




ஆத்தி சூடி இளம்பிறை அணிந்து
மோனத்திருக்கும் முழுவெண்மேனியான்
கருநிறம் கொண்டு பாற்கடல் மிசைக் கிடப்போன்
மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்
ஏசுவின் தந்தை எனப்பல மதத்தினர்
உருவகத்தாலே உணர்ந்துணராது
பலவகையாகப் பரவிடும் பரம்பொருள்
ஒன்றே; அதனியல் ஒளியுறும் அறிவாம்
அதனிலை கண்டார் அல்லலை அகற்றினார்
அதனருள் வாழ்த்தி அமரவாழ்வு எய்துவோம்'
இனிய மகிழ்வான புத்தாண்டு வாழ்த்துகள்...!
ஒளி படைக்கும் புத்தாண்டே வா வா வா
களி படைத்த மொழியினாய் வா வா வா
தெளிவு பெற்ற மதியினாய் வா வா வா
கனிவு கொண்டு இனிமையாய் வா வா வா..!...
நோய்களற்ற உடலினாய் வா வா வா


பொழுது புலர்ந்தது, யாம்செய்த தவத்தால்,
புன்மை யிருட்கணம் போயின யாவும்,
பொங்கும் மங்களம் எங்கும் தங்கிட புலர்ந்தது புத்தாண்டு..


பலசாலிக்கு பாரம் என்று ஒன்றுஇல்லை.
முயற்சி உடையவர்களுக்கு தூரம் என ஒன்று இல்லை.
கல்வியாளர்களுக்கு அந்நிய நாடு என ஒன்று இல்லை.
அன்போடு பேசுபவர்களுக்கு அந்நியன் என ஒருவரும் இல்லை.

ஒளிமயமான எதிர்காலம் உள்ளத்தில் தெரிகிறது
இந்த உலகம் பாடும் பாடல் ஓசை காதில் விழுகிறது
வாழும் நாடும் வளரும் வீடும் மணம்பெறவே வருக
புத்தாண்டே இனிது மகிழ்வுடன் வருக....!.
பொன் எழில் பூத்தது புது வானில்
வெண் பனி தூவும் நிலவே நில்
பொன்னாய் புத்தாண்டு பிறந்ததும்
புன்னகை பூத்தது புது வாழ்வில் ..

நல்லவற்றையே எண்ணி அதற்காக உண்மையில் உழைத்தால்
வெற்றி என்னும் அறுவடை சிறப்பாக இருக்கும்.
தடம் பார்த்து நடப்பவன் மனிதன். தடம் பதித்து நடப்பவன் மாமனிதன்!
வெற்றி என்பது நிழல் போல. அதைத் தேடிப்போகவேண்டியதில்லை.
வெளிச்சத்தை நோக்கி நடக்கும்போது, அது பின்தொடரும்..!




"பலமே வாழ்வு"அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு
செயலும் ஆனந்தத்தைக் கொண்டுவந்து தந்தே தீரும்."

தன்னம்பிக்கை, தெளிவு, துணிச்சல் இந்த மூன்றும்
எப்போதும் காப்பாற்றி வழிநடத்திச் செல்லும்.

சமய சந்தர்ப்பம் தெரியாமல் பிருகஸ்பதியே பேசினாலும் அவன் வெகுமதி பெறாமல் போவது மட்டும் அல்லாமல் வெறுப்பையும் தேடிக் கொள்கிறான்.

கையெழுத்துப் போடாத செக்கில் எத்தனை ஆயிரம் ரூபாயை வேண்டுமானாலும் எழுதலாம்.செய்யப்போவதில்லை என்று முடிவு
கட்டி விட்டால் எத்தனை திட்டங்கள் வேண்டுமானாலும் சொல்லலாம்.
புத்தாண்டில் புது யுகங்கள் படைக்க முயலுவோம்..!

"பரிதியின் பேரொளி வானிடைக் கண்டோம்;
பார்மிசை கதிரொளி காண்டதும் புத்தாண்டு கொண்டாட்டம்...


உங்களுக்கும்,உங்க குடும்பத்தவர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇராம இராம என்னும் திரு நாமம் உச்சரித்து, அன்னை அபிராமி, அருளாளன் கண்ணனின் ஆசியினால் எல்லா நன்மைகளும், நலமும் வளமும் பெற்றிடவும், மாயையின் பிடியிலிருந்து விடுபட்டு, மெய்ஞான பகிர்வுகளை அன்பர்களுக்கு பகிர்ந்து , இறை அருள் பெற்று வாழ பிரார்த்திக்கின்றேன்.
ReplyDeleteஇனியப் புத்தாண்டு நல் வாழ்த்துக்களும், சீரும் சிறப்புமாய் அனுமன் ஜெயந்தியினைக் கொண்டாடி மகிழ்ந்திடவும் வாழ்த்துக்கள்!
தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
ReplyDeleteஆங்கிலப் புத்தாண்டுக்கு ஏற்ற மிக நல்ல பதிவு.
ReplyDelete>>>>>
விநாயகரில் ஆரம்பித்து அத்தனைப் படங்களும், அனிமேஷன் படங்களும் அருமையோ அருமை.
ReplyDelete>>>>>
”ஒளி படைக்கும் புத்தாண்டே வா வா வா”
ReplyDelete”ஒளிமயமான எதிர்காலம் ........................”
என்று ஆரம்பிக்கும் பாடல்கள் மிகவும் ருசியாக உள்ளன.
>>>>>
கீழிருந்து ஆறாவது வரிசைப்படமும்
ReplyDelete"Let your faith be bigger than your fears"
என்ற கருத்தும் எனக்கு மிகவும் பிடித்துள்ளன.
>>>>>
தங்களுக்கும் தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும் என் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
ReplyDelete>>>>>
உலக மக்கள் எல்லோரும் எல்லா நலமும் வளமும் பெற்று மன நிம்மதியுடன் வாழும் இனிமையான ஆண்டாக இருக்கப் பிரார்த்திப்போம்.
ReplyDeleteo o o o o o
அன்பு எனதுடையீர்.
ReplyDeleteதங்களுக்கு எனது இனிய புத்தாண்டு,பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
ReplyDeleteஎல்லாம் வல்ல இறைவனை வேண்டி
ReplyDeleteஅனைவருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!..
எல்லாம் வல்ல இறைவனை வேண்டி
ReplyDeleteஅனைவருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!..
தங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் உட்பட அனைவருக்கும் எனது மனமார்ந்த 2014 இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteஇனிதாய்ப் பிறந்திட்ட இவ்வாண்டில் உந்தன்
ReplyDeleteபணியோடு சேரும் புகழ்!
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் யாவருக்கும்
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!