

'உருகாத வெண்ணையும் ஓரடையும் நான் தருவேன்,
ஒருக்காலும் என்னைவிட்டு என் கணவர் பிரியாதிருக்க வேண்டும்'
என்று அழகுத்தமிழில் அம்மனிடம் பிரார்த்தனை செய்து முதலாக
ஒரு சரட்டினை அம்மனுக்கு சார்த்திவிட்டு இன்னொன்றைக்
கையில் எடுத்துக் கொண்டு, '
தோரம் கருண்ஹாமி ஸுபகே ஸஹாரித்ரம் தராம்யஹம் பர்த்து:
ஆயுஷ்ய ஸித்யர்த்தம் ஸுப்ரீதா பவ ஸர்வதா'
அன்னையே! எனது கணவரின் நீண்ட ஆயுளைக் கருதி,
மஞ்சள் கயிற்றாலான சரட்டைக் கழுத்தில் கட்டிக் கொள்கிறேன்.
நீ சந்தோஷத்துடன் இருந்து எனக்கு அருள் புரிவாயாக'
என்னும் பொருளுடைய ஸ்லோகத்தைச் சொல்லி பெண்கள் கழுத்தில் கட்டிக் கொள்ளும் காரடையான நோன்பு மஹா உன்னதமான விரதம் ...
கன்னிப் பெண்களுக்கும் நல்ல கணவன் வாய்க்கப் பிரார்த்தனை
செய்து.கட்டிக் கொண்டபின் நிவேதனம் செய்த அடையில்
ஒரு அடையினை கணவனுக்கும் இன்னொன்றை தானும் உண்பார்கள்.

பங்குனி தொடக்கமே அன்னை அருளுடன் ஆரம்பிக்கச் செய்யும் காரடையான் நோன்பு என்பது அன்னை காமாக்ஷி தன் பதியாம் கைலாஸபதியுடன் சேர்வதற்காக இருந்த அன்பான நோன்பு.
மாசியும் பங்குனியும் கூடும் நேரத்தில் பெண்கள் தங்களது
கணவரது நல்வாழ்விற்காக நோற்கும் நோன்பு.
'மாசிச் சரடு பாசி படரும்' என்பதற்கேற்ப சுமங்கலிப் பெண்கள் மாசி முடிந்து பங்குனி ஆரம்பிக்கும் நேரத்தில் காமாக்ஷி அம்மனுக்கு பூஜை செய்து கார் அரிசியில் செய்யப்பட்ட இனிப்பு அடையும், வெண்ணையும் நிவேதனம் செய்து, நோன்புச் சரட்டினைக் கட்டிக்கொள்கின்றனர்.
சரடைக் கட்டிக்கொள்ளும் போது பிரார்த்தனையாக,
பசுமாட்டுக்கும் உணவாக தருவது வழக்கம்.
மாசி மாத கடைசி நாள் இரவு ஆரம்பித்து பங்குனி முதல் நாள் காலையில் நிறைவடையும் வகையில் இந்த வருடம் 13-3-2012 இரவு முதல் 14-3-2012 காலை வரை இருக்கிறது ..
காமாட்சி நோன்பு, கௌரி விரதம், சாவித்திரி விரதம்
என்றும் சிறப்பிக்கப்படுகிறது ..
விரத பூஜையில் காமாட்சி அம்மனையும், கலசத்தையும்
கலச பூஜை செய்து வழிபடுவது வழக்கம் ...

அம்மனுக்கு கார் அரிசியும் காராமணியும் கலந்து செய்த அடையும்,
உருகாத வெண்ணெயும் நிவேதனம் செய்து வழிபடுவார்கள்.
நோன்புச் சரட்டில் மலரைக் கட்டி பூஜையில் வைத்து
கழுத்தில் கட்டிக் கொள்வார்கள்.

"மாசிக்கயிறு பாசி படியும்' என்று, பங்குனி முதல் நாளில்
புதிய மங்கலச் சரடை மாற்றிக்கொள்வது விசேஷம்...

பங்குனியை புருஷனாகவும், மாசியை பெண்ணாகவும் கொண்டு,
இரண்டும் கூடும் காலத்தில், மகாலட்சுமியை நோக்கி நோன்பு
இருப்பது காரடையான் நோன்பு.

