Wednesday, March 20, 2013

உத்தமத் திருநாள் பங்குனி உத்திரம்..





"மலிவிழா வீதி மட நல்லார் மாமயிலைக் 
கலிவிழாக் கண்டான் கபாலீசுரம் அமர்ந்தான்' 

என்ற திருஞானசம்பந்தரின் பாடல்
பங்குனி உத்திர நாளின் சிறப்பை, பறைசாற்றும்..

திருஞானசம்பந்தருக்குத் திருமணம் முடிக்க நிச்சயிக்கப்பட்டிருந்த மயிலாப்பூர் சிவபக்தர் சிவநேசர் புதல்வி பூம்பாவை  பூஜைக்கு மலர் கொய்யச் சென்றபோது அரவம் தீண்டி மரணமெய்தவே அவளது சாம்பலையும் எலும்பையும் ஒரு பொற்குடத்தில் பாதுகாத்து வைத்திருந்தனர்.
கபாலீஸ்வரருக்கு பங்குனி உத்திரத்தன்று நடைபெறும் ஒன்பதாம் திருவிழாவின் போது அங்கு வந்த சம்பந்தர் முன்பு வைக்கப்பட்ட பொற்குடம்  
"பலி விழாப் பாடல் செய் பங்குனி உத்தரநாள்
ஒலி விழாக் காணாதே போதியே பூம்பாவாய்'

எனப் பதிகத்தை சம்பந்தர்  பாடி முடித்ததும், பூம்பாவை
உயிர் பெற்றெழுந்தாள் என்பது வரலாறு.
  பங்குனி உத்திரத்தன்று கோவில்களில் மூர்த்திகள் கடல், ஏரி, ஆறு போன்ற நீர் நிலைகளுக்கு எழுந்தருளி தீர்த்தம் கொடுப்பர்.
மதுரை, திருவாரூர், காஞ்சிபுரம், பழனி, வேதாரண்யம் ஆகிய தலங்களில் இந்த விழா மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. 

ஒருசமயம் பார்வதி தேவி சிவபெருமானின் கண்களை விளையாட்டாகப் பொத்தி விட்டதனால் பிரபஞ்சமே இருண்டு  இயக்கங்கள் ஸ்தம்பித்தன் காரணமாக தேவி சிவபெருமானால் சபிக்கப்பட்டதோடு, சிவபெருமானின் மனைவி என்ற அந்தஸ்தையும் இழந்தாள்.

தன் உரிமையை மீண்டும் பெற தேவி காஞ்சிபுரத்தில் ஒரு மாமரத்தடியில் சிவபெருமானை நோக்கித் தவமிருந்தாள்.

அவளது தவத்தில் திருப்தியுற்ற இறைவன் தேவிக்குப்
பழைய நிலையை அருளினார்.
ஆடிப்பூரத்தில்- பூரட்டாதி உச்சத்தில் இருந்தபோது, மதுரை நகரில் நடத்தப்பட்ட யாகத்தில் தோன்றிய  மீனாட்சி உலகை வலம் வரும் பயணத்தை மேற்கொண்டபோது, வடகிழக்குத் திசையில் சிவபெருமான் காட்சி அளித்து மீனாட்சியை வாழ்த்தி, அவள் தலைநகருக்குத் திரும்பியபின் அவளைத் திருமணம் செய்துகொள்வதாக வாக்களித்தார்.

ஒரு திங்கட்கிழமையுடன் கூடிய பங்குனி உத்திரத் திருநாளில் இறைவன் சுந்தரேஸ்வரர் என்ற பெயரில் மீனாட்சியின் அரண்மனையில் தோன்றி, மீனாட்சியைத் திருமணம் செய்த  நிகழ்வின் அடிப் படையில்தான் மதுரையில் பங்குனி உத்திர விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
பங்குனி உத்திரத்தன்று தண்ணீர்ப் பந்தல் அமைத்து நீர்மோர், பானகம் போன்றவற்றை வேண்டுதல் செய்துகொண்டு வழங்குவார்கள்.

