ஓம் சிகி வாஹனாயை வித்மஹே
சக்தி ஹஸ்தாயை தீமஹி
தன்னோ: கெளமாரி ப்ரசோதயாத்.
சக்தி அம்சத்தில் சிறப்பிடம் பெறும் சப்தகன்னியர் வழிபாடு அம்பிகை வழிபாட்டின் அங்கமாக சக்திமிக்க வழிபாடாகத் திகழ்கிறது ..
கன்னிகள் நிலை என்பது தன்னுடைய சிவ சக்தியை அடையாத அம்பிகையின் வடிவமாகும். அது தாய்மைக்கும் முந்தய உன்னதமான நிலை.
சப்த கன்னியர் அருள்பாலிக்கும் திருச்சி - அன்பில் பேருந்து சாலையில் லால்குடியில் இருந்து 1 கி.மீ. தொலைவில் உள்ள மணக்கால் ஆலயம் பற்றிய வரலாறு வியப்பளிக்கிறது .....
மணக்கால் அருகே ஆலய திருக்குளத்தில் நீராடிக் கொண்டிருந்த சப்த மாதர்கள். ஏழு பேரிடமும் ... மஞ்சள் வியாபாரியான மலையாள மந்திரவாதி கரையோரம் நின்று ‘‘மஞ்சள் வேண்டுமா?’’ என்று அவர்களிடம் கேட்க ‘‘வேண்டாம்’’ என்றனர் சப்தமாதர்கள்.
அந்தப் பெண்களை மிரட்டியாவது மஞ்சள் வாங்க வைக்க வேண்டும் என்று எண்ணிஅவர்கள் கரையில் கழற்றி வைத்திருந்த ஆபரணங்களையும் ஆடைகளையும் எடுத்ததைப் பார்த்த சப்த கன்னியர் பதறிப் போயினர்.
உடனே, முருகனின் சக்தி என்று போற்றப்படும் கௌமாரி வியாபாரியை அழைத்தாள். ‘‘எனக்கு மஞ்சள் வேண்டும்’’ என்றாள் ...
சிவனாலும் சக்தியாலும் அழிக்க முடியாத தீய சக்திகளை அழிப்பதற்கு அவதாரம் எடுத்த சூரனை வென்ற சக்திவேலனின் அம்சமாகத் தோன்றிய கௌமாரி தன் தலையிலிருந்த ஒரு மலரைத் தூக்கி அந்த வியாபாரியை நோக்கி வீசி இதன் எடைக்கு எடை மஞ்சள் கொடுத்துவிட்டு பணத்தை வாங்கிக் கொண்டு போ’’ என்றாள் ...
இவளுக்கு சஷ்டி, தேவசேனா என்ற வேறு பெயர்களும் உண்டு. மயில் வாகனத்தில் வருபவள். அஷ்ட திக்கிற்கும் அதிபதி இவளே. கடலின் வயிறு கிழியுமாறு வேற்படையைச் செலுத்திய சக்தி இவள். இவளை வழிபட்டால், குழந்தைச் செல்வம் உண்டாகும். இளமையைத் தருபவர்
கௌமாரி
அலட்சியமாக அந்த மலரை எடுத்து தராசின் ஒரு தட்டில் வைத்து மறு தட்டில் மஞ்சளைப் போட்டார்.
பூ இருந்த தட்டு கீழே இறங்கியது.
மறுபடியும் மஞ்சளைப் போட்டார்.
தட்டு மேலும் கீழே இறங்கியது.
வியந்த மஞ்சள் வியாபாரி தான் கொண்டு வந்த ஒரு மூட்டை மஞ்சளையும் தட்டில் வைத்தார்.
பூ இருந்த தட்டு கீழேயே இருந்தது.
மறுபடியும் மஞ்சளைப் போட்டார்.
தட்டு மேலும் கீழே இறங்கியது.
வியந்த மஞ்சள் வியாபாரி தான் கொண்டு வந்த ஒரு மூட்டை மஞ்சளையும் தட்டில் வைத்தார்.
