Monday, August 29, 2011

முந்தி வரமருளும் முக்குருணி விநாயகர்




எனக்கு வேண்டும் வரங்களை இசைப்பேன் கேளாய் கணபதி!
மனத்தில் சலனம் இல்லாமல் மதியில் இருளே தோன்றாமல்
நினைக்கும் பொழுது நின் மவுன நிலை வந்திட நீ செயல் வேண்டும்
கனக்கும் செல்வம் நூறு வயது இவையும் தர நீ கடவாயே!

[baananukkuangamvettiyaleelai.jpg]
முத்துக்கள் தோற்கும் மோகனப் புன்னைகையோடு, இந்திரலோகத்துக் காமதேனுவையும், அமுதசுரபியையும் விட அதிகமாய்க் அருள் சுரக்கும் கண்ணாட்சியால் அண்ட சராசரங்களையும் காத்து ரட்சிக்கும் அன்னை 
Madurai Meenakshi Amman
மாணிக்கமூக்குத்தியும், மரகதப் பச்சைக் கிளியும் செங்கோலும் தாங்கி அருளாட்சி புரியும் மீனாட்சி அம்மன் கோயிலில் ஏராளமான விநாயகர் விக்ரஹங்கள் இருந்தாலும் முக்குறுணி விநாயகரே உருவத்தால் பெரியவர். 

ஒரு குறுணி என்பது 4 படி. (6 கிலோ) இந்த விநாயகருக்கு 18 கிலோ பச்சரிசி மாவால் ஆன கொழுக் கட்டை விநாயகர் சதுர்த்தி நாளில் படைக்கப்படுகிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள முக்குறுணி விநாயகருக்கு 
மெகா சைஸ் கொலுக்கட்டை படைக்கப்படுகிறது.

ஒரு முறை திருமலை நாயக்கருக்கு தீராத வயிற்று வலி ஏற்பட்டது. 
வலி நீங்க மீனாட்சிக்கு தெப்பக்குளம் கட்டுவதாக நேர்ந்து கொண்டாராம். அப்படி தெப்பக்குளம் தோண்டும் போது பிரம்மாண்டமான 
பிள்ளையார் கிடைத்தார்.
[IMG_3083.JPG]
அவரை சுவாமி சன்னதி செல்லும் வழியில் தெற்கு நோக்கியபடி 
“முக்குறுணி விநாயகர்’ என்ற திருநாமத்துடன் பிரதிஷ்டை செய்தனர்.
இவருக்கு விநாயகர் சதுர்த் தியன்று 18படி அரிசியில் ஒரே கொழுக்கட்டையாக செய்து படைக் கிறார்கள் அந்த பெயரே விநாயகருக்கு நிலைத்துவிட்டது. 
அவ்வளவு பிரமாண்டமாக இருந்தாலும், சிறிய இடத்தில் உட்கார்ந்து கொண்டு இருப்பது ஆச்சரியமளிக்கிறது. 

கணேச ருணஹர ஸ்துதி
ஸிந்தூர வர்ணம் த்விபுஜம் கணேசம் 
லம்போதரம் பத்மதளே நிவிஷ்டம் 
ப்ரஹ்மாதிதேவை: பரிஸேவ்யமானம் 
ஸித்தைர்யுதம் தம் ப்ரணமாமி தேவம்.

தெற்கு கோபுரத்தை கடந்து உள் நுழையும் இடத்தில் பக்தர்கள் விபூதியால் அர்ச்சிக்கும் விபூதி விநாயகர் அருள்பாலிக்கிறார்.

மன்னர்கள் காலத்தில் யாரோ ஒரு சிற்பி, இக்கோயிலுக்கு வரும் அனைத்து பக்தர்களும் தாங்களே அபிஷேகம் செய்துகொள்ளும் வகையில் ஏற்பாடு செய்து தரவேண்டும் என மன்னரிடம் கேட்டிருக்க வேண்டும்.

அதன் அடிப்படையில் இந்த விபூதி விநாயகர் சிலை அமைக்கப்பட்டிருக்கிறது.
பக்தர்கள் தாங்கள் கொண்டு வரும் விபூதியை அபிஷேகம் செய்கிறார்கள். இவருக்கு அபிஷேகம் செய்தால் செல்வம் சேரும் என்பது நம்பிக்கை.

