தாயிற் சிறந்த தயா ஆன தத்துவன்
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடர்
கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறும் ஈசனின்
சிறந்த பொன்னொளிர் சக்தி அன்னை பார்வதியின் புதல்வர்
சிறந்தருளும் விநாயகன்.
பரமேசுவரருக்குப் புதல்வர்களாக முருகன், வீரபத்திரர், மற்றும் பைரவர் வழிபாடுகள் உண்டு. பரமேசுவரருக்கும் மோகினி உருவத்தில் இருந்த மகாவிஷ்ணுவுக்கும் பிறந்தவர் ஐயனார்.
கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று ஒளவையார் கூறியுள்ளார்.
ஐயனார் கோயில் இல்லாத கிராமமே தமிழகத்தில் இல்லை என்று சொல்லலாம்.
ஐயனார் கோயில் இல்லாத கிராமமே தமிழகத்தில் இல்லை என்று சொல்லலாம்.
"கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்தகுடி" தமிழ்க்குடியாகும்.
உயிர் உடல் ஆயுதம் இவற்றோடு தோன்றிய தமிழர் தாம் பேசும் தமிழ் மொழியிலும் உயிர் எழுத்துக்களையும். மெய்யெழுத்துக்களையும் ஆயுத எழுத்துக்களையும் உருவாக்கிச் சங்கம் வைத்து ஆராய்ந்து தமிழ் மொழியை வளர்த்துள்ளனர்,
காருறழ் வெய்ய களிற்றிடையாகிப்
பாரிட எண்ணிலர் பாங்குற நண்ணப்
பூரணை புட்கலை பூம்புற மேவ
வாரணம் ஊர்பவன் முன்னுற வந்தான்
என்பது கச்சியப்ப சிவாச்சாரியார் பாடிய கந்தபுராணத்திலுள்ள ஐயனார் தோற்றம் பற்றிய வரலாறு பேசும் பகுதியில் ஐயனாரின் திருவுருவ வர்ணனையுடன் பூரணை புஷ்கலா தேவியருடன் ஹரிஹரபுத்திரராக ஐயப்பன் மதக்களிற்றில் எழுந்தருளி வருவதாகச் சொல்லப்படுகின்றது.
தெய்வங்களின் தோற்றம், உருவ அமைப்பு, மற்றும் அருளும் தன்மை ஆகியவற்றை உணர்ந்து நமது முன்னோர்கள் அவர்களை வணங்கி வழிபட்டுப் பலனடைந்துள்ளனர்.
சொல்லுக சொல்லின் பொருள் உணர்ந்து" என்பதற்கேற்பத் தற்போது விவரம் தெரிந்தவர்கள் ஐயனார் என்று எழுதுகின்றனர்.
ஆனால், சிலர் அய்யனார் என்றும் எழுதுகின்றனர்.
ஆனால், சிலர் அய்யனார் என்றும் எழுதுகின்றனர்.
ஐ" என்றால் தமிழில் தலைவன் என்று பொருள்.
"ஐயன்" என்றால் தலைவனானவன் என்று பொருள்.
"அய்" என்றால் பொருள் ஏதும் இல்லை.
எனவே நாம் வணங்கும் தெய்வத்தின் பெயரை நாமே குறைத்து ஒலிப்பதும் கூறுவதும் எழுதுவதும் தவறாகும்.
"ஐயனார்" என்றே கூறவேண்டும், எழுதவேண்டும், படிக்க வேண்டும். இதேபோல் "ஐயா" என்றுதான் எழுதவேண்டும்.
"அய்யா" என்று எழுதக்கூடாது. "ஐயா" என்றால் தலைவர் என்று பொருள். அய்யா என்றால் பொருள் ஏதும் இல்லை.
"ஐயன்" என்றால் தலைவனானவன் என்று பொருள்.
"அய்" என்றால் பொருள் ஏதும் இல்லை.
எனவே நாம் வணங்கும் தெய்வத்தின் பெயரை நாமே குறைத்து ஒலிப்பதும் கூறுவதும் எழுதுவதும் தவறாகும்.
"ஐயனார்" என்றே கூறவேண்டும், எழுதவேண்டும், படிக்க வேண்டும். இதேபோல் "ஐயா" என்றுதான் எழுதவேண்டும்.
"அய்யா" என்று எழுதக்கூடாது. "ஐயா" என்றால் தலைவர் என்று பொருள். அய்யா என்றால் பொருள் ஏதும் இல்லை.
ttt
தாருகாவனத்திலே மகரிஷிகளின் அகங்காரத்தை அழிப்பதற்காக வேள்வியைக் குலைக்க வேண்டியிருந்தது. இதற்காகப் பரமேசுவரன் பிட்சாடனர் உருவமும், மகாவிஷ்ணு மோகினி உருவமும் கொண்டனர்.
பிட்சாடனர் மகரிஷிகளின் பத்தினிகள் வாழும் வீட்டுத் தெருக்களிலே சென்று பிச்சை கேட்டவரது தோற்றத்தைக் கண்டவர்களின் மனத்தில் தடுமாற்றம் ஏற்பட்டது.
