தெய்வீகத்தையும் கலையையும் குழைத்துக் கட்டிய கோயில்களாக, மலையடிப்பட்டி கிராமத்தின் சிவ-விஷ்ணு ஆலயங்கள் விளங்குகின்றன.
குடவரைக் கோயில்களாகத்திகழும் இரண்டு ஆலயங்களும்.
முன்னரே, ஜெயினரால் வழிபடப்பட்டுள்ளன..
முன்னரே, ஜெயினரால் வழிபடப்பட்டுள்ளன..
இந்தியத் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு, இந்து சமய அறநிலையத் துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இங்குள்ள சிவன் கோயில் முற்காலத்தில் ஆலத்தூர்தளி என்று வழங்கப்பட்டது.
மலையின் கிழக்குப் பகுதியில் மலையை குடைந்து
முன் மண்டபத்தை அமைத்திருக்கிறார்கள்.
முன் மண்டபத்தை அமைத்திருக்கிறார்கள்.
சற்று உள்ளே சதுர வடிவில் கருவறை உருவாகியிருக்கிறது.
அந்த பாறையையே குடைந்து சிவலிங்கத் திருமேனியை
வடித்திருக்கும் விதம் பிரமிப்பூட்டுகிறது.
வடித்திருக்கும் விதம் பிரமிப்பூட்டுகிறது.
மூலவர் வாக்கீஸ்வரமுடையார், மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். அவருக்கு எதிரில் நந்தி தேவர்.

உள் சுற்றில் வடக்கில் தட்சிணாமூர்த்தி, தெற்கில் கணபதி, வீரபத்திரர்
சப்த மாதாக்கள்.
Sapta-matrikas are accompanied by Veerbhadra and Ganesha on either ends.

மேற்கே முருகனும் சிங்க வாகனத்தில் சங்கரநாராயணரும்
காட்சி தருகின்றனர்.
உள் சுற்றில் வடக்கில் தட்சிணாமூர்த்தி, தெற்கில் கணபதி, வீரபத்திரர்
சப்த மாதாக்கள்.
Sapta-matrikas are accompanied by Veerbhadra and Ganesha on either ends.
மேற்கே முருகனும் சிங்க வாகனத்தில் சங்கரநாராயணரும்
காட்சி தருகின்றனர்.
எல்லாமே மலையைக் குடைந்து உருவாக்கப்பட்டவையே!
பிற்காலத்தில் மலையை ஒட்டி சுற்றுச் சுவரும் முன் மண்டபமும் கட்டப்பட்டு, விநாயகர், முருகன், அம்பாள் வடிவுடைய நாயகி ஆகியோரின் சந்நதிகள் அமைக்கப்பட்டன.
கோயிலின் முன்பு, வில்வம், ஏரழிஞ்சி மரங்கள்,
தல விருட்சங்களாகத் திகழ்கின்றன.
தல விருட்சங்களாகத் திகழ்கின்றன.

