சென்னை முகப்பேரில் ஸ்ரீராம் நகரில் சென்னை மீனாட்சி அம்மன் ஆலயம் மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தை அடியொட்டி அதேபோல அமைத்திருக்கிறார்கள்..
சந்தான பெருமாள் ஆலயத்திற்கு செல்லும் வழியில் மின் விளக்கு ஒளியில் ஒளிர்ந்த இந்த ஆலயத்திற்கு சென்றிருந்தோம் ..!
பூங்காவாக இருந்த இடத்தை ஸ்ரீ ராம் நகர் குடியிருப்பு மக்கள் தங்கள் வழிபாட்டுதலமாக சாந்நித்யமாக திகழச் செய்திருக்கிறார்கள்..
சமீபத்தில் 2006 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நிகழ்ந்திருக்கிறது..!
வரசித்தி விநாயகர்
விபூதி விநாயகர்
பொற்றாமரைக்குளம்
மூலவராக மெல்லதவழுகின்ற செல்லக்கிளி அழகிய திருக்கரத்திலும்
மென்னகை அதரத்திலும் தவழ எழில் கோலம் கொண்டு திகழும்
அன்னை மீனாட்சி மஞ்சள் காப்பில் மங்களகரமாக
அருள் பொழிகிறாள்...!
அருள் பொழிகிறாள்...!
அன்னையின் எதிரில் நந்திகேஸ்வரர் சந்நிதியும்
பக்கத்தில் சண்டிகேஸ்வரி சந்நிதியும் உள்ளது..!
சுவாமி சுந்தரேஸ்வரர் சந்நிதியில்
பிரதோஷ நந்திகேஸ்வரர் அருள்பாலிக்கிறார்..
பிரதோஷ நந்திகேஸ்வரர் அருள்பாலிக்கிறார்..
அஷ்டதிக் கஜங்களாக எட்டுத்திசைகளிலும்
கரும்போடு நிற்கும் யானைகளால் தாங்கப்படும் கருவறையில்
சொக்கநாதர் அருள்புரிகிறார்.
பள்ளியறைக்கு எழுந்தருள சுந்தரேஸ்வரர் அழகே உருவாய்
தரிசனம் தருகிறார்..
எல்லாம் வல்ல சித்தர் சன்னதியில் மல்லிகை பந்தல் (பூக்கூடாரம்) அமைத்து வேண்டிக் கொண்டால் வேண்டியவை நிறைவேறும் என்பது நம்பிக்கை.
சண்டிகேஸ்வரர் சந்நிதி உண்டு
வைத்திய லிங்கம் ,
பைரவர் சந்நிதி
நவக்கிரஹங்கள் , மஹாலஷ்மி சந்நிதி
ஆகிய சந்நிதிகள் சிறப்பாகத் திகழ்கின்றன்..!
மதுரையில் நடைபெறும் அத்தனை திருவிழாக்களும்
அதே தினத்தில் இங்கு சிறப்பாக நடைபெறுகின்றன ..!
பூங்காவாக இருந்தபோது கிணறு இப்போது தீர்த்தமாக சுவாமிகளின் அபிஷேகத்திற்குப் பயன்படுகிறது..!
ஆலயத்தின் இணையதளம் -
http://chennaisrimeenakshi.weebly.com/index.html
ஆலயம் செல்லும் வழி -முகவரி..
http://chennaisrimeenakshi.weebly.com/location--route-map.html
படங்கள்.....
http://www.flickr.com/photos/srichennaimeenakshi/2567026576/in/set-72157604658834371/
சந்தான பெருமாள் கோவிலில் எடுத்த படங்கள்..
My
ReplyDeleteHeartiest
Congratulations
and
My
Best
Wishes
for
the
3rd
Birth
Day
of
your
Very
Great
Blog -
Today
the
21st
January,
2014.
With
Very
Kind
Regards,
VGK
>>>>>
என்னைப் பெற்றெடுத்த என் தாயார் பெயரும் மீனாக்ஷியே.
ReplyDeleteஅவர்களையே இன்று நேரில் தரிஸித்தது போல சந்தோஷம் கொண்டேன். படங்களை என் கண்களில் ஒற்றிக்கொண்டேன்.
மிக்க நன்றி. பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.
அன்புடன் VGK
வணக்கம்
ReplyDeleteஅம்மா
சிறப்பான விளக்கம்.... படங்கள்அனைத்தும் அழகு.... வாழ்த்துக்கள் அம்மா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மதுரை மீனாட்சி அம்மனை தரிசிக்க முடியவில்லையே என்று ஏங்கும் சென்னை நகர மக்களுக்கு, இந்த கோவில் தீர்த்து வைக்கும். இதனை பகிர்ந்துக்கொண்டதற்கும் ஆலயத்தின் முகவரி,செல்லும்வழி என்று எழுதியமைக்கும் மிக்க நன்றி அம்மா.
ReplyDeleteசென்னையில் ஓர் மதுரை
ReplyDeleteஅருமை சகோதரியாரே
வலைப் பூவின் மூன்றாவது பிறந்தநாளுக்கும் வாழ்த்துக்கள் சகோதரியாரே
சென்னையில் ஓர் மதுரை
ReplyDeleteஅருமை சகோதரியாரே
தங்களின் வலைப் பூவிற்கு மூன்றாம் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
நல்ல தகவல்.
ReplyDeleteஆஹா... ஆஹா... மதுரையை விட்டு வந்தபின் நினைத்த போதெல்லாம் அன்னை மீனாக்ஷியை வணங்க முடியவில்லையே... மனதில்தான் நினைத்து வணங்க வேண்டியிருககிறது என்ற வருத்தம் அடிக்கடி எழும். சென்னையிலேயே இனி தரிசிக்கலாம் என்பது மிகமிக மகிழ்வான செய்தி. அவசியம் போய்ப் பார்க்கிறேன். மகிழ்வுடன் என் நன்றி உங்களுக்கு!
ReplyDeleteசென்னையில் மீனாட்சி அம்மன் கோவில் போனதில்லை அம்மா.. உங்க பிளாக் வழியா எல்லா கோவிலுக்கும் இங்கிருந்தே போயிடறோம்.. :)
ReplyDeleteசென்னையில் உள்ள மீனாட்சி கோவிலைப் பற்றி தகவல்கள் அனைத்தும் அருமை அம்மா... படங்கள் அற்புதம்... நன்றி... வாழ்த்துக்கள்...
ReplyDeleteவலைத்தள மூன்றாவது ஆண்டு மேலும் சிறப்பாக அமைய எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteமதுரை மீனாட்சி கோவில் சென்னையில்... அம்மன்,சுவாமி தரிசனமும் விபூதி பிள்ளையாரும் பொற்றாமரை குள தரிசனமும் மன அமைதி தருகின்றன.. பகிர்விற்கு நன்றி.
ReplyDeleteவலைத்தளத்தின் மூன்றாவது பிறந்த நாளுக்கு வாழ்த்துக்கள் புதிய கோவில் தகவலுக்கு நன்றி.
ReplyDeleteமதுரை மீனாட்சி இப்போது பார்க்க முடிவதே இல்லை. கோவில் திருப்பதி மாதிரி ஆகி விட்டது. சென்னை மீனாட்சியை நன்கு தரிசிக்கலாம் என நினைக்கிறேன்.
வாழ்த்துக்கள்.
சென்னை மீனாட்சி அம்மன் பற்றி மிக பயனுள்ள தகவல்கள்,அழகிய படங்களுடன் தந்தமை மிக்க நன்றி. வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅற்புதமான நிறைய பகிா்வுகளை காண இயலாமல் போனதே... நேரம் இருக்கும் போது கண்டிப்பாக வருகிறேன். பகிா்வுக்கு நன்றிங்க. புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஏற்கெனவே கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால் போனது இல்லை.
