Friday, March 8, 2013

மகிழ்ச்சி மலரும் மகளிர் தினம் ..!


Happy women's day animations





போற்றி போற்றியோராயிரம் போற்றி நின் பொன்னடிக்குப் 
பல்லாயிரம் போற்றி காண் என்று முழங்கிய  பாரதி 
பெண்மை வாழ்கவென கூத்திடுவோமடா என்றார். 

பெண்ணடிமை தீருமட்டும் பேசும் இத் திருநாட்டில் 
மண்ணடிமைதீருதல் முயற்கொம்பே என 
பெண்ணுரிமையை ஏத்தினார் பாரதி

பெண்கள் அறிவை வளர்த்தால் இந்த வையகம் பேதைமை 
அற்றிடும்' என்பது பாட்டுக்கொரு புலவன்  பாரதியாரின் 
அழுத்தம் திருத்தமான - ஆணித்தரமான கருத்து.

ஐக்கிய நாடுகள் சபை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த தினம் சீனா, ரஷ்யா, பல்கேரியா, வியட்நாம் உற்பட பல நாடுகள் விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தியுள்ளன.

இனம், மொழி, கலாசாரம், பொருளாதாரம், அரசியல் ஆகிய பல்வேறு வேறுபாடுகளை மறந்து பெண்கள் தினம் அனைத்து பெண்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது. 

பெண்கள் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களின் உரிமைகளுக்குப் பங்கம் விளைவிக்காமல் சாதனைகளை கொண்டாடும் வகையிலும் கடைபிடிக்கப்படுவரும் மகிழ்ச்சியான. கொண்டாட்டங்கள் மகத்துவமிக்கவை...
சர்வதேசப் பெண்கள் தினம் சாதாரண பெண்ணிற்கு தைரியம் 
அளித்து சாதனை படைக்கும் பெண்ணாக வரலாற்றில் உரிமை 
கோரும் பெண்ணாக உயர்த்தியது 
பெண் விடுதலை உலகளாவிய ரீதியாகக் கிடைக்க வேண்டும். பெண் சுயமாக இயங்கச் சுதந்திரம் கிடைக்க வேண்டும். 

பெண் இப்படித்தான் வாழ வேண்டுமென்று வீட்டுக்குள் நடைமுறுத்தப்படும் எழுதாத சட்டங்கள் அழித்தொழிக்கப்பட வேண்டும். 

பெண்ணை இறுகப் பற்றியிருக்கும் கண்ணுக்குத் தெரியாத, ஆனால் பெண்ணின் உயிரையும் உள்ளத்தையும் வதைக்கின்ற அத்தனை விலங்குகளும் உடைத்தெறியப்பட வேண்டும்.

பெண்களின் கல்வியறிவுக்காகவும் சட்டங்களை செய்திடவும் கனவு கண்ட பாரதி, சாதம் படைக்க மட்டுமல்லாது தெய்வச் சாதிபடைக்கவும் பெண்கள் தகுதிபடைத்தவர்கள் என்று கண்டார்.

நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெடப் புழுதியில் 
எறிந்த காலம் மலையேறிப் போகட்டும்..

எத்துறையிலும் மகளிரின் சாதனைத் தடத்தைப் பார்க்கப் 
புறப்படு பெண்ணே புவியசைக்க

மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா”

உலகில் நடைபெறக் கூடிய அனைத்துச் செயல்களையும் ஆக்குபவளும் பெண்ணே, தீயவற்றை, அநீதியை அடியோடு அழிப்பவளும் பெண்ணே. அதனால்தான் ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே என்ற கூற்று இன்று வரை நிலவி வருகிறது.
பெண்களின் கல்வி, பொருளாதார முன்னேற்றத்திற்குப் பெண்களே நாட்டின் கண்கள் என்று போற்றிப்பாடுவோம். 

காலம் காலமாகக் கண்ணீருடன் வாழ்ந்து வரும் பெண் இனம், காத்து வரும் கண்ணிய உணர்வால்தான் இந்த மண்ணில் மனிதநேயம் உயிர்த்து இருக்கிறது. 