ஏரழிஞ்சி மரத்திலிருந்து கீழே விழும் விதைகள் மீண்டும் மரத்தில் சென்று ஒட்டிக்கொள்ளுமாம். இதனால் இந்த விதை முளைப்பதில்லை ..
மலையின் மேற்குப் பகுதியில் உள்ள பெருமாள் குடைவரைக் கோயில், முன்காலத்தில் ஒளிபதி விஷ்ணு கிரஹம் என்று அழைக்கப்பட்டது.
கோயிலுக்கு முன் மலைச் சுனையொன்று சக்கர தீர்த்தம் என்கிற
சுதர்சன புஷ்கரணி தீர்த்தம் இறைவனின் அபிஷேகத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
சுதர்சன புஷ்கரணி தீர்த்தம் இறைவனின் அபிஷேகத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
நுழைவாயிலின் அருகில் விநாயகர் அருள்பாலிக்கிறார்.
வலது புறம் கமலவல்லித் தாயார் சந்நதி.
இடதுபுற மண்டபத்தில் திருமங்கையாழ்வார், ராமானுஜர், நாதமுனிகள், விஷ்வக்சேனர் சிலைகள் உள்ளன.
நடுவில் கருடாழ்வாரும், பலிபீடமும். இங்கும் மலையைக் குடைந்து முன் மண்டபம், அர்த்த மண்டபம், கர்ப்பகிரகம் ஆகியன வடிவமைக்கப்பட்டுள்ளன.
இடதுபுற மண்டபத்தில் திருமங்கையாழ்வார், ராமானுஜர், நாதமுனிகள், விஷ்வக்சேனர் சிலைகள் உள்ளன.
நடுவில் கருடாழ்வாரும், பலிபீடமும். இங்கும் மலையைக் குடைந்து முன் மண்டபம், அர்த்த மண்டபம், கர்ப்பகிரகம் ஆகியன வடிவமைக்கப்பட்டுள்ளன.
முன்மண்டபத்தில், தரையிலுள்ள பாறையில்
ஐந்து குழிகளுடைய அமைப்பு காணப்படுகிறது.
ஐந்து குழிகளுடைய அமைப்பு காணப்படுகிறது.
அர்த்த மண்டபத்தில் நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி-பூதேவி சமேத புண்டரீகாட்சப் பெருமாள், ஹயக்ரீவர், நரசிம்ம மூர்த்தி, அமர்ந்த கோலத்தில் ஸ்ரீதேவி-பூதேவி சமேத வைகுண்டநாதன் ஆகியோர் காட்சியளிக்கின்றனர்.


கருவறையில் இரு தூண்கள் ஹரி நேத்திர தூண்கள் இதன் மூலம் சிருஷ்டி, ஸ்திதி, லயம் என்ற மூன்று வாயில்கள் வழியாக பள்ளி கொண்ட பெருமாளாக, மூலவரான அனந்த பத்மநாபனை கண் நிறைய தரிசிக்கலாம்.
பெருமாளின் திருவடிகளை தாமரை மலர்கள் தாங்குகின்றன.
பெருமாளை சுற்றி இறக்கை விரித்த கருடன், இட்ச, கின்னர, கிம்புருடர்கள், தும்புரு, நாரதர், வித்யாதரர், இந்திரன், வருணன், வாயு, குபேரன், பிரம்மா, அக்கினி, சூரியன், சந்திரன், யமன், காமதேனு, கற்பகவிருட்சம், அட்சயபாத்திரம், மது-கைடபர் ஆகியோர் பெருமாளை வழிபட்டபடி காட்சியளிக்கின்றனர்.


பெருமாள் தனது வலது கரத்தால் திவாகர மகரிஷிக்கு
ஆசி வழங்குகிறார்.
பெருமாள் தனது வலது கரத்தால் திவாகர மகரிஷிக்கு
ஆசி வழங்குகிறார்.
பூமாதேவி பெருமாளுக்கு பாத சேவை செய்கிறார்.

On the back wall, Brahma is shown seated on a lotus which emerges from the naval of Vishnu.

லட்சுமி நாராயண பெருமாள், உற்சவ மூர்த்தியான ரங்கநாதர்,
சந்தான கோபாலரும் அருள்பாலிக்கின்றனர்.
On the back wall, Brahma is shown seated on a lotus which emerges from the naval of Vishnu.
லட்சுமி நாராயண பெருமாள், உற்சவ மூர்த்தியான ரங்கநாதர்,
சந்தான கோபாலரும் அருள்பாலிக்கின்றனர்.

