





வேல்வந்து வினைதீர்க்க மயில்வந்து வழிகாட்ட
கோயிலுக்குள் சென்றேனடி - குமரன் கொலுவிருக்கக் கண்டேனடி
பால்கொண்டு நீராட்டி பழம்தந்து பாராட்டி
பூமாலை போட்டேனடி திருப்புகழ்மாலை கேட்டேனடி
பங்குனியின் உத்திரத்தில் பழனிமலை உச்சியினில் - கந்தன்
நமைக் கண்டானடி சிந்தையில் நின்றானடி
வேலழகும் மயிலழகும் வீற்றிருக்கும் பேரழகும்
காலமெல்லாம் இருக்குமடி - அந்தக் காட்சியென்றும் இனிக்குமடி!
பங்குனி உத்திரம் அன்று விரதமிருந்து பழனிமலை பாத யாத்திரை , காவடிகள் வண்ணம்யமாய் பக்திமயமாய் பன்னிருகை முருகனருள் பாடிப்பாடிப் பரவசம் பெறும் பாங்கான நாள் ...

பங்குனி உத்திர நாள் தேவேந்திரன் மகள் தேவயானிக்கும்
தேவ சேனாதிபதியான முருகனுக்கும்
தேவலோகமே திரண்டுவந்து திருப்பரங்குன்றத்தில்
வெகு விமரிசையாக திருமணம் நடத்திய திரு நாள் ..

உன்னத மகத்துவம் பெற்ற பங்குனி உத்திர திருநாளில்தான் மிக அதிகமான தெய்வத் திருமணங்கள் நடைபெற்றுள் ளதாகப் புராணங்கள் கூறுகின்றன.
12-ஆவது மாதமான பங்குனியும், 12-ஆவது நட்சத்திரமான உத்திரமும் இணையும் புனித நாள் பங்குனி உத்திரம்.
எண்ணிக்கையற்ற பலன் களைத் தரும் விரதங்களுள் பங்குனி உத்திர விரதத்தை கல்யாண விரதம், திருமண விரதம் என்றும் கூறுவார்கள்

பங்குனி உத்திரம்"திருநாளில் ஸ்ரீ ரங்கநாத பெருமாள் தன் பிரதான தேவியாரான ஸ்ரீரங்க நாச்சியாரைக் காண புறப்பட்டு வருவார்.

ஸ்ரீரங்கநாதன், சோழநங்கைக்காக உறையூர் சென்று ஒரு நாள் தங்கியிருந்து வந்த விவரத்தை அறிந்து, தன்னையல்லாமல் வேறொருவரைத் தன்னருளுக்குப் பாத்திரமாக்கிக் கொண்டதைக் காணப் பொறாமல், "பெருமாள் தன்னைப் பார்க்க வரக்கூடாது' எனத் தாயார் தடை செய்வாள். இந்தப் பிணக்கை நம்மாழ்வார் இருந்து தீர்த்து வைக்கிறார்.

பிறகு பெருமாளும், தாயாரும் அருகருகே கல்யாணக் கோலமாக அன்பே வடிவமாக எழுந்தருளி, "சேர்த்தி' என்னும் சேவையில் காட்சி தருவார்கள்.
பங்கு்னி உத்திர சேர்த்தி -பெருமாள் தாயார்
பங்கு்னி உத்திர சேர்த்தி -பெருமாள் தாயார்

மட்டையடி உத்சவம்' என்ற பெயரில் ஆலயத்தில் உள்ள ஐந்தாவது திருச்சுற்று பிரகாரத்தில் உள்ள பங்குனி உத்திர மண்டபத்தில் நடைபெறும்.
இந்த பங்குனி உத்திர மண்டபமே சரணாகதி தத்துவம் வெளிப்படும் இடமாக அமைகிறது.
உடையவர் என்று போற்றப்படும் ஸ்ரீராமானுஜர் பெருமாளும், தாயாரும் சேர்த்தியாகச் சேவை சாதித்த காலத்தில்தான் வடமொழியில் உரைநடையாக உள்ள "கத்ய த்ரய'த்தை அருளிச் செய்தார். பிராட்டியாரிடமும், பெருமாளிடமும் முழுவதுமாக சரணாகதி அடைவதை உணர்த்தும் ஒரு விண்ணப்பமாக இதனைப் பாராயணம் செய்வது மரபு.
பார்வதி-பரமேஸ்வரரின் திருமண வைபவத்தை மகாகவி காளிதாஸரின் "குமார சம்பவம் காவியம்' ஆனந்தமயமாக அடியார்களுக்குக் காட்டுகிறது.
காளிதாஸர் தன் குமார சம்பவத்தில் தெய்வத் தன்மையின் முழுமையும் பெற்றுள்ள சிவபிரானைக் காவியத் தலைவராகவும், பார்வதியைக் காவியத் தலைவியாகவும் அமைத்துள்ளார்.
இமயமலையில், சிவபெருமானின் திருக்கரம் பற்றும் பேறு பெறத் தவம் செய்யும் உமையன்னையின் தவத்தை மெச்சி தம் சார்பில் "சப்த முனிவர்களை' அனுப்பி, ஹிமவானிடம் பெண் கேட்கிறார்.
ஹிமவானின் சம்மதம் பெற்ற பின், பார்வதியை மணந்து கொள்ள சிவபெருமான் மாப்பிள்ளை கோலத்தில் வருகின்றார்.