பூ இருந்த தட்டு கீழேயே இருந்தது.
வெளிநாட்டு வியாபாரத்திற்காக கப்பலில் ஏற்றி வைத்திருந்த மஞ்சள் மூட்டைகளை எடையில் ஏற்றினார்.
பூத்தட்டு மேலே வரவேயில்லை.
அப்போதுதான் மஞ்சள் வியாபாரி இந்தப் பெண்கள் சாதாரணப் பெண்கள் அல்ல; தெய்வப் பெண்கள் என உண்மை உணர்ந்ததும் அவர்கள் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்ட இடமே மணக்கால்.
அங்கு சப்தமாதர்களுக்கு ஒரு அற்புதமான ஆலயம் அமைந்துள்ளது.
பூத்தட்டு மேலே வரவேயில்லை.
அப்போதுதான் மஞ்சள் வியாபாரி இந்தப் பெண்கள் சாதாரணப் பெண்கள் அல்ல; தெய்வப் பெண்கள் என உண்மை உணர்ந்ததும் அவர்கள் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்ட இடமே மணக்கால்.
அங்கு சப்தமாதர்களுக்கு ஒரு அற்புதமான ஆலயம் அமைந்துள்ளது.
சப்தகன்னிகள் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு தலங்களில்
மக்கள் குறைகளை தீர்த்து அருள்பாலித்து வருகிறார்கள்.
மக்கள் குறைகளை தீர்த்து அருள்பாலித்து வருகிறார்கள்.
எழுவரில் முதன்மையானவளாக கௌமாரி கருதப்பட்டு,
நங்கையர் அம்மன் என்ற திருநாமத்துடன், தன் பெயரில்
உள்ள அந்த ஆலயத்தில் மற்ற ஆறு மாதர்களுடன் அருள்பாலிக்கிறாள்.
நங்கையர் அம்மன் என்ற திருநாமத்துடன், தன் பெயரில்
உள்ள அந்த ஆலயத்தில் மற்ற ஆறு மாதர்களுடன் அருள்பாலிக்கிறாள்.
ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. பொதுவாக சப்தமாதர்கள்
ஆலயம் வடக்குத் திசை நோக்கியே அமைந்திருக்கும். ஆனால்
இங்கு ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்திருப்பது சிறப்பான அம்சமாகும்.
ஆலயம் வடக்குத் திசை நோக்கியே அமைந்திருக்கும். ஆனால்
இங்கு ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்திருப்பது சிறப்பான அம்சமாகும்.
ஆலயத்தின் உள்ளே மதுரை வீரன் சந்நதி அடுத்துள்ள மகாமண்டபத்தில் வலது புறம் மஞ்சள் வியாபாரி திருமேனி உள்ளது.
அர்த்த மண்டப நுழைவாயிலின் இருபுறங்களிலும் வரவேற்கும் பிரமாண்டமான துவார பாலகிகள் மிகப் பெரிய அளவிலான இத்திருமேனிகள் பொதுவாக வேறு எந்தக் கோயிலிலும் காணக்கிடைக்காதவை.
கருவறையில் சப்தமாதர்களின்
திருமேனிகள் அழகுற அமைந்துள்ளன.
திருமேனிகள் அழகுற அமைந்துள்ளன.
பிராகாரத்தின் தென் திசையில் பெரிய அளவிலான யானை சிலை மீது ஐயனாரும் குதிரை சிலை மீது கருப்பண்ணசாமியும் சுதை வடிவில் அருள்கின்றனர். இந்த கருப்பண்ணசாமி கடன் வசூல் செய்வதில் அசகாய சூரர்.
வராத கடன்கள் திரும்பி வர கருப்பண்ணசாமிக்கும் அவர் சவாரி செய்யும் குதிரைக்கும் மாலை போட்டு பிரார்த்தனை செய்தால் போதும். விரைவாக அந்தக் கடன்கள் வசூலாகிவிடும் என்கின்றனர் பக்தர்கள்.
குடும்ப பிரச்னைகள் தீர, திருமணம் தடையின்றி நடந்தேற கருப்பண்ணசாமிக்கு மாலை போட்டு பிரார்த்தனை செய்து பலன் காண்கின்றனர்.
தெற்கு பிராகாரத்தில் பிரமாண்டமாக பரந்து விரிந்து வளர்ந்திருக்கும் நருவளி மரம் உள்ளது. இந்த மரம் பூப்பதில்லை. காய்ப்பதில்லை.
ஆனால், பெண்கள் உரிய வயதில் பூப்பெய்துவதற்கும் திருமணமான பெண்கள் குழந்தைப் பேறு அடைவதற்கும் நருவளி மரத்தை வலம் வந்து பிரார்த்தனை செய்தால் பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை ....
சுமார் 800 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயம் பல நூற்றுக்கணக்கான குடும்பங்களின் குலதெய்வக் கோயிலாக விளங்குகிறது.
மாசி மாதம் அமாவாசையைத் தொடர்ந்து நடைபெறும் கரகத் திருவிழா இங்கு வெகு பிரசித்தம்.
நவராத்திரி 10 நாட்களும் இங்கு இறைவிக்கு லட்சார்ச்சனை நடைபெறுகிறது. 10ம் நாள் இங்கு நடைபெறும் தயிர் பாவாடை எனும் விழா எங்கும் காணமுடியாத அதிசயத் திருவிழாவாகும்.
அர்த்த மண்டபம் முழுவதும் சாதத்தை வடித்து, தயிரைக் கலந்து தயிர்சாதமாகக் கொட்டி வைத்து நிரவி விடுவார்கள். பார்க்கும்போது அர்த்த மண்டபம் வெள்ளை வெளேர் என மல்லிகை மலர்களால் மறைக்கப்பட்டது போல் இருக்கும் அந்த தயிர் சாதத்தை பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்குவார்கள்.
ஆடி, தை, மாத வெள்ளிக்கிழமைகளில்
மாவிளக்கு பூஜை கோலாகலமாக நடைபெறும்.
சித்திரை மாதப் பிறப்பு, விஜயதசமி ஆகிய நாட்களில் அம்மன் சிம்ம வாகனத்தில் வீதியுலா வருவாள். இந்த ஆலயத்தில் ஒரு கால பூஜை மட்டுமே நடந்தாலும் ஆலயம் பகல் நேரம் முழுவதும் திறந்திருப்பதை பக்தர்கள் அனைவரும் பாராட்டி மகிழ்கிறார்கள்.
அகந்தையுடன் வந்த செட்டியப்பரின் கொட்டத்தை அடக்கிய கௌமாரியும் பிற மாதர்களும் தம்மை வணங்கும் பக்தர்களின் அகந்தையை, அவர்களுடைய எதிரிகளை அழித்து, பக்தர்களை மகிழ்வோடு வாழ வைப்பது நிஜம் என்பது இத்தல பக்தர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை.
திருமண உறுதி படுத்துதலின் போது சப்த கன்னியம்மனின்
ஆசியை பெற அம்மனிடம் வேண்டுகின்றனர்.
அம்மனின் அருள் கிடைத்தால் அந்த திருமணம் எந்த தடங்கலுமின்றி நடைபெறும். வருங்காலத்தில் தம்பதிகள் மக்கட்பேறு பெற்று சுகமாய் வாழ்வார்கள் என்பது ஐதீகமாக உள்ளது.
புது விபரங்கள். ரசித்தேன்.
ReplyDeleteஇனிய வணக்கம் சகோதரி...
ReplyDeleteநலமா??
சப்த கன்னியர்களின் பெயர்கள் அறிந்ததுடன்...
அவர்களின் சிறப்பு பற்றியும் அறிந்துகொண்டேன்...
அருமையான படங்கள்...