"விபூதி' என்றால் "மேலான செல்வம்' என்பது பொருள்.

இவரை வணங்கினால், வாழும் காலத்தில் பெரும் பொருளும் வாழ்க்கைக்கு பிறகு மோட்சம் என்னும் பிறவா நிலை செல்வமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இரட்டை விநாயகர்: மீனாட்சியம்மன் சன்னதிக்கு இடதுபுறத்திலும் பிரகாரத்திலும் .அர்த்தமண்டபம்/கருவறைக்கும் முன்னால், வாயிலுக்குத் தெற்குப்புறமாக ஒரு சிறியமேடை. அங்கு இரண்டு பிள்ளையார்கள் இருப்பார்கள்.

இருவரையும் சேர்த்து 'இரட்டைப்பிள்ளையார்' என்று அழைப்பார்கள்.
இங்கு பூஜையாகித்தான் கருவறைக்குள் செல்வார்கள்.. 
 இதன் தாத்பர்யம் மிகவும் அற்புதமானது. 

உலகில் ஆதிமூலமாக விநாயகரை கருதுகிறோம். 

விநாயகரை வணங்கிய பிறகே பிற தெய்வங்களை வணங்குவது மரபாக இருக்கிறது. 

இந்த மரபை விநாயகரும் பின்பற்ற வேண்டும் என்பதின் அடிப்படையில் விநாயகர் கூட எந்த பூஜையை தொடங்குவதாக இருந்தாலும் தன்னைத்தானே வணங்கி தொடங்க வேண்டும் என்பதன் அடிப்படையில் இந்த சன்னதி அமைக்கப்பட்டுள்ளது
   Ganesh Chaturthi Orkut  Myspace Facebook Friendster scraps comments Ecards and codes     
பிள்ளையாருக்கு இரண்டுதன்மைகள் ஆகமங்களில் சொல்லப்பட்டிருக்கும்.

விநாயகர் வழிபாட்டு நூல்களில் 'காரியசித்தி மாலை' என்று ஒன்று உண்டு. இதனைச் சங்கடஹர சதுர்த்தியன்று படிப்பார்கள்.  காரியசித்திக்காகவும் படிப்பார்கள். 
   
      வேண்டிய அடியார்க்கெல்லாம் விக்கினம் கெடுப்பாய் போற்றி
      வேண்டி வந்தனை செய்யார்க்கெல்லாம் விக்கினம் கொடுப்பாய் போற்றி
      வேண்டுவார் வேண்டிற்றெல்லாம்  விளைத்தருள் விமல போற்றி
      மாண்ட துட்டர்க¨ளைக்கொல்லும் மறமிகு மள்ள போற்றி.
Vyaghrapada Ganeshani, in female form with tiger feet
Ganeshani Statue
புதன் தலம்: நவக்கிரகங்களில் மதுரை புதனுக்குரிய தலமாகும். 

ஜாதகத்தில் புதன் தசை நடப்பவர்கள், இங்கு வேண்டிக்கொள்கிறார்கள். 

புதன் கிழமைகளில் காலை 6- 7 மணிக்குள் சிவனுக்கும், அம்பிகைக்கும் பச்சை பட்டு வஸ்திரம் சாத்தி, பாசிப்பயிறு நைவேத்யம் படைத்து வழிபட்டால் கல்வியில் சிறப்பிடம் பெறலாம் என்பது நம்பிக்கை. 

நைவேத்யத்தை கோயிலில் தான் தயாரிக்க வேண்டும். வீட்டிலிருந்து எடுத்துச் செல்லக்கூடாது. 

கல்வியில் பின்தங்கியுள்ள மாணவர்களைக் கடைத்தேற்றும் கருணைக் கடலாக மீனாட்சி சுந்தேரஸ்வரர் திகழ்கின்றனர்.

முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் உள்ள விநாயகர் கோயிலில் யானைகள் சிறப்பு பூஜைகள் நடத்தின.
தங்க மூஷிக வாகனத்தில் பிள்ளையார்பட்டி விநாயகர்.

