Monday, March 11, 2013

“கோபாலா, கோவிந்தா’







வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க்
கோனாகி யான் எனது என்று அவர் அவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே.

வேண்டத் தக்கது அறிவோய் நீ வேண்ட முழுதுந் தருவோய் நீ
வேண்டு மயன்மாற் கரியோய் நீ வேண்டி யென்னைப் பணிகொண்டாய்
வேண்டி நீ யாதுஅருள் செய்தாய் யானு மதுவே வேண்டினல்லால்
வேண்டும் பரிசொன் றுண்டென்னில் அதுவும் உன்றன் விருப்பு அன்றே.


கிருஷ்ண பகவான் ராஜசூய யாகத்திற்காக புருஷாமிருகத்தின் (வியாக்பாத மகரிஷி) பால் கொண்டு வர, பஞ்சபாண்டவர்களில் ஒருவராகிய பீமனிடம் வேண்டி 12 ருத்திராட்சங்களை பீமனிடம் கொடுத்து, புருஷாமிருகம் சிறந்த சிவபக்தி உடையது. அது திருமாலின் நாமத்தைக் கேட்டால் சினம் கொள்ளும் என்றும் கூறி எச்சரித்தார். 
புருஷா மிருகத்தால் ஆபத்து வரும் தருவாயில், ஒரு ருத்திராட்சத்தைத் தரையில் போட்டுவிட்டு ஓட வேண்டும், என்று கூறி கிருஷ்ணன் 
பீமனை வழியனுப்ப வைத்தார். 
பீமனும்,  புருஷாமிருகத்தைத் தேடி வந்து  திருமலையின் அடர்ந்த காட்டுப்பகுதியில் புருஷாமிருகம் சிவனை நோக்கி கடும் தவம் இருக்கும் புருஷாமிருகத்திடம் “கோபாலா, கோவிந்தா’ என்று திருமாலின் நாமத்தை பீமன் கூற, சினமடைந்த புருஷாமிருகம் பீமனை விரட்ட. கிருஷ்ணன் கூறியதைப் போல ஒரு ருத்திராட்சத்தைத் தரையில் போட்டுவிட்டு  பீமன் ஓட  ருத்திராட்சம் சிவலிங்கமாக உருவாகியது. 
உடனே, புருஷாமிருகம் சிவலிங்கத்தை பூஜை செய்துவிட்டு
பீமனை விரட்டியது. 
இதுபோன்று, 11 ருத்திராட்சங்களையம் தரையில் போட்டு விட்டு, நிறைவாக நட்டாலம் பகுதியில் ருத்திராட்சம் போட  அங்கு தோன்றிய சிவலிங்கத்தில் சிவனும், விஷ்ணுவும் ஒன்றாகத் தோன்றி ஹரியும், ஹரனும் ஒன்றே என்பதை உலகிற்கு உணர்த்தினர். 
நட்டாலம் ஆலயத்தில் மூலவர் சங்கரநாராயணராக காட்சி தருகிறார். 

இங்கு ஒரே விக்ரகத்தில், ஒரு பாதியில் சிவன் உடுக்கையுடனும், மறுபாதியில் விஷ்ணு சக்ராயுதத்துடனும் காட்சி தருகின்றனர். 

இந்த நிகழ்ச்சியினை, பக்தர்கள் ஆண்டு தோறும் சிவாலய
ஓட்டமாக ஒடுகின்றனர். 

சிவாலய ஓட்டம் நடைபெறும் 12 சிவாலயங்களும் விளவங்கோடு,
கல்குளம் தாலுகாவில் அமைந்துள்ளன.

