ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே!
குசேலரை மனதில் நினைத்தபடி உன்னைத் தங்கள் தலையில் வைத்துக்கொண்டால் போதுமானது.
அவர்கள் தங்கள் வீட்டிற்குத் திரும்பும்போது அங்கு கொழுப்பினால் பருத்த யானைகள் கட்டப்பட்டுள்ளதையும், அவற்றின் மத ஜலங்களில் வண்டுகள் ரீங்காரம் செய்தபடி உள்ளதைக் காண்பார்கள்
(யானை வீட்டில் உள்ளது என்றால் ஐஸ்வர்யம் நிறைந்துள்ளது
என்று பொருள்). -- பாதுகா சகஸ்ரம் ..!
கண்ணனின் பாதுகைகளைத் தலைகளில் ஏற்பவர்கள் பெறுவது என்ன? கண்ணனிடம்தான் ஏதேனும் பெற்றோமா இல்லையா என்று அறியாமல் குசேலர் இருந்தார்.
இப்படியாகத் தாங்கள் பெற்றது என்ன என்று அறியாதபடி அவர்களுக்கு அதிக ஐச்வர்யம் அளித்து விடுகிறாய்.
அவர்கள் வீடு திரும்பும் போது மதயானைகள் கட்டப்பட்டுள்ளதைக் காண்கின்றனர் (ஐச்வர்யம் வந்தது என்று பொருள்).
மார்கழி மாத முதல் புதன்கிழமையன்று குருவாயூர் கோவிலில் குசேலர் தினம் கொண்டாடப்படுகிறது.
27 குழந்தைகளுடன் குசேலர் வறுமையில் வாடினார்.
அவர் மனைவி, "உங்கள் நண்பரைப் பார்த்து நம் நிலையைச் சொல்லுங்கள்' என்று, வீட்டிலிருந்த சிறிதளவு அவலை எடுத்து குசேலரின் கிழிந்த அங்கவஸ்திரத்தில் முடிந்து அனுப்பினாள்.
குசேலர் கொண்டுசென்ற அவலை கண்ணன் உண்டதும், குசேலரின் குடிசை வீடு பெரும் மாளிகையானது
பகவான் கிருஷ்ணரை குசேலர் சந்தித்தது ஒரு மார்கழி மாத முதல் புதன்கிழமை.
எனவே குருவாயூர் கோவிலில் பக்தர்கள் குருவாயூரப்பனான உன்னிகிருஷ்ணனுக்கு அவல் சமர்ப்பித்து வழிபடுவர்.
மார்கழி மாத முதல் புதன்கிழமையில் ஸ்ரீகண்ணபிரானுக்கு வீட்டில் அவல் நிவேதனம் செய்து வழிபட்டால் செல்வச் செழிப்பு ஏற்படும் என்பது நம்பிக்கை.
குசேலரின் திவ்ய சரிதத்தை படிப்பவர்கள் பொருளாசை நீங்கி, ஸ்ரீகிருஷ்ணரின் அருள் பெறுவார்கள்..!
குசேலரின் திவ்ய சரிதத்தை படிப்பவர்கள் பொருளாசை நீங்கி, ஸ்ரீகிருஷ்ணரின் அருள் பெறுவார்கள்..!
அஷ்ட மகிமைகள் கிருஷ்ணருக்குப் பணிபுரிந்து கொண்டிருக்க ஊஞ்சலில் உப்பரிகையில் ஆடிக் கொண்டிருந்த கிருஷ்ணர் தம் அரண்மனை வாசலில் குசேலர் வருவதைக் கண்டார். உடனே அவர் எழுந்து ஓடோடிப் போய் அவரைக் கட்டித் தழுவிக் கொண்டு உள்ளே அழைத்து வந்து தம் சிம்மாசனத்தின் மீது அவரை உட்கார வைத்தார்.
குசேலருக்குப் பரம பிரியத்தோடு ராஜோபசாரம் பண்ணி, தன்னுடைய கட்டிலிலேயே அவரை உட்கார்த்தி வைத்து, அவருக்குப் பாதபூஜை செய்து, ருக்மிணியைக் கொண்டு அவருக்குச் சாமரம்போட வைத்து ரொம்பவும் மரியாதை பண்ணுகிறார்.
குசேலர் கதை. மார்கழி முதல் புதன் செய்தி புதிது. அவல்தானே... நிவேதனம் செய்திடுவோம். நன்றி. படங்கள் அழகு.
ReplyDeleteஒவ்வொரு முறையும் தங்களின் பதிவின் தரம் கூடிக்கொண்டே வருகிறது.அடுத்தவர் மேல் உள்ள அக்கறையும் அறிவுறுத்தலும் பாராட்டுக்குரியது.தங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்
ReplyDeleteநன்றி சகோதரியாரே
ReplyDeleteநட்பின் பெருமையை நாராயணன் மக்களுக்கு உணர்த்திய லீலை.
ReplyDeleteதகவல்களுக்கும் அழகான பகிர்வுக்கும் நன்றி.
ReplyDeleteகிருஷ்ணர் - குசேலர் இருவருடைய நட்பு - அன்பின் ஆழத்தைக் காட்டுகின்றது.
ReplyDeleteகண்கவரும் படங்களுடன் அழகிய பதிவு!..
புதிய செய்திகள். பகிர்ந்துக்கொண்டதற்கு மிக்க நன்றி.
ReplyDeleteநட்பின் சிறப்பை சொல்கிறது....இப்படியல்லவா இருக்க வேண்டும்!
ReplyDeleteஅருமை அருமை... நன்றி அம்மா...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
மார்கழி முதல் புதன் பற்றிய தகவலுக்கு நன்றிம்மா..ஆருத்ரா தரிசனம்+குசேலர் மகிமை இன்று மிக சிறப்பான நாள் என உணர்த்துகிறது,நன்றிம்மா!!