நெடுநாட்கள் பிள்ளைப் பேறு இல்லாமலிருந்த அசுபதி மன்னன், மகப்பேறு வேண்டி தான- தர்மங்கள் செய்து வந்தன் பயனாக சாமுத்திரிகா லட்சணங்கள் அனைத்தும் கொண்டு பிறந்த பெண் குழந்தை சாவித்திரிக்கு எட்டு வயதாகும்போது நாரதர், அவளது எதிர்காலத்தைப் பற்றி கூறி னார்.
தாய்- தந்தையரை தெய்வமாக மதிக்கும் சத்யவான் என்பவனை அவள் மணந்து கொள்வாள் என்றும்; சத்யவான் 21 ஆண்டுகள் வரைதான் வாழ்வான் என்றும் கூறியிருந்தார்.
சாவித்திரி சத்யவானையே மணந்து, அவனது வாழ்நாள் அதிகரிக்க பல விரதங்களையும் நோன்பு களையும் அனுஷ்டித்தாள்.
சத்யவானும் சாவித்திரியும் வேற்று நாட்டு அரசனால் நாடு கடத்தப்பட்டு
ஒரு கானகத்தில் வசித்து வந்தனர்.
காட்டில் கிடைத்த பூக்களையும், பழங்களையும் வைத்து பூஜித்தாள். அன்னைக்கு அமுது படைக்க விரும்பி காடுகளில் ஏதும் கிடைக்காததால் அங்கே கிடைத்த களிமண்னை அடையாகவும், கள்ளிப் பாலை வெண்ணெயாகவும் பாவித்து பூஜை செய்தாள்.
சாவித்திரி தடுத்தும் கேளாமல் சத்தியவான் விறகு
சேகரிக்க காட்டுக்குப் புறப்பட்டான்.
சாவித்திரியும் உடன் இருந்த நண்பகல் வேளையில் சத்யவான் சாவித்திரியின் மடியில் தலைவைத்து படுத்திருந்தபோது,
எமதர்ம ராஜன் அவன் உயிரைப் பறித்துச் சென்றான்.
எமதர்மன், சத்தியவான் உயிரை எடுத்துவிட்டுச் சென்று கொண்டிருந்த. எமதர்மனின் உருவம் சாவித்திரியின் கற்புத் திறத்தால்
அவள் கண்களுக்குத் தெரிந்தது.
சாவித்திரி விடாமல் பின் தொடர்ந்து சென்றாள்.
எமன் அவளைப் பார்த்து ''என்னை ஏன் தொடருகிறாய்?''என்று கேட்க
''என் கணவன் உயிர் வேண்டும்''என்றாள்.
வேறு எதை வேண்டுமானாலும் கேள் தருகிறேன், என்ற எமனிடம் '
'எனக்கு நூறு பிள்ளைகள் வேண்டும்''என்று வரம் கேட்க,
''தந்தேன் அம்மா உனக்கு''என்றார்.
தொடர்ந்து அவரைப் பின் தொடர்ந்து உங்கள் வரம் ''பலிக்காமல் போகலாமா!கணவனில்லாமல் எப்படி உங்கள் வரம் எனக்கு பலிதமாகும்?தரும தேவனுடைய வாக்கு பொய்யாகலாமா?''என்றாள்.
எமதேவனுக்கு அப்போது தான் சாவித்திரி தேவியின் மதி நுட்பம் புரிந்தது. சாவித்திரியின் பூஜைகளையும், மதி நுட்பத்தையும் மெச்சி உள்ளங்குளிர்ந்து, கணவனுடைய உயிரைப் தந்ததோடு, இழந்த ராஜ்ஜியத்தையும் அளித்தார்.
""இதுவரை என்னை யாரும் பார்த்தது இல்லை. உன் கற்பின் மகிமையால் நீ வெற்றி பெற்று விட்டாய். நீ என்னிடம் கேட்டுப் பெற்ற வரங்கள் அனைத்தும் நிறைவேறும். உலகம் உள்ளளவும், உன்னை நினைத்து மாசியும் பங்குனியும் சேரும் சமயத்தில் விரதமிருப்பவர் களுக்கு உன் ஆசி கிட்டும். அவர்கள் மனமொத்த தம்பதிகளாக வாழ்வார்கள்'' என ஆசி கூறினான் எமன...