 முன்சிறை திருமலை மகாதேவர் கோயில், 

திக்குறிச்சி சிவன் கோயில், 

திற்பரப்பு மகாதேவர் கோயில், 

திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோயில், 

பொன்மனை தீம்பலான்குடி மகாதேவர் கோயில், 

திருப்பன்னிப்பாகம் சிவன் கோயில், 

கல்குளம் நீலகண்ட சுவாமி கோயில், 

மேலாங்கோடு சிவன் கோயில், 

திருவிடைக்கோடு மகாதேவர் கோயில், 

திருவிதாங்கோடு மகாதேவர் கோயில், 

திருப்பன்றிகோடு மகாதேவர் கோயில், 

திருநட்டாலம் சங்கரநாராயணர் கோயில் என வரிசையாக 12 சிவாலயங்கள் இந்த சிவாலய ஓட்டத்தில் இடம் பெறுகின்றன. 

சிவாலயங்களில் சிவராத்திரிக்கும் முன்தினம் மாலை முதல் பக்தர்கள் “கோபாலா, கோவிந்தா’ என்ற கோஷத்துடன் ஓடி தரிசனம் செய்கிறாகள்... 

 12 சிவாலயங்களையும் பெரும்பாலான பக்தர்கள் ஓடியே தரிசிக்கின்றனர். முன்சிறை திருமலை மகாதேவர் கோயிலில் இருந்து துவங்கி திருப்பன்றிகோடு மகாதேவர் கோயில் வரை உள்ள 11 கோயில்களிலும் பக்தர்களுக்குப் பிரசாதமாக திருநீறு வழங்கப்படுகிறது. 

நட்டாலம் சங்கரநாராயணர் கோயிலில் பிரசாதமாக 
சந்தனம் வழங்கப்படுகிறது.






52 comments:

  1. Replies
    1. வணக்கம் ஐயா..

      இனிய நன்றிகள் ...

      Delete
  2. சிவாலய ஓட்டம் பற்றி தொலைகாட்சியில் பார்த்து இருக்கிறேன்.
    சிவாலய ஓட்ட கோவில்கள் பட்டியல், ஏன் ஓடுகிறார்கள் போன்ற அருமையான தகவல்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
    படங்கள் புதுமையாக அழகாய் இருந்தது.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ..வணக்கம் .. வாழ்க வளமுடன் ..

      அருமையான கருத்துரைகளுக்கு
      மனம் நிறைந்த இனிய நன்றிகள்...

      Delete
  3. Nice to know. I have been to Sucheendram - Danumalyan temple, but these details are new to me. Thanks for sharing madam!

    ReplyDelete
    Replies
    1. வாங்க ..வணக்கம் .. வாழ்க வளமுடன் ..

      சுசீந்திரம் ஸ்ரீதாணுமாலய ஸ்வாமி கோவில்..
      http://jaghamani.blogspot.com/2011/07/blog-post_07.html

      சுசீந்திரம் அருமையான தலம் ..
      அருமையான கருத்துரைகளுக்கு
      மனம் நிறைந்த இனிய நன்றிகள்..

      Delete
  4. புதிய தகவல்கள். புருஷா மிருகம் பற்றிய தகவல்கள் நன்று.....

    எனது பக்கத்திலும் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. .வணக்கம் ..

      கருத்துரைக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்..

      Delete
  5. நல்ல சுவையான தகவல்கள் . நன்றி

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்

      சுவையான கருத்துரைகளுக்கு
      மனம் நிறைந்த இனிய நன்றிகள்..

      Delete
  6. சிவாலய ஓட்டம் பற்றி இதுவரை நான் அறியாத தகவல்.
    பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வணக்கம் ..

      கருத்துரைக்கு
      மனம் நிறைந்த இனிய நன்றிகள்..

      Delete
  7. கதை என்ன ஆச்சு?  பீமன் வெற்றிகரமா பால் கொண்டு வந்தானா?

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ,

      12 -வது தலத்தில் புருஷாமிருகம் பீமனைப் பிடித்துக்கொண்டது ..
      தான் எல்லையைத்தாண்டிவிட்டதால் தன்னைப் பிடித்தது தவறு என்று வாதாடினான் பீமன் ..
      அங்கு வந்த த்ருமர் தம்பி என்றும் பாராமல் தர்மம் தவறாமல் பாதி உடல் அந்த மிருகத்தின் எல்லையில் இருப்பதால் பீமனின் உடலில் பாதி மிருகத்திற்குச்சொந்தம் என்று தீர்ப்புக்கூறினார் ....( தொடரும் )

      Delete
    2. தொடர்ச்சி ...

