாகம்பரி தேவி
அழகு ரூபம் கொண்ட சதாக்ஷீ
ஆயிரம் கண்ணுடையாளை பல்வேறு கோயில்கள், பல்வேறு நாமங்களில், அழகாக விளைக்கி அசத்தியுள்ளீர்கள்.
பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். உங்களைப்போல யாரால் இப்படியொரு அழகானப் பதிவு அளிக்க முடியும்?
முளைப்பாலிகை திருவிழா விளக்கமும், வளையல்கள் விற்ற ஈசனின் கதையும்,
ReplyDeleteகர்ப்பமுற்ற பெண்களுக்கு வளைகள் அணிவிப்பதன் நோக்கமும், அழகாகவே சொல்லப்பட்டுள்ளன.
ஆடி அசைந்து வரும் திருவாரூர் ஆழித் தேர் தான் எவ்வளவு பிரும்மாண்டமாகக் காட்டப்பட்டுள்ளது! எவ்வளவு ஜனங்கள் திரளாகக்கூடியுள்ளனர்! பார்க்கப்பார்க்க பரவசமாக உள்ளது.
ReplyDelete1970 வரை பல வருஷங்கள் ஓடாமல் இருந்த இந்தத் திருவாரூர் தேருக்கு, புதிதாக நவீன ஹைட்ராலிக் சக்கரங்களும், ப்ரேக் போடும் வசதிகளும் செய்துகொடுத்த பெருமை திருச்சி BHEL ஐயேச்சேரும்.
இவ்வாறு பல கோயில்களின் தேர் சக்கரங்களை நல்ல முறையில் பழுது பார்த்து ஓட வைத்து புண்ணிய கார்யங்களில் ஈடுபட்ட ஒரு கம்பெனியில் வேலை பார்த்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, இந்த உங்களின் அருமையான படத்தைப்பார்த்ததும்.
இலாபம் ஏதும் இல்லாமல் Actual Cost of Materials & Labour charges மட்டும் வாங்கிக்கொண்டு, பல கோயில்களுக்கு Cash Receipt தயாரித்து அவற்றில் BHEL நிர்வாகம் சார்பில் கையொப்பமிட்டவன் என்ற முறையில் இதை இங்கு குறிப்பிட விரும்பினேன்.
அன்புடன் vgk
தகவல்களுக்கு மிக்க நன்றி
ReplyDeleteவண்ணமயமான படங்களுடன் பதிவு. அருமை.
ReplyDeleteபடங்கள் அனைத்தும் சிறப்பாக உள்ளது.
ReplyDelete(அவசியம் என்னை தொலைபேசியிலோ அல்லது மெயிலிலோ தொடர்பு கொள்ளவும். எனது வலைத்தளத்தில் எண் மற்றும் மெயில் முகவரி உள்ளது.)
புது புது செய்திகளை தெரிந்து கொள்கிறேன். வளைகாப்பு முருகன் மேட்டர் இப்போதுதான் தெரியும். நன்றி.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete@FOOD said...
ReplyDeleteஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம்.//
நன்றி.
@ பிரகாசம் said...
ReplyDeleteநாளை ஆடிப்பூரத்தை முன்னிட்டு இன்றே பதிவிட்டுவிட்டீர்கள். தகவல்களுக்கு மிக்க நன்றி//
நன்றி.
@ koodal bala said...
ReplyDeleteஆடிப்பூரத்தின் சிறப்புகளை அறியத் தந்துள்ளீர்கள் ...நன்றி !நான் மேல் மருவத்தூருக்கு நான்கைந்து முறை சென்றுள்ளேன் ....சக்தியுள்ள தெய்வம் !//
உண்மைதான். மிக சக்தியுள்ள அம்மன்.
கருத்துரைக்கு நன்றி.
@ # கவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDeleteஅற்புதமான பதிவு...
//
பக்குவமாய் உரைத்த வாழ்த்துரைக்கு நன்றி.
@ Reverie said...
ReplyDeleteதகவல்களுக்கு நன்றி ...
வாழ்த்துக்கள்...இராஜராஜேஸ்வரி//
கருத்துரைக்கு நன்றி.
@ Chitra said...
ReplyDeleteவண்ணமயமான படங்களுடன் பதிவு. அருமை.//
நன்றி சித்ரா.
@சென்னை பித்தன் said...
ReplyDeleteபக்தி மணம் கமழும் பதிவு.ஒரு நாள் முன்னதாகவே!நன்றி.//
க்ருத்துரைக்கு நன்றி ஐயா.
@ Rathnavel said...
ReplyDeleteஅருமையான பதிவு.
மனப்பூர்வ வாழ்த்துக்கள்.//
மனம் நிறைந்த நன்றி ஐயா.
@ * வேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDeleteஇன்று அன்னையின் அருளா?//
அன்னையின் அருளே என்றும் . நன்றி..
@ Ramani said...
ReplyDeleteசூடிக்கொடுத்த சுடர் கொடியாளின் வண்ணப்படம்
அருமையிலும் அருமை
ஆடிப்பூரத்தின் சிறப்புப் பதிவு மிக மிகச் சிறப்பு
வாழ்த்துக்கள்//
வாழ்த்துக்களுக்கு நன்றி ஐயா.