விநாயகர் உருவமும், அதன் தத்துவமும்....
கணபதியின் உருவத்தின் அர்த்தங்கள்

பெரிய தலை - பெரியதாக சிந்தித்தல். வெற்றிக்கான முதல்படி பெரிய அளவில் யோசிப்பது
பெரிய காதுகள் - நிறைய கேள்- மற்றவர் பேசுவதை எந்தவித குறுக்கீடும் செய்யாமல் கேட்டல். 2ம் படி

சிறிய கண்கள் - கூர்மையான கவனம். 3 ம் படி- மனதை திசை திருப்பாமல், எடுத்த காரியத்தில் கண்ணும் கருத்துமாக கவனத்தை நிறுத்துதல்.

சிறிய வாய் - குறைவாக பேசுதல் - 4 ம் படி - நிறைய கேட்க வேண்டும், படிக்க வேண்டும் ஆனால் குறைவாக பேச வேண்டும். குறைவாகவும், அளந்தும் பேசுபவருக்கு வார்த்தைகள் சொந்தம் / கட்டுப்படும் அல்லாவிடில் வார்த்தைகளுக்கு அவர் கட்டுப்படவேண்டி இருக்கும். இதைத் தான் திருவள்ளுவர் "நா காக்க, காவாக்கால் சோ காப்பர் சொல்லிழுக்குப் பட்டு" என்ற சிக்கனமாக சொன்னார்.

ஏகதந்தம் - ஒரு தந்தம் - 5ம் படி - கெட்டதை விலக்கி நல்லதை எடுத்துக் கொள்ளல். நான்காம் படி, குறிக்கோளை அடையும் வழியில் நல்லது, கெட்டது இரண்டும் வரும். அப்போது கெட்டதை விலக்கி நல்ல வழியில் செல்ல வேண்டும்.

தும்பிக்கை - தும்பிக்கை விநாயகரின் ஐந்தாவது கரமாக கருதப்படுகிறது. ஐந்து கரத்தனை, ஆனை முகத்தானை என்று அவரை வழிபடுவதுண்டு. திறமை மற்றும் சூழ்நிலைக்கேற்ப மாறும் தன்மை - 6ம் படி - திறமையும் மற்றும் சூழ்நிலைகளுக்கேற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் தன்மையும் மிகவும் இன்றியமையாதது.

கோடரி - அறுத்தல் - பாசம், பந்தம் போன்ற கட்டுப்பாடுகளை அறுத்தல் - 7ம் படி - இதன் அர்த்தம் ஒரு கர்மயோகியைப் போல் லட்சியத்தை (அ) குறிக்கோளை அடைய செயல்படுவது. அதில் இந்த கட்டுப்பாடுகளினால் வரும் தடைகளை ஒரு பற்றற்ற துறவியைப் போல் விலக்குதல்.

கயிறு - வாழ்வின் உண்மையான குறிக்கோளுக்கு இழுத்துச் செல்ல.- 8ம் படி -  பெரிதாக யோசித்து சாதிக்க வேண்டிய காரியத்தில் கண்ணும் கருத்துமாக கவனத்தை நிலைநிறுத்தினால், குறிக்கோளை அடைய வழிகள் தன்னால் பிறக்கும்.

அபயம் / வாழ்த்தும் கை - வாழ்த்துதல் - 9ம் படி - விநாயகரின் அபய ஹஸ்தம் தன் பக்தர்களை காக்கும் கவசம். அவர்களின் பக்தி வழியில் வரும் எல்லா தடங்கலையும் விலக்கி அவர்களை உய்விக்கும் ஒரு வரப்பிரசாதம். - வந்தவர்களை எப்போதும் நன்றாக கவனித்து, வேண்டியவற்றை தன்னால் இயன்ற அளவில் செய்தல்.

பெரிய வயிறு - ஜீரணிப்பதற்கு - 10ம் படி - தன் குறிக்கோளை அடையும் வழியில், எத்தகைய துன்பம் வந்தாலும், எத்தனை தடைகள் வந்தாலும் அத்தனையையும் பொறுமையாக சகித்து ஜீரணித்தல்.

மோதகம் (கொழுக்கட்டை) - பலன்கள் - 11ம் படி - மேல் சொன்ன படிகளின் படி சென்றால் கிடைக்கும் பலன்கள் கொழுக்கட்டை எப்படி இனிக்கின்றதோ அது போன்ற தன்மை உடையது.

மூஞ்சுறு - வாகனம் - ஆசைகள் - 12 ம் படி - ஆசைகள் எல்லாருக்கும் உண்டு. ஆனால் ஆசையை கட்டுப்படுத்தாமல் அதன்படி நடந்தால் நம்மை கீழ் நோக்கி இழுத்துச் செல்லும்.

