ஆனந்தமருளும் அன்னையர்
அம்பிகை முத்துமாரியம்மன் ரூபாய் நோட்டு அலங்காரம்!
அம்பிகை முத்துமாரியம்மன் ரூபாய் நோட்டு அலங்காரம்!
கோவை மாநகரம் காட்டூர் பகுதியிலுள்ள அருள்மிகு அம்பிகை முத்துமாரியம்மன் திருக்கோயிலின் கோடை உத்ஸவம் ஆண்டுதோறும் வெகு சிறப்பாக நடைபெறும். சமீபத்தில் நடைபெற்ற உத்ஸவத்தில் அம்மனுக்கு ரூபாய் நோட்டுகளாலும், தங்க நகைகளாலும், நவரத்தினங்களாலும் சிறப்பு அலங்காரம் செய்திருந்தனர். அன்று முத்துமாரியம்மனைத் தரிசித்து அவள் அருள் பெறுவதற்கென்றே சுற்றுப்பகுதி மக்கள் பெருவாரியாகத் திரண்டு வருவது வழக்கம்.
கோவை காட்டூரில் உள்ள முத்து மாரியம்மனுக்கு மூன்றரைக் கோடி ரூபாய் நோட்டுகள் மற்றும் 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது)
கருவாழக்கரை காமாட்சியம்மன்
கருவாழக்கரை ஸ்ரீகாமாட்சி அம்மன், நவக்கிரஹ தேவியாகவும் திகழ்கிறாள். மயிலாடுதுறை அருகில், காவிரியின் வடபகுதியில் காமாட்சி அம்மனின் ஆலயம் உள்ளது.
ஆலயத்தின் எட்டுத் திசைகளிலும் நவக்கிரக க்ஷேத்திரங்களான சூரியனார்கோவில், திங்களூர், வைத்தீஸ்வரன்கோவில், திருவெண்காடு, ஆலங்குடி, கஞ்சனூர், திருநள்ளாறு, திருநாகேஸ்வரம், கீழப்பெரும்பள்ளம் ஆகியவை அமைந்திருக்கின்றன. இவர்களுக்கு நடுவே நவக்கிரக தேவியாக ஸ்ரீகாமாட்சி அம்மன் அமைந்து அருளாட்சி புரிந்து வருகிறாள்.

சிறுவயல் பொன்னழகியம்மன்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அமைந்துள்ளது சிறுவயல். கோயில் கொண்டுள்ள பொன்னழகி அம்மன் மிகவும் சக்தி வாய்ந்தவள். திருமண அனுக்ரஹ ஸ்தலம். பௌர்ணமியன்று அம்மனைத் தரிசித்து வந்தால், கண்டிப்பாக குழந்தைப் பேறு கிட்டும்.
‘தண்ணீரில் விளக்கு எரிய தனிக் கருணை புரிவாள் அம்பாள்’ .
‘தண்ணீரில் விளக்கு எரிய தனிக் கருணை புரிவாள் அம்பாள்’ .
பொன்னழகி அம்மன்
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன்
கோவில்பட்டி செண்பகவல்லிக்கு வளைகாப்பு உத்ஸவம், மதுரை மீனாட்சியம்மன் கோயிலைப் போலவே நடைபெறுகிறது. முதலில் செண்பகவல்லியை வணங்கிவிட்டு, பிறகு பூவன நாதரை வணங்குவது கோவில்பட்டியில் வழக்கம். 7 அடி உயரத்தில் கர்ப்பக்-கிரஹத்தில் காட்சி தரும் இவளைத் தரிசித்தால், மெய்சிலிர்க்கும். தீராப் பிணி தீர்த்து சகல செல்வங்களும் தரும் செண்பகவல்லிக்கு, வருடா வருடம் ஆடி மாதத்தில் பூர நட்சத்திரத்தன்று வளைகாப்பு உற்சவம் நடைபெறு-கிறது.
