ஸ்ரீவாஞ்சியம் கார்த்திகை நீராடல்
ஸ்ரீவாஞ்சியம் தலத்தில் அத்திரி மகரிஷிக்கும் அனுசுயாவுக்கும் தத்தாத்ரேயர் மகனாகப் பிறக்க அருள் கிடைத்தது ..
திருமகள் திருமாலை அடைய விரும்பி சிவபூசை செய்து விருப்பம் நிறைவேறப் பெற்றமையால் திருவாஞ்சியம் என்று பெயர் பெற்றது. எமனுக்குத் தனி சன்னதி உள்ள தலம்.
ஸ்ரீவாஞ்சியத்தில் இறைவனுக்கு தான் எப்போதும் ஷேத்திர பாலகராக இருக்க வேண்டும் என்றும், மாசி மாதம் பரணி நட்சத்திரத்தன்று தன்னையே வாகனமாகக் கொண்டு இறைவன் உலா வந்தால், இறைவனைச் சுமக்கும் தனக்கு உலக உயிர்களைக் கொல்லும் பாவம் நீங்கும் என்றும், ஸ்ரீவாஞ்சியத்திற்கு வந்து வழிபடுவோர் உயிர் பிரியும்போது நேரே சிவலோகம் செல்லுகின்ற பாக்கியத்தையும் அருள வேண்டும் என்றும் வேண்டினார்.
இறைவனும் எமதர்மராஜன் கேட்ட வரங்களை அருளினார். மேலும், தன்னை வழிபட வருபவர்கள் முதலில் குப்த கங்கையில் நீராடி எமதர்மராஜனை வழிபடலாம் என்றும் அருளினார்.
எமதர்மனை வாகனமாகக் கொண்டு சிவபெருமான் எழுந்தருளிய தலம் ஸ்ரீவாஞ்சியம் ..!.
காசியில் இறந்தால் முக்தி கிடைக்கும்; ஆனால் பைரவ தண்டனை உண்டு. வாஞ்சியத்தில் முக்தி கிடைக்கும்; பைரவ தண்டனை இல்லை.
ஸ்ரீவாஞ்சியம் தலத்தில் வழிபட்டால் பாவங்கள் குறைவதுடன் புண்ணியம் பெருகும் ..!

ஸ்ரீவாஞ்சியம் தலத்தில் இறப்போரின் காது மட்டும் (எந்த ஜீவன் ஆனாலும்) மேற்புறம் இருக்கும் படி கிடக்கும். அப்போது சிவபெருமான் அந்தக் காதில் பஞ்சாட்சர உபதேசம் செய்யும் புண்ணியத் தலம் திருவாஞ்சியம்.
திருக்குளம் குப்த கங்கை, முனி தீர்த்தம் எனப்படுகிறது.
கங்கை நதி 999 பாகம் ரகசியமாக இந்த
குப்த கங்கையில் வசிக்கிறாள்.
மீதி ஒரு பாகம் தான் காசியில் உள்ள கங்கையில் உள்ளாள்.
எனவே, கங்கையின் சக்தி காசியைவிட இங்கு அதிகம் என்பர்.
இந்த குப்த கங்கையில் கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் நீராடி, இறைவனை வழிபட்டால் பஞ்சமா பாதகங்களும் விலகும்.
கார்த்திகை ஞாயிறு இங்கு விசேஷம்.
இப்படி நீராடுவதை கார்த்திகை நீராடல் என்பர்.

கார்த்திகை நீராடல் உற்சவம்தான் இங்கு விசேஷம்.
அந்நாளில் அதிகாலை ஐந்து மணி முதல் ஆறு மணிக்குள் ஈசனும் தேவியும் அஸ்திர தேவரோடு பிரகார வலம் வந்து, குப்த கங்கையின் கிழக்குக் கரையில் ஆசி வழங்குவார்கள். இதை தரிசிப்பதே புண்ணியம்.
அந்நாளில் அதிகாலை ஐந்து மணி முதல் ஆறு மணிக்குள் ஈசனும் தேவியும் அஸ்திர தேவரோடு பிரகார வலம் வந்து, குப்த கங்கையின் கிழக்குக் கரையில் ஆசி வழங்குவார்கள். இதை தரிசிப்பதே புண்ணியம்.
முதல் ஞாயிறு நீராடினால், பிரம்ம ஹத்தி தோஷம் விலகும்.
விஸ்வபத்ரனின் பிரம்மஹத்தி தோஷம் இங்குதான் நீங்கியது.
இரண்டாம் ஞாயிறு நீராடினால், கள் உண்டு மயங்கிய பாவம் விலகும்.
மூன்றாம் ஞாயிறு நீராடினால், திருட்டுத் தொழிலால் ஏற்பட்ட பாவம் நீங்கும்.