ஸ்ரீகண் நிறைந்த பெருமாள்’ என்றழைக்கப்படும் இந்த மூலவர், திருவனந்தபுரம் பத்மநாபசுவாமிக்கு நிகரானவர் .
கண் சம்பந்தப்பட்ட நோய்கள், கண் திருஷ்டி எல்லாம்,
ஸ்ரீகண்நிறைந்தபெருமாளின் அருளால் நிவர்த்தியடைகின்றன. ஏராளமான பக்தர்கள் கண் பார்வை பெற்றுள்ளனர்.
ஸ்ரீகண்நிறைந்தபெருமாளின் அருளால் நிவர்த்தியடைகின்றன. ஏராளமான பக்தர்கள் கண் பார்வை பெற்றுள்ளனர்.
முன்மண்டபத்திலுள்ள 5 குழிகளில் வலது கை ஐந்து விரல்களை வைத்து இடது முழங்கையை தரையில் ஊன்றி மண்டியிட்டு ஹரிநேத்திர தூண்கள் இடையே மூன்று வாயில்கள் வழியாக பள்ளி கொண்ட பெருமாளை தரிசிப்பதன் மூலம் ஏழு பிறவிகளில் ஏற்பட்ட பித்ரு சாபம் உள்ளிட்ட தோஷங்கள் அனைத்தும் அறவே நீங்கும் என்பது நம்பிக்கை.
பெருமாளின் பாதங்களை தாமரை மலர் தாங்கியுள்ளதால்
அந்தப் பாத தரிசனம் மிகுந்த செல்வத்தை அளிக்கும் ...
அந்தப் பாத தரிசனம் மிகுந்த செல்வத்தை அளிக்கும் ...
பெருமாளின் அழகிய திருமேனி மீண்டும், மீண்டும் பார்க்க தோன்றும். இதனால் ஒரு முறை இங்கு தரிசனம் செய்த பக்தர்கள் தொடர்ந்து வருகின்றனர்.
துவாரபாலகருக்கு இரண்டு கைகள் மட்டும் உள்ளன. மற்ற கோயில்களில் நான்கு திருக்கரங்களோடு துவார பாலகர்கள் காட்சியளிப்பார்கள்.

குடவரைக் கோயிலில் சிவா-விஷ்ணு ஆகிய இருவரும் ஒரே மலையில் இருப்பதால், பிரதோஷ நாட்களில் கிரிவலம் வருகிறார்கள்.
துவாரபாலகருக்கு இரண்டு கைகள் மட்டும் உள்ளன. மற்ற கோயில்களில் நான்கு திருக்கரங்களோடு துவார பாலகர்கள் காட்சியளிப்பார்கள்.
குடவரைக் கோயிலில் சிவா-விஷ்ணு ஆகிய இருவரும் ஒரே மலையில் இருப்பதால், பிரதோஷ நாட்களில் கிரிவலம் வருகிறார்கள்.
தஞ்சாவூர் - திருச்சி நெடுஞ்சாலையில், செங்கிப்பட்டி அடுத்த கிள்ளுக்கோட்டை பிரிவு சாலையில் இருந்து 15 கி.மீ. தூரத்தில் இத்தலம் அமைந்துள்ளது.










அறியாத செய்திகள் சகோதரியாரே நன்றி
ReplyDeleteதிருமணம் கோட்டைக்கு பின்புறமுள்ள கோயிலிலும்
இதே போன்ற குடைவறைக் கோயிலைக் கண்டிருக்கின்றேன்
அருமையான தரிசனம் கிடைக்கப் பெற்றேன்..
ReplyDeleteபுதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குடைவரை கோயிலா! வாய்ப்பு கிடைக்கும் போது சென்று வர வேண்டும்...
5 குழிகள் திருவரங்க கோவிலின் அஞ்சு குழி மூன்று வாசலை நினைவூட்டுகிறது...
ஏரழிஞ்சி மரத்தின் தகவல் ஆச்சரியமூட்டுகிறது...
விஜயவாடா அருகில் உள்ள உண்டவல்லி குகையிலும் பள்ளி கொண்ட பெருமாளும்.... சுவற்றில் பிரம்மா முதலியோரும் இப்படித் தான் காட்சியளித்தனர்...
சிறப்பான தகவல்கள்.. நன்றி..
கண்(ணுக்கு) நிறைந்த பெருமாளின் தரிசனம் பரவசம் தருகிறது. அழகான புகைப்படங்களும், அரிய தகவல்களும் (வழக்கம் போல்) வெகு சிறப்பு!
ReplyDeleteவணக்கம்!
ReplyDeleteசகோதரி அனைத்தும் