\
பொன்னூஞ்சல் ஆடு பொன்னூஞ்சல், ஹரி பொன்னூஞ்சல்
மீனும் ஆமை கேழலாய் ஆளரி அவ தாரமாய் பர...கால குண...வீர
பாரைத் தாங்கும் மாரன் எந்தை (பொன்னூஞ்சல் ஆடு பொன்னூஞ்சல்)
குறள் பல ராமா ராமா குன்றம் எடுத்த வா-கண்ணா
கருத்த மேனி பொருத்த ரங்க ஆனைக்கு அருளி, முரனை முடித்து
(பொன்னூஞ்சல் ஆடு பொன்னூஞ்சல்)
சீருடை புத்த கல்கீ ஐந்தும் ஐந்தும் அவதார! ஐம்-படைகள் ஏந்தும் மால்-
திருவேங் கடம் தனில் வாழும் பெருமாள்!
(பொன்னூஞ்சல் ஆடு பொன்னூஞ்சல்)
டோலாயாம் சல டோலாயாம் ஹரே டோலாயாம்
மீன கூர்ம வராக மிருக பதி அவதார தானவ குண செளரே
தரணீ தர மரு ஜனக (டோலாயாம் சல டோலாயாம்)
வாமன ராமா ராமா வர கிருஷ்ண அவதார சியாமளாங்க ரங்க ரங்க
சாமஜ வரத முர ஹரண (டோலாயாம் சல டோலாயாம்)
தாருண புத்த கல்கி தச வித அவதார ஷீர பாணே கோ சமானே
ஸ்ரீவேங்கட கிரி கூட நிலைய (டோலாயாம் சல டோலாயாம்)
திருவரங்கத்தில் ஊஞ்சல் உற்சவம் கண்கொள்ளாக்காட்சி.
துவஜஸ்தம்பத்துக்கு அருகே ஊஞ்சல் மண்டபத்துக்கு எதிரில் உள்ள நாலுகால் மண்டபத்தில் திருவந்திக் காப்புக் கண்டருளி, கந்தாடை இராமானுசனுக்கு சேவை சாதித்த பிறகு மண்டபம் போய் திரை சமர்ப்பித்து, ஏகாந்தமாய் ஊஞ்சலில் எழுந்தருளியதும், அலங்காரம் என்னும் தோசை வடை, ப்ரஸாதம், அமுது செய்வித்து திரை வாங்கப்படும்.
ஊஞ்சல் மண்டபத்தில் கந்தாடை இராமானுச முனி முழு திருவுருவச்சிலை தூணில் அமைந்துள்ளது.
வெள்ளிச் சம்பா அமுது செய்வித்ததும், திரைவாங்குகையில், நம்பெருமாள் ஊஞ்சலாடிக் கொண்டே மங்களாரத்தி கண்டருள்வார்.
திருவாராதனத்தின்போது ஸேவிக்கப்படும் திருப்பாவையோடு “மாணிக்கங்கட்டி” (பெரியதிருமொழி-1.3), “மன்னுபுகழ்” (பெருமாள் திருமொழி 8ஆம் திருமொழி) ஆகிய பதிகப் பாசுரங்கள் அரையர்களால் ஸேவிக்கப்படும்.
ஊஞ்சலுக்கு இருபுறத்திலும் கைங்கர்ய பரர்களால்
தங்கச்சாமரம் வீசப்படும்.
தங்கச்சாமரம் வீசப்படும்.
அர்ச்சகர் ஊஞ்சலை ஆட்டிக் கொண்டே வெற்றிலையை அடிக்கடி நம்பெருமாளுக்குக் கண்டருளப் பண்ணி கீழே உள்ளூரார் ஊழியக்காரர் கையில் பிடித்துக் கொண்டிருக்கும் காளாஞ்சியில் சேர்ப்பார்.
ஒருமணி நேரத்துக்குக் குறையாமல் இந்த ஊஞ்சல் வைபவம் நடக்கையில் தாம்பூலம் முழுவதும் நம்பெருமாளுக்குக் கண்டருளப் பண்ணிய பிறகு, அர்ச்சகர் அந்த தாம்பூலங்களைக் கீழே கொண்டுபோய் மணியகாரரிடம் ஸாதிப்பார்.
பிறகு ஸ்தானீகர் ஊஞ்சல் மண்டபம் முன்புறத்திலிருந்து “சாரீயோம்” என்று வெகு கம்பீரமாய் உரக்க அருளப்பாடு ஸாதித்திடுவார்.
தீர்த்தம், மற்றும் திருப்பணியார வினியோகம் ஆனபிறகு நம்பெருமாள் புறப்பட்டு அரையர் தாளத்துடன் உள்ளே போய் மேலப்படியில் படியேற்றம் கண்டருளி கருவறைக்கு எழுந்தருள்வார்.
