Tuesday, December 10, 2013

ஸ்ரீவித்யாகணபதி





ஐம் ப்ளூம் ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்  க்லௌம் கம் கணபதயே 
வர வரத ஐம் ப்ளூம் சர்வ  வித்யாம் தேஹி ஸ்வாஹா.

ஸ்ரீ வித்யா கணபதி மந்திரம்.விநாயகர், கணபதி, கஜானனன், கணேசன், விக்னேஸ்வரன் ஸ்துதி.-தினமும் காலையில் 108 முறை  சொல்ல கல்வி, அறிவு வளர்ச்சி  பெறும். அறிவு விருத்தியாகும். தீய எண்ணங்கள் நீங்கி நல்ல  எண்ணங்கள் உண்டாகும்.
பண்டாசுர யுத்தத்தின் போது தேவியின் சேனைகளின் வீர்யத்தைக் குறைக்க பண்டாசுரன் விக்ன யந்திரத்தை பிரதிஷ்டை செய்தான்.

அதனால்  தேவியின் சேனைகள் பலமிழந்து சோர்வுற்றதையறிந்த காமேஸ்வரியான லலிதாம்பிகை காமேஸ் வரனான ஈசனை நோக்க அவர்கள் இருவரின்  சக்தியும் ஒன்று சேர்ந்து மகாகணபதி தோன்றினார்.

அவர் விக்ன யந்திரத்தை தூள்தூளாக்கினார்.

மகாகணபதியின் பெண்வடிவமே ஸ்ரீவித்யாகணபதி  என
உபாசகர்களால் போற்றப்படுகிறது. 
இந்த ஸ்ரீவித்யா கணபதியின் மந்திரத்தில் உள்ள ஸ்ரீம் பீஜம் மகாலட்சுமியைக் குறிக்கும்.

அதனால்தான் இந்த ஸ்ரீவித்யா கணபதி தன் மேலிரு கரங்களில் தாமரையையும், விஷ்ணுவைக் குறிக்கும் சக்கரத்தையும் ஏந்தியுள்ளாள்.

அடுத்து ஹ்ரீம் பீஜம் பராசக்தியைக் குறிக்கும். எனவே அடுத்த இரு  கரங்களில் பாசத்தையும் (பராசக்தி), சூலத்தையும் (ஈசன்) தாங்கியுள்ளாள்.

அடுத்துள்ள க்லீம் பீஜம் ரதிதேவியைக் குறிக்கும். காமம் இல்லாமல்  இந்த உலகம் இல்லை. எனவே ரதிதேவியின் அம்சமாக நீலோத்பல மலர்களையும், மன்மதனின் அம்சமாக கரும்பு வில்லையும் தன் அடுத்த கரங்களில் வித்யாகணபதி ஏந்தியுள்ளாள். 

அடுத்துள்ள க்லௌம் பீஜம் பூமாதேவியைக் குறிக்கும்.

எனவே பூமாதேவியின் அம்சமாக பூமியிலிருந்து விளையும் நெற்கதிரையும், வராஹமூர்த்தியின் அம்சமாக கதையையும் தாங்கி அருள்கிறாள்.

அடுத்து கணபதி பீஜமான கம் என்பதைக் குறிக்கும் வகையில்  தன் திருக்கரங்களில் மாதுளம் பழத்தையும், உடைந்த தந்தத்தையும் அடுத்த இரு கரங்களில் தாங்கியுள்ளாள்.

இவை அனைத்திற்கும் சிகரம் வைத் தாற் போல் தன் வலது அபயகரத்தில் தங்கசங்கிலியை ஏந்தியும் இடது கரத்தை வரத முத்திரை காட்டியும் துதிக்கையில் அம்ருதத்தோடு கூடிய ரத்ன  கலசத்தை ஏந்தியருளும் திருக்கோலம் கொண்டுள்ளாள்.  
லட்சுமி, விஷ்ணு, பராசக்தி, ஈசன், ரதிதேவி, மன்மதன், பூமாதேவி, வராகமூர்த்தி, கணபதி, ஸ்வர்ணாகர்ஷண பைரவர் ஆகிய அனைத்து தேவ தேவியரின் அருட்கடாட்சத்தையும் பெற்றுத் தருவாள் இந்த ஸ்ரீவித்யா கணபதி என்பது உபாசனா ரகஸ்யம்.