ஆகையால் ஆசையை கட்டுப்படுத்தி அதை நம் வழிக்கு திருப்பி நடந்தால் அது நாம் அடைய வேண்டிய குறிக்கோள் என்ற இல்லத்திற்கு அழைத்துச் செல்லும்.

பிரசாதம் - பழங்கள் - மேல் சொன்ன வழிகளின் படி நடந்தால், இந்த உலகமே வசப்படும் மற்றும் நமக்காக காத்திருக்கும்.

45 comments:

  1. அருமையான
    பிள்ளையார் பதிவு
    ஒவ்வொரு ஆண்டும் பண்டிகைக்கு பிள்ளையாரே பிள்ளையார் சுழி போட்டு விடுவார்

    ReplyDelete
  2. முந்தி வரமருளும் முக்குருணி
    பிள்ளையாரை தரிசிக்க
    முந்தியே வந்துவிட்டேன்
    படங்களும் பதிவும் மிக மிக அருமை
    பதிவிட்டமைக்கு நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. படங்கள் மிக அழகு.மதுரை மீனாட்சி கோவிலில் இருக்கும் முக்குருணி பிள்ளையாரை பற்றிய அருமையான தகவல்.
    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  4. அருமையா விநாயக விளக்கமும் பதிவும் நன்றி மேடம்!

    ReplyDelete
  5. விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்!
    இதென்ன திருவிளையாடல்!பிள்ளையார் உலகம் சுற்றுகிறார்(கடைசி கிராபிக்ஸ்)

    ReplyDelete
  6. மதுரை முக்குறுணி விநாயகரை பலதடவை தரிஸித்து வந்துள்ளேன்.

    அவருக்குப் படைக்கும் அந்த பிரும்மாணட ஒரே கொழுக்கட்டைபோல இந்த ஒரே பதிவினில் பூர்ணமாக இனிக்கும் எவ்வளவு தகவல்கள்!

    பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். நன்றிகள்.

    அன்புடன் vgk

    ReplyDelete
  7. கடந்த வாரம் முக்குருணி விநாயகருக்கு சந்தனக் காப்பு அலங்காரம்
    செய்திருந்தார்கள். தினமலரில் செய்தியும் படமும் பார்த்தேன்.
    தெய்வாம்சமாக இருந்தது.
    விநாயகரின் சதுர்த்தி திருவிழா நெருங்கும் சமயம்
    தங்களின் பதிவு அழகூட்டுகிறது சகோதரி.

    ReplyDelete
  8. இன்றே பிள்ளையார் சதுர்த்தி வந்தது போல் இருக்கிறது. படங்களும், அதிலும் வாகனத்தில் அமர்ந்து செல்வது போல் இருக்கும் கடைசி படங்கள் அருமை. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  9. விநாயக சதுர்த்தி முன்னோட்டப் பதிவு அருமை!

    ReplyDelete
  10. விநாயகர் சதூர்த்திக்கு ஏற்ற அருமையான பதிவு.

    ReplyDelete
  11. ஆவணி மாதம் விநாயகர் தரிசனம் அருமை !

    ReplyDelete
  12. பக்தி புகழ் பரப்பும் தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  13. முக்குருணி வினாயகர் சிறிப்பான விளக்கங்கள்

    ReplyDelete
  14. முக்குருணி பிள்ளையாரை சிறுவயதில் மதுரைக்கு மாமா வீட்டிற்கு போகும் போது தரிசனம் செய்திருக்கிறேன்.

    இப்போது உங்கள் பதிவில் தரிசனம் செய்து விட்டேன். நன்றிங்க.

    ReplyDelete
  15. நல்ல அருமையான பதிவு சகோ..
    படங்களும் மிக அருமை
    வாழ்த்துகள்..சகோ..

    ReplyDelete
  16. எங்கள் மதுரை மண்ணன் தலைவி மீனாட்சியம்மை கோவிலின் முக்குறுணி விநாயகர் கட்டுரை அருமை. படங்கள் கண்களுக்கு விருந்து.

    ReplyDelete
  17. அருமையான
    பிள்ளையார் பதிவு

    ReplyDelete
  18. goma said...
    அருமையான
    பிள்ளையார் பதிவு
    ஒவ்வொரு ஆண்டும் பண்டிகைக்கு பிள்ளையாரே பிள்ளையார் சுழி போட்டு விடுவார்/

    பிள்ளையார்சுழி போட்ட கருத்துரை. நன்றி.