கந்தாடை இராமானுசமுனி ஊஞ்சல் மண்டபம் கட்டி இந்த உத்ஸவத்தையும் ஏற்படுத்தியதால், தினந்தோறும் அவருடைய மடத்துக்கு விட்டவன் விழுக்காடு ப்ரஸாதம் வீரவண்டி சேமக்கல கோஷங்களோடு அனுப்பி வைக்கப்படும்.
இரண்டாம் திருநாளில் நம்பெருமாள் காயத்ரி மண்டபத்தில்அமுது பாறையின்மேல் தோளுக்கினியானில் எழுந்தருளி, புறப்பாட்டுத் தளிகை அமுது செய்து புறப்பட்டு, ஊஞ்சல் மண்டபத்தைச் சென்றடைந்து எல்லா வைபவங்களையும் கண்டருள்வார்.
கருட மண்டபத்திலிருந்து ஊஞ்சல் மண்டபம் வரை மேலே மலர்களாலும் ஓலைகளாலும் தடுக்குகள் கட்டி இடைவிடாமல் தென்கலைத் திருமண், சங்கு, சக்கரம் இவைகளால் அலங்கரிக்கப்படும்.
VERY VERY GOOD MORNING !
ReplyDeleteHAVE A VERY NICE DAY !!
>>>>>
ஊஞ்சல் உற்சவம் அறின்தேன் நன்றி சகோதரியாரே
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஅம்மா
படங்களும் விளக்கமும் அருமை வாழ்த்துக்கள் அம்மா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
எடுத்தவுடன் பட்டாபிஷேக கோலத்தில் ஸ்ரீராமனையும் அடுத்ததாக வெண்ணெய் திருடிக் கிருஷ்ணனையும் காட்டியுள்ளது அழகாக உள்ளது.
ReplyDelete>>>>>
உடனே இனிமையான ‘பொன்னூஞ்சல் ஆடு பொன்னூஞ்சல்’ பாடல் ...... ;)
ReplyDeleteஅடுத்து டோலாயாம் பாடி தஸாவதாரங்களையும் எடுத்துச் சொல்லி அசத்தியுள்ளீர்கள்.
>>>>>
ஸ்ரீரங்கம் பெருமாள் + தாயார் ஊஞ்சல் ஒரேயொரு முறை நேரில் கண்டு களித்துள்ளேன்.
ReplyDeleteஅரையர்கள் பாடும் பாசுரங்கள், கைங்கர்ய பரர்களால் வீசப்படும் தங்கச் சாமர சேவைகள் என ஒரே அமர்க்களமாகத் தான் இருந்தது.
>>>>>
ஆங்காங்கே தங்களின் வர்ணனைகள் அப்படியே நேரில் சென்று ஸேவித்து வந்தது போல மனதுக்குத் திருப்தியாக உள்ளன.
ReplyDelete>>>>>
கீழிருந்து 3, 4, 5 படங்கள் திவ்யமாக உள்ளன.
ReplyDeleteவெகு அழகான அசத்தலான பதிவுக்குப் பாராட்டுக்கள்.
வாழ்த்துகள்.
மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.
ooo ooo
அழகிய படங்களுடன் சொல்லப் பட்ட விவரங்கள் தெரிந்து கொண்டேன்.
ReplyDeleteஅழகோ அழகு... நன்றி அம்மா...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
ஆடினான் ஊஞ்சல் அரங்கன் இனிதாகத்
ReplyDeleteதேடி..நான் சீர்பெற என்று!
மிக மிக அருமையான காட்சிகளும் பதிவும் சகோதரி!
உளம் நிறைந்தது உவகையில்!...
மனம் நிறைந்த நன்றியுடன் வாழ்த்துக்களும்!...
அருமையான பதிவு.. ஊஞ்சல் உற்சவத்தை பற்றி சிறப்பாக பகிர்ந்துள்ளீர்கள்..
ReplyDeleteஅருமையான ஊஞ்சல் சேவையை விளக்கமாய் சொன்னதற்கு நன்றி. அழகிய படங்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஎல்லாம் நீங்கள் எழுதப் படிப்பதுதான். ஒரு முறையேனும்கண்டதில்லை. படங்கள் வெகுஜோர். வாழ்த்துக்கள்.
ReplyDeleteபக்தி மனம் கமழும் பதிவைப் படிக்கும் போதே மனம் "டோலாயா சுப டோலாயா" என்று பாட சொல்கிறது.
ReplyDeleteஊஞ்சல் உற்சவ வைபவம் “ ஆகாய பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா! “ என்று பாட வைத்தது.
ReplyDeleteமிகவும் அழகாக ஊஞ்சல் சேவையை விளக்கியுள்ளீர்கள். நன்றி
ReplyDeleteஊஞ்சல் உற்சவம் - ரசித்தேன்...
ReplyDelete