நான்காம் ஞாயிறு நீராடினால், மனசஞ்சலம், ஜென்ம பாவம் விலகும்.
ஐந்தாம் ஞாயிறு நீராடினால், சம்சர்க்க தோஷம் விலகும்.
கும்பகோணத்திற்கு தென்கிழக்கே திருவாரூர் செல்லும் வழியில்
24 கி. மீ. தொலைவில் உள்ளது.
குடந்தை- நன்னிலம் வழியில் ஒரு கிலோமீட்டர் தொலைவில்
ஸ்ரீவாஞ்சியம் உள்ளது.

கார்த்திகை கடை ஞாயிறு சிறப்பாக கொண்டாடப்படும்
விரிஞ்சிபுரம் தொண்டை நாட்டுத் திருத்தலம்.
"விரிஞ்சிபுரம் மதிலழகு' என்பர்.
மரகதாம்பிகை சமேத மார்க்கபந்தீஸ்வரர் சுயம்புலிங்கமாக -
மார்க்கபந்தீஸ்வரர் ருத்ராட்சப் பந்தலடியில் ஆனந்தமாய்
கோயில் கொண்டுள்ளார்.
பிரம்மனின் பெயர் விரிஞ்ஞன்.
பிரம்மன் வழிபட்ட தலத்திற்கு விரிஞ்சிபுரம் எனப் பெயர்.
திருவண்ணாமலையில் அடிமுடி காண திருமாலும் பிரம்மனும் முயன்றனர்.
தாழம்பூ வுடன் சேர்ந்து பிரம்மன் பொய் சொல்லி சாபம் பெற்றார்.
அந்தச் சாபம் நீங்க என்ன பிராயச்சித்தம் என ஈசனிடமே பிரம்மன் கேட்க, அதற்கு ஈசன் தேவரூபமாக காட்சி தராமல் உபாயம் செய்தார்.

விரிஞ்சிபுரம் தலத்தில் வசித்து சிவத்தொண்டு செய்யும் சிவநாதனுக்கும் நயனா நந்தினிக்கும் மகனாகப் பிறக்கும்படி செய்தார்.
பிரம்மன் சிறுவனாக இருந்தபோதே தந்தை இறந்து விட்டார்.
ஆலய தலைமை பூஜா உரிமையைப் பெற விரும்பிய தாயாதிகள்
பூஜா உரிமை, வீடு, நிலம் யாவற்றையும் தங்களுக்கு எழுதித்
தருமாறு சிறுவனை மிரட்டினர்.
பிரம்மன் சிறுவனாக இருந்தபோதே தந்தை இறந்து விட்டார்.
ஆலய தலைமை பூஜா உரிமையைப் பெற விரும்பிய தாயாதிகள்
பூஜா உரிமை, வீடு, நிலம் யாவற்றையும் தங்களுக்கு எழுதித்
தருமாறு சிறுவனை மிரட்டினர்.
இதனால் மனமுடைந்த சிறுவனின் தாய் ஈசனிடம் முறையிட்டு அழுதாள்; பின் வீடு திரும்பி உறங்கினாள்.
அப்போது கனவில் ஈசன் தோன்றி, ""நாளை ஆலய பிரம்ம தீர்த்தத்தில் உன் மகனை நீராட்டி வை'' எனக் கூறி மறைந்தார்.
அன்று கடை ஞாயிற்றுக்கிழமைக்கு முதல் நாளான சனிக் கிழமை.அவ்வாறே தாய் மகனை நீராட்டி குளக்கரையில் காத்திருந்த போது, ஈசன் கிழவர் வேடத்தில் வந்து சிறுவனை தன்னுடன் தீர்த்தத்தில் மூழ்க வைத்தார்.
ஒரு முகூர்த்த காலத்தில் அந்தச் சிறுவனுக்கு உபநயனம், பிரம்மோ பதேசம், சிவதீட்சை அனைத்தும் வழங்கி, பின் கரை ஏறிவந்து மகாலிங்கமாக மறைந்துவிட்டார். இதைக் கண்டு அனைவரும் வியந்தனர்.

அப்போது தேவர்கள் பூமாரி பெய்தனர். சுற்றுப்புற மன்னர்கள் (ஈசன் தங்களுக்கு கனவில் ஆணையிட்டபடி) பாலகனை யானைமீது ஏற்றி தீர்த்த திருமஞ்சன குடத்துடன்- மேளதாளத்துடன் ஊர்வலமாக ஆலயத்துக்கு அழைத்து வந்தனர். அப்போது ஆலயக் கதவுகள் தாமாகத் திறந்து கொண்டன.
சிறுவன் ஆகம விதிப்படி எல்லாம் அறிந்தவன்போல பூஜைகள் செய்தான். அபிஷேகம் செய்ய லிங்கத்தின் முடி எட்ட வில்லை. அதனால் ஈசன் திருமுடியை வளைத்து அபிஷேகத்தை ஏற்றுக்கொண்டார்.