காலனையே கதி கலங்க வைத்து போராடி வெற்றி பெற்றதற்கு, சாவித்திரி செய்த கௌரி நோன்பு தான் காரணமாகும்.
அப்படி சாவித்திரி செய்த பூஜையே இன்று நாம் அனைவரும் செய்யும் காரடையார் நோன்பு ஆகும்.
மாசி முடிந்து பங்குனி தொடங்கும் சமயம் அன்றைய தினம் சுமங்கலிகள் பூஜை செய்தால், அவர்களுடைய கணவரைப் பிரியாமல், தீர்க்க சுமங்கலிகளாக இருப்பார்கள் என்பதே அந்த நோன்பின் மகத்துவம்.
காட்டில் சாவித்திரி படைத்த மண் அடையை வெல்ல அடையாகவும், கள்ளிப்பாலை வெண்ணெயாகவும் நாம் அன்னைக்கு படைக்கிறோம்.
சுமங்கலிகள் அனைவரும் காரடையார் நோன்பு எனும் பூஜையை செய்தால் சாவித்திரி போல திடமான மனதையும், கொண்ட கொள்கையில் உறுதியும் காமாட்சி அன்னையின் அருளையும் பெறுவார்கள் என்பது உறுதி.

சாவித்திரி எமனிடம் பெற்ற வரத்தின்படி சத்யவான் மீண்டும்
தன் நாட்டைப் பெற்றான். அவனது பெற்றோர்கள் கண்பார்வை பெற்றனர்.
விதியை மதியால் வெல்லலாம்.என்பதற்கு
உதாரணம்சாவித்ரியின் கதை
மாமன் மாமிக்குத் கண் தெரியாது.
நாடும் ஆட்சியும் வசம் இல்லை.
சாவித்திரியின் தந்தைக்கு நாடாள ஆண்வாரிசு (தம்பி) இல்லை.
இவ்வளவு இக்கட்டான சூழ்நிலையில் ஒரு பெண் தனித்துச் செயல்பட்டு எமன்பின்னேயே சென்று, சமயோசிதமாகச் சிந்தித்துச் செயல்பட்டு,
தனது புத்தி சாதுர்யத்தினால்,
மாமன் மாமிக்குக் கண் வேண்டும் எனவும்
நாடு திரும்பக்கிடைக்கப்பெற் வேண்டும் எனவும்
தன் தந்தைக்குக் நாடாள ஆண்வாரிசு வேண்டும் எனவும் வரம் பெறுகின்றாள்.
சாவித்திரி அனுஷ்டித்து வந்த நோன்பு அவளது காலம் வரை
கௌரி நோன்பு எனப் போற்றப்பட்டது ...
அதன்பின்னர் சாவித்திரி நோன்பு என்ற பெயர் பெற்றது.
சாவித்திரி காட்டில் இருந்து இந்த நோன்பை மேற்கொண்டபோது அங்கு அவளுக்குக் கிடைத்த காராமணி, கார் அரிசி ஆகியவற்றைக் கொண்டு
காரடை செய்து நிவேதனம் செய்தாள்.
அதனால் இந்த நோன்பு நோற்கும் பெண்கள் நிவேதனத்தில் காரடை வைத்து,"உருகாத வெண்ணெயும் ஓரடையும் நான் தருவேன்; ஒருக்காலும் என் கணவர் என்னைப் பிரியாதிருக்க வேண்டும்'
என வேண்டி நோன்புக் கயிறு கட்டிக் கொள்வார்கள்.
திருமணமான பெண்கள் தங்கள் மாங்கல்ய பாக்கியம் நிலைக்க,
கணவரை நோய் நொடி யின்றி காக்க இந்த நோன்பு கவசமாக இருக் கிறது.
இந்த நோன்பை நோற்பதன் பலனாக சாவித்திரி நூறு பிள்ளைகளுடன் சௌபாக்கிய வதியாய் பல்லாண்டு காலம் வாழ்ந்தாள் என்பது புராணம்.
அவளது சரித்திரத்தை நோன்பு தினத்தில் படிப்பதால்
சகல சௌபாக்கியங்களும் பெறலாம்.

.jpg)
Stunning pictures...thanks for sharing them n the story! Nice post madam!
ReplyDelete//Mahi
DeleteStunning pictures...thanks for sharing them n the story! Nice post madam! //
வாங்க ..வணக்கம் ..