மோகினி ரிஷிகள் வேள்விகள் செய்யும் இடத்திற்குச் சென்று அவர்களின் மனத்தை அலைபாயச் செய்தார். இதனால் வேள்வி தடைபட்டது.
பிட்சாடனர் மோகினியின் உருவத்தில் காமமுற்று அவளை அடையவேண்டி விரட்டிச் சென்றார்.
அப்போது காட்டுக்குள்ளே கண்மாய்க்கரையில் பிறந்தவர் ஐயனார் அல்லது சாஸ்தா ஆவார்.
ஐயனார் மாசிமாதம் தேய்பிறையில் அமாவாசைக்கு முதல்நாள் சிவராத்திரி அன்று பிறந்தார்.
ஐயனார் சர்வேசுவரனைப் போன்ற தோற்றம் உடையவராய் இருப்பார். கிழக்குத்திசை நோக்கி அமர்ந்திருப்பார்.
மார்பில் பூணூல் அணிந்திருப்பார். இளைஞரைப்போன்றவர். விரிந்து பரந்த முகத்தையும் மார்பையும் உடையவர்.
தங்கநிறம் அல்லது சிவப்பு நிறமானவர். கீரீடம் அணிந்திருப்பார். கருத்த அடர்த்தியான சுருண்ட முடியை உடையவர்.
வலது காதில் குழையும் இடதுகாதில் குண்டமும் அணிந்திருப்பார்,
சர்வேசுவரனுக்கான அனைத்து ஆபரணங்களையும் அணிந்திருப்பார். சந்தனம் பூசியிருப்பார். பீடத்தின் மீது நன்கு நிமிர்ந்து உட்கார்ந்திருப்பார்.
மார்பில் பூணூல் அணிந்திருப்பார். இளைஞரைப்போன்றவர். விரிந்து பரந்த முகத்தையும் மார்பையும் உடையவர்.
தங்கநிறம் அல்லது சிவப்பு நிறமானவர். கீரீடம் அணிந்திருப்பார். கருத்த அடர்த்தியான சுருண்ட முடியை உடையவர்.
வலது காதில் குழையும் இடதுகாதில் குண்டமும் அணிந்திருப்பார்,
சர்வேசுவரனுக்கான அனைத்து ஆபரணங்களையும் அணிந்திருப்பார். சந்தனம் பூசியிருப்பார். பீடத்தின் மீது நன்கு நிமிர்ந்து உட்கார்ந்திருப்பார்.
வலதுகையில் தண்டம் அல்லது தடி வைத்திருப்பார். இடதுகையை இடதுகாலின் மீது சார்த்தியது போல் வைத்திருப்பார், இடதுகாலை மடித்து பீடத்தின் வைத்துக்கொண்டு வலதுகாலை கீழே தொங்கவிட்டிருப்பார்.
கண்மாய்க்கரை அல்லாத இடங்களில் உள்ள ஐயனார் நின்றபடி இருப்பார். ஐயனார் நிற்கும் கோயில்களில் தேவியர்களும் நின்றபடி இருப்பர்.
சாந்த குணமுடையவர். நாய், கோழி, யானை, குதிரை இவற்றுடன் விளையாடும் குணம் உடையவர்.
பொழுதுபோக்காகவும் விளையாட்டாகவும் பாடிக்கொண்டிருப்பவர். யானை வாகனம் உடையவர்.
யானைக்கொடிமரத்தை உடையவர். வெள்ளைக்குதிரையை உடையவர்.
சாந்த குணமுடையவர். நாய், கோழி, யானை, குதிரை இவற்றுடன் விளையாடும் குணம் உடையவர்.
பொழுதுபோக்காகவும் விளையாட்டாகவும் பாடிக்கொண்டிருப்பவர். யானை வாகனம் உடையவர்.
யானைக்கொடிமரத்தை உடையவர். வெள்ளைக்குதிரையை உடையவர்.
தேவியர் இருவர்
சிறப்பான காரணகாரியங்கள் கருதி சில ஊர்களில் தேவியர்களுடன் சேர்ந்திருக்காமல், ஐயனார் தனித்தும் இருக்கும் ஐயனாரை பாலசாஸ்தா என்று அழைக்கின்றனர்.
பாலசாஸ்தா ஐயனார் மிகவும் துடுக்கானவராகவும் துடியானவராகவும் விளங்குகின்றார்.
பொதுவாக, ஐயனாருக்குப் பூர்ணாதேவி, புஷ்கலாதேவி என இரண்டு தேவியர் உள்ளனர், ஐயனார் தேவலோகத்தைச் சேர்ந்தவர்.
பூலோகத்தில் அவதரித்தவர். எனவே தேவலோகத்தைச் சேர்ந்த புஷ்கலாதேவியும் பூலோகத்தைச் சேர்ந்த பூர்ணாதேவியும் துணைவியராக உள்ளனர்.