ReplyDeleteபிரபலமான கோவில்களை மாதிரியாகக்கொண்டு அதே மாதிரி அமைப்பதுசென்னைவாழ் மக்களுக்கு ஒரு அதீத ஆசை.ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அய்யப்பன் கோவிலும் அப்படியே. மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் தொகுப்பு அருமையாக உள்ளது. நன்றி
ReplyDeleteஅன்புள்ள சகோதரி அவ்ர்களுக்கு.
ReplyDeleteவணக்கமுடன் ஹரணி.
உங்களுடைய மெயிலில் இருந்து எனக்கு புகைப்படங்களைப் பின்பற்றவும் என்கிற குறிப்புடன் புகைப்படங்கள் வந்தன. நான் தவறுதலாக வேறு ஒரு கோப்பிற்குப் பதிலாக உங்களுடையதை அழித்துவிட்டேன். மன்னிக்கவும்.
வணக்கம்.
வணக்கம் ஐயா
Deleteநான் அப்படி எந்த குறிப்புகளும் யாருக்கும் அனுப்பவில்லை..
யாருக்கும் அனுப்புவதுமில்லை..
தகவலுக்கு மிக்க நன்றிகள் ஐயா..
அன்புள்ள சகோதரிக்கு
Deleteஹரணி வண்க்கமுட்ன்.
நன்றி. எனக்கு வந்த மெயிலில் ராஜராஜேஸ்வரி ஜெகாமணி என்கிற பெயருடனும் ஆங்கிலத்தில் ஒரு கோப்பும் அதன்மேல் FOLLOW MY PHOTOS என்றும் இருந்தது. தாங்கள் கடவுளர்கள் படங்களில் வெகு அரிதான அழகான படங்களை உங்கள் பதிவில் இடுவதால் ஒருவேளை அதுபோன்ற அரிய கடவுளர் படங்களை அனுப்பியிருந்து அழித்துவிட்டோமோ என்கிற கவலையில்தான் எழுதினேன். தவிரவும் எனக்கு முகநுர்ல் பற்றிய அறிமுகம் இல்லை. அதனைப் பயன்படுத்துவதும் இல்லை. எனக்கு அதன் தொழில் நுட்பங்கள் தெரியாது.
மீண்டும் நன்றி சகோதரி.
மிக அருமையான பகிர்வு அம்மா...
ReplyDeleteபடங்கள் அழகு...
எனக்கும் அந்தமாதிரி மெயில் வந்திருந்தது.. இந்தமாதிரி மெயில்கள் அனுப்புபவருக்கே தெரியாமல் வருகிறது. அவற்றை நான் கண்டுகொள்வதே இல்லை. தகவல் தொழில் நுட்பன்னர்களின் வேலையாய் இருக்கும் போலிருக்கிறது. சென்னை மீனாட்சி கோவில் போனதில்லை.
ReplyDeleteதிரு. ஹரணி அவர்களும் திரு. GMB Sir அவர்களும் குறிப்பிட்டுள்ள மெயில் எனக்கும் 21.01.2014 அன்று வந்தது.
ReplyDelete-=-=-=-=-
Hi there,
Follow my favorite photos on Picbum!
Follow my photos
Rajarajeswari Jaghamani
-=-=-=-=-
என்று அதில் இருந்தது.
ஒருவேளை தாங்கள் அனுப்பியதாக இருக்குமோ என்று அதைத் திறந்து பார்க்க முயற்சித்தேன்.
அதை க்ளிக் செய்ததும் என் பெயர் + பாஸ்வேர்டு முதலியன கேட்டது.
பிறகு தங்களிடம் கேட்டுக் கொண்டு செய்யலாம் என நானும் உஷாராகி வெளியேறி விட்டேன்.
திரு. ஹரணி அவர்களுக்குத் தாங்கள் கொடுத்துள்ள விளக்கத்திற்கு நன்றிகள்.