

ஓம் கணேசருணம் சிந்தி வரேண்யம் ஹீம் பட்ஸ்வாஹா
ஹே பார்வதி புத்ரா ருணம் நாசம் கரோதுமே
ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் அபீஷ்ட சித்திம்மே தேஹி சரணாகத வத்ஸல
பக்த்யா ஸமர்ப்பயே துப்யம் ஸ்வாஹா
ஸ்ரீசக்ரேசாய ஸ்ரீமகா கணபதயே ஸ்வாஹா
கருங்காலி குச்சியால் கணபதி ஹோமம் செய்ய
கடன் மிக விரைவாக தீர்ந்துவிடும் என்பது நம்பிக்கை..!

ஸ்ரீ கணபதி மந்திரங்களை பிரம்ம முகூர்த்த வேளை எனப்படும்
அதிகாலை 4.30 முதல் 6.00க்குள் ஜபிப்பது மிக சிறப்பு..!

சிவாலயங்களில் அம்மன் சந்நிதானத்தின் பக்கவாட்டிலும் முருகன் சந்நதி முகப்புகளிலும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் சக்தி வாய்ந்த கணபதி மூர்த்தங்களில் தோரண வாயில்களுக்கு நேராக அமர்ந்திருப்பவர் ஸ்ரீ தோரண கணபதி எனப்படுகிறார்.
அருட்தன்மை மிக்க தோரண கணபதி - சக்தி தேவி தனியாகக் கோயில் கொண்டிருக்கும் திருத்தலங்களில் அமைந்துள்ள தோரண வாயிலினுள் பிரவேசிக்கும்போது பலிபீடத்திற்கு அருகில் வலப்பாகத்தின் மேகலையில் ஸ்ரீதோரண கணபதியை பிரதிஷ்டை செய்திருப்பார்கள்.
அனைத்து வகையான கணபதி மூர்த்தங்களுக்கும் இல்லாத ஒரு சிறப்பு தோரண கணபதிக்கு இருக்கிறது.
ஜடாமகுடமும் கழுத்தில் ருத்ராட்ச மாலையும் வலக்கரத்தில் அங்குசமும் இடது மேற்கரத்தில் பாசமும், இடது கீழ்க்கரத்தில் மோதகமும் வலக்கரத்தில் தந்தமும் வைத்துக்கொண்டு வலக்கையில் உள்ள தந்தத்தைப் பயன்படுத்தி தன்னை வணங்குவோர் வாழ்வில் உள்ள கடன் என்கின்ற ருணத்தைத் தீர்த்து அருள் செய்கிறார் என்று சிவாகமத் துதிகள் சொல்கின்றன.
மூல ஆலயத்திலிருந்து நோக்கும்போது இவர் அமர்வது பிரம்ம ஸ்தானமாக அமைவதால் கடனைத் தீர்ப்பதில் இவர் கறாராக இருக்கிறார்.

எப்போதுமே வலம்புரி கணபதியாக இருப்பவர்; அதிக சாந்நித்தியம் உடையவர். பத்ம பீடம் என்கிற தாமரை பீடத்தில் அமர்ந்தவராய் அதிர்ஷ்டம் மற்றும் லட்சுமி கடாட்சத்தை அருளும் சக்தி கொண்டவராகத் திகழ்கிறார்..!
மேகலைப் பகுதியிலும் தோரண வாயிலுக்கு எதிராகவும் அமரும் கணபதிக்கு இந்த விசேட சக்தி உள்ளதால், அத் தலங்களுக்குச் சென்று வணங்கினால் பலனும் கிடைத்து விடுகிறது.
.gif)
பிள்ளையார்பட்டி, மயிலாடுதுறை, வாரணாசி ஆகிய இடங்களிலும்,
சிருங்கேரி சாரதா பீடத்துடன் கூடிய சாரதாம்பாள் சந்நதியிலும்
தோரண கணேசர் அமர்ந்துள்ளார்.

கடன் தீர்க்கும் கணபதி வழிபாடு மனிதர்களாகப் பிறந்தவர்கள் தேவகடன், பித்ருகடன், மானுடக் கடன்களைத் தீர்ப்பதில் கவனத்துடன் இருக்க வேண்டும். மானுட கடனைத் தீர்க்கக் கணபதி வழிபாடு உகந்தது. ருணம் என்ற கடனைத் தீர்க்காதுவிட்டால் நம் மனமும், வாழும் காலமும் ரணமாகிவிடக்கூடும். இரு தரப்பினருக்கும் பாதிப்பு ஏற்படுத்தாமல் நலம் தரவல்லது கணபதி வழிபாடு.

தோரண கணபதி சந்நதிக்கு செவ்வாய், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏதேனும் ஒருநாள் என்று ஆறு வாரங்கள் சென்று கணபதியின் மேகலை முன்பாக மூன்று நெய்தீபங்கள் ஏற்றி முப்பழங்களாக மாதுளை, மா, கொய்யா இவற்றை (தோரண கணபதிக்கு பிடித்த பழங்கள்) வைத்து அறுகம்புல்லைச் சாற்றி அர்ச்சனை செய்ய வேண்டும்.

தோரண கணபதி மூல மந்திரத்தை 12 முறை சொல்லி தோப்புக்கரணம் செய்து ஆத்ம பிரதட்சிணமும் (தன்னையே சுற்றுதல்) செய்து நமஸ்கரித்தல் வேண்டும்.