பூலோகத்தில் அவதரித்தவர். எனவே தேவலோகத்தைச் சேர்ந்த புஷ்கலாதேவியும் பூலோகத்தைச் சேர்ந்த பூர்ணாதேவியும் துணைவியராக உள்ளனர்.
ஸ்ரீவழிவிட்ட ஐயனார்
தேவியர்களது தலையானது ஐயனாரின் தோள்பட்டை உயரத்தில் இருக்கும். ஐயனாரின் அருகில் உள்ள கையில் மலரைப் பிடித்தபடியும், ஐயனாரின் அருகில் உள்ள காலை மடித்துப் பீடத்தின் மீது வைத்துக் கொண்டு மற்றொரு காலைக் கீழே தொங்கவிட்டபடியும் அமர்ந்திருப்பர்.
புஷ்கலை என்றால் பூவைப்போன்ற பண்புடையவள் என்று பொருள். பூ என்று பொதுவில் சொன்னால் அது தாமரையைக் குறிக்கும்.
எனவே புஷ்கலை என்றால் தாமரை மலரைப்போன்றவள். மலர்ந்த முகமுடையவள், பரந்த எண்ணமுடையவள், மணம் நிறைந்தவள்.
தங்க நிறமானவள்.
எனவே புஷ்கலை என்றால் தாமரை மலரைப்போன்றவள். மலர்ந்த முகமுடையவள், பரந்த எண்ணமுடையவள், மணம் நிறைந்தவள்.
தங்க நிறமானவள்.
பூரணம் என்றால் நிறைவு, பௌர்ணமி என்று பொருள் எனவே, பூரணை என்றால் மனநிறைவானவள் முழுமதி போன்றவள் என்று பொருளாகும்.
பாரிவார தெய்வங்கள்
இந்திரன், அக்னி, எமதர்மன், நிருதி, வருணன், வாயு, குபேரன் ஈசானியன் ஆகிய எட்டு திசைதெய்வங்களும், யோகிகள், சித்தர்கள், வித்யாதர்கள், கின்னரர்கள் முதலியோர் ஐயனாரை வணங்கியபடி இருப்பர்.
காவலுக்குக் கருப்பர்
ஐயனாரின் பாரிவார தெய்வங்களாக கருப்பணசாமி, வீரபத்திரர், இடும்பன், நடுக்காட்டான், நடாள், ஆண்டி, நொண்டி, இருளப்பன், சின்னான், சன்னாசி, மூக்கன் மற்றும் சோணை முதலிய ஆண் தெய்வங்களும்,
காளி, நீலி, ராக்காயி, ராக்கச்சி, கருப்பாயி, சடைச்சி, இருளாயி, செகப்பி, மூக்காயி, பேச்சி, ஏழைகாத்த அம்மன் மற்றும் சப்த(ஏழு) கன்னியர்கள் முதலிய பெண்தெய்வங்களும் பரிவார தெய்வங்களாக உள்ளனர்.
நாய், ஆடு, மயில், கோழி இவைகள் ஐயனாருடன் இருக்கும்.
உணவு
ஐயனார் சுத்தசைவமாகும். சர்க்கரைப்பொங்கல் படைக்கப்படும்.
ஆனால் இவரது பரிவார தெய்வங்களுக்கு மதுபானங்கள் வைத்து ஆடு, கோழி பலியிடுகின்றனர். பலியிடும்போது ஐயனார் சன்னதியை மூடிவைத்து விடுவார்கள், அல்லது திரையிட்டு விடுவார்கள்.
கிராமங்களில் துணியை வைத்து ஐயனாரை மறைத்துவிடுகிறார்கள்.
ஆனால் இவரது பரிவார தெய்வங்களுக்கு மதுபானங்கள் வைத்து ஆடு, கோழி பலியிடுகின்றனர். பலியிடும்போது ஐயனார் சன்னதியை மூடிவைத்து விடுவார்கள், அல்லது திரையிட்டு விடுவார்கள்.
கிராமங்களில் துணியை வைத்து ஐயனாரை மறைத்துவிடுகிறார்கள்.
கோயில்
ஐயனார் தோன்றிய இடம் கண்மாய்க்கரையாகும்.
இதன் காரணமாகவே ஐயனார் கோயில்கள் கண்மாய்க் கரையில் மடை அல்லது களுங்கு அருகே இருக்கும்.
சில ஊர்களிலே நீர்நிலைகளின் அருகில் கோயில் இருக்கும்.
இதன் காரணமாகவே ஐயனார் கோயில்கள் கண்மாய்க் கரையில் மடை அல்லது களுங்கு அருகே இருக்கும்.
சில ஊர்களிலே நீர்நிலைகளின் அருகில் கோயில் இருக்கும்.
கோயிலின் நுழைவாயிலின் இடத்தே விநாயகரும் வலத்தே சுப்பிரமணியரும் உள்ளனர்.
மடப்புரம் காளியம்மன்
ஐயனாருக்கு முன்னே இரண்டு பக்கங்களிலும் பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு பெரிய குதிரைகளுக்குச் சேமக்குதிரை என்று பெயர்.