      தர்மரின் தீர்ப்பைக்க்கேட்டு மகிழ்ந்த புருஷாமிருகம் பீமனை
      விடுவித்ததோடு ராஜசூய யாகத்திற்கான பால் தந்து உதவியது ..

      Delete
  8. சிவாலய ஓட்ட ரகசியம் அறிந்து கொண்டேன் .
    நல்ல அரிய தகவல்கள்.
    எப்பொழுதும் போல் அருமையான புகைப் படங்கள்.
    நன்றி பகிர்விற்கு


    ReplyDelete
    Replies
    1. வாங்க ..வணக்கம்

      அருமையான கருத்துரைகளுக்கு
      மனம் நிறைந்த இனிய நன்றிகள்.

      Delete
  9. நாகர்கோவில், கன்யாகுமரி மாவட்டங்களில் இது போன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள்
    சிவாலய ஓட்டம் ஓடுவதாக தொலக்காட்சி மூலம் அறிந்தேன். கதை நான் இப்பொழுது தான்
    படிக்கிறேன். நன்றி.

    ஒவ்வொரு ருத்ராக்ஷமும் சிவனின் அம்சமே என்று சொல்லும் இந்தப்புராண கதை
    மிகவும் சிறப்புடைத்து.

    அரியும் அரனும் ஒண்ணு.

    சுப்பு ரத்தினம்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா

      சிறப்பான கருத்துரைகளுக்கு
      மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..

      Delete
  10. அருமையான தகவல்களுடன் கூடிய பதிவு. மிக்க நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வணக்கம் ..

      அருமையான கருத்துரைகளுக்கு
      மனம் நிறைந்த இனிய நன்றிகள்

      Delete
  11. அருமையான தகவல்களுடன் கூடிய பதிவு. மிக்க நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ..வணக்கம்

      அருமையான கருத்துரைகளுக்கு
      மனம் நிறைந்த இனிய நன்றிகள்.

      Delete
  12. எத்தனை அற்புத வரல்லாறுகள்! புருஷாமிருகம் பெயரே கேட்பதற்கு வியப்பாக இருக்கிறது. சிவாலய ஓட்டம் புதுமை.

    அழகிய படங்கள். நல்ல பகிர்வு. அனைத்துக்கும் நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வாங்க இளமதி ..வணக்கம் ..

      அழகான கருத்துரைக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்

      Delete
  13. Replies
    1. வணக்கம் ..

      அருமையான கருத்துரைக்கு
      மனம் நிறைந்த இனிய நன்றிகள்

      Delete
  14. ஒன்றாம் படமும் நான்காம் படமும் அழகோ அழகு.

    ReplyDelete
    Replies
    1. ..வணக்கம்

      அழகான கருத்துரைக்கு
      மனம் நிறைந்த இனிய நன்றிகள்.

      Delete
  15. ”கோபாலா கோவிந்தா” என்ற இந்தப்பதிவு வழக்கம் போல நல்ல படங்களுடன், சிறப்பான கதைகளைக் சொல்வதாகவும், ஏற்கனவே உங்கள் மூலமே கேட்ட கதைகளை நினைவூட்டுவதாகவும் உள்ளது. ;)

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா...

      வாங்க ..வணக்கம்

      சிறப்பான கருத்துரைகளுக்கு
      மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..

      Delete
  16. ஹரியும் ஹரனும் ஒன்றே என்பதை அழகான கதை மூலம் சொல்லியிருப்பது மிகச் சிறப்பாக உள்ளது.

    >>>>>>

    ReplyDelete
  17. நட்டாலம் சங்கர நாராயணர் கோயில் பற்றியும், அங்கெல்லாம் நடைபெற்றுவரும் தொடர் ஓட்டம் பற்றியும், தங்கள் மூலம் நன்கு அறிய முடிந்தது.