    ReplyDelete
  19. Ramani said...
    முந்தி வரமருளும் முக்குருணி
    பிள்ளையாரை தரிசிக்க
    முந்தியே வந்துவிட்டேன்
    படங்களும் பதிவும் மிக மிக அருமை
    பதிவிட்டமைக்கு நன்றி
    தொடர வாழ்த்துக்கள்//

    முந்திவந்து முகிழ்த்த கருத்துரைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஐயா.

    ReplyDelete
  20. RAMVI said...
    படங்கள் மிக அழகு.மதுரை மீனாட்சி கோவிலில் இருக்கும் முக்குருணி பிள்ளையாரை பற்றிய அருமையான தகவல்.
    பகிர்வுக்கு நன்றி.//

    அருமையான கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  21. கோகுல் said...
    விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்!
    இதென்ன திருவிளையாடல்!பிள்ளையார் உலகம் சுற்றுகிறார்(கடைசி கிராபிக்ஸ்)/

    முருகன் மயிலில் உலகம் சுற்றியதைப் பார்த்து கிளம்பிவிட்டார் தன் வாகனத்தோடு.
    கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  22. வை.கோபாலகிருஷ்ணன் said...
    மதுரை முக்குறுணி விநாயகரை பலதடவை தரிஸித்து வந்துள்ளேன்.

    அவருக்குப் படைக்கும் அந்த பிரும்மாணட ஒரே கொழுக்கட்டைபோல இந்த ஒரே பதிவினில் பூர்ணமாக இனிக்கும் எவ்வளவு தகவல்கள்!

    பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். நன்றிகள்.

    அன்புடன் vgk//
    பிரும்மாணட பூர்ணமாக இனிக்கும் அருமையான பாராட்டுக்களுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி ஐயா.

    ReplyDelete
  23. மகேந்திரன் said...
    கடந்த வாரம் முக்குருணி விநாயகருக்கு சந்தனக் காப்பு அலங்காரம்
    செய்திருந்தார்கள். தினமலரில் செய்தியும் படமும் பார்த்தேன்.
    தெய்வாம்சமாக இருந்தது.
    விநாயகரின் சதுர்த்தி திருவிழா நெருங்கும் சமயம்
    தங்களின் பதிவு அழகூட்டுகிறது சகோதரி.//

    பதிவிற்கு ஆழகூட்டிய தங்கள் கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  24. வெங்கட் நாகராஜ் said...
    இன்றே பிள்ளையார் சதுர்த்தி வந்தது போல் இருக்கிறது. படங்களும், அதிலும் வாகனத்தில் அமர்ந்து செல்வது போல் இருக்கும் கடைசி படங்கள் அருமை. பகிர்வுக்கு நன்றி.//

    அருமையான கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  25. சென்னை பித்தன் said...
    விநாயக சதுர்த்தி முன்னோட்டப் பதிவு அருமை!/

    அருமையான கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  26. பாலா said...
    விநாயகர் சதூர்த்திக்கு ஏற்ற அருமையான பதிவு.//


    அருமையான கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  27. koodal bala said...
    ஆவணி மாதம் விநாயகர் தரிசனம் அருமை !/


    அருமையான கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  28. FOOD said...
    இன்றையப் பதிவும், படங்களும் பதிவும் அருமை./

    அருமையான கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  29. # கவிதை வீதி # சௌந்தர் said...
    பக்தி புகழ் பரப்பும் தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.../

    வாழ்த்துக்களுக்கு நன்றி.

    ReplyDelete
  30. சாகம்பரி said...
    முக்குருணி வினாயகர் சிறிப்பான விளக்கங்கள்//

    சிறிப்பான கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  31. Rathnavel said...
    அருமை./

    நன்றி ஐயா.

    ReplyDelete
  32. கோவை2தில்லி said...
    முக்குருணி பிள்ளையாரை சிறுவயதில் மதுரைக்கு மாமா வீட்டிற்கு போகும் போது தரிசனம் செய்திருக்கிறேன்.

    இப்போது உங்கள் பதிவில் தரிசனம் செய்து விட்டேன். நன்றிங்க//

    தரிசனத்திற்கும் கருத்துரைக்கும் நன்றிங்க.

