Monday, March 18, 2013

திருவலம் திருத்தலம் ...














 ' இறைவன், தீர்த்தத்தின் பொருட்டு, 'நீ, வா' என்றழைக்க, அருகில் ஓடிவந்து பாய்ந்ததால் . 'நீ வா ' நதி நாளடைவில் 'நிவா ' நதியாயிற்று என்கின்றனர். இன்று 'பொன்னை' ஆறு என்னும் பெயரும் கொண்டுள்ள நிவா' நதியின் கரையில் கோயில் உள்ளது.

 நிவா'நதியிலிருந்து பண்டை நாளில் சுவாமிக்குத் தீர்த்தம் கொண்டுவரப்பட்டது. இப்போது கோயிலுள் கௌரி தீர்த்தமும் தீர்த்த கிணறும் உள்ளது.
 நீராழி மண்டபத்துடன் கூடிய கௌரி தீர்த்தம் 
 வில்வக்காடாக இப்பகுதி இருந்தமையால் 'வில்வவனம்' - 'வில்வாரண்யம்' காட்டில் ஒரு பாம்புப் புற்றில் இருந்த சிவலிங்கம் மீது. நாடொறும் பசு ஒன்று வந்து, சிவலிங்கத்தின்மீது பாலைச் சொரிந்து வழிபட்டது. 

அதனால் புற்றி சிறிது சிறிதாக கரைந்து நாளடைவில் சிவலிங்கம் வெளிப்படலாயிற்று என்று சொல்லப்படுகிறது.

 அம்பாளுக்கு ஆதியில் 'தீக்காலி அம்பாள்' (ஜடாகலாபாம்பாள்) என்றே பெயரிருந்ததாகவும்; உக்கிர வடிவிலிருந்த  அம்பாளை, ஆதி சங்கரர் சாந்தப்படுத்தினார் என்பதும் வரவாறு ....
வல்லாம்பிகை
திருவலத்தில் உள்ள பெருமானை விஷ்ணு வழிபட்டதால், 
விஷ்ணுவின் பாதம் பத்மபீடத்தில் கொடிமரத்தின் முன்பு உள்ளது.

கொடிமரத்தின் பின்னால் உள்ள நந்தி - சுவாமிக்கு எதிர்ப்புறமாக கிழக்கு நோக்கியுள்ளது. 

இதற்குப் பின்னால் அதிகார நந்தி 
சுவாமியைப் பார்த்தபடி நின்ற நிலையில் காட்சிதருகிறது ..
மூலவர் சந்நிதியில் உள்ள நந்தியும் வெளியில் உள்ளதைப் போலவே 
கிழக்கு நோக்கியுள்ளது. 
இரு நந்திகளுக்கு இடையில் திருவலம் மௌனசுவாமிகள் கட்டுவித்த சுதையாலான பெரிய நந்தி கிழக்கு நோக்கியே நேரே நின்று மூலவரைத் தரிசிக்க முடியாதவாறு மறைக்கின்றது
பெரிய நந்திக்குப் பக்கத்தில் நடராச சபையும், அடுத்து நவக்கிரக சந்நிதியும் உள்ளன. 
நடராச மூர்த்தம் உருண்டை வடிவமான பிரபையுடன் அழகாக திகழ்கிறது ..

நந்திசுவாமியை நோக்கி இல்லாமல் நின்ற நிலையில் புறமுதுகு காட்டி காட்சிதருகிறார்.

ஒருமுறை கோவில் குருக்கள் சுவாமிக்குஅபிஷேகத் தீர்த்தம் எடுத்து வரும்போது கஞ்சன் என்ற அரக்கன் இடையூறுசெய்தான். குருக்கள், சுவாமியிடம் முறையிட, சுவாமி நந்தியைப் பார்த்துகஞ்சனைக் கவனிக்கும்படி சொன்னார்.

நந்தியிடம் அடிபட்ட கஞ்சன், "இனிமேல்குருக்களுக்குத் தொந்தரவு கொடுக்க மாட்டேன்' என்று சத்தியம் செய்துகொடுத்துவிட்டு உயிர் தப்பினான்.

இருந்தாலும் அவன் மீண்டும் தொந்தரவுகொடுக்காமலிருக்க கோவிலின் வாயிலை நோக்கிய வண்ணம் இறைவனுக்கு புறமுதுகுகாட்டிய நிலையில் உள்ளார்.

நந்தியம்பெருமான் சென்று கஞ்சனுடன் போரிட்டு அவனை  அழித்தபோது அசுரனின்;  சிரசு வீழ்ந்த இடம் "சீகராஜபுரம்" என்றும், வலக்கால் அறுபட்டு வீழ்ந்த இடம் "வடகால்" என்றும், தென்கால் (இடது கால்; - தென்கால்  வீழ்ந்த இடம் "தென்கால்" என்றும், மணிக்கட்டு வீழ்ந்த இடம் "மணியம்பட்டு" என்றும், மார்பு வீழ்ந்த இடம் "குகையநல்லூர் " என்றும் வழங்கப்படும் ஊர்களெல்லாம் திருவலத்திற்கு 3 கி.மீ. தொலைவில் உள்ளன.

 இந்நிகழ்ச்சி படியே நந்தி, காவலுக்காக கிழக்கு நோக்கியுள்ளார்.
கஞ்சாரன் என்ற அசுரணை இறைவன் ஆணையால் நந்திதேவர் துரத்திச் சென்று பின் திரும்பாமல் அப்படியே இருந்துவிட்டதாக ஐதீகம். 

இறைவனை  நோக்கிய அருள் முகத்துடன் தன் மூச்சுக்காற்றால் தாலாட்டிய படியே இருக்கும் நந்தி பகவான் திருவலத்தில் மட்டுமே தன் காவல் பணிக்காக எதிர்த்திசை நோக்கி திரும்பி இருப்பது அதிசயமான அமைப்பாகும்...

காஞ்சனகிரியில் அசுரனின் குருதி பட்ட இடத்திலெல்லாம் இறைவனருளால்  புனிதப்படுத்த சிவலிங்கங்கள் உண்டாயின. 

இன்றும் மலையில், குளக்கரையில் எண்ணற்ற சிவலிங்கங்கள் இருப்பதையும் தோண்டினால் கிடைப்பதையும் நேரில் பார்க்கலாம்.

நிவா நதி வடக்கிலிருந்து தெற்காக ஓடிச்சென்று, பாலாற்றில் ஒன்றாகிறது.

பழைய கல்வெட்டில் இத்தலப் பெயர் 'தீக்காலி வல்லம்' என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது..

ஞானசம்பந்தர் பாடலில் 'திருவல்லம்' என்றும்; அருணகிரிநாதரின் திருப்புகழில் 'திருவலம்' என்றும் இத்தலம் குறிக்கப்படுகின்றது.

கௌரி, மஹாவிஷ்ணு, சனக முனிவர் முதலியோர் வழிபட்ட 
சிவலிங்கங்கள் கோயிலுள் உள்ளன.

கோயிலுள் நாகலிங்க மரம் பூத்துக்குலுங்குவது கண்கொள்ளாக்காட்சி ..

மூன்று நிலைகளையுடைய உள் கோபுரம் 
கல் மண்டபத்தின் மீது கட்டப்பட்டது..

தனிக் கோயிலாகத் திகழும்"ஆதிவில்வநாதேஸ்வரர் சந்நிதி" - 
எதிரில்   உள்ள பலாமரம்  மிகப்பழமையானது .. பிற்காலத்தில் வைத்துப் பயிராக்கப்பட்டுள்ள பலா மரங்களும் கோயிலுள் உள்ளன.