அந்த அழகைக் கண்ணுற்ற பெண்கள், ""சிவபெருமான் கோபத்தினால் மன்மதனுடைய உடலை எரிக்கவில்லை; மன்மதன் தன்னைவிட அழகுவாய்ந்த சிவபிரானைக் கண்டவுடன் வெட்கமுற்றான்; "தான் இனி உயிருடன் வாழ்தல் கூடாது' எனக்கருதி யோக முறையினால் உடலை சாம்பலாக்கிக் கொண்டான் போலும்'' என தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள் என்று சிவபெருமானின் சுந்தர ரூபத்தை வர்ணிகத்து கவி காளிதாசன் பாடுகின்றார்.
சிவ-பார்வதி கல்யாணம், பல்வேறு சிவாலயங்களில் பங்குனி உத்திர தினத்தன்று மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண உற்சவம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

பங்குனி உத்திரத் தினத்தன்று ஆலயங்களுக்குச் சென்று
தெய்வீகத் திருமண விழாவில் பங்கேற்று மகிழ்வோமாகுக!

Panguni Festival at Malligeswarar Temple, Chennai












அருமையான பாடலோடு அழகன் முருகனைப் பற்றி அற்புதமாய் சொல்லிவிட்டீர்கள்
ReplyDelete”தெய்வத்திருமணத்திருநாள்”
ReplyDeleteஅழகான தலைப்பு
அற்புதமான படங்கள்.
>>>> இடைவேளை >>>>
அனைத்து தெய்வங்களுக்கும் இனிய மணநாள் வாழ்த்துக்கள் !
ReplyDeleteபதிவிட்ட உங்களுக்கும் எங்கள் அன்பார்ந்த வாழ்த்துக்கள் !
கண்கவர் படங்கள்.. சுவைபட கூறியுள்ளிர்கள்..
ReplyDeleteஇதை என்னவென உரைப்பது......
ReplyDeleteசிவன் பார்வதி, ஸ்ரீ ரங்கநாதன் நாச்சியார், முருகன் தெய்வானை திருமணங்கள் நிகழ்ந்த பங்குனி உத்திரச் சிறப்பு.
கண்கொள்ளாக் காட்சியினைக் காட்டி மனதில் நிறைகின்றீர்கள் சகோதரி!
அழகிய பதிவு, படங்கள். அத்தனையும் சிறப்பு.
பகிர்வுக்கு மிக்க நன்றி சோதரி!
பங்குனி உத்தர விரத்தில் இத்தனை சிறப்பு மிக்க அம்சங்கள்
ReplyDeleteஉள்ளனவா !...அறியப்படாத அருமையான தகவலுடன் மிகவும்
அழாகாக கதை சொல்லும் படங்களையும் பகிர்ந்து கொண்ட விதம்
வழமை போல அருமையாக உள்ளது சகோதரி .வாழ்த்துக்கள் மிக்க
நன்றி பகிர்வுக்கு .
அத்தனைப்படங்களும் அழகோ அழகாகத் தந்துள்ளீர்க்ள்.
ReplyDeleteமுதல் படத்தில் ல்க்ஷ்மி வீற்றிருக்கும் தாமரையே சொக்க வைப்பதாக உள்ளது.
>>>>>>>
//12-ஆவது மாதமான பங்குனியும், 12-ஆவது நட்சத்திரமான உத்திரமும் இணையும் புனித நாள் பங்குனி உத்திரம்.//
ReplyDeleteமிகவும் அற்புதமான தகவல். ;)))))
>>>>>>
//ஸ்ரீரங்கநாதன், சோழநங்கைக்காக உறையூர் சென்று ஒரு நாள் தங்கியிருந்து வந்த விவரத்தை அறிந்து, தன்னையல்லாமல் வேறொருவரைத் தன்னருளுக்குப் பாத்திரமாக்கிக் கொண்டதைக் காணப் பொறாமல், "பெருமாள் தன்னைப் பார்க்க வரக்கூடாது' எனத் தாயார் தடை செய்வாள்.