இக்குதிரைகள் முன்னங்கால்களைத் தூக்கிய படி இருக்கும். அவற்றின் கால்களைத் தங்களது தோள் களில் தாங்கியபடி ஒவ்வொரு குதிரைக்கும் இரண்டு பூதங்கள் நிற்கும். இப்பூதங்களுக்கு நடுவே, குதிரைக்குக் கீழே காளி நிற்பாள்.
இக்குதிரைகள் முன்னங்கால்களைத் தூக்கிய படி இருக்கும். அவற்றின் கால்களைத் தங்களது தோள் களில் தாங்கியபடி ஒவ்வொரு குதிரைக்கும் இரண்டு பூதங்கள் நிற்கும். இப்பூதங்களுக்கு நடுவே, குதிரைக்குக் கீழே காளி நிற்பாள்.
சேமக்குதிரை
மடப்புரம் காளியம்மன்
கோயில் பூசாரி
பூணூல் அணிந்தும் அசைவம்(மாமிசம்) உண்ணும் வழக்கமுடைய வேளார் பட்டம் பெற்ற குயவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஐயனார் கோயில்களில் பரம்பரை பூசாhpகளாக உள்ளனர்.
பூணூல் அணியாதவரும் மீசை வைத்திருப்பவரும் ஐயனாருக்குத் தொண்டு செய்ய அனுமதியில்லை.
பூணூல் அணியாதவரும் மீசை வைத்திருப்பவரும் ஐயனாருக்குத் தொண்டு செய்ய அனுமதியில்லை.
திருவிழாக்கள்
சிவராத்திரி அன்று ஐயனார் பிறந்தவர் என்பதால் அன்று வழிபாடுகள் சிறப்பாக நடைபெறுகின்றன. அன்றையதினம் ஐயனாரைக் குலதெய்வமாகக் கும்பிடுவோர் அனைவரும் அவரவர் குடும்பத்தினருடன் ஒன்றாகக் கூடிவந்து வழிபடுகின்றனர்.
எருதுகட்டுதல் விழாவில் ஊர் மக்கள் தங்களது ஆடுமாடுகளை ஐயனாருக்கு காணிக்கையாகக் கொடுக்கின்றனர்.
தைப்பொங்கலை அடுத்து வரும் மஞ்சுவிரட்டு திருவிழாவில் ஐயனார் கோயில் காளைமாடுகளையும், தங்களது வீட்டில் உள்ள மாடுகளையும் அவிழ்த்து விரட்டிவிடுகின்றனர். இவற்றை இளைஞர்கள் பிடிக்கின்றனர்.
புரவிஎடுத்தல் அன்று ஐயனார் கோவிலில் உள்ள சேமக்குதிரைகளைப் போலச் சிறிய மண்குதிரைகளைச் செய்து மக்கள் அனைவரும் திருவிழா அன்று அவற்றை எடுத்துச் சென்று கோயிலில் சேர்ப்பர்.
நேர்த்திக்கடனாகவும் செய்கின்றனர்.
முளைப்பாரி எடுத்தல் என்ற விழாவில் அனைத்துத் தானியங்களையும் முளைகட்டிவைத்து, அவற்றைப் பெண்கள் தலைகளில் சுமந்து சென்று கோயிலில் வைத்து விழாக்கொண்டாடுகின்றனர்.
சில ஊர்களில் இவ்விழாவை அம்மன் கோயில்களிலும், சில ஊர்களில் இவ்விழாவை ஐயனார் கோயிலிலும் கொண்டாடுகின்றனர்.
சில ஊர்களில் இவ்விழாவை அம்மன் கோயில்களிலும், சில ஊர்களில் இவ்விழாவை ஐயனார் கோயிலிலும் கொண்டாடுகின்றனர்.
பிரசாதம்
சிவன்கோயிலில் விபூதியும், அம்மன்கோயிலில் குங்குமமும், விஷ்ணு கோயிலில் துளசித் தீர்த்தமும் பிரசாதமாக வழங்கப்படும்.
ஐயனார் கோயிலில் சந்தனமும் சுத்தமானநீரும் பிரசாதமாக வழங்கப்படும். இவற்றுடன் விபூதியும் குங்குமமும் வழங்கப்படும்.
ஐயனார் கோயிலில் சந்தனமும் சுத்தமானநீரும் பிரசாதமாக வழங்கப்படும். இவற்றுடன் விபூதியும் குங்குமமும் வழங்கப்படும்.
காவலுக்குக் கருப்பர்
ஐயனாரின் பரிவார தெய்வங்களில் ஒன்றhன கருப்பர் காவல் தெய்வமாவார். இவர் கையில் அரிவாளுடன் வெள்ளைக் குதிரையில் ஏறி, நாய் உடன் வர, ஊரை வலம் வந்து காவல் செய்வார்.
