Sunday, March 24, 2013

வசந்தகால கொண்டாட்டம் ..












இயோஸ்டர் என்ற வசந்தகால தேவதையை வரவேற்க வசந்தகால சம இரவு பகல் நாளில் மார்ச் 21 -ஆம் தேதியை ஒட்டி நடத்தப்படுகிறது.

இயோஸ்டர் தேவதையின் விலங்கான , வசந்தகால முயல் முட்டைகளுடன் இணைந்தது ,  வசந்தகாலத்தின் பூமி மீண்டும் பிறப்பது முட்டையால் அடையாளம் காட்டப்படுகிறது

பூமியின் மறுபிறப்பின் அடையாளமாக வும்,  கிறிஸ்துவின் மறுபிறப்பின் அடையாளமாகவும் , கல்லறையின் குறியீடாகவும், அதனை உடைப்பதன் மூலம் வாழ்க்கை புதுப்பிக்கப்படுவது சுட்டிக்காட்டப்படுகிறது.

சிலுவையில் அறையப்பட்டு தியாகம் செய்ததன் மூலமாக உலகம்  ,மனித இனத்தின் மீட்புக்காக இயேசு கிறிஸ்து சிந்திய இரத்தத்தைச் சிவப்பு நிறம் குறிக்கிறது.

செயலற்று முடங்கியுள்ளமுட்டையில்  புதிய வாழ்வு வைக்கப்பட்டிருக்கிறது.

ஈஸ்டர் முட்டைகள் புதிய வாழ்வின் பிரசித்தி பெற்ற அடையாளமாகும்.

நட்பு, அன்பு ,நல்வாழ்த்துக்களின் அடையாளமாக அலங்கரிக்கும் இங்கிலாந்து) ஈஸ்டர் ஞாயிறுகளில் உயரமான செங்குத்தான மலைகளிலிருந்து வண்ணம் பூசப்பட்ட ஈஸ்டர் முட்டைகளை உருட்டி விடும் பழக்கம்

 அமெரிக்காவில் ஈஸ்டர் முட்டை உருட்டி விடுதல், வெள்ளை மாளிகையில் நடத்தப்படும்

கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையான ஈஸ்டருக்கு முந்தைய 40 நாட்கள் தவக்காலம் ஆகும்.

கடைசி வாரம் புனித வாரமாக கடைபிடிக்கப்படுகிறது.

குருத்தோலை பவனி நடக்கும்...

இயேசு சிலுவையில் அறையப்பட்ட நாளாக  புனித வெள்ளி கடைபிடிக்கப்படுகிறது.

சென்னையில் சாந்தோம் தேவாலயம், பெசன்ட் நகர் வேளாங்கண்ணி ஆலயம், ராயப்பேட்டை சிஎஸ்ஐ, பெரம்பூர் லூர்து மாதா, செயின்ட் தாமஸ் மவுன்ட் புனித தோமையர் ஆலயம் உள்பட அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனை நடைபெறும் ...
tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
வண்ண ஓவியம் வரையப்பட்ட 10000 முட்டைகளை கொண்டு தயாரித்த 'ஈஸ்டர்' மரம்!-ஜெர்மனி






11 comments:

  1. இந்தியாவில் நம்மால் இந்த சமகால (மார்ச் 21) நிகழ்வை உணர முடியாது எனினும், பிரிட்டன் அமெரிக்கா போன்ற நாடுகளில் இரவின் அளவும் பகலின் அளவும் மாதத்திற்கு மாதம் மாறுபடும். இந்த நாடுகளில் நாம் இந்த சமகால நிகழ்வை உணரலாம். லாஸ்ட் சப்பர் ஓவியம் அருமை..

    ReplyDelete
  2. வசந்த காலக்கொண்டாட்டம் என்ற இந்தப்பதிவு மிகவும் அழகாக உள்ளது.

    அந்த முசக்குட்டிகளைப் பார்க்கப்பார்க்க இன்பமாக உள்ளது.

    >>>> இடைவேளை >>>>

    ReplyDelete

  3. வணக்கம்!

    வசந்தத்தின் காலத்தை வாவென்று நன்றே
    இசைத்திட்ட யாவும் இனிது!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  4. படங்கள் அருமை அம்மா... ஈஸ்டர் தின வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. அனைத்துப்படங்களும், தகவல்களும் தங்களுக்கே உரிய தனித்தன்மையுடன் வெளியிட்டூள்ளீர்கள்.

    பாராட்டுக்கள். இனிய நல்வாழ்த்துகள். நன்றிகள்.

    அனைவருக்கும் இனிய ஈஸ்டர் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. ஜெர்மனி ஈஸ்டர் மரம் - ஓவியம் வரையப்பட்ட 10000 xxxxx

    போட்டொ கவரேஜ் பிரமாதமாக உள்ளது. ;)))))

    ReplyDelete
  7. அருமை சகோதரி...
    நல்ல ஈஸ்டர் திருநாள் விளக்கங்கள். அத்தனையும் சிறப்பு.
    அழகிய படங்கள். நான் வசிக்கும் ஜேர்மனி ஏஸ்டர் முட்டையும் உங்களிடம் வந்துவிட்டதே... ரசித்தேன்.

    நல்ல பகிர்வு + பதிவு. மிக்க நன்றி சகோதரி!

    ReplyDelete
  8. ஈஸ்டர் தின வாழ்த்துக்கள்.
    படங்களுடன் தகவல்களும் அருமை.

    ReplyDelete
  9. படங்களும் பகிர்வும் அருமை.

    ReplyDelete
  10. ஓ.அதனால் தான் முட்டை விலை ஏறிவிட்டதோ ?

    ReplyDelete