படங்களையும் ,கதையையும் ரசித்து அளித்த அருமையான கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்..
விளக்கங்கள், படங்கள் அருமை அம்மா... நன்றி...
ReplyDeleteவாங்க ..வணக்கம் ..
Deleteவிளக்கங்களையும் படங்களையும் , ரசித்து அளித்த
அருமையான கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்..
விரதம் பற்றிய விவரங்கள் நன்று. சாவித்த்ரி சத்யவான் கதை கேட்க சுகம்.
ReplyDeleteவாங்க ..வணக்கம் ..
Deleteவிரதம் பற்றிய விவரங்களையும் ,கதையையும் ரசித்து அளித்த அருமையான கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்..
நோன்பு இருப்பதைப் பற்றியும் விரதத்தின் பலன்களைப் பற்றியும் விளக்கமாக உள்ளது படித்தேன் ரசித்தேன்
ReplyDeleteவாங்க ..வணக்கம் ..
Deleteவிளக்கங்கள ரசித்து அளித்த அருமையான
கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்..
காரடையான் நேம்பு பற்றிய விசேஷமான தகவல்கள் மிக அருமை.அம்மன் படங்கள் அனைத்தும் மனதை கவர்ந்தன.
ReplyDelete
Deleteவாங்க ..வணக்கம் ..
அம்மன் படங்களையும் ,நோன்பு பற்றிய விஷேஷமான தகவல்களையும் ரசித்து அளித்த அருமையான
கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்..
படிக்கும் போது பரவச நிலை உருவாகுது ........அற்புத கருத்துகளை கோர்த்த மாலை அற்புதம்
ReplyDelete
Deleteவாங்க ..வணக்கம் ..
பரவசத்தோடு ரசித்து அளித்த அற்புதமான
கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்..
அழகிய அன்னையின் படங்கள். சிறந்த விளக்கங்கள்.
ReplyDeleteஅருமையான பதிவு.
அம்பாளின் திருவருள் அனைவருக்கும் கிடைத்திட வேண்டுகிறேன்.
பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி சகோதரி!
வாங்க .. வணக்கம் ..
Deleteஅம்பாளின் திருவருள் வேண்டி அளித்த அருமையான கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்..
சாவித்திரி தேவி தன் கணவனை மீட்ட விதம் இதுவென
ReplyDeleteஇன்றுதான் அறிகிறேன் மிகவும் சிறப்பான பகிர்வு
மிக்க நன்றி சகோதரி பகிர்வுக்கு .வாழ்த்துக்கள் இன்றைய
நாள் உங்களுக்கும் சிறப்பான நாளாக அமையட்டும் .
வாங்க ..வணக்கம் ..
Deleteகதையையும் ரசித்து அளித்த அருமையான
கருத்துரைக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த இனிய நன்றிகள்..
எந்த நாளும் எல்லோருக்கும் இனிய நாளாகவே அமைய
இறைவனைப் பிரார்த்திக்கிறேன்..
காரடையான் நோன்பு பற்றிய தகவல்களும் படங்களும் அருமையோ அருமை. நன்றி.
ReplyDelete
Deleteவாங்க ..வணக்கம் ..
படங்களையும் ,தகவல்களையும் ரசித்து அளித்த அருமையான கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்..
வெகு அழகான படங்களுட்ன் அற்புதமான பதிவு,
ReplyDeleteவரும் வியாழக்கிழமை மாசி + பங்குனி கூடும் நாளுக்கு ஏற்ற நல்லதொரு பதிவு.
>>>>>>
வணக்கம் ஐயா
Deleteபடங்களை ரசித்து அளித்த அருமையான
கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..
விரதம் பற்றிய குறிப்புகள் அருமை எல்லாவற்றையும் விட அருமை முதலில் கொடுத்துள்ள இரண்டு அம்மன் படம் நன்றி
ReplyDelete
Deleteவாங்க ..வணக்கம் ..
அம்மன் படங்களையும் ,குறிப்புகளையும் ரசித்து
அளித்த அருமையான கருத்துரைகளுக்கு
மனம் நிறைந்த இனிய நன்றிகள்..
”செளபாக்கியம் தரும் கெளரி விரதம்” என்ற தலைப்பு மிகவும் அழகாக உள்ளது.