அகிலமே வணங்கும் ஐயனார்
ஐயனார் என்பவர் எல்லோருக்கும் தலைவன் ஆவார். இதனால் அனைத்து சமூகத்தினரும் சாதிவேறுபாடு இல்லாமல் ஐயனாரைக் குலதெய்வமாக வணங்கி வழிபடுகின்றனர். இவ்வுலகம் முழுமையும் இவரது தலைமைக்குக் கட்டுப்பட்டே நடக்கிறது.
வழிபடுவதால் பயன்
ஐயனாரை வழிபடுபவர்கள், "யாதும் ஊரே யாவரும் கேளீர்" என்பதற்கு உதாரணமாய் இருப்பர். பிறருடன் உறவுமுறை கொண்டு பழகுவர். பிறரிடம் கேலி கிண்டல் பேசி அனைவரையும் மகிழ்ச்சியடையச் செய்வர்.
ஐயனாரை வழிபடுவதால், பில்லி சூனியம் விலகும், நல்லபுத்தி கிடைக்கும். எதையும் ஆராய்ந்தறிந்து செய்வர். தவறு செய்தவர்களிடமும் அன்பாக இருப்பர். நல்ல தீர்ப்பு வழங்குவர். வீடுகளில் வளர்ப்புப் பிராணிகள் நிறைந்திருக்கும். தண்ணீரும் விவசாயமும் பெருகும். தானியம் சேரும். நற் சுகத்தை அடைவர்.
ஐயனாரும் ஐயப்பனும்
சிவபெருமானுக்கும் மோகினி(பெண்வடிவில் இருந்த மகாவிஷ்ணு)க்கும் பிறந்தவர்கள் என்ற அடிப்படையில் ஐயனாரும் ஐயப்பனும் ஒருவரே என்று சிலர் கூறுகின்றனர்.
இக்கருத்தானது, தனித்து இருக்கும் பாலசாஸ்தா என்ற ஐயனாருக்கும் ஐயப்பனுக்குமே பொருந்தும். ஆனால் தம்பதிசமேதராக தேவியருடன் வீற்றிருந்து அருளும் ஐயனாரும் ஐயப்பனும் வேறுவேறானவர்கள்
காரணகாரியம் கருதி, ஒவ்வொரு ஐயனாருக்கும் ஒவ்வொரு பெயர் இருக்கும்.
பொதுவாக ஐயனாரின் பெயருக்கான காரணம், தோற்றம், உருவம், தேவியர், பரிவார தெய்வங்கள் அவரது கீர்த்தி மற்றும் அவரை வணங்குவோர் அடையும் பலன்கள் அநேகம்.
நாகரிகத் துவக்க காலத்தில், கூடி வாழ்தலின் தேவையை உணர்ந்து கொண்ட புதிதில், மக்கள் கூட்டம் கூட்டமாகப் பல்வேறு கிராமங்களில் வாழ்ந்தனர். கிராமம் தான் அவர்களுடைய நாடு. ஒரு கிராமத்து மக்கள் ஒரு குலத்தவராகத் தங்களைக் கருதிக் கொண்டனர்.
ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு தலைவன் ஐயன் எனப்பட்டான். குலங்களுக்கிடையில் மோதல்கள் நடைபெறும்போது அவன் தன் உதவியாளர்களுடன் ஊர் எல்லையில் நின்று ஆயுதம் ஏந்தி மக்களைக் காத்து வந்தான்.
ஐயன் இறந்த பிறகு ஊருக்கு வெளியே அவனுக்குச் சமாதி அமைத்து மக்கள் வழிபட்டனர்.
அடுத்தடுத்து வந்த ஐயன்களுக்கும் அதே இடத்தில் சமாதி அமைக்கப்பட்டிருக்கலாம்.
ஆர் விகுதி பெற்று ஐயனார் என்று அழைக்கப்பட்ட இத்தகைய தொல் பழம் தெய்வக் கோவில்களில் யானை, குதிரை மற்றும் படைவீரர்களது சுடுமண் பொம்மைகள் அமைக்கப்பட்டு இருப்பது ஐயனின் ஊர்காவல் வேலையைச் சுட்டுகிறது.
அடுத்தடுத்து வந்த ஐயன்களுக்கும் அதே இடத்தில் சமாதி அமைக்கப்பட்டிருக்கலாம்.
ஆர் விகுதி பெற்று ஐயனார் என்று அழைக்கப்பட்ட இத்தகைய தொல் பழம் தெய்வக் கோவில்களில் யானை, குதிரை மற்றும் படைவீரர்களது சுடுமண் பொம்மைகள் அமைக்கப்பட்டு இருப்பது ஐயனின் ஊர்காவல் வேலையைச் சுட்டுகிறது.
ஐயனார் என்பவர் தெய்வம், மனித அவதாரம் எடுக்காதவர். ஆனால், ஐயப்பன் மனிதனாகப் பிறந்தவர்.
ஐயனார் கண்மாய்க்கரையில் தெய்வமாகப் பரமேசுவரன் மோகினியால் தோற்றுவிக்கப் பெற்றவர். ஆனால்,
ஐயப்பன் காட்டில் குழந்தையாகக் கண்டெடுக்கப் பெற்று அரசனால் வளர்க்கப் பெற்றவர்.