    ReplyDelete
  33. ராஜா MVS said...
    நல்ல அருமையான பதிவு சகோ..
    படங்களும் மிக அருமை
    வாழ்த்துகள்..சகோ.//

    அருமையான கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  34. கடம்பவன குயில் said...
    எங்கள் மதுரை மண்ணன் தலைவி மீனாட்சியம்மை கோவிலின் முக்குறுணி விநாயகர் கட்டுரை அருமை. படங்கள் கண்களுக்கு விருந்து.//

    அருமையான கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  35. சமுத்ரா said...
    அருமையான
    பிள்ளையார் பதிவு/


    அருமையான கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  36. முக்குருணி வினாயகர் பற்றிய அழகிய படங்களும் விரிவான விளக்கங்கள் அருளிய கட்டுரைகளும் மிக மிக அழகு இராஜராஜேஸ்வரி.....


    மதுரையில் எப்போதோ நான் மீனாக்‌ஷி அம்மன் கோவிலுக்கு சென்றிருக்கிறேன்..

    அடுத்த வருடம் இந்தியாவுக்கு போகும்போது மதுரை போவேன் இங்கிருந்து போன என் தோழியைக்காண....

    அப்ப கண்டிப்பா முக்குருணி வினாயகரை நினைவில் வைத்திருந்து சென்று தரிசிப்பேன்பா...

    உங்க கருணையால் தினம் தினம் தெய்வ தரிசனம் கிடைத்துக்கொண்டே இருக்கிறது.... இனி என்ன வேண்டும் எனக்கு.....

    அன்பு நன்றிகள்பா பகிர்வுக்கு....

    ReplyDelete
  37. உங்களுக்கும் இனிய கணேஷ் சதுர்த்தி வாழ்த்துக்கள்... இப்பவெல்லாம் சாமி படம் பாக்கணும்னா உங்க ப்ளாக் தான் நினைவுக்கு வருது... சூப்பர் கலக்சன்'ம்மா...நன்றி

    ReplyDelete
  38. படங்கள் மிக அழகு...பகிர்வுக்கு நன்றி...தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  39. அப்பாவி தங்கமணி said...
    உங்களுக்கும் இனிய கணேஷ் சதுர்த்தி வாழ்த்துக்கள்... இப்பவெல்லாம் சாமி படம் பாக்கணும்னா உங்க ப்ளாக் தான் நினைவுக்கு வருது... சூப்பர் கலக்சன்'ம்மா...நன்றி//

    அருமையான கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  40. மஞ்சுபாஷிணி said...
    முக்குருணி வினாயகர் பற்றிய அழகிய படங்களும் விரிவான விளக்கங்கள் அருளிய கட்டுரைகளும் மிக மிக அழகு இராஜராஜேஸ்வரி...//

    கருத்துரைக்கு நன்ரி மஞ்சுபாஷிணி. அழகான இனிமையான கருத்தைக் கவர்ந்த பெயர்!

    மதுரை சென்று தரிசனம் பெற்றுவாருங்கள்.

    ReplyDelete
  41. ரெவெரி said...
    படங்கள் மிக அழகு...பகிர்வுக்கு நன்றி...தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்...//

    வாழ்த்துக்களுக்கு நன்றி.

    ReplyDelete
  42. ;)
    புத்திர் பலம் யசோ தைர்யம்
    நிர்ப்பயத்வ - மரோகதா

    அஜாட்யம் வாக்படுத்வம்ச
    ஹனூமத் ஸ்மரணாத் பவேத்.

    ReplyDelete
  43. THIS COMMENT IS ONCE AGAIN GIVEN NOW:

    952+2+1=955 ;)))))

    முக்குருணிப் பிள்ளையாருக்குப் படைக்கப்படும் மிகப்பிரும்மாண்டமான கொழுக்கட்டைப் பிரஸாத பூர்ணம் போன்ற தங்களின் பதில் எனக்குப் பூர்ண திருப்தியளித்தது.

    பின்னூட்டத்திற்கு பதில் என்ற தங்களின் கொழுக்கட்டைப் பூர்ணத்தின் ருசியோ ருசி .... தனி ருசி.

    நன்கு சுவைத்து மகிழ்ந்தேன். நன்றியோ நன்றிகள்.

    ReplyDelete