@ வை.கோபாலகிருஷ்ணன் //
ReplyDeleteஇலாபம் ஏதும் இல்லாமல் Actual Cost of Materials & Labour charges மட்டும் வாங்கிக்கொண்டு, பல கோயில்களுக்கு Cash Receipt தயாரித்து அவற்றில் BHEL நிர்வாகம் சார்பில் கையொப்பமிட்டவன் என்ற முறையில் இதை இங்கு குறிப்பிட விரும்பினேன்.//
சிலிர்ப்பாக இருக்கிறது. இறைவன் அருள் தங்களுக்கும், குடும்பத்தாருக்கும் நிறைவாக கிடைக்கப் பிரார்த்திக்கிறேன்.
@ வை.கோபாலகிருஷ்ணன் //
ReplyDeleteபாராட்டுக்கள். வாழ்த்துக்கள். உங்களைப்போல யாரால் இப்படியொரு அழகானப் பதிவு அளிக்க முடியும்?//
தங்களைத்தவிர வேறு யாரால்இவ்வளவு சிறப்பாக ரசிக்கமுடியும்?
எழுதும் போது இருந்த மகிழ்ச்சியை விட தங்கள் விவரிப்புகள் மிகுந்த ரசனையாக படிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது நன்றி ஐயா.
@போளூர் தயாநிதி said...
ReplyDeleteதகவல்களுக்கு மிக்க நன்றி//
வண்ணமயமான படங்களுடன் பதிவு. அருமை.//
நன்றி.
@ குடந்தை அன்புமணி said...
ReplyDeleteபடங்கள் அனைத்தும் சிறப்பாக உள்ளது. /
நன்றி.
@பாலா said...
ReplyDeleteபுது புது செய்திகளை தெரிந்து கொள்கிறேன். வளைகாப்பு முருகன் மேட்டர் இப்போதுதான் தெரியும். நன்றி.
கருத்துரைக்கு நன்றி.
வழக்கம்போல படங்களுடன் விவரங்கள் அருமை. சூடிக் கொடுத்த சுடர்க் கொடியின் படம் அழகு.
ReplyDeleteஎன் கலைக்கண்களுக்கு நல்லதொரு விருந்தளித்தது அன்னை நீலாயதாக்ஷி அம்மன் படமே.
ReplyDeleteவிக்ரஹம் ஜொலிக்கிறது.
முகத்தினில் நல்ல வசீகரம் (ஆனாலும் வெட்கத்தில் கண் மூடினால் போல உணர்ந்தேன்)
வெள்ளிக்கிளியும், வெள்ளிக்கிரீடமும்;
குண்டு மல்லிகையில் நீண்ட குண்டு மாலை அம்பாளின் கழுத்தினில்;
ஒவ்வொன்றும் 2 பவுனுக்குக்குறையாத அழகிய பெரிய திருமாங்கய தரிஸனம்;
ஜோரான நகை அலங்காரங்கள்;
பெரிய தங்கக்காசுகள் கோர்த்த அற்புதமான அந்தக் காசுமாலை;
வைர அட்டிகை;
முத்து மூக்குத்தி;
ஜொலிக்கும் அபயஹஸ்தங்கள்;
இடுப்பில் ஒட்டியாணம்;
நேவிப்ளூ மேலாடை;
கால்கள் முழுவதுமே வளையல்கள் அணிவித்தது போல, வெள்ளி இழையோடுவது போன்ற விசித்திரக் கலரில் கண்ணைக்கவரும் புடவை அலங்காரம்;
விசிறிய நிலையில் காட்சியளிக்கும் புடவைத்தலைப்பு;
வெள்ளியில் தண்டைகள்;
முத்துக்கள் ஒலிஎழுப்பும் கால் கொலுசுகள்;
வெண் பூக்களாலும், ஜொலிக்கும் பேப்பர்களாலும் ஆன திருவாசி அலங்காரம் ....
ஆஹா! வெச்சக்கண் வாங்காமல் நீண்ட நேரம் பார்த்து ரசித்துக்கொண்டே இருந்தேன்.
[அலங்காரம் செய்தவரின் ஒருசில பிழைகளும் கண்டேன் - அது அம்பாளுக்கு திருஷ்டி பட்டுவிடாமல் இருப்பதற்காகக் கூட இருக்கலாம்]
படம் என்றால் இது தான் படம்!
எவ்ளோ அழகு! பாராட்டுக்கள்.
பகிர்வுக்கு நன்றி.
// "தனம் தரும், கல்வி தரும், ஒரு நாளும் தளர்வறியாமனம் தரும், தெய்வ வடிவுந்தரும் நெஞ்சில் வஞ்சமிலாஇனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பரென்பவர்க்கேகனம் தரும் பூங்குழளாள் அபிராமி கடைக்கண்களே//
ReplyDeleteஅதிலும் கடக ராசி அன்பர்கள் இதை தினமும் சொல்லுவது மேலும் சிறப்பு ... ஆன்மீக பகிர்வுக்கு நன்றி
இந்து மதத்திற்கே உண்டான சிறப்புகள்தான் எத்தனை...அருமை அற்புதம் !
ReplyDeleteஅம்மனின் சிறப்பு சொல்லும் ஆடி மாதம். சிறப்பான பதிவு. பொதுவாகவே எந்த அம்மன் கோவில் என்றாலும் வளையல் சாத்துவது சிறப்பு. இது போன்று நவராத்திரியிலும் செய்யலாம்.சாகம்பரி என்றால் சாப்பாட்டிற்கு பஞ்சமில்லையாம் என்று நகைச்சுவையாக சொல்வார்கள்.
ReplyDeleteJAI HANUMAN ;)
ReplyDeleteVGK
834+7+1=842 ;)))))
ReplyDelete;))))) தங்களின் பதில்கள் இரண்டும் மனதுக்கு மிகவும் சந்தோஷமளிப்பதாக உள்ளன.
மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். ;)))))