அதேகோலத்தில் இப்போதும் முடிசாய்ந்த மகாலிங்கமாக இறைவனை தரிசிக்கலாம்.
திருவண்ணாமலையில் முடிகாண இயலாத பிரம்மன், இங்கே சிறுவனாகப் பிறந்தபோது விரிஞ்சிபுரத்தில் இறைவனைப் பூஜித்து, அவரே முடி வளைந்து காட்சி கொடுத்த அதிசயத்தைக் காணலாம்.
அப்படி திருமுடி வளைந்த தினம்தான் கார்த்திகை மாத கடை ஞாயிறு தினம்.
அப்படி திருமுடி வளைந்த தினம்தான் கார்த்திகை மாத கடை ஞாயிறு தினம்.
பெருவிழாவாகக் கொண்டாடுகின்றனர்.
குழந்தை வரம் வேண்டுவோர் இங்குள்ள சிம்ம குளத்தில் நீராடி, ஈரத்துணியுடன் ஆலய வலம் வந்து பகவானை வணங்கினால் புத்திர பாக்கியம் கிட்டும்.
பில்லி, சூன்யம் போன்ற வற்றால் பாதிக்கப்பட்டோரும் நீராடி வழிபட்டால் இன்னல்கள் நீங்கப் பெறுவர்.
தலவிருட்சமான பனைமரத்தில் ஒரு வருடம் கருப்பு நிறத்திலும் அடுத்த ஆண்டு வெண்மை நிறத்திலும் காய்கள் காய்ப்பது வியக்கத்தக்கது. மகாவிஷ்ணு கருப்பு நிறம்; பிரம்மன், வெண்மை நிறம். தன் அடி-முடி காணவியலாத இருவருக்கும் சிறப்பு செய்யும் நோக்கில் இருவர் வண்ணத்திலும் பனங்காய்களை இறைவன் காய்க்கச் செய்யும் விந்தைதான் அற்புதம்...!
இறைவன் கார்த்திகையில் அக்கினிப் பிழம்பாக உள்ள தால்,
குளிர்விக்கும் பொருட்டு சங்காபிஷேகம் செய்கின்றனர்.
காரைக்கால் ஸ்ரீ நித்தீஸ்வரசுவாமி கோவிலில் 1008 சங்காபிஷேக வழிபாடு
மாம்பலம் சக்ர விநாயகர் ஆலயம் சிவலிங்க வடிவில் சங்குகள்
கார்த்திகை நீராடல் உற்சவம் அறிந்தேன். நன்றி சகோதரியாரே
ReplyDeleteஆஹா ...படங்களைப் பார்த்த மாத்திரத்திலேயே மனம் நிறைந்து விட்டது தோழி .அருமையான பகிர்விற்கு மிக்க நன்றி .தொடர வாழ்த்துக்கள் .
ReplyDeleteஅருமையான படங்கள். மற்றும் விளக்கங்கள்.....
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி.
ஸ்ரீவாஞ்சியம் பற்றிய தகவல்களும்
ReplyDeleteபடங்களும் மிக அருமை.
விரிவான தகவல்களுடன் அழகான பதிவு!..
ReplyDeleteசிறப்பான படங்களுடன் பகிர்வு அருமை...
ReplyDeleteமிகவும் அருமை அம்மா... நன்றி...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
ஸ்ரீவாஞ்சியம் கார்த்திகை ஞாயிறு ஸ்நான விசேஷம் பற்றி பல நல்ல தகவல்கள் அறிய முடிந்தது.
ReplyDelete>>>>>
எமனையே வாகனமாகக் கொண்ட மோக்ஷபுரியான க்ஷேத்ர விசேஷம் பற்றிய கதைகளை நன்கு வெகு அழகாகவே சொல்லி புரிய வைத்துள்ளீர்கள்.
ReplyDelete>>>>>
ஒவ்வொரு ஞாயிறும் அங்கு ஸ்நானம் செய்வதால் ஏற்படும் நன்மைகளைப்பற்றி தனித்தனியாகக் கூறியுள்ளவை அருமை.
ReplyDeleteஉயிர்க்கொலையால் ஏற்பட்ட பிரும்மஹத்தி தோஷம்
கள்ளுண்டதால் ஏற்பட்ட தோஷம்
திருடியதால் ஏற்பட்ட தோஷம்
ஜென்மாந்திரத்தால் ஏற்படும் பாப தோஷங்கள்
இறுதியாக [உறுதியாக] சம்ஸர்க்க தோஷம்.
அ டி யி ல் உள்ளதல்லவா அனைத்து மற்ற தோஷங்களுக்கு மூ ல காரணமாக அமைந்து விடுகிறது !