இங்கு வழிபட்ட சனக முனிவரின் 'திருவோடு ' சுவாமிக்கு 
நேரே வெளியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

மூலவர் - சிவலிங்கத் திருமேனி, சுயம்பு; சதுரபீட ஆவுடையார்.
மூலவர் கருவறை அகழி அமைப்புடையது; 
கருவறைச் சுவர்களில் கல்வெட்டுக்கள் நிரம்ப உள்ளன.

மூலவர் வாயிலில் உள்ள இரு துவார பாலகர்கள் திரு மேனிகள்
சிற்பக் கலையழகு வாய்ந்தவை.

இவற்றுள் ஒன்று ஒரு கையை மேலுயர்த்தி, நடன பாவ முத்திரையுடன் விளங்குகின்றது.
கோயிலில் அறுபத்து மூவரின் உற்சவ, 
மூலத் திருமேனிகள் இருவரிசைகளில் வைக்கப்பட்டுள்ளன.

பள்ளத்தில் 'பாதாளேஸ்வரர் ' சந்நிதியில் சிவலிங்கம் நந்தி,
விநாயகர் மூலத்திருமேனிகள் உள்ளன. 

பஞ்சம் ஏற்பட்டால், 'பாதாளேஸ்வரர்க்கு ஒரு மண்டலகாலம் 
அபிஷேகம் செய்தால்மழை பெய்யும் என்பது நம்பிக்கை..

கஞ்சனுக்கு இறைவன் முத்தி தந்த ஐதீகம், 
திருவிழாவாக இன்றும் நடைபெறுகிறது; 

இதற்காக தை மாதம் பொங்கல் கழித்து 10-ம் நாள் சுவாமி 
இங்கிருந்து புறப்பட்டுக் காஞ்சனகிரிக்கு எழுந்தருளுகிறார். 

காஞ்சனகிரிமலையில் சித்ரா பௌர்ணமியில் குளக்கரையிலிருந்து பார்த்தால் ஜோதியொன்று தோன்றிப் பின் மறைகின்றதாம்.

திருவலம்' வேலூருக்குப் பக்கத்தில் உள்ள காட்பாடிக்கு அண்மையில் உள்ள இருப்புப்பாதை நிலையம்.
ஆற்காட்டிலிருந்து ராணிப்பேட்டை வழியாகக் காட்பாடி செல்லும் சாலையில் திருவலம்'திருத் தலம் அமைந்துள்ளது.

நகரப்பேருந்துகள் அடிக்கடி செல்லுகின்றன.

தனிப்பேருந்தில் செல்வோர் சென்னையிலிருந்து - பெங்களூர் செல்லும் நெடுஞ்சாலையில், ராணிப்பேட்டை முத்துக்கடை நிறுத்தத்தை அடைந்து, இடப்புறமாக ஆற்காடு சாலையில் திரும்பாமல், நேரே செல்லும் பெங்களூர், சித்தூர் சாலையில் சென்றால் 'சிப்காட்' தொழிற்சாலைப் பகுதிகளைத் தாண்டி', சிறப்புபெற்ற திருவலம் இரும்புப் பாலத்தைக் (திருவலம் பிரிட்ஜ்) கடந்து திருவலம்'திருத்தலத்தை அடையலாம்.

பாலத்தின் மறுமுனையில் ஊர் உள்ளது.
ஊருக்குள் நுழையும் போதே கோபுரம் தெரியும்.

சகஸ்ரலிங்கம்

நான்கு நிலை இராஜ கோபுரம்





POWER FULL SIDDHAR OF VELLORE DISTRICT....CURING ALL DISEASE USING VILVA LEAF (BILVA LEAF) .....

JEEVA SAMADHI LOCATION: THIRUVALAM....NEAR KATPADI RAILWAY JUNCTION VELLORE DISTRICT TAMIL NADU....INDIA.