ReplyDeleteஸத்யவான் ஸாவித்ரி கதையை மிகவும் மென்மையாகவு மேன்மையாகவும் விளக்கியுள்ளது, ஆச்சர்யம் அளிக்கிறது.
>>>>>>
Deleteதலைப்பையும் , சத்யவான் சாவித்திரி கதையை
மேன்மையான ரசித்து ஆச்சரியம் அளிக்கும்
கருத்துரைகள் நல்கி உற்சாகப்படுத்தியதற்கு
மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..
மிகுந்த சந்தோஷமும், நம்பிக்கையும் அளிக்கும் அழகான பதிவு தந்து அசத்தியுள்ளதற்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
ReplyDeleteஅன்பான இனிய நல்வாழ்த்துகள்.
எல்லோரும் சந்தோஷமாக, செளபாக்யமாக, சகல ஸம்பத்துக்களுடனும் வாழ பிரார்த்திப்போமாக.
நன்றியோ நன்றிகள்.
எல்லோருக்கும் மனமார்ந்த இனிய நோன்பு நல்வாழ்த்துகள்...
இனிய நல்வாழ்த்துகளுக்கும் ,
Deleteஅருமையான பிரார்த்தனைகளுக்கும் ,
சிறப்பான பாராட்டுகளுக்கும்
அன்பான கருத்துரைகளுக்கும்,
மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..
காரடையார் நோன்புக்கான சிறப்புப் பதிவு மிகச் சிறப்பு!
ReplyDeleteவணக்கம் ஐயா..
Deleteசிறப்பான கருத்துரைகளுக்கு
மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..
காரடையான் நோன்பு குறித்த விளக்கங்கள்! படங்கள் அனைத்தும் அருமை! சிறப்பான பகிர்வு! நன்றி!
ReplyDeletemikka nandri!
ReplyDeleteபக்தி மேலிடும்படியாக இத்தனை அழகான் ஒரு பதிவு.
ReplyDeleteஅம்மன்கள் பக்கத்தில் மாங்கல்யச் சரடும் திருமாங்கலௌஅம் கூடவைக்கப் பட்டு இருக்கேமா.
மிக அழகா இருக்கு. நாள் முழுவதும் பட்டினி கிடந்து அந்தக் காரடையும் வெண்ணெயுமாச் சாப்பிடும்போது ம்ம் அருமையாக இருக்கும். கதைக்கும் அம்மன் சேவைக்கும் மனம் நிறைந்த நன்றிகள். அனைவரும் நலமே வாழ அவள் தாம் அருள வேண்டும்.
காரடையான் நோன்பு பற்றிய கதை, வெண்ணெய் சேர்த்த அடையின் படங்கள், திருமாங்கல்ய சரடு, தேவியின் அருள்மிக புகைப்படங்கள் எல்லாம் அற்புதம்.
ReplyDeleteசத்தியவான் – சாவித்திரி கதை, சாவித்திரி காலம் வரை கௌரி நோன்பு என்ற பெயரில் இருந்தது பின்னர் சாவித்திரி நோன்பாக பெயர் மாறியமை மற்றும் நோன்பு சம்பந்தப்பட்ட சாத்திர சம்பிரதாயங்களோடு வண்ணப் படங்கள் யாவும் ஒரே பதிவில் அடக்கம்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteகாரடையான் நோன்பு, மதியால் விதியை வென்ற சாவித்திரி கதை படங்கள் எல்லாம் அருமை.
ReplyDeleteகெளரி எல்லோருக்கும் மங்கலங்கள் நல்கட்டும்.
வாழ்த்துக்கள்.
சிறு வயதில் படித்த சத்தியவான் சாவித்ரி கதை மறுபடி
ReplyDeleteஇன்னும் விவரமாக அறிந்தது. மகிழ்ச்சி. மிக்க நன்றி.
படங்களும் அருமை.
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
நல்ல விளக்கம்.... மற்றும் அருமையான படங்கள்.
ReplyDeleteமனம் லயித்த பதிவு. படங்களும் தங்களுக்கே கைவந்த விவரச் சேர்க்கைகளும் பதிவுக்கு உயிரூட்டியது உண்மை.எப்பொழுது நோன்பு கொண்டாடி சரடு கட்டிக் கொள்ளலாம் என்பது நேற்றையிலிருந்தே பெண்கள் வட்டாரத்தில் புழங்கிய கேள்வி.
ReplyDelete