படித்தேன், ரஸித்தேன், சிரித்தேன் ! ;)
>>>>>
முடியைக்கண்டதாக தாழம்பூ சாட்சியுடன் பொய் சொன்ன பிரும்மன், சிறுவனாகப் பிறந்து, வளர்ந்து, இறைவனால் மன்னிக்கப்பட்டு, அவனுக்காக தன் சிரஸையே தாழ்த்திக்காட்டியதாக சொல்லியுள்ள கதை சுவையாக உள்ளது.
ReplyDeleteமுடிசாய்ந்த மஹாலிங்கமா ! ;)))))
>>>>>
திருத்திருவென்று முழிக்கும் தீர்க்கமான அம்பாள் [முதல் படத்தைத் தான் சொன்னேன்] அழகோ அழகு ! ;)
ReplyDeleteஅவளின் தீர்க்கமான பார்வை.....
வட்ட வட்டப் பொட்டுக்காரி ...
மோதமொழங்க இரு மூக்கிலும் ஜொலிக்கும்
மூக்குத்திகள் ....
அழகிய சக்ரம் போன்ற மிகப்பெரிய காதணிகள்...
கழுத்தில் ஜொலித்திடும் ஆபரணங்கள்.... அதிலும் மாதுளை முத்துக்கள் பதித்த விரிந்த தாமரை.....
தோளில் தங்கியுள்ள தங்கக்கிளி ..... ;)
மணக்கும், மனதை மகிழ்விக்கும் அழகான புஷ்பமாலைகள்....
அனைத்தும் அருமையோ அருமை.
>>>>>
அனைத்துப்படங்களும், தகவல்களும் வழக்கம்போல் அழகாக தரப்பட்டுள்ளன.
ReplyDeleteவேறொன்றும் சொல்லத்தோன்றவில்லை.
இதுவரை சொன்னதே ரொம்பவும் ஜாஸ்தி .... அதுவும் ஏதோ ஒரு பழைய பழக்க தோஷத்தினால் மட்டுமே ... சொல்ல நேர்ந்து விட்டவை.
பழக்கதோஷ நிவர்த்திக்காக கார்த்திகை நீராட ஸ்ரீவாஞ்சியம் சென்று வரலாமா எனவும் எண்ணத் தோன்றுகிறது.
மனுஷ்யாளே பேசாதபோது, மஹாலிங்கம் தான் பேசப்போகிறதா என்ன ! எனவும் நினைக்கத்தோன்றுகிறது. ;(
ooo ooo
சிரத்தையுடன் பதிவும் படங்களும் வெளியிடுகிறீர்கள் என்று சொல்வது understatement. வாழ்த்துக்கள். .
ReplyDeleteஇந்தியா வந்திருந்தபொழுது இத்தலத்தினை தரிசித்தோம்.உங்கள் தகவல்களால் இக்கோவில் எவ்வளவு பெருமைகளை உடையது என தெரிந்து மகிழ்வாக இருக்கு. அழகழகான படங்கள்.நன்றி.
ReplyDeleteஒவ்வொரு கோவிலைப் பற்றியும் மிக அருமையாக படங்களுடன் கூடிய விளக்கங்கள் கொடுக்கிறீர்கள். மிக அருமை. நன்றி.
ReplyDeleteஅடியேனுடைய தாழ்வான கருத்து - ஒன்றுக்கு மேற்பட்ட கோவிலைப் பற்றி சொல்லும்போது அந்த கோவிலின் பெயரை ஒரு உப தலைப்பாக எழுதி,இரண்டு வரிகள் இடம்விட்டு மற்ற தகவலை எழுதினால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது அடியேனின் தாழ்மையான எண்ணம்.
ஸ்ரீவாஞ்சியத்திற்கு இவ்வளவு மகிமையா?
ReplyDeleteகாசியில் கிடைக்காத புண்ணியம் இங்கு கிடைக்கும் என்பது கூடுதல் சிறப்பு தானே!
விரிஞ்சிபுர ஆலயத்தின் கார்த்திகை மாத கடைசி ஞாயிறன்று தீர்த்தமாடி, இறைவனை தரிசிக்கும் திருமணமாகாதோருக்கும், குழந்தையின்மையால் வருந்துவோருக்கும் வரம் நல்கும் சிறப்புமிகு திருத்தலம் என்பது கூடுதல் தகவல். சிறப்பானதொரு பகிர்விற்கு நன்றி சகோதரி!
ReplyDeleteஅனைத்துத் தகவலும் படங்களும் அருமை.
ReplyDeleteசங்காபிசேக படங்கள் என்னைக் கவர்ந்தன.
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
ஸ்ரீவாஞ்சியம் கார்த்திகை நீராடல் குறித்து அறிந்து கொண்டேன்.
ReplyDelete