Saturday, January 4, 2014

திருப்பதி வைகுண்ட துவாரம்








திருப்பதி மலைவாழும் வெங்கடேசா 
திருமகள் மனம் நாடும் ஸ்ரீனிவாசா

அன்பெனும் அகல் விளக்கை ஏற்றவைத்தேன் 
அதில் ஆசையெனும் நெய்யை ஊற்றிவைத்தேன்
என்மனம் உருகிடவே பாடிவந்தேன் - 
உன் ஏழுமலை ஏறி ஓடிவந்தேன்  

நினைத்ததை நடத்தி வைப்பாய் வைகுந்தா
மறைத்ததை பறித்திடுவாய் கோவிந்தா
உரைத்தது கீதையென்னும் தத்துவமே - அதை
உணர்ந்தவர் வாழ்ந்திடுவார் சத்தியமே  
வைகுண்ட ஏகாதசி விழா: திருப்பதி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு
ஆந்திர மாநிலத்தின் திருப்பதி மலைமீதுள்ள திருமலையில்  சிறப்பு வாயில் “வைகுண்ட துவாரம்” வைகுண்ட ஏகாதசி நாளில் மட்டுமே திறக்கப்படும் 

மகாபாரதத்தில் குருக்ஷேத்திரப் போரின் துவக்கத்தில் கண்ணன் அருச்சுனனுக்கு இந்த நாளில்தான் பகவத் கீதை விளக்கங்களை நிகழ்த்தியதாக சிறப்பிக்கப்படுகிறது..!

மஹாவிஷ்ணு இரு அரக்கர்களுக்கு  வைகுண்டத்தின் கதவுகளைத் திறந்ததாகவும் , இக்கதையைக் கேள்விப்பட்டு இவ்வாயில் வழியே பெருமாளின் திருவுரு வெளியே உலா வரும்போது தரிசிப்பவர்கள் அனைவருக்கும் தாம் பெற்ற நிலை கிடைக்கவேண்டும் என அவர்கள் வரம் வேண்டியதாகவும் நம்பிக்கை..!

அனைத்து ஏகாதசி நாட்களிலும் உண்ணாநோன்பு இருந்து 
பெறும் பயனை வைகுண்ட ஏகாதசி அன்று இருக்கும் 
ஒருநாள் விரதத்தால் பெறலாம் என்பது சிறப்பு..!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா  அதிகாலை சொர்க்கவாசல்  பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என முழக்கமிட திறக்கப்படும்.
ஏழுமலையான் பூதேவி, ஸ்ரீதேவியுடன் தங்க தேரில் 
மாடவீதிகளில் பவனி வந்து அருள்பாலிப்பார்..!

வைகாசன ஆகம விதிகளின்படி குலசேகர படி அருகே உள்ள சயன மண்டபத்தில் சுவாமிக்கு ஏகாந்த சேவைக்காக தங்க ஊஞ்சலில் வெள்ளி கொலுசு போடப்பட்ட பட்டு தலையணையில் வைத்து வெங்கமாம்பா வம்சா வழியினரின் முத்தியால ஆரத்தி எடுத்து 2 விளக்குகள் ஏற்றி வைத்துவிட்டு மூலவரின் அருகே உள்ள அகண்ட தீபத்தை அணைக்க வேண்டும்.

பின்னர் தங்க கதவு மூடப்பட்டு கருட மண்டபம் அருகே செனாய் மேளம் வாசிக்கப்பட்டு, சுவாமிக்கு அர்ச்சகர்கள் பூஜை செய்து பால், பழங்கள் மற்றும் நைவேத்தியங்கள், கற்பூர ஆரத்தி காண்பிக்கப்படும். 
அர்ச்சகர்கள் சாமி பாதத்துக்கு நமஸ்காரம் செய்து, போக சீனிவாச மூர்த்தியை பட்டு மெத்தையில் வைத்து அன்னமாச்சாரிய வம்சாவளியினர் லாலி பரமானந்தா, லாலி கோவிந்தா  என தாலாட்டு பாடலை பக்தியுடன் பாடி தூங்க வைப்பார்கள்.

வெங்கமாம்பா ஆரத்தியை மூலவருக்கு காண்பித்து, தங்க கதவுகள் மூடப்படும். மூலவர் சன்னதியில் அதிகாலை 1.30 மணி முதல் 3 மணிவரை அகண்ட தீபம் குளிரவைக்கப்படும்.  
அதிகாலை 3 மணியளவில் சுப்ரபாத சேவைக்கு பிறகு தீபம் ஏற்றப்பட்டு ஏழுமலையான் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
tirumala01

17 comments:

  1. வைகுண்ட துவாரம் உன்னதம் உணர்ந்தேன் நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  2. திருப்பதி வைகுண்ட ஏகாதசி விழா வைபவம் பற்றி தெரிந்து கொண்டேன்.
    மிக அழகான படங்கள். படல் பகிர்வு அருமை.
    நன்றி.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. படங்களுடன் பதிவு வழக்கம்போலவே ஜோர்.

    ReplyDelete
  4. அருமையான படங்கள் அம்மா! காலையில் நல்ல தரிசனம் கிடைத்தது..

    ReplyDelete
  5. எல்லாப்படங்களும் அழகோ அழகு. கண்குளிர தரிஸித்தேன். மகிழ்ச்சி.

    ReplyDelete
  6. சிறப்பான தரிசனம் கிடைத்தது... நன்றி அம்மா...

    வாழ்த்துகள்...

    ReplyDelete
  7. சனிக்கிழமையன்று - கண்களில் நிறைந்த பெருமாள் தரிசனம்!..

    ReplyDelete
  8. சனிக்கிழமையன்று - கண்களில் நிறைந்த பெருமாள் தரிசனம்!..

    ReplyDelete
  9. சிறப்பான தரிசனம். படங்கள் கண்களைக் கவர்ந்தன.

    ReplyDelete
  10. திருப்பதி அர்த்தஜாமப் பூசை பற்றி அறிந்து கொண்டேன். நன்றி.

    ReplyDelete
  11. உள்ளம் நிறைய உருகிவேண்டப் பேரருள்
    வெள்ளமெனப் பாயும் விரைந்து!

    குறையின்றிக் காப்பவனன்றோ கோவிந்தன்!
    அருமையான படங்களும் சிறப்பான பதிவும் சகோதரி!

    என் நன்றியுடன் வாழ்த்துக்களும்!

    ReplyDelete
  12. மார்கழிப் பதிவுகளை கவனத்தோடு தொடுத்து வருகிறீர்கள்.

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசியன்று சொக்கவாசல் வழியாகப் போனதுண்டு. திருமலை வைகுண்ட துவாரம் பற்றி அறிந்து கொண்டேன். படங்களும் பதிவும் சிறப்பாய் இருக்கிறது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. படங்களும் பதிவும் அருமை!

    ReplyDelete
  15. வைகுண்ட ஏகதேசியைப் பற்றி அருமையான விளக்கங்கள். நன்றி.

    ReplyDelete
  16. om namo narayana .nice photos .tnx for sharing

    ReplyDelete