மக்கள் தொகையில் சரி பாதியாக இருக்கும் பெண்களின் முன்னேற்றமே, ஒட்டு மொத்த உயர்வுக்கு வழி வகுக்கும்
தன்னையே நம்புகிறாள்! ‘தன்னம்பிக்கை’ இருப்பதால்.
மதியோடு பெண் இருக்கிறாள், அதனால் தான் மதிப்பெண்ணிலும் முதலிடம் பெற்று மதிப்புப் பெறுகிறாள்! 

மக்கள் தொகையில் சரி பாதியான பெண்களின் முக்கியத்துவத்தைப் புறக்கணிக்கும் எந்தச் சமூகமும் வளர்ச்சி என்னும் நிலையை அடையாது.

அன்பிற்கு அடையாளமாகயும், தெய்வங்களாகவும், தெய்வத் தன்மை சூட்டப்பட்டாலும், பெண் சமூகத்தை மிகவும் கீழான நிலையிலேயே இந்தியச் சமூகம் வைத்திருந்தது என்பது வரலாற்று உண்மை.. 




பெண்களுக்கான சமத்துவம், உரிமைகளை வலியுறுத்துவதற்காகவும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது




27 comments:

  1. பெண்கள் தினத்தன்று பெண்மையைப் போற்றும் சிறப்பான பதிவு. தங்களுக்கு என் மனமார்ந்த மகளிர் தின நல்வாழ்த்துக்கள் அம்மா.

    ReplyDelete
  2. என் அன்பிற்கினிய சகோதரிக்கும், அனைத்து சகோதரிகளுக்கும் நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. I am proud to be a woman Dear.
    Womensday wishes toyou too.
    I am happy viewing your blog.
    The flowers making me happy.
    Thanks dear.
    viji

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் அம்மா... (எல்லா நாளும்)

    ReplyDelete
  5. தங்களுக்கும் தங்கள் தோழிகள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகள் அழகான படங்களுடன் கூடிய பதிவு கண்ணை நிறைத்தது

    ReplyDelete
  6. அருமையாக சொன்னீர்கள் சகோதரி..
    இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  7. மகளிர் தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. பெண் வயிற்றி லுருவாகிப்
    பெண்பாலுண்டே வளர்ந்தாய்
    பெண் துணையால் வாழ்கின்றாய்
    பெண்ணின் பெருமை உணர்.
    -வேதாத்திரி மகரிஷி

    பெண்மை வாழ்கென்று கூத்திடுவோமடா! என்றுபாரதியும்.
    பெண்ணை பறக்கணிக்கும் வீடும், நாடும் வளர்ச்சி எனும் நிலை அடைய முடியாது உண்மை.

    மகளிர்தினத்திற்கு சிறப்பான பதிவு. படங்கள் செய்திகள் எல்லாம் அருமை.
    நானும் எல்லோருக்கும் மகளிர்தின வாழ்த்துக்கள் சொல்லிக்கிறேன்.

    உலக மகளிர் தினத்திற்கு மனம் கனிந்த நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. மகளிர் தின வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  10. ”மகிழ்ச்சி மலரும் மகளிர் தினம்”

    சொல்லியுள்ள கருத்துகள் யாவும் சுவை மிகுந்தவை.

    படங்கள் அத்தனையும் அழகு.

    இனிய மகளிர் தின நல்வாழ்த்துகள்.



    >>>>>

    ReplyDelete
  11. //பெண்கள் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களின் உரிமைகளுக்குப் பங்கம் விளைவிக்காமல், சாதனைகளை கொண்டாடும் வகையிலும் கடைபிடிக்கப்படுவரும் மகிழ்ச்சியான. கொண்டாட்டங்கள் மகத்துவமிக்கவை...//

    மகத்துவம் வாய்ந்த மிக அழகான வரிகளுக்குப் பாராட்டுக்கள்.

    >>>>>>>

    ReplyDelete
  12. //சர்வதேசப் பெண்கள் தினம் சாதாரண பெண்ணிற்கு தைரியம்
    அளித்து சாதனை படைக்கும் பெண்ணாக, வரலாற்றில் உரிமை
    கோரும் பெண்ணாக உயர்த்தியது //

    மிகவும் மகிழ்ச்சி தரும் உயர்ந்த தகவல்.

    >>>>>>

    ReplyDelete
  13. //நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெடப் புழுதியில் எறிந்த காலம் மலையேறிப் போகட்டும்..//

    காலம் மாறி வருகிறது. தீமைகள் வெகு விரைவில் மலையேறிவிடும். கவலையே வேண்டாம்.