ஐயனார் ஒரு குடும்பஸ்தர். இரண்டு தேவியருடனும் பரிவார தெய்வங்களுடனும் ஆட்சி செய்பவர்.
ஆனால் ஐயப்பன் ஒரு யோகி. சீவசமாதியில் நித்தியயோகியாய் இன்றும் இருப்பவர்.
ஆனால் ஐயப்பன் ஒரு யோகி. சீவசமாதியில் நித்தியயோகியாய் இன்றும் இருப்பவர்.
ஐயனார் இடதுகாலை மடித்து வலதுகாலை தொங்கவிட்டு அமர்ந்திருப்பார். ஆனால், ஐயப்பன் இரண்டு கால்களையும் மடித்து முழங்கால்கள் மேலே தூக்கியவாறு இருக்கும்படி அமர்ந்திருப்பார்.
இதனால் ஐயனாரும் ஐயப்பனும் வேறுவேறானவர்கள் என்பது விளங்கும்.
ஐயனாரை வணங்கி வழிபட்டு வாழ்பவர்களின் வாழ்க்கையானது பிறருக்குத் துன்பமில்லாமல் மகிழ்ச்சி யைக் கொடுப்பதாக அமைந்திருக்கும்.
இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வோளண்மை செய்தல் பொருட்டு (குறள் -
என்ற குறளுக்கு இலக்கணமாக அனைத்து நலன்களையும் பெற்று வையத்துள் வாழ்வாங்கு வாழ்வர் என்பது உறுதி.
ஐயனாரை வணங்குவோம் அனைத்து நலன்களையும் பெறுவோம்
பாற்கடலைக்கடைந்து அமிர்தம் பங்கிட மோகினி உருவெடுத்த மஹாவிஷ்ணுவிற்கும் சிவபெருமானுக்கும் பிறந்தவர் ஐயப்பன்..
தாருகாவனத்திலே மகரிஷிகளின் அகங்காரத்தை அழிப்பதற்காக வேள்வியைக் குலைக்க வேண்டியிருந்தது. இதற்காகப் பரமேசுவரன் பிட்சாடனர் உருவமும், மகாவிஷ்ணு மோகினி உருவமும் கொண்ட நேரத்தில் கண்மாய்க் கரையில் பிறந்தவர் ஐயனார்..
கைவிடாத கடவுள்
சுடலை வீரன் ஆலயம். திருநெல்வேலியிலிருந்து கயத்தாறு செல்லும் சாலையில் உள்ளது.
சுடலை வீரன்
நல்லன சொல்வதில் நடுக்கம் இல்லை!!!
அல்லன அகற்றிடத் தயக்கம் இல்லை!!!!
வல்லமை தாராயோ! - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே!
அருமையாய் எழுதி உள்ளீர்கள்
ReplyDelete"ஐயனார்" என்றே கூறவேண்டும், எழுதவேண்டும், படிக்க வேண்டும். இதேபோல் "ஐயா" என்றுதான் எழுதவேண்டும். "அய்யா" என்று எழுதக்கூடாது. "ஐயா" என்றால் தலைவர் என்று பொருள். அய்யா என்றால் பொருள் ஏதும் இல்லை.//
ReplyDeleteஇப்போது தான் அறிந்து கொண்டேன் நன்றி.
அருமையான பதிவு.
ReplyDeleteநிறைய விஷயங்கள் கொட்டிக்கிடக்கின்றன.
அனைத்து படங்களும் அருமை; பேசுகின்றன.
வாழ்த்துக்கள் அம்மா.
நீண்ட சுவையான பதிவு தந்துள்ள தகவல் களஞ்சியத்தின் தங்கக் கரங்களுக்குப் பாராட்டுக்கள்.
ReplyDeleteஇதைப்படிக்கும் அனைவருக்கும் ஐயனாரும், ஐயப்பனும் ஜயமளிக்கட்டும்.
வழக்கம் போல் அழகான படங்கள், அருமையான விளக்கங்கள் யாவும் வெகு ஜோர்.
தொடரட்டும் தங்களின் இந்த ஆன்மீகப்பணிகள்.
வாழ்த்துக்கள்.
நண்பர்கள் தின வாழ்த்துக்கள் சகோதரி ......
ReplyDeleteபதிவைப் படிக்கும் போது என் மனம் பக்தியில் துடித்து, ஊஞ்சல் ஆடுவதை , அந்த முதல் படத்தில் திரிசூலத்தின் அடியில் தொங்கும் பொருள் காட்டிடுதே!
ReplyDeleteஇப்படியொரு அட்டகாசமானத் தகவல்களா என்று எனக்கு ஏற்படும் வியப்பு அந்த முதல் படத்தில் உள்ள காளைமாட்டின் மூடிமூடித்திறக்கும் கண்களே சொல்லுகின்றனவே!