ReplyDeleteகுருவாயூர்ப்புரி குசேலர் மகிமைகள் இவ்வளவிற்கு அறிந்ததில்லை.
ReplyDeleteமிக நல்ல பதிவும் படங்களும். அருமை!
என் நன்றியுடன் வாழ்த்துகளும் சகோதரி!
மார்கழி புதன் - குருவாயூர் குசேலர் தினம் என்று இன்றுதான் அறிந்தேன்.
ReplyDeleteஇன்று திருப்பாவை மூன்றாவது பாசுரம் 'ஓங்கி உலகளந்த' . எல்லோருக்கும் நீங்காத செல்வம் நிறையட்டும்.
வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteமார்கழி மாத முதல் புதன் பற்றி இதுவரை அறியாத தகவல்கள்.. அழகான படங்கள்..நன்றி..
ReplyDeleteமிகவும் அபூர்வமான அத்தனைப்படங்களும் அழகோ அழகு.
ReplyDelete>>>>>
'குருவாயூர் குசேல தினம்' என்ற தலைப்பில் மார்கழி மாத புதன்கிழமையின் பெருமையை இன்று மார்கழி மாத முதல் புதன்கிழமையன்று சொல்லியுள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
ReplyDelete>>>>>
மார்கழி புதனில் ஸ்ரீ கிருஷ்ணனுக்கு அன்புடன் அவல் படைத்தால் குடிசையும் கோபுரமாகும் ;)
ReplyDeleteமத யானைகள் = சகல ஐஸ்வர்யங்கள் ;)
அழகான அற்புதமான தகவல்கள்.
>>>>>
நேற்று இரவு தூக்கம் வராமல், நள்ளிரவில் யூட்யூப் மூலம், அகஸ்மாத்தாக குசேலர் சரித்திரத்தை திருமதி விசாஹா ஹரி சொல்லக் கேட்டுக்கொண்டிருந்தேன்.
ReplyDeleteஅதே நேரம் தான் மார்கழி செவ்வாய்போய், மிகவும் விசேஷமான மார்கழி முதல் புதன் பிறந்துள்ளது.
இப்போது அதன் மஹிமையை இங்கு தாங்கள் சொல்லக்கேட்டபோது, எனக்கு மெய்சிலிர்க்கிறது.
>>>>>
களிப்புடன் களிப்பூட்டும் களியும் கூட்டும் கடவுளுக்குப் படைத்துவிட்டு, ருசியோ ருசியான அதனைப் பிரஸாதமாகச் சாப்பிட்டுவிட்டு, வாய் மணக்க எப்போதும் கொஞ்சம் களிப்புடன் மெல்லும் ரக்ஷிக்லால் என்ற களிப்பாக்கையும் போட்டுக்கொண்டு, இந்தத்தங்களின் இன்றைய பதிவினைப்படிக்க வர சற்றே தாமதமாகிவிட்டது.
ReplyDeleteஇங்கு வந்ததில், களியை விட, கூட்டைவிட, ரக்ஷிகலால் களிப்பாக்கை விட, மேலும் அதிக களிப்பினைத்தந்தது குசேலர் பற்றிய திவ்ய சரித்திரம்.
குசேலருக்கு கண்ணன் மீதும், கண்ணனுக்கு குசேலர் மீதும் இருந்த ஆத்மார்த்த நட்பு போலவே தான் என்னுடையதும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
>>>>>
’குசேலர்’ என்றால் கிழிந்த ஆடைகளை அணிந்திருக்கும், மிகவும் தாரித்ர நிலையில் இருப்பவர் என்று பொருள்.
ReplyDelete[இது நேற்றைய கதையினில் திருமதி விசாஹா ஹரி அவர்கள் சொல்லி நான் கேட்டது.]
>>>>>
அனைத்துக்கும் என் பாராட்டுக்கள்.
ReplyDeleteமனம் நிறைந்த இனிய நல்வாழ்த்துகள்.
பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள்.
இனிய ’களி’ப்பூட்டும் திருவாதிரை திருநாள் நல்வாழ்த்துகள்.
o o o o o o o
குசேலர் கதை உங்கள் மூலம் படிக்கக் கிடைத்தது மிகபெரும் பாக்கியமே! படிப்பவர்கள் எல்லோரும் குபேரனாகட்டும்.
ReplyDeleteஅருமையான செய்தி அழகிய படங்களுடன்.
ReplyDeleteஎல்லோரும் மாதவன் அருளால் வளமாய் வாழட்டும்.
வாழ்த்துக்கள்.
குசேலனை குபேரனாக்கிய சிறப்பு வாய்ந்த இந்த மார்கழி முதல் புதனற்று தங்களின் தளம் வலைச்சரத்தில் உயர்வாக சிறப்பித்துப் பேசப்பட்டுள்ளது, மேலும் மகிழ்வளிக்கிறது. அதற்கும் என் அன்பான நல்வாழ்த்துகள்.
ReplyDeleteபடங்களெல்லாம் மிக அழகு!
ReplyDeleteஆற்றங்கரை அருகே இரவுப்பொழுதில் கண்னன் குழலூதும் அழகிய ஓவியம் அற்புதம்!
தங்கள் பதிவிலுள்ள அந்த ஏழைக் குசேலன் படங்களைப் பார்த்ததும், பள்ளி பருவத்தில் நான் படித்த குசேலபுராணம் நினைவுக்கு வந்தது.
ReplyDeleteமார்கழி மாதம் முதல் புதன் குசேலர் தினம் - புதிய தகவல்.
ReplyDeleteபடங்கள் மிக அழகு.