ஸ்ரீ மத் பயோநிதி நிகேதந சக்ரபாணே
போகீந்தர போகமணிரஞ்ஜித புண்யமூர்த்தே
யோகீச சாஸ்வத சரண்ய பவாப்தி போத
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்
போகீந்தர போகமணிரஞ்ஜித புண்யமூர்த்தே
யோகீச சாஸ்வத சரண்ய பவாப்தி போத
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்
எப்படிப்பட்ட துக்கமாயினும் பாவ தோஷங்களாயினும் வேருடன் களையக்கூடிய ஆற்றல் கொண்டவர் யோக நரசிம்ம சுவாமி.என
சித்தர்கள், தமது ஜீவநாடிகளில் சோகத்தூர் கோயிலின் பெருமைகளை விவரிக்கின்றனர்.
ஒருமுறை அசுரர்கள், பிரம்ம தேவரிடம் சென்று வேதங்களைப்
பறித்துச் சென்று விட்டனர்.
பறித்துச் சென்று விட்டனர்.
பிரம்மதேவர் துக்கம் மேலிட்டவராய், தத்தாத்ரேயரிடம் விமோசனம் வேண்டி ஆலோசனை கேட்க, அவரும் ‘‘பூலோகத்தில் திருமகளாம் மகாலட்சுமியால் உருவாக்கப்பட்ட லட்சுமி ஸரஸ் என்ற புண்ணிய குளம்
நீராடி, அதன் கரையில், சிவபெருமானால் துதிக்கப்பட்ட யோக நரசிம்மரை குறித்து தவம் செய்ய, இழந்த வேதங்களை திரும்ப பெற்று, இன்பம் பெறுவீர்’’ என்ற உபாயம் சொன்னார்.
அந்த யோசனையை பின்பற்றி, நான்முகக் கடவுள் தமது சோகம் நீங்கப் பெற்றார். பிரம்மதேவரின் சோகத்தை நிக்கியமையால், இந்த புண்ணிய பூமிக்கு, ‘சோஹாபஹத்ரூபம்’ என்று பெயரிட்டார் தத்தாத்ரேயர்.
இந்தப் பெயரே மருவி, சோகத்தூர் என பின்னாளில் வழங்கலாயிற்று.
தட்சிண சிம்மாசலம் என்ற சிறப்பு பெற்ற, சித்தர் பெருமக்களும் வானுறை தேவர்களும் கொண்டாடும் புண்ணிய பூமி சோகத்தூர் ..!
தட்சிண சிம்மாசலம் என்ற சிறப்பு பெற்ற, சித்தர் பெருமக்களும் வானுறை தேவர்களும் கொண்டாடும் புண்ணிய பூமி சோகத்தூர் ..!
கமல ஸரஸ் என்று ராமதேவர் குறிப்பிட்ட புண்ணிய தீர்த்தம்
இன்றும் லட்சுமி ஸரஸ் என்றே வழங்கப்படுகின்றது.
இன்றும் லட்சுமி ஸரஸ் என்றே வழங்கப்படுகின்றது.
எத்தனை சிறிதாயினும் தீ சுடும். அது போன்றதே நரசிம்ம அவதாரம். திருமாலின் மிகுந்த உக்கிரம் கொண்ட, நான்காவது அவதாரம்,
இந்தப் புண்ணிய க்ஷேத்திரத்தில் தமது உக்கிரங்களை உதறி எறிந்துவிட்டு தம்மை நாடி வரும் பக்தர்களின் துயரைத் துடைத்து அவர்தம் சோகத்தை அறவே துடைத்து, சாந்தம் கொண்டு, கிழக்குத் திருமுக மண்டலம் காட்டியவாறு குடி இருக்கின்றார்.
திருமணத் தடைகளை உடைத்தெறிந்து நமது தகுதியை ஆராய்ந்து அதற்கேற்ப வரனை முடித்து தரும் தெய்வம் இவர்.
வஞ்சனை கொண்டவர் என்றால், மனதில் பொறாமை, கபடு, சூது வைத்து நம்மோடு தம் சுயலாபத்திற்காக பழகுவோர். ஏவல், பில்லி, சூன்யம் என்ற மாந்தரீக விஷயங்களுக்கு வாதனை என்றும் பொருள்.
பெரு நோய்கள் விலகவும் அருள்கின்றார்...
பெரு நோய்கள் விலகவும் அருள்கின்றார்...
ஸ்ரீ அமிர்தவல்லித் தாயாரின் பரிபூர்ண ஆசியைப் பெற்றவர் இங்கு குடி கொண்டிருக்கும் ஆஞ்சநேயர்.
புதன், சனி கிரகங்கள் தமக்குற்ற நாட்களில் பகல் பொழுது முழுவதும் இங்கு எழுந்தருளி, அனுமனை ஆராதிக்கின்றனர்.
இவர்கள் இமைப்பது இல்லை. ஆக, புதன் கிழமைகளிலும்
சனிக்கிழமைகளிலும் முடிந்தவரை கண் இமைகளை மூடாது, வெற்றிலை, வடைமாலைகளை அனுமனுக்கு சாத்தி, அனுமத் ஜபம் செய்து பதினோறு முறை வலம் வந்து தொழுதிட எதிரிகளின் தொல்லை ஒழியும்.
வம்பு வழக்குகள் விலகிப் போகும். ஆபத்துகள், களவு, பேய், பிசாசு பயங்கள் அழியும் என்று பதஞ்சலி சித்தர். தமது ஜீவநாடியில்,குறிப்பிடுகிறார்..!
ஒவ்வொரு மாதமும் சுவாதி நட்சத்திரத்தன்று அதிகாலைப் பொழுதில் இன்றும் சித்தர்கள், வானோர் புடைசூழ பிரம்மதேவன் இத்திருக்கோயிலில் குடிகொள்ளும் அமிர்தவல்லித் தாயாரை ஆராதித்து பின் யோகநரசிம்மரை பூஜித்து நிற்கின்றார் என்ற பாடல் மனோ தைரியத்தை உரு வாக்குகின்றது..!
‘‘ நரசிம்ம ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, அனுமத் ஜெயந்தி போன்ற வைபவ காலங்களிலும் புரட்டாசி சனிக்கிழமைகளிலும் கண்களால் ஆரப்பெருகி பெருமானை தொழுதால், பிரம்மதேவன் பட்ட சோக நாசனத்தை நாமும் பெறலாம் என்பது நம்பிக்கை..!
கபில முனி என்னும் சித்தர்,
‘‘கண்ணார தரிசனஞ் செய யேற்றதொரு புண்ணிய பூமி’’ என்றும், ‘
‘பூசைகள் புரிய தக்கோன்’’ என்றும், ‘‘ஆராதனா மூர்த்தி இவனொப்ப யாரே’’ என்றும் வியப்படைகிறார்.
சகலவித தோஷங்களை போக்கி, சகலவிதமான பயங்களை நீக்கி தைரியத்தை தரவல்லவராகத் திகழ்கிறார் யோக நரசிம்ம சுவாமி
சுவாதி நட்சத்திரத்தன்று பதஞ்சலி முனிவர் என்னும் சித்தர், தமது சீடர்களுடன் இந்த புண்ணிய க்ஷேத்திரத்தில் ஒரு யாகம் செய்தார்.
அப்போது அக்கினி குண்டத்தில் பற்பலவிதமான கனி வகைகள், வாசனைப் பொருட்கள், பட்டு வஸ்திரங்கள் போன்ற புனிதப் பொருட்களை இட்டார்கள். சீடர்கள்,
அப்போது அக்கினி குண்டத்தில் பற்பலவிதமான கனி வகைகள், வாசனைப் பொருட்கள், பட்டு வஸ்திரங்கள் போன்ற புனிதப் பொருட்களை இட்டார்கள். சீடர்கள்,
அக்னி குண்டத்தில் ஆகுதியாய் கொடுக்கப்பட்ட திரவியங் களை சிங்க முகங்கொண்ட சிவந்த மேனியை உடைய மனிதர் தோன்றி பெற்றுக் கொண்டார்.
யாகத்தில் பங்கேற்ற மக்கள், மன்னர், பிரபுக்கள் உள்ளிட்டோர் அதிசயம் கண்கூடாகக் கண்டு வியந்தனர்..!
யாகத்தில் பங்கேற்ற மக்கள், மன்னர், பிரபுக்கள் உள்ளிட்டோர் அதிசயம் கண்கூடாகக் கண்டு வியந்தனர்..!
அவருக்கு அருகில் நின்ற குரங்கு முகம் கொண்ட திட காத்திரமான இன்னொரு மனிதரும் அந்த திரவியங்களை ஏந்தினார் என்ற பொருள்படும் பாடல் இறைவன் இன்றும் நம்மோடு இருப்பதை உணர்த்துகின்றது..!
அமிர்மபாலவல்லி சமேத நரசிம்மசாமி அருமை அறிந்தேன்.
ReplyDeleteநன்றி சகோதரியாரே
ஸ்ரீ அமிர்தபாலவல்லி சமேத நரசிம்மசுவாமி பற்றிய தகவல்கள் அனைத்தும் சிறப்பு அம்மா... அற்புதமான படங்கள்... நன்றி...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
அழகிய படங்களுடன் - ஸ்ரீஅமிர்தபாலவல்லி சமேத
ReplyDeleteஸ்ரீ நரசிம்ஹஸ்வாமி திருக்கோயில் பற்றிய தகவல்கள் அருமை.
அழகானப் படங்களுடன் சிறப்பான பகிர்வு...
ReplyDeleteஅழகிய படங்களுடன் அருமையான பதிவு. அமிர்தபாலவல்லி சமேத லக்ஷ்மிநரசிம்ஹர் சுப்ரபாதம்-எஸ் பி பி பாடிய சுப்ரபாதம் நெடுநாட்களாய்த் தேடிக் கொண்டிருக்கிறேன்.
ReplyDeleteஎளிய விளக்கத்துடன்
ReplyDeleteஅழகான படங்கள். நன்றி.
சுப்பு தாத்தா.
அமிர்தவல்லி சமேத நரசிம்மஸ்வாமி பற்றிய தகவல்களை தெரிந்துகொண்டேன், மிக்க நன்றி அம்மா.
ReplyDeleteபடங்களை பார்த்தபடியே இருந்து விடலாம் போல அழகான படத்தேர்வு விளக்கங்களும் சிறப்புங்க.
ReplyDeleteஅழகான படங்கள். சிறப்பான தகவல்கள்.... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
ReplyDeleteவக்ஷஸ்தலத்தில் ஸ்ரீமஹாலக்ஷ்மியை வைத்துள்ள எம் பெருமாளை இந்தத்தங்களின் பதிவினில் கண் குளிரக்காண முடிந்ததில் எனக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சியாக உள்ளது.
ReplyDeleteமேலிருந்து கீழ் இரண்டாவது படம் தத்ரூபமாக கொடுத்து அசத்தியுள்ளீர்கள். திவ்ய தரிஸனம் செய்ய முடிந்தது.
பூர்ணாஹூதிச் செய்திகள் மெய்சிலிர்க்க வைக்கின்றன. ;)