அர்ஜுனா எனப்படும் மருத மரத்தை தல விருட்சமாகக் கொண்ட புனிதத் தலங்களில் ஒன்றாக கர்னூல் மாவட்டத்தின் தலைமருதூர் ஸ்ரீசைலம் விளங்குகிறது.
சிலாத முனிவர் தவம் செய்து பேறு பெற்ற இடமாதலால்
ஸ்ரீசைலம் எனப்பட்டது.
சிலாத முனிவர் தவம் செய்து பேறு பெற்ற இடமாதலால்
ஸ்ரீசைலம் எனப்பட்டது.
பீடத்தின் நாயகி மகாலக்ஷ்மி (பிரமராம்பிகை). பைரவர் சம்பரானந்தர் (மல்லிகார்ஜுனர்) என்று அழைக்கப்படுகிறார்.
பரமேஸ்வரன் ஒரு முறை அர்த்தநாரீஸ்வரராக, மகரிஷி பிருங்கிக்குக் காட்சி அளித்த போது பார்வதியைத் தவிர்த்துவிட்டு சிவனை மட்டும் வலம் வர விரும்பி வண்டு உருவத்துக்கு மாறி அவர்களுக்கு இடையே ஒரு துளை போட்டு ஈசனை மட்டும் பிரதட்சிணம் செய்தாராம்.
இதனால் சினம் கொண்ட பார்வதி, அந்த வண்டின் சக்தி முழுவதையும் கிரகித்துக் கொண்டதால் முனிவர் செயலிழந்து தவித்தார்.
பிருங்கி முனிவரின் ஆழ்ந்த தூய ஈஸ்வர பக்தியை ஈசனிடமிருந்து
கேட்ட தேவி, பிருங்கிக்குப் புத்துயிர் அளித்தார்.
கேட்ட தேவி, பிருங்கிக்குப் புத்துயிர் அளித்தார்.
வண்டு உருவில் இருந்த மகரிஷியை ஆட்கொண்டதால்,
அன்னை பிரமராம்பிகை எனப் பெயர் பெற்றாள்.
அன்னை பிரமராம்பிகை எனப் பெயர் பெற்றாள்.
"பிரமர' என்றால் வண்டு எனப் பொருள்.
அன்னையும் அவளது பரிவார தேவதைகளும் ஒரு முறை கருவண்டுகளாக மாறி, அருணா என்ற அசுரனின் உடல் முழுவதையும் கொட்டி சம்ஹரித்ததால் பிரமராம்பிகை எனப் பெயர் பெற்றாள் என்றும் புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
அன்னையின் கருவறை பின்புறச் சுவரில் தென்படும் துவாரத்தில் காதை வைத்துக் கவனித்தால், வண்டின் ரீங்காரத்தை இப்போதும் கேட்கலாம். தேவியின் பீஜாட்சரமான ஹ்ரீம் இந்த பீடத்தில் விசேஷமாக இடம்
பெற்றுள்ளது.
அன்னையின் சந்நிதியில் ஆதிசங்கரர் நிறுவிய ஸ்ரீசக்ரத்தை தரிசிக்கலாம். அதிலிருந்து வரும் அதிர்வலைகளை உணரும் போதே, பாவம் நீங்கும் என்பது நம்பிக்கை.
ஸ்ரீசைலம் கோயில் கொண்டுள்ள தேவி பிரமராம்பிகை காளி, பார்வதி, சந்திரவதி, மஹாலட்சுமி எனப் பலவாறு போற்றப்படுகிறார் ...
ஆந்திராவில், கர்னூல் மாவட்டத்தில் அமைந்துள்ளது பிரமராம்பிகை ஆலயம். அன்னையின் உடற்கூறுகளில் கழுத்தின் கீழ்ப்பகுதி விழுந்த இடமாகக் கருதப்படும் இது, 51 சக்தி பீடங்களில் 15வது பீடமாகத் திகழ்கின்றது.
* தொடர்புடைய பதிவுகள்..
**ஸ்ரீசைல நாயகி ஸ்ரீபிரம்மராம்பா தேவி
***மகிழ்ச்சிதரும் ஸ்ரீ மல்லிகார்ஜுனசுவாமி
* தொடர்புடைய பதிவுகள்..
**ஸ்ரீசைல நாயகி ஸ்ரீபிரம்மராம்பா தேவி
***மகிழ்ச்சிதரும் ஸ்ரீ மல்லிகார்ஜுனசுவாமி
Srisailam dam
நந்தி பிரம்மாண்டமாய் இருக்கிறது.
ReplyDeleteஆகா...! படங்கள் அனைத்தும் அற்புதம் அம்மா... நன்றி...
ReplyDeleteவாழ்த்துக்கள்....
படங்கள் அழகு. இந்த இடம் போகவேண்டும் என்ற ஆசை எனக்கு நீண்ட நாட்களாய் உண்டு.
ReplyDeleteபுத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரியாரே
ReplyDeleteஅனைவருக்கும் உளம் நிறைந்த
ReplyDeleteபுத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! ..