விஷ்ணு-லட்சுமிக்குரிய சக்கரமும் தாமரையும் தர்மத்தைக் குறிக்கின்றன.

வராஹர்-பூமிதேவிக்குரிய கதையும், நெற்கதிரும் அர்த்தத்தைக் குறிக்கின்றன.

மன்மதன்-ரதிக்குரிய  கரும்பு வில்லும், நீலோத்பல மலரும் காமத்தைக் குறிக்கின்றன.

சிவன்-பார்வதிக்குரிய சூலமும், பாசமும் மோட்சத்தைக் காட்டுகின்றன. மோட்ச ரூபத்தில், தர்மம் மிக நெருக்கமாகத் தன் தூய வடிவில் உள்ளது. 
காம இன்பம், மோட்ச இன்பத்தில் உயிர்களுக்குத் தம்மையறியாமலேயே இயல்பாக உள்ள ஆசையைக் காட்டுவதால் மோட்சத்திற்குப் பக்கத்தில் அது உள்ளது.

காமம் அர்த்தத்தின் மூலம் நிறைவேறுவதால் அது காமத்திற்குப் பக்கத் தில் உள்ளது.

தர்மம் கடவுளுடைய வடிவமாகவே உள்ளபோது மோட்சமாகிறது என்பதே ஸ்ரீவித்யாகணபதி நமக்கு உணர்த்தும் தத்துவம்.

இந்த  ஸ்ரீவித்யாகணபதியின் உபாசனையால் தர்ம, அர்த்த, காம, மோட்சம் எனும் நான்கு வித புருஷார்த்தங்களையும் உபாசகர்கள் பெறலாம்.

ஸ்ரீவித்யாகணபதியின் கையில் உள்ள மாதுளம் பழம் இந்த உலகைக் குறிக்கிறது.

அதனுள் உள்ள மாதுளை முத்துக்கள் கோடிக்கணக்கான
அண்டங்களைக் குறிக்கிறது. 
அவ்வளவு பெரிய பிரபஞ்சமே ஸ்ரீவித்யாகணபதியின் கரத்தில் அடக்கம் என்பதை மாதுளை உணர்த்துகிறது.

உள்ளம் கனிந்து ஸ்ரீவித்யாகணபதியை பிரார்த்தனை செய்தால் நம் வாழ்வில் ஏற்படும் இடர்கள் பொடி படும்.

 கணபதியின் திருவருளோடு  அம்பிகையின் அருட்கடாட்சமும் கிட்டும். 
MP-20 Vidya Ganapathi -Home Decor-Kasitoo

16 comments:

  1. ஸ்ரீவித்யா கணபதி அறிந்தேன் உணர்ந்தேன் நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  2. ஸ்ரீ வித்யா கணபதி தகவல் புதிது .வணகுகிறோம் நலம் விளையட்டும்

    ReplyDelete
  3. சிறப்பான தகவல்கள் + படங்கள்... நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. மேலிருந்து கீழ் ஆறாவது படம் அமர்க்களமாக உள்ளது.

    விசிறி மடிப்புடன் கூடிய அரக்குக்கலர் கூறைப்புடவையில் வித்யா கணபதியைக் கண்டதும் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.

    இதுபோல மடிசார் புடவை கட்டிய பிள்ளையாரப்பாவைப் பார்க்கத்தான் 19.01.2012 அன்றே, மிகவும் ஆசைப்பட்டு நான் கேட்டிருந்தேன். ஏதேதோ சாக்குப்போக்குச் சொல்லி சமாளித்து கடைசிவரை அனுப்பி வைக்கவே இல்லை. ;(((((

    இப்போது வேறு ஒரு கணபதியை இந்தப்பதிவினில் அந்தக்கோலத்தில் பார்த்ததும் ஏனோ எனக்கு அந்தப் பழைய நினைவுகள் வந்தன.