18 comments:

  1. திருவலம் ஸ்தல வரலாறு அறிந்தேன். அறிய விஷயங்களை சேகரித்து அளித்ததற்கு நன்றி.இது எந்த மாவட்டத்தில் எந்த இடத்திற்கு அருகில் உள்ளது?
    காஞ்சிபுரம் மாவட்டமா?.

    ReplyDelete
    Replies
    1. Its in vellore. to tell exactly we have to go from katpadi via VIT university it takes around 15 km from katpadi.

      Delete
  2. அருமையான படங்கள்... தகவல்கள்.. நன்றி...

    ReplyDelete
  3. விளக்கங்கள், படங்கள் - தரிசனம் கிடைத்தது...

    ReplyDelete
  4. திருவலம் தலத்தைப்பற்றிய தகவல்கள் அனைத்தும் அருமை. படங்கள் மிக அழகு.

    ReplyDelete
  5. அழகிய அற்புத வரலாறு. வழமைக்கு மாறாக இம்முறை படங்கள் குறைவாகவே தந்துள்ளீர்கள். ஆனாலும் அழகிய படங்களே! அருமை.
    பகிர்வுக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  6. திருவலம் திருத்தலம் பற்றிய பதிவு அருமையோ அருமை.

    >>>>>

    ReplyDelete
  7. படங்கள் அத்தனையும் + விளக்கங்கள் எல்லாமே சிறப்பாக உள்ளன.

    >>>>>

    ReplyDelete
  8. விலவவனம்,

    வில்வாரண்யம் [வில்வம் + ஆரண்யம்] வில்வக்காடு,

    பாம்புப்புற்று

    பசுமாடு

    பாலைச்சொரிந்ததால் புற்று விலகியது

    தீக்காலி அம்பாள்

    ஜடாகலாபாம்பாள்

    வல்லாம்பிகை

    இவையெல்லாம் பற்றி படிக்கப்படிக்க பரவஸம் அளிக்கிறது.

    >>>>>

    ReplyDelete
  9. மிக அழகான இன்றைய பதிவுக்குப்பாராட்டுக்கள்.

    அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள்.

    ooooo

    ReplyDelete
  10. எதையும் விடாமல் கோவில் பற்றிய விளக்கம் சிறப்புங்க.

    ReplyDelete
  11. ஆச்சரியமாக இருக்கிறது - எங்கிருந்து பிடிக்கிறீர்களோ கோவில்களை.
    திருவலம் ப்ரிட்ஜ் புகைப்படம் கிடைத்தால் போடலாமே?

    ReplyDelete
  12. திருவலம் கோவில் தரிசனம் கிடைத்தது இன்று . படங்கள், செய்திகள் எல்லாம் அருமை.

    ReplyDelete
  13. திருவலம் திருத்தல பெருமைகள் அறிந்தேன்! அருமையான பதிவு! நன்றி!

    ReplyDelete
  14. திருவலம் திருத்தலம் படங்களுடன் சிறப்புறுகின்றது.

    ReplyDelete
  15. திருவலத்தில் ஒரு சுவாமிகள் இருந்தார். மவுன சுவாமிகள். சாக்கினால் ஒரு கெள‌பீனம் மட்டும் அணிந்து கோவில் வாசலிலேயே இருந்தாராம். அவருடன் என் தந்தையாருடைய அனுபவம் இங்கே வாசிக்கவும்.
    http://classroom2007.blogspot.in/2011/02/blog-post_13.html

    தங்களுடைய பதிவுகள் அனைத்தையும் வாசித்துவருகிறேன். ஒவ்வொரு கட்டுரையும் அதனளவில் நிறைவாக உள்ளது. பணிசிறக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. நிறைந்த பதிவு. நிறைந்த தகவல்கள்.
    நிறைந்த நன்றி. இறையாசி பெருகட்டும்.
    பாராட்டுகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  17. திருவலம் திருத்தலம் தகவல்கள் அருமை.அழகான படங்கள்,சிறப்பான பதிவு.

    ReplyDelete