அம்பாளின் கருவறைச் சுவரின் வண்டின் ரீங்காரம்...!
ReplyDeleteஅழகிய படங்களுடன் சிறப்பான பகிர்வு..
அழகான பதிவு. புத்தாண்டு வாழ்த்துகள்.
ReplyDeleteஇன்றைய படங்களும் பதிவும் அழகோ அழகு. ;)
ReplyDeleteமுதல் படத்தினில் அந்த காளை மாடு தன் தலையை இந்த ஆட்டு ஆட்டுகிறதே !!!!! அதன் கழுத்து சுளுக்குக்கொள்ளாதா?
>>>>>
ஸ்ரீசக்ரநாயகி ஸ்ரீசைலம் பிரமராம்பிகை அம்மனின் பெயர் காரணம் அறிய முடிந்தது. அந்தக் கதையையும் அழகாகச் சொல்லியுள்ளீர்கள். ;)
ReplyDelete>>>>>
இதே பெயரில் பெங்களூரில் உள்ள ஓர் அம்மா, என் நட்பு எல்லைக்குள் இன்றும் இருந்து வருகிறார்கள். தமிழும் கன்னடமும் தெரிந்த எழுத்தாளர் அவர்.
ReplyDeleteகர்நாட இசையில் மிகவும் புகழ் வாய்ந்த பிரபல பாடகி - பாட்டு டீச்சராக உள்ளார்கள். தற்சமயம் அமெரிக்கா சென்றுள்ளார்கள்.
என் மனைவிக்கு இந்த அம்மனின் வெகு அழகான படம் ஒன்று தபாலில் அனுப்பியுள்ளார்கள்.
இருப்பினும் நாங்கள் இதுவரை நேரில் சந்தித்தது இல்லை.
>>>>>
வண்டு துளைத்த [ சேலத்து ;) ] மாங்கனி போல மிகவும் ருசியான தித்திப்பான பதிவாகக் கொடுத்து இந்த 2013 ஆண்டை வெற்றிகரமாக கடந்து விட்டீர்கள். ;)))))
ReplyDelete>>>>>
சாதா வருஷமான 2013ம் ஆண்டில் தினம் ஒரு பதிவு வீதம் ... ஆனால் 365க்குப்பதிலாக 366 பதிவுகளாகக் கொடுத்து ..... அதை லீஃப் ஆண்டாக மாற்றியுள்ளதும் அதிசயமாகத்தான் உள்ளது. ;)
ReplyDelete>>>>>
இத்துடன் ரெளண்டாக 1140 பதிவுகள் ஆகியுள்ளன.
ReplyDeleteதினம் ஒரு பதிவு என்ற கணக்கில் தாங்கள் மீண்டும் தொடர்ந்தால் அடுத்த கிறிஸ்துமஸுக்கு மறுநாள் 26.12.2014 அன்று தங்களின் வெற்றிகரமான 1 5 0 0 வது பதிவு வெளியாகக்கூடும்.
நினைக்கவே எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ;)))))
>>>>>
அந்த பிரும்மாண்ட அழகான வழுவழுப்பான வெண்ணெய் போன்ற வெள்ளை நந்திபோல தங்களின் எழுத்துக்களும் படங்களும் பதிவுகளும் சிறப்பானதோர் இடத்தை தொடர்ந்து பெறட்டும். ;)))))
ReplyDelete>>>>>
வெற்றிமேல் வெற்றியடைய என் அன்பான நல்வாழ்த்துகள்.
ReplyDeleteபதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள்.
மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
அன்புடன் VGK
oo oo oo oo
//அதன் கழுத்து சுளுக்குக்கொள்ளாதா?//
ReplyDelete”அதன் கழுத்து சுளுக்கிக் கொள்ளாதா?” என இருக்க வேண்டும்.
எழுத்துப் பிழையாகி விட்டது. ;( மன்னிக்கவும்.
ஒரு கோவில் பதிவு படிக்கும்போது சில கதைகளும் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு. பகிர்வுக்குப் பாராட்டுக்கள். உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி! சகோதரி ! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது உளங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!
ReplyDeleteநான் படிக்காமல் விட்டுப் போன பதிவுகளில் இருந்து மீண்டும் தொடர்வேன்.
உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
ReplyDeleteஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !!
ReplyDeleteஅருமையான பதிவு!தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
ReplyDeleteஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
மிகவும் அழகாகவும் அருமையாகவும் புத்தாண்டு வாழ்த்துக்களை சொல்லியதற்கு நன்றி.
ReplyDeleteதங்களுக்கும் குடும்பத்தாருக்கும் எனது இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
உங்களுக்கும், உங்கள் அன்பு குடும்பத்தினர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅழகான படங்கள். அருமையான தலம் பற்றிய தகவல்கள் என அனைத்தும் நன்று......
ReplyDeleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
Dear Sir,
ReplyDeleteIt's really valuable and knowledgeable.
Hats off !!