பெரம்பூர் காமாட்சியம்மன்
சென்னை, மாதவரம் நெடுஞ்சாலை பெரம்பூர் மார்க்கெட் பஸ் நிறுத்தம் அருகில், சிந்தாமணி விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் காட்சி அளிக்கும் காமாட்சி அம்மனுக்கு ஆடிப்பூரத்தன்று வளைகாப்பு உத்ஸவம் நடக்கிறது. அன்றைய தினம், மகப்பேறு வேண்டும் பெண்களின் மடியில் முளைப்பயிறு கட்டிவிடும் பிரார்த்தனையும் நடக்கிறது.
கல்லுமடை மீனாட்சியம்மன்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ளது கல்லுமடை. திருநாகேசுவரமுடையார் கோயிலில் உள்ள மீனாட்சி அம்மன் விக்கிரகம் அற்புதமானது. அமாவாசை, பௌர்ணமி நாட்களில் அம்மன் விக்கிரகத்தின் கண்களில் பளிங்கு போன்று ஒளி வீசுகிறது. இரண்டு மாதத்துக்கு ஒருமுறை, அம்மன் விக்கிரகம் தானாக நிறம் மாறுகிறது. பச்சை, மஞ்சள், ஊதா ஆகிய நிறங்களில் அம்மன் நிறம் மாறுகிறது. இறைவனின் சக்தியால் நிறம் மாறுவதைக் காண, ஏராளமான பக்தர்கள் பல்வேறு மாவட்டங்களி-லிருந்தும் இந்தக் கோயிலுக்கு வந்து செல்கின்றனர்.
காஞ்சி ஆதிபீடா பரமேஸ்வரி காளிகாம்பாள்
காசியிலிருந்து காஞ்சிக்கு, சக்தி வந்து இறங்கி அன்னபூரணியாக அன்னதானம் செய்த ஆதிபீடம் அரக்கர்களை அழித்து, நல்லவர்களுக்கு நல்லதை நல்கிய இடம் ஆதிபீடா பரமேஸ்வரி காளிகாம்பாள் திருக்கோயிலாகும். .
. பிரதோஷ காலத்திலும் மாலை நேரத்திலும் வழிபடுவர்களுக்கு, வேண்டியது கிடைக்குமாம். திருமணம் ஆகாதவர்-களுக்கு திருமணம் கூடி வருமாம். இழந்த பொருள் கிடைக்குமாம். ஆதியில் காமாட்சி அமர்ந்த இடம் ஆதிபீடம் என்ற வழக்கில், ஆதிபீடா பரமேஸ்வரி என்ற பெயர் வழங்கப்படுகிறது.

திருமுக தரிசனம்!
கும்பகோணம் அருகே கருவளர்சேரி கிராமத்தில், அகிலாண்டேஸ்வரி திருக்கோயில் உள்ளது.
அம்பாள் புற்றுமண் உருவில் சுயம்புவாக எழுந்தருளியுள்ளதால், அபிஷேக ஆராதனை இல்லை.
சாம்பிராணி தைலக் காப்பு மட்டும்தான்.
அம்பாளின் திருமுகத்தை மட்டுமே தரிசிக்கும் வகையில் திரையிட்டு மூடியுள்ளனர்.
சிவராத்திரி, நவராத்திரி நாட்களில் மட்டும் அம்பாளின் முழு உருவ தரிசனம். புத்திர பாக்கியம் அருளும் சக்தியாக அம்பாள் வீற்றிருப்பதால், இத்தலத்துக்கு கருவளர்சேரி என்று பெயர்.

காவிரிக்கு வழிபாடு
ஆடி மாதத்தை, பல தெய்வ வழிபாடுகளுக்கு உகந்த மாதம், தெய்வ மாதம் என்பர். ஆடி மாதம் எப்போதுமே அம்மனின் மாதமாகக் கருதப்படு-கிறது. தமிழகத்தில் உள்ள எல்லா மாரியம்மன் கோயில்களிலும் ஆடித் திருவிழா மிகவும் உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. ஆடி மாதத்தை ‘ஆஷாட மாதம்’ என்றும் கூறுவார்கள். தட்சிணாயன புண்ணிய காலம் தொடங்கும் ஆடி மாதத்தில்தான் தேவலோகத்தில் இரவு நேரம் ஆரம்பமாகிறது.
ஆடிப் பதினெட்டு, காவிரித் தாயாரை வழிபடும் நாள். ஆடிப் பெருக்கு என்றழைக்கப்படும் . காவிரி அம்மனுக்கு உகந்த காதோலை, கருகமணி, பல வகையான மலர்கள் வைத்து வழிபடுவார்கள்.
தயிரன்னம், சர்க்கரைப் பொங்கல் போன்ற சித்திரான்னங்களும் வைத்து காவிரித் தாயை வணங்குவார்கள்.
தயிரன்னம், சர்க்கரைப் பொங்கல் போன்ற சித்திரான்னங்களும் வைத்து காவிரித் தாயை வணங்குவார்கள்.
அருமை.
ReplyDeleteநல்ல ஒரு ஆன்மிகச்சுற்றுலாவிற்கு மனமார்ந்த நன்றி, ராஜராஜேஸ்வரி.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சித்ரா.
ReplyDelete@ சந்திர வம்சம் said...
ReplyDeleteநல்ல ஒரு ஆன்மிகச்சுற்றுலாவிற்கு மனமார்ந்த நன்றி, //
கருத்துரைக்கு நன்றி.
@kavitendral panneerselvam to
ReplyDeleteஆகா! அற்புதம் !//
நன்றி.
இன்றைய வலைச்சரத்தில் தங்களை
ReplyDeleteஅறிமுகம் செய்ய கிடைத்த வாய்ப்புக்காக
நான் மிகவும் மகிழ்வு கொள்கிறேன்
அருமையான திவ்யதரிசனம்..
ReplyDeleteபடங்களுடன்.. பகிர்வு சூப்பர். கோவிலுக்கு சென்று வந்த திருப்தி. கடைசி படத்தில் அலங்காரம் உண்மையில் அழகுங்க. :))
ReplyDeleteநன்றி.
வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteநல்ல பதிவு...உங்களிடம் நான் நிறைய கற்றுகொள்கிறேன்..
ReplyDeleteவாழ்த்துக்கள்
ஆடிப் பூரத்தில் அம்மன் தரிசனம் .....
ReplyDeleteFIRST IS ALWAYS "THE BEST"
ReplyDeleteவலைச்சரத்தில், அதுவும் முதல் நாளே, முதன்முதலாக மீண்டும் அடையாளம் காட்டப்பட்டுள்ளதற்கு என் மட்டில்லா மகிழ்ச்சிகள். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
ஆடிப்பூர திருநாளாகிய இன்றும் [02/08/11] தாங்கள் அளித்துள்ள “ஆடியில் ஆனந்தமருளும் அன்னையர்” என்ற படைப்பு மனநிறைவு தருவதாக உள்ளது. நன்றி.
ஆன்மீக தரிசனம் தவறாமல் கிடைக்கிறது தங்களது பதிவில் நன்றி..
ReplyDeleteவழமை போல் அருமையான பதிவு.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteஆடிப் பெருக்கு என்றழைக்கப்படும் இந்நாளில், ஐம்பெரும் பூதங்களில் ஒன்றான நீருக்கு வழிபாடு நடைபெறும் நாள். This is new for me .Thank you
ReplyDeleteVetha.Elangathilakam.
http://www,kovaikkavi.wordpress.com
பல கோவில்களுக்குச் சென்று வந்த திருப்தி!
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteதெய்வீக தரிசனம்.
ReplyDeleteஅம்மன் அருள் அருமை
ReplyDeleteஅகிலமெல்லாம் போற்றும் அன்னை அருள் கிடைக்க பெற்றோம் .
ReplyDeleteபடங்கள், செய்திகள் எல்லாம் அருமை.
அகிலமெல்லாம் போற்றும் அன்னை அருள் கிடைக்க பெற்றோம் .
ReplyDeleteபடங்கள், செய்திகள் எல்லாம் அருமை.
ஆன்மீக வலம் முடியாம நிறைஞ்சிட்டே இருக்கு.சந்தோஷமாவும் இருக்கு !
ReplyDeleteJAI HANUMAN ;)
ReplyDeleteVGK
842+2+1=845
ReplyDelete