ReplyDeletethanks for sharing information about saptha kanniyar
ReplyDeleteசப்தக்கன்னியர் பற்றி வித்தியாசமான விஷயங்களை பகிர்ந்ததிற்கு மிக்க நன்றி .எனது வான்மீகீ பிளாக்கில்(www.vanmigi.blogspot.in) எழுதி உள்ளேன்
ReplyDeleteசப்தக்கன்னியர் பற்றி வித்தியாசமான விஷயங்களை பகிர்ந்ததிற்கு மிக்க நன்றி .எனது வான்மீகீ பிளாக்கில் (www.vanmigi.blogspot.in)எழுதி உள்ளேன்
ReplyDeleteபல அறியாத தகவல்கள் அம்மா... நன்றி...
ReplyDelete”சகல சக்தி தரும் சப்த கன்னியர்” க்கு என் வந்தனங்கள்.
ReplyDeleteமுழுவதும் சக்தி பெற்ற்பின் மீண்டும் வருவேனம்மா! ;)))))
>>> அதுவரை இடைவேளை >>>
சப்த கன்னியர் கதை தெரிந்து கொண்டேன். படங்கள் விவரங்கள் எல்லாம் அருமை, அழகு. கோவை கோனியம்மன் கோவில் சப்த கன்னியர்கள், மேல்மருவத்த்ர் சப்த கன்னியர் படங்கள் அழகு.
ReplyDeleteமிகவும் அருமை.....சப்த கன்னியர் படங்களும், எழுத்தும் ஆவலை தூண்டுகிறது. தொடர வாழ்த்துக்கள்.
ReplyDeleteசப்த கன்னிகைகளின் சிறப்பை அறிந்து கொள்ள முடிந்தது.
ReplyDeleteஅற்புத வரலாறு. அறியத் தந்தமைக்கு நன்றி.
ReplyDelete//அம்பிகையிடம் இருந்து தோன்றிய நித்திய கன்னிகள் தான் சப்த கன்னியர் என்னும்
ReplyDeleteபிராம்மி,
மகேஸ்வரி,
வைஷ்ணவி,
வாராகி,
ஐந்த்ரீ,
கௌமாரி,
சாமுண்டி
என்பது அவர்களது திருப்பெயர்கள்.//
மிகவும் அழகான வானவில்லின் நிறங்கள் போன்ற ஏழு பெயர்கள்.
>>>>>>
// சப்த கன்னியர் அருள்பாலிக்கும் திருச்சி - அன்பில் பேருந்து சாலையில் லால்குடியில் இருந்து 1 கி.மீ. தொலைவில் உள்ள மணக்கால் ஆலயம் பற்றிய வரலாறு வியப்பளிக்கிறது .....//
ReplyDeleteமணக்கால் கிராமத்திற்கு நான் அடிக்கடி சென்று வந்துள்ளேன்.
இந்த ஆலயத்திற்கும் ஒரே ஒருமுறை சிறுவயதில் சென்று வந்தது எனக்கு லேஸாக நினைவில் உள்ளது.
>>>>>>
//அப்போதுதான் மஞ்சள் வியாபாரி இந்தப் பெண்கள் சாதாரணப் பெண்கள் அல்ல; தெய்வப் பெண்கள் என உண்மை உணர்ந்ததும் அவர்கள் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்ட இடமே மணக்கால்.
ReplyDeleteஅங்கு சப்தமாதர்களுக்கு ஒரு அற்புதமான ஆலயம் அமைந்துள்ளது.//
கதையின் மூலம் தெய்வீகப் பெண்களைப்பற்றி அழகாக அறிய முடிந்தது.
நீங்கள் இதுபோலச் சொல்லிடும் குட்டிக்கதைகளை வெகு சுவாரஸ்யமாக ரஸித்துப்படிப்பவன் நான்.
பொதுவாகவே கதை கேட்கவோ கதை படிக்கவோ எனக்கு மிகவும் பிடிக்கும்.