ReplyDeleteஇந்தப் பிணக்கை நம்மாழ்வார் இருந்து தீர்த்து வைக்கிறார். //
எப்படியோ கடைசியில் பிணக்கு தீர்ந்ததே!
அம்பாள் கோபம் தணிந்ததே!!
ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொண்டவரை நல்லாதாப்போச்சே!!!
மகிழ்ச்சியோ மகிழ்ச்சி தான்.
>>>>>>
//பிறகு பெருமாளும், தாயாரும் அருகருகே கல்யாணக் கோலமாக அன்பே வடிவமாக எழுந்தருளி, "சேர்த்தி' என்னும் சேவையில் காட்சி தருவார்கள்.//
ReplyDeleteடூ [காய்] விட்ட குழந்தைகள் சேர்த்தி [பழம்] விட்டது போல கேட்கவே மகிழ்ச்சியாக உள்ளதே! ;)))))
>>>>>>>
//"கத்ய த்ரய' பிராட்டியாரிடமும், பெருமாளிடமும் முழுவதுமாக சரணாகதி அடைவதை உணர்த்தும் ஒரு விண்ணப்பம்//
ReplyDeleteவெல்லத்தில் செய்த அப்பம் போல ருசியாக உள்ளது.
டோட்டல் சரணாகதியே தான்! ;)))))
>>>>>>
சிவபெருமானின் சுந்தர ரூபத்தை வர்ணித்து கவி காளிதாசன் பாடுவது மிக நல்ல கற்பனை.
ReplyDeleteஇன்றைய பதிவு மனதுக்கு மிகவும் மகிழ்வளிப்பதாக உள்ளது.
மிகச்சிறப்பான விளக்கங்ளுடன், அழகழகான படங்களுடன் ‘தெய்வத் திருமணத் திருநாளான பங்குனி உத்திரத்தின் சிறப்பினை பாங்காக பதிவு செய்து கொடுத்துள்ளீர்கள்.
மனமார்ந்த பாராட்டுக்கள்.
இனிய நல் வாழ்த்துகள்.
பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள்.
ooooo
தெய்வத்திருமணங்களை கண்டு பரவசம் ஆனேன்.
ReplyDeleteபடங்கள் எல்லாம் அழகு.
பாடல் அருமை.
உங்கள் தெய்வத்திருமணங்கள் பதிவு மிகவும் மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. உங்கள் வலைத்தளமே பக்தி மனம் கமழும் தளம் தான். ஆன்மிகத்தை வளர்க்கும் தலமாக இருக்கிறது.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
தொடருங்கள்.....
வரலாறை சொல்லும் அனைத்து படங்களும் சிறப்பு நன்றி
ReplyDelete
ReplyDeleteபங்குனி உத்திர நாள் இவ்வளவு தெய்வங்களின் திருமண நாளா. ? நான் வசிக்கும் இடத்தில் மாதம் இரு முறையாவது தெய்வத் திருமணங்கள் நடக்கின்றன. அண்மையில் மதுரை சென்றிருந்தபோது, திருப்பரங்குன்றத்தில் முருகனின் திருக்கல்யாணம் காணும் பேறு கிடைத்தது. அறியாத தகவல்கள் பல தொகுத்துக் கொடுத்தமைக்கு நன்றி.
பங்குனி உத்திரம் பற்றி விவரமாகத் தெரிந்து கொண்டேன்!
ReplyDeleteஉங்கள் முருகன் பதிகம் மனதைக் கவரும் பாடலாகும்
ReplyDeleteஅதைப் பாடுவதிலே தனி ஒரு மகிழ்வு. முருகனே எதிரில் நிற்பது போல் ஒரு உணர்வு.
மெய்யெல்லாம் புல்லரிப்பு. கண்களிலே நீர் சுரப்பு.
ஆகா.. என்ன தவம் செய்தேன் இன்று முருகன் பதிகத்தை பாடுவதற்கு.
இங்கும் கேட்கலாம்.
www.kandhanaithuthi.blogspot.com
சுப்பு தாத்தா.