    //மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா”//

    ஆம். மிகவும் உண்மையம்மா !

    //உலகில் நடைபெறக் கூடிய அனைத்துச் செயல்களையும் ஆக்குபவளும் பெண்ணே, தீயவற்றை, அநீதியை அடியோடு அழிப்பவளும் பெண்ணே. அதனால்தான் ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே என்ற கூற்று இன்று வரை நிலவி வருகிறது.//

    பெண்ணிணம் தானும் நலம் பெற்று மற்றவர்களுக்கும் நலம் தந்து மகிழ்ச்சியுடன் வாழ்க வாழ்கவே !

    >>>>>

    ReplyDelete
  14. //காலம் காலமாகக் கண்ணீருடன் வாழ்ந்து வரும் பெண் இனம், காத்து வரும் கண்ணிய உணர்வால்தான் இந்த மண்ணில் மனிதநேயம் உயிர்த்து இருக்கிறது. //

    கண்ணீர் முற்றிலும் மறையட்டும்.

    கண்ணியங்கள் தொடர்ந்து காக்கப்படட்டும்.

    மனித நேயம் எப்போதும் உயிர்த்து இருக்கட்டும்.

    >>>>>>

    ReplyDelete
  15. அற்புதமானதோர் பதிவு.

    சிந்திக்க வைக்கும் மிகச் சிறந்த கருத்துக்கள்

    மனமார்ந்த பாராட்டுக்கள்.

    அன்பான இனிய நல்வாழ்த்துகள்,

    பகிர்வுக்கு நன்றியோ நன்றிகள்.

    ooooo

    ReplyDelete
  16. அழகிய படங்களுடன் சிறப்பான நல்ல பகிர்வு!

    சகோதரி உங்களுக்கும் அனைத்துச் சகோதரிகளுக்கும் என் மனமார்ந்த பெண்கள் தின நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  17. மகளிர் தின வாழ்த்துக்கள். அழகான படங்கள்,சிறப்பான பதிவு

    ReplyDelete
  18. படங்கள் அனைத்தும் மிக அழகு. மகளிர்தின நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  19. //எந்த தினமாக இருந்தாலும் அத்தினத்தின் உண்மையான பொருள்
    விளங்கப்படாமலே அந்த தினம் முடிந்து விடுகிறது.//

    உண்மை.

    பெண்ணின் பெருமை
    ----------------------
    பெண்வாயிற்றி லுருவாகிப்
    பெண் பாலுண்டே வளர்ந்தாய்
    பெண் துணையால் வாழ்கின்றாய்
    பெண்ணின் பெருமை உணர்.

    பெண்ணின் பெருமை உணர்ந்த வீடும் நாடுதான் நலம் பெறும்.
    பெண்ணின் பெருமை உணரும் நாள் மலர வாழ்த்துக்கள்.


    ReplyDelete
  20. உங்களுடைய மகளிர் தின வாழ்த்துக்களுக்கு நன்றி.
    என் வாழ்த்துக்களையும் ஏற்றுக் கொள்ளுங்கள்.

    உங்கள் படங்கள் மட்டுமல்ல நிஈங்கள் பகிர்ந்து கொண்ட விஷயங்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  21. சகோதரிக்கு “ உலக மகளிர் தினம்” ( INTERNATIONAL WOMEN’S DAY ) – நல் வாழ்த்துக்கள்!

    உலக மகளிர் தினம்” ( INTERNATIONAL WOMEN’S DAY - முன்னிட்டு மூத்த பதிவர் GMB அவர்கள் தமது வலைப் பதிவில் உங்களை பாராட்டி எழுதியுள்ளார்! சகோதரிக்கு வாழ்த்துக்கள்!
    http://gmbat1649.blogspot.in/2013/03/blog-post_8.html

    ReplyDelete
  22. மகளிர் தின நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
  23. அருமையான தொகுப்பு! அரிய தகவல்கள்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  24. அருமையான பகிர்வு தங்களுக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  25. படமும் பதிவும் சிறப்பு.
    அன்பார்ந்த மகளிர் தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
  26. அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  27. மகளிர் தின வாழ்த்துகள்!

    ReplyDelete