    >>>>>>

    ReplyDelete
    Replies
    1. நட்டாலம் சங்கர நாராயணர் கோயில் பற்றியும், அங்கெல்லாம் நடைபெற்றுவரும் தொடர் ஓட்டம் பற்றியும், தங்கள் மூலம் நன்கு அறிய முடிந்தது.//

      கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..

      Delete
  18. சிவராத்திரி + அமாவாசை + சோமவார அமாவாசை + சிவனுக்கு உகந்த ஸோமவாரத்தில் இந்தப்பதிவு வெளியிட்டுள்ளது தனிச்சிறப்பாக உள்ளது.

    மிகவும் அழகான பதிவு. அற்புதமான விளக்கங்கள்.

    மனமார்ந்த பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள்.

    ReplyDelete
    Replies

    1. பாராட்டுக்களுக்கும் , அன்பான இனிய நல்வாழ்த்துகளுக்கும் தனிச்சிறப்பான அருமையான கருத்துரைகளுக்கும்
      மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..

      Delete
  19. கீழிருந்து இரண்டாவது படம் மட்டும் எனக்கு இதுவரை காட்சியளிக்கவில்லை. This is just for your information, only.

    ReplyDelete
  20. சிறப்பான தகவல்கள். அப்பாதுரை சாரின் கேள்வியால் கதையின் மீதியையும் தெரிந்து கொள்ள முடிந்தது.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ..வணக்கம்

      சிறப்பான கருத்துரைக்கு
      மனம் நிறைந்த இனிய நன்றிகள்.

      Delete
  21. மனம் கவர்ந்த பகிர்வு தொடர வாழ்த்துக்கள் சகோதரி .

    ReplyDelete
    Replies
    1. வாங்க ..வணக்கம்

      அருமையான கருத்துரைக்கும் வாழ்த்துகளுக்கும்
      மனம் நிறைந்த இனிய நன்றிகள்.

      Delete
  22. பீமன் கதையை பின்னூட்டத்தில் முடித்து வைத்தது சிறப்பு. சிவாலய ஓட்டம் பற்றியும், அந்த 12 கோவில்களின் பெயர்களும் புதிய தகவல்கள்.
    தினமும் புதிது புதிதாக நிறைய தெரிந்து கொள்ள முடிகிறது உங்கள் பதிவுகள் மூலம்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ..வணக்கம்

      அருமையான கருத்துரைகளுக்கு
      மனம் நிறைந்த இனிய நன்றிகள்.

      Delete
  23. கல்குளம் தாலுகாவா?குமரி மாவட்டம்தானே?இத்தனை நாள் தெரியாதே?அருமையான பகிர்வு

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா

      அருமையான கருத்துரைகளுக்கு
      மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..

      Delete
  24. மனமுருகிப் போனேன். மெய்மறந்தேன்.

    ஐயனை தரிசிக்க வைத்த தங்களுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ..

      மனம் உருகும் அருமையான கருத்துரைக்கு
      மனம் நிறைந்த இனிய நன்றிகள்

      Delete
  25. சகோ தெரியாத விஷயத்தை பகிர்ந்துள்ளீர்கள் 12 சிவா ஆலயம் பற்றிய குறிப்புகள் எல்லா படங்களும் முக்கியமாய் அந்த கார்ட்டூன் சிவன் பார்வதி படம் அருமை நன்றி

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ..

      அருமையான கருத்துரைக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்

      Delete
  26. புதுத் புது தகவல்கள் தங்கள் பகிர்வு ஒவ்வொன்றும் வியக்க வைக்கின்றன. நன்றிங்க.

    ReplyDelete
    Replies
    1. வருக தென்றலே .வணக்கம்

      அழகான கருத்துரைக்கு
      மனம் நிறைந்த இனிய நன்றிகள்

      Delete
  27. அறியாத பல தகவல்களை கண்ணுக்குக் குளிர்ச்சியாக அறியத்தந்தமைக்கு மிக்க நன்றி

    ReplyDelete