அதுவும் தெய்வீகப்பதிவராகிய தாங்கள் சொல்லிடும் கதைகள் பசுமரத்து ஆணிபோல என் மனதில் பதிந்து விடுகின்றன. ;)
தங்களுக்கு நேரில் நான் எதிரே அமர்ந்து பயபக்தியுடன் கேட்பதுபோல அடிக்கடி உணர்ந்து கொள்வது உண்டு.
>>>>>>
//பிராகாரத்தின் தென் திசையில் பெரிய அளவிலான யானை சிலை மீது ஐயனாரும் குதிரை சிலை மீது கருப்பண்ணசாமியும் சுதை வடிவில் அருள்கின்றனர். இந்த கருப்பண்ணசாமி கடன் வசூல் செய்வதில் அசகாய சூரர். //
ReplyDeleteஅடடா, எங்கெங்கும் நோக்கினும் சக்தியடா என்பது போல எங்கெங்கும் நோக்கினும் கருப்பரடா ;))))
//வராத கடன்கள் திரும்பி வர கருப்பண்ணசாமிக்கும் அவர் சவாரி செய்யும் குதிரைக்கும் மாலை போட்டு பிரார்த்தனை செய்தால் போதும்.
விரைவாக அந்தக் கடன்கள் வசூலாகிவிடும் என்கின்றனர் பக்தர்கள். //
என் பெரியம்மாவின் மூத்த பெண் இந்த மணக்கால் கிராமத்தில் தான் வெகு நாட்கள் வாழ்ந்தார்கள்.
என் மீது மிகவும் பிரியமாக இருந்தவர்கள்.
அவர்கள் இதைச்சொல்லி நானும் கேட்டிருக்கிறேன்.
அந்த அக்காவின் பிள்ளை தான்
Mr. M J Raman அவர்கள்.
என் ஒருசில பதிவுகளுக்கு MANAKKAL என்ற் பெயரில் பின்னூட்டம் கொடுத்து வருபவர்.
தற்சமயம் அவர் மும்பையில் இருக்கிறார்.
உங்களின் இந்தப்பதிவுக்கு வருகை தருமாறு வேண்டுகோள் விடுத்து மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன்.
அவர் வருகை தந்தாலும் தரலாம்.
//குடும்ப பிரச்னைகள் தீர, திருமணம் தடையின்றி நடந்தேற கருப்பண்ணசாமிக்கு மாலை போட்டு பிரார்த்தனை செய்து பலன் காண்கின்றனர்.//
சந்தோஷமான சமாச்சாரம் தான்.
>>>>>>>
//கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோவிலில் ஆதி கோனியம்மன் வீற்றிருக்கும் தனிக்கோவிலில் சப்த கன்னியர்கள் வீற்றிருக்கிறார்கள். //
ReplyDeleteநான் ஒரே ஒருமுறை மட்டும் இந்தக்கோயிலுக்குச் செல்லும் பாக்யம் பெற்றிருந்தேன்.
கேட்கவே மகிழ்ச்சியாக உள்ளது.
கோனி என்றால் அரசி என்று பொருள் படும்.
கோவை மாநகரையே அரசாட்சி செய்பவள் எனவும் நாம் எடுத்துக்கொள்ளலாம்.
>>>>>
இன்றைய தங்களின் பதிவினில் சப்த கன்னியர்களின் படங்கள் அத்தனையும் அழகோ அழகு.
ReplyDeleteநிலைகொள்ளாமல் குதித்துக் கொண்டிருக்கும் தராசுப்படம் மிக நல்ல தேர்வு ;)))))
மனமார்ந்த பாராட்டுக்கள்.
அன்பான இனிய வாழ்த்துகள்.
பகிர்வுக்கு நன்றியோ நன்றிகள்.
oooooo
இது வரை எனக்கு தெரியாத சப்த கன்னிகைகளைப் பற்றி தெரிந்து கொண்டேன்.
ReplyDeleteமிக அழகிய படங்களும்,அற்புதமான தகவல்களும் கொண்ட பகிர்வுக்கு நன்றி.
Aha......
ReplyDeleteI am learning it new here.