    >>>>>

    ReplyDelete
  5. //மஹா கணபதியின் பெண் வடிவமே ஸ்ரீவித்யா கணபதி என உபாசகர்களால் போற்றப்படுகிறது.//

    ஆஹா, மிக அருமையான தகவல் தான்.

    எனக்குத்தெரிந்த, என் உறவில் ஓர் பெண்மணி.

    விநாயகர் சதுர்த்தியன்று, அவர்களின் தாயார் வெல்லப்பூர்ண கொழுக்கட்டை சாப்பிட்ட பிறகு, கொழுக்கட்டைபோல இனிப்பாகப் பிறந்தவர்கள்.

    அவர்களுக்கு அறிவோ அறிவு ! மிகவும் புத்திசாலித்தனம் !! அழுந்தச் சமத்து !!!

    என்னிடமிருந்து அவர்கள், தாமரை இதழ் தண்ணீர்போல, சற்றே விலகி விலகிச் சென்றாலும், ஏனோ என் மனம் அவர்களைச் சுற்றிச்சுற்றியே எப்போதும் அவர்கள் நினைவிலேயே இருந்து வருகிறது.

    அவர்களைவிட, அவர்களின் உருவத்தைவிட, அவர்களின் அறிவு, புத்திசாலித்தனம், சுறுசுறுப்பு ஆகியவை என்னை மிகவும் கவர்ந்துவிட்ட அம்சங்கள்.

    சுருக்கமாகச் சொன்னால், எல்லா விஷயங்களிலும் தங்களைப்போலவே தான் அவர்களும் என்று சொல்லலாம். ;)

    ஒட்டினாலும் ஒட்டாவிட்டாலும், தாமரை தண்ணீரில் மிதக்கும் போது மட்டுமே அழகாக இருக்க முடியும். தண்ணீரை விட்டு அது பிரிந்தால் வாடி வதங்கிப்போய் விடும்.

    >>>>>

    ReplyDelete
  6. தர்ம, அர்த்த, காம, மோக்ஷம் பற்றிச் சொல்லியுள்ள விஷயங்கள் யாவும் சிந்திக்க வைப்பதாகச் சிறப்பாக உள்ளன.

    காமம் அர்த்தத்தின் மூலம் நிறைவேறுவதால் அது காமத்திற்குப் பக்கத்தில் உள்ளது. ;) Explanation Superb !

    >>>>>

    ReplyDelete
  7. ஜம் ப்ளூம் ஓம் ..... என்ற ஸ்ரீவித்யா கணபதி மந்திரத்துடன் பதிவினை ஆரம்பித்துள்ளது அருமை.

    ஸ்ரீ வித்யா கணபதியின் உபாசனா ரகஸியத்தை புட்டுப்புட்டு வைத்துள்ளது சிறப்பு.

    புட்டு சாப்பிட்ட திருப்தியை அளித்தது.

    >>>>>

    ReplyDelete
  8. படங்கள் அத்தனையும் அழகோ அழகு.

    கடைசி இரண்டு படங்களும் ஜோர் ... ஜோர்.

    o o o o o

    ReplyDelete
  9. பதிவைப் படித்தவுடன் “ கணபதியே வருவாய் அருள்வாய்” என்று பாடத் தோன்றுகிறது.

    ReplyDelete
  10. வணக்கம் அம்மா
    வித்யா கணபதி பற்றி அறிந்து கொண்டேம். அவருல் திருவருளை உணர்ந்து கொண்டேன். வழக்கம்போல் அற்புதமான படங்கள், அரிய தகவல்கள். பகிர்வுக்கு நன்றீங்க அம்மா..

    ReplyDelete
  11. வித்யா கணபதி மகிமை அறிய வைத்தமைக்கு நன்றி அம்மா>

    ReplyDelete
  12. அருமையான படங்கள் மற்றும் தகவல்கள்.

    ReplyDelete
  13. வித்யா கணபதி பற்றி வித்தியாசமான த‌கவல்கள்! கானக்கிடைக்காத அற்புதமான ஓவியங்கள்!!

    ReplyDelete
  14. புதிய தகவல்களுடன், அருமையான படங்கள். நன்றி

    ReplyDelete