‘‘ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லாம் க்லௌம் கம் தோரண கணபதியே
சர்வகார்ய கர்த்தாய, சகல சித்திகராய, ஸர்வஜன வசீகரணாய,
ருணமோசன வல்லபாய, ஹ்ரீம் கம் கணபதயே ஸ்வாஹா’’
தமிழில் தோரண கணபதி துதி
சர்வகார்ய கர்த்தாய, சகல சித்திகராய, ஸர்வஜன வசீகரணாய,
ருணமோசன வல்லபாய, ஹ்ரீம் கம் கணபதயே ஸ்வாஹா’’
தமிழில் தோரண கணபதி துதி
சக்தியின் மைந்தனாய்ச் சித்திகள் சேர்த்திடும்
முக்தியின் பொருள் சொன்ன மூத்தக் கரிமுகவாய்
காரணணே புகழ்ப்பொருளே கடன்தீர் வீரனே!
தோரண கணபதயே! தோன்றிடுக என் கண்முன்னே!
வாங்கிய கடனை அடைக்க இயலாமல் அவஸ்தைபடுவோரும், கொடுத்த கடனைத் திரும்பப் பெற முடியாமல் அல்லல்படுவோரும் முதலுக்கு மோசம் இன்றி பணம் திரும்ப வந்தால் போதும் என்று நினைப்பவர்களும், இந்த விசேட கணபதிப் பெருமானை வழிபட்டுப் பலன் அடைய முடியும்.

பூஜையால் மகிழ்ச்சி அடையும் தோரண வாயில் கணபதி தன்னுடைய எழுத்தாணிபோல் உள்ள தந்தத்தால் நெருக்குகிற கடன் தீரும்படி தீர்ப்பு எழுதிவிடுவார் என்பது நம்பிக்கை.

ருணவிமோசன அக்னி வழிபாடு முறையாக கல்ப விதியின்படி 32 வகையான யாகக் கூட்டுப் பொருட்களால் தோரண கணபதி முன் யக்ஞம் செய்தல் வேண்டும். இதை ஆறு வாரங்களோ, ஆறு சதுர்த்தி திதியிலோ செய்யவேண்டும்.

பூஜையால் மகிழ்ச்சி அடையும் தோரண வாயில் கணபதி தன்னுடைய எழுத்தாணிபோல் உள்ள தந்தத்தால் நெருக்குகிற கடன் தீரும்படி தீர்ப்பு எழுதிவிடுவார் என்பது நம்பிக்கை.

ருணவிமோசன அக்னி வழிபாடு முறையாக கல்ப விதியின்படி 32 வகையான யாகக் கூட்டுப் பொருட்களால் தோரண கணபதி முன் யக்ஞம் செய்தல் வேண்டும். இதை ஆறு வாரங்களோ, ஆறு சதுர்த்தி திதியிலோ செய்யவேண்டும்.
தோரண கணபதிக்கு சதுர்த்தி விழா காஞ்சிபுரம் மாவட்டத்தின் கிழக்கு எல்லையாகவும் தென்சென்னையின் வடக்குப் பாகமாகவும் விளங்கும் செல்வமணி குன்றத்தூர் எனப்படும் தென் குன்றத்தூரில் தெய்வச் சேக்கிழார் பெருமான் அவதரித்த இல்லத்திற்கு எதிரில் உள்ள ஸ்ரீசக்தி கோயிலில் தோரண வாயிலுக்கு எதிரில், ஸ்ரீதோரண கணபதி, தன்னை நாடி வருபவர்களுக்குக் கடன் தொல்லை தீர்ந்திட அருள்பாலிக்கிறார்.

இனிய காலைப் பொழுதில் அருள் பொழியும் ஐங்கரனைப் பற்றிய பதிவு அருமை. மிக்க மகிழ்ச்சி!,,
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஅம்மா
கணபதிக்குரிய பாடல் மற்றும் விளக்கங்கள் படங்கள் அனைத்தும் சிறப்பு... வாழ்த்துக்கள் அம்மா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ஒவ்வொரு பிள்ளையாரும் எத்தனை அழகு... அருமையான விளக்கங்களுக்கு நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...
ReplyDeleteஅலைபேசியுடன் விநாயகா் படம் அற்பதம் அற்புதம்... விளக்கங்களும் சிறப்புங்க.
ReplyDeleteதோரண கணபதி குறித்த அருமையான தகவல்கள்! ஸ்லோகங்களுடனும் அழகிய படங்களுடனும் பகிர்ந்தமைக்கு நன்றி!
ReplyDeleteகணபதி குறித்து படங்களுடன் நல்லதொரு பகிர்வு அம்மா.
ReplyDeleteதோரண கணபதி அறிந்தேன் நன்றி சகோதரியாரே
ReplyDeleteஒவ்வொரு பிள்ளையாரும் அழகு.பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteஅருமையான தோரண கணபதி விவரங்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
வினாயகர் சதுர்த்தி ஊர்வலம் போல அழகழகாய் எத்தனைவினாயகர்கள் பிரமாதம்
ReplyDeleteமஹிஷஸ்யவ்தேதேவ்யா:கணனாத:ப்ரபூஜித
ஸதைவபார்வதீபுத்ர:ருணநாசம்கரோதுமே
தோரண கணபதி பற்றி அறிந்தேன் அவர் கடன் தீர்க்கும் புதுமையையும் அறிந்தேன். அருமை அவர் திருக்கோலங்களும் கண்டு களித்தேன்.
ReplyDeleteநன்றி தொடர வாழ்த்துக்கள்.....!
ஸ்ரீ தோரண கணபதி பற்றிய விளக்கங்களும் படங்களும் மிகவும் அருமையாகவும் அழகாகவும் உள்ளன. தொந்திப்பிள்ளையாருக்கு அடியேனின் அன்பு நமஸ்காரங்கள்.
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஇன்று வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி http://blogintamil.blogspot.com/2014/02/thalir-suresh-day-2.html
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-