(Except the temple of my Koniamman at Coimbatore).
Very good post Rajeswari.
viji
அற்புதமான வரலாறு...எங்கள் ஊர் மணக்கால். மணக்கால் நங்கை எங்கள் கண்கண்ட தெய்வம்..இந்த தை வெள்ளிக்கிழமை கூட நான் அங்கு இருந்தேன். அழகான படங்களுக்கும், வர்ணனைகளுக்கும் மிக்க நன்றி. இந்த பதிவு பற்றி தகவல் தந்த (வைகோ) கோபுவுக்கும் நன்றி. அன்புடன் மணக்கால் ஜே. ராமன், வாஷி, நவிமும்பை.
ReplyDeleteஅருமை! அற்புதமான வரலாறு! அழகிய காட்சிகள்!
ReplyDeleteநல்ல பகிர்வு சோதரி. மிக்க நன்றி!
மணக்கால் நகரில் இருக்கும், சப்த கன்னியரின் கோவில் பற்றி முதன்முதலாக உங்கள் பதவின் மூலமே அறிந்து கொண்டேன்.
ReplyDeleteபோய்வர வேண்டிய கோவில்களின் பட்டியலில் இதையும் சேர்த்துக் கொண்டேன்.பல புதிய தகவல்கள் படிக்கவும், புகைப்படங்கள் ஒவ்வொன்றும் பார்த்து ரசிக்கவும் நன்றாக இருந்தன.
இதுவரை தெரியாத கதைகளைக் கேட்பதே தனி குஷி தான்; உங்கள் பதிவுகளைப் படிக்கிற பொழுது இந்தப் பேறு அடிக்கடி எனக்கு வாய்க்கிறது.
ReplyDeleteமிக்க நன்றி.
மணக்கால் சப்த கன்னியர் வரலாறு இப்போதுதான் அறிந்து கொண்டேன். திருச்சி மாவட்டம் லால்குடிக்கு அடுத்த ஊர் மணக்கால். ஒரு நாள் போய் வரவேண்டும். நன்றி!
ReplyDeleteமணக்கால் தெய்வங்கள் பற்றிய செய்தி அருமை. என் கணவரின் ஊரான லால்குடியின் அருகில் இருப்பதால் பதிவைப் படித்த என் கணவருக்கு மலரும் நினைவுகள்.
ReplyDeleteநலல் பதிவு.
வணக்கம்
ReplyDeleteஅம்மா
சப்த கன்னியர்கள் பற்றிய தகவல் ஒரு புதுமையாக உள்ளது அதிலும் நருவளி மரத்துக்கு அவ்வளவு மகின்மை உள்ளது என்பதை இப்போதுதான் அறிந்தேன் அருமையான படைப்பு வாழ்த்துக்கள் அம்மா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சப்தகன்னிகையரைப்பற்றி அறிந்துகொண்டேன்.நன்றி.
ReplyDeleteசென்னை அருகில் உள்ள செங்கல்பட்டில் மணப்பாக்கம் என்ற ஊர் பாலாற்றங்கரையில் உள்ளது, மிகவும் சக்தி வாய்ந்த சப்த கன்னிமார்கள் கோயில் அங்கு உள்ளது, செங்கல்பட்டிலிருந்திலிருந்து பஸ் வசதியும் அடிக்கடி தொடர்ந்து ஷேர் ஆட்டோ வசதியும் உள்ளது. மாலை 5 மணி வரை மட்டுமே கோயில் திறந்திருக்கும், சென்னை உட்பட பல மாவட்டங்களின் குலதெய்வமாக இருப்பதால் செவ்வாய் வெள்ளி மற்றும் ஞாயிறு கிழமைகளில் கூட்டம் அதிகம் காணப்படும்,
ReplyDeleteஎங்கள் குலதெய்வம் அருள்மிகு ஸ்ரீநங்கையாரம்மன், மணக்கால். பற்றி எழுதியதற்க்கு மிக்க நன்றி.
ReplyDeleteஅன்பன் அறிவழகன்