உங்களின் தனிச்சிறப்புகளையும், பளிச்சிடும் புத்திசாலித்தனத்தையும் பறைசாற்றுவதாக உள்ளதே, முதல் படத்தினில், அந்த தொந்திப் பிள்ளையார், அழகிய முருகன், ஸ்ரீ பார்வதி, ஸ்ரீ பரமேஸ்வரரின் திருக்கரங்களில் ஜொலித்திடும் அருள் ஆசிகள்.
முதல் படமே ஆசி வழங்குவதாய்
ReplyDeleteஇருக்கிறது அருமை .
அய்யனாருக்கும் ,ஐயப்பனுக்கும் உள்ள
வேறுபாடு அறிந்தேன்
மேடத்திற்கு
நண்பர்கள் தின வாழ்த்துக்கள்
பிரமாதம்!
ReplyDeleteஐயனார் என்றால் யாரென்றே தெரியாதிருந்தேன். நிறைய விவரங்களைப் படங்களோடு தொகுத்தளித்தமைக்கு மிகவும் நன்றி. ஐயனார் சைவம் என்பதும் சுவையான தகவல். ஐயப்பன் ஆனால் ஐயப்பனில்லை என்பது கொஞ்சம் இழுக்கிறது..
எப்படி உங்களால் தொடர்ந்து எழுத முடிகிறது என்று கேட்பதை விட, தொடர்ந்து எழுத முடிவதற்காக நன்றி சொல்வது மேல் என்று நினைக்கிறேன்.
என்னவென்று சொல்ல !!!!
ReplyDeleteவார்த்தைகள் இல்லை என்னிடம்
பதிவின் இயல்பு என்னை இன்பம் கொள்ளச் செய்தது.
சிறுதெய்வங்களில் முக்கிய காவல் தெய்வமான அய்யனார்
பற்றி எளிதான நடையில் அற்புதமான கட்டுரை...
என்ன தவம் செய்தேன் தங்களின் கட்டுரை படிக்க........
ஒரு சிறிய வேண்டுகோள்...
புஷ்கலா தேவி என்பது வடமொழிச் சொல்
பொற்கொடி அம்மையார் என்பது நம் தூய தமிழ்ச் சொல்.
இந்த சொல்லை பயன்படுத்துங்கள் இன்னும் மிளிரும் உங்கள் கட்டுரை...
இது என்னுடைய பணிவான வேண்டுகோள்.....
இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் சகோதரி.
அப்பாடா! எவ்வளவு தகவல்கள்! தகவல் களஞ்சியமாக உள்ளது சகோதரி உங்கள் இடுகை. பக்தி அற்றவனையும் பக்தி கொள்ள வைக்கும் ஆக்கம் இது எனக்கு மிகப் பிடித்துள்ளது. மிக்க நன்றி நல்ல படங்கள் சில படங்களை நான் சுட்டுவிட்டேன்.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
http:/www.kovaikkavi.wordpress.com
திறம்பட எழுதி...திரும்ப படிக்கும் வன்னம் செய்ததற்கு நன்றி சகோ.
ReplyDeleteஅருமையான கட்டுரை.. எக்கச்சக்க தகவல்கள்.. பகிர்வுக்கு நன்றி ராஜ ராஜேஸ்வரி.
ReplyDelete@கவி அழகன் said...
ReplyDeleteஅருமையாய் எழுதி உள்ளீர்கள்//
கருத்துரைக்கு நன்றி.
கோகுல் said...//
ReplyDeleteகருத்துரைக்கு நன்றி.
Rathnavel said...
ReplyDeleteஅருமையான பதிவு.
நிறைய விஷயங்கள் கொட்டிக்கிடக்கின்றன.
அனைத்து படங்களும் அருமை; பேசுகின்றன.
வாழ்த்துக்கள் அம்மா//
வாழ்த்துக்களுக்கு நன்றி ஐயா
@ வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteநீண்ட சுவையான பதிவு தந்துள்ள தகவல் களஞ்சியத்தின் தங்கக் கரங்களுக்குப் பாராட்டுக்கள்.
அருமையான ஆழ்ந்த நுணுக்கமான கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த நன்றி ஐயா.
@koodal bala said...
ReplyDeleteநண்பர்கள் தின வாழ்த்துக்கள் சகோதரி ......//
இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.
@ M.R said.../
ReplyDeleteஇனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.
@ அப்பாதுரை said...
ReplyDeleteபிரமாதம்!
ஐயனார் என்றால் யாரென்றே தெரியாதிருந்தேன். நிறைய விவரங்களைப் படங்களோடு தொகுத்தளித்தமைக்கு மிகவும் நன்றி. ஐயனார் சைவம் என்பதும் சுவையான தகவல். ஐயப்பன் ஆனால் ஐயப்பனில்லை என்பது கொஞ்சம் இழுக்கிறது..//
கருத்துரைகளுக்கு நன்றி ஐயா.
இந்த ஆராய்ச்சிக்குத்தூண்டிதே தங்கள் கேள்விதான்.
//ஐயப்பன் ஆனால் ஐயப்பனில்லை என்பது கொஞ்சம் இழுக்கிறது..///
ஐயப்பன் வேறு என்று உறுதியான முடிவு கிடைத்திருக்கிறது எனக்கு.
இழுவை வரவில்லையே.
@மகேந்திரன் said...//
ReplyDeleteஅருமையான தமிழ் பொற்கொடிக்கு நன்றி.
@kavithai said.../
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி.
@ அந்நியன் 2 said...
ReplyDeleteதிறம்பட எழுதி...திரும்ப படிக்கும் வன்னம் செய்ததற்கு நன்றி சகோ//
கருத்துரைக்கு நன்றி.
@அமைதிச்சாரல் said...
ReplyDeleteஅருமையான கட்டுரை.. எக்கச்சக்க தகவல்கள்.. பகிர்வுக்கு நன்றி
ராஜ ராஜேஸ்வரி.//
அமைதிச்சாரலின் அருமையான வருகைக்கும் அழகான கருத்துக்கும் நன்றி.
அழகான படங்கள் அருமையான விளக்
ReplyDeleteகங்கள். நிறைய விஷயங்கள்தெரிந்துகொள்ள முடிகிரது.
ஐயனாரை வணங்குவோம்
ReplyDeleteஅனைத்து நலன்களையும் பெறுவோம்//
ஐயனார் அனைத்து நலன்களையும் நிச்சியம் தருவார். உண்மை.
எங்களுக்கு ஆழ்வார்குறிச்சி பக்கம் மடவார் விளகத்தில் சாஸ்தா தான் குலதெய்வம். ஏரிக்கு அருகில் இயற்கை வளம் சூழ இருப்பார்.
படங்கள் எல்லாம் அழகு.
குடும்ப சகிதமாய் ஆசிர்வதிக்கும் முதல் படம் அழகு. சிவன் ஏறி வந்த காளையும்(விடை)கண்ணை விழித்து விழித்து பார்ப்பது அழகு.
என் உளம் கனிந்த நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...
ReplyDeleteகாவல் தெய்வம் ஐயனார் பற்றிய பதிவு அருமை. அவர் சைவம் என்பதும் புதிய செய்தி.
ReplyDeleteஇன்றைக்காவது, தங்களின் பழைய வழக்கப்படி,பின்னூட்டம் கொடுத்தவர்களில் பாதி பேருக்காவது பதில் சொல்லி மகிழ்வித்திருப்பதற்கு, பின்னூட்டம் கொடுத்துள்ளவர்கள் சார்பாக, நன்றிகள்.
ReplyDeleteகடவுளை பற்றி ஒரு ஒரு நாளும் ஒரு புதிய செய்தி
ReplyDeleteவாழ்க வளமுடன்
நன்றி உங்கள் சிறப்பான பகிர்வுக்கு
உங்கள் பதிவுகள் ஒரு பொக்கிஷம் போல என்றுதான் கூற வேண்டும்.
ReplyDeleteஒவ்வொரு பதிவிற்குப் பின்னும் உங்கள் உழைப்பு சிறப்பான பாராட்டிற்கு உரியது.
எத்தனை தகவல்கள்.. பொருத்தமாய் படங்கள்..
நன்றி..
உங்கள் பதிவு ஒருமுறை படித்துவிட்டு போகும் பதிவல்ல... ஆன்மீகம் பதிவை திரும்பவும் வந்து படித்து குறித்து வைத்துக்கொள்ள தூண்டும் பதிவு நன்றி
ReplyDeleteபக்தியுடன் கண்களில் ஒற்றிக்கொள்கிறேன்பா...
ReplyDeleteஐயனாரின் விழிகளில் தெரியும் தீட்சண்யம் தீயவர்களை அழித்து நல்லோரை காக்கும் அற்புதங்கள் அறிய முடிகிறது....
அருமையான நீண்ட கட்டுரை அழகிய படங்களுடன்...
நிறைய ஸ்வாமி விஷயங்களை அறிந்துக்கொள்ள முடிகிறது....
அன்பு நன்றிகள் சகோதரி பகிர்வுக்கு... இனி தினமும் படிப்பேன், மனம் எத்தனை அமைதி கொள்கிறது உங்கள் பதிவினை படிக்கும்போது என்று சொல்லத்தெரியவில்லைப்பா....
அம்மா இந்தியாவில் இருந்து வந்ததும் அம்மாவுக்கும் உங்கள் வலைதளத்தை கண்டிப்பாக காண்பிப்பேன்...
;)
ReplyDeleteசர்வ மங்கள மாங்கல்யே
சிவே சர்வார்த்த சாதிகே !
சரண்யே த்ரயம்பிகே கெளரி
நாராயணீ நமோஸ்துதே !!
நல்ல சுவையான அரிய தகவல்கள் . நன்றி
ReplyDelete867+4+1=872 ;)))))
ReplyDelete[பதில் மனதுக்கு ஆறுதலும் மகிழ்ச்சியும் அளித்தது. நன்றி]