முழு மனதோடு- உண்மையான ஈடுபாட்டோடு பங்குனி உத்திரத்தன்று வழிபாடு செய்தால், அனைத்து மங்கலங்களும் உண்டாகும்.





 திருமயிலை கபாலீஸ்வரர் ஆலயம்..

17 comments:

  1. பொற்றாமரைக்குளம் நல்லா இருக்கு.

    ReplyDelete
  2. பங்குனி உத்திரத்தின் சிறப்பை அறிந்துக் கொள்ள அருமையான பதிவு.
    படங்கள் எல்லாம் அழகு.

    எங்கள் பக்கம் பங்குனி உத்திரம் குலதெய்வவழிபாடு மிகவும் விஷேசம்.
    எல்லோரும் ஆண்டுக்கு ஒருமுறை குலதெய்வவழிபாடு கண்டிப்பாய் செய்வார்கள்.பங்குனி உத்திரநாள் அன்று சிறப்பாக பொங்கலிட்டு குடும்பத்தினர் எல்லோரும் கூடி வழிபாடு செய்து குடுமப நலம் பெறுவர்.

    ReplyDelete
  3. Arumayana pathiyu. Alagana padankal.
    I enjoyed all dear.
    Viji

    ReplyDelete
  4. படங்கள் அனைத்தும் சிறப்பு...

    ReplyDelete
  5. informative indeed.
    thank u.

    subbu thatha

    ReplyDelete
  6. ”உத்தமத்திருநாள் பங்குனி உத்திரம்”

    மிகவும் அழகான பதிவு.

    ரஸித்துப்பார்த்து படித்து விட்டு மீண்டும் வருவேன்.

    >>>> இடைவேளை >>>>

    ReplyDelete
  7. அனைத்துப்படங்களும் அழகோ அழகாக உள்ளன.

    தேர், குளம், கோபுரங்கள், கோயிலின் நுழைவாயில், யானை முதலியன வெகு அழகாக பிரும்மாண்டமாக கவரேஜ் செய்யப்பட்டுள்ளன..

    >>>>>>

    ReplyDelete
  8. பூம்பாவையின் சாம்பலும் எலும்புகளும் பொற்குடத்தில் பாது காத்து வைக்கப்பட்டன.

    திருஞானச்ம்பந்தர் பதிகம் பாடி முடித்ததும் அவள் உயிர்பெற்றாள். ;)

    அருமையான ஆச்சர்யம் அளிக்கும் புதுத் தகவல், இன்று நம் தகவல் களஞ்சியத்திடமிருந்து. ;)

    >>>>>

    ReplyDelete
  9. கீழிருந்து 3, 4, 8 ஆகிய படங்களும், மேலிருந்து மூன்றாவது படமும் திறக்க மறுத்து சண்டித்தனம் செய்கின்றன.

    காட்சியளிக்கும் மற்ற அனைத்துப்படங்களும் பிரமிக்க வைக்கின்றன.

    >>>>>

    ReplyDelete
  10. பங்குனி உத்திரம் பற்றி பல தகவல்கள் அளித்து வழக்கம் போல அசத்தியுள்ளீர்கள்.

    மனமார்ந்த பாராட்டுக்கள்.

    அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    மிக அழகான பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள்.

    ooooo

    ReplyDelete
  11. அழகான அருமையான படங்களும் பதிவும். மனதை நிறைக்கினறது. பக்தி மணம் பரப்பும் உங்கள் சேவை அதி உன்னதமானது சகோதரி|

    பகிர்வுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  12. இரவில் மின்னும் விளக்குகளுடன் ஆலயப்படங்கள் வெகு அழகு.

    ReplyDelete
  13. ஒ ..பங்குனி உத்திரத்தை சார்ந்ததா இந்த கதைகள் புரிந்தது நன்றி பகிர்ந்ததற்கு

    ReplyDelete
  14. படங்கள் அருமை.

    ReplyDelete
  15. திருமயிலை கபாலீஸ்வரர் ஆலயம் அழகாக இருக்கு.
    அழகான படங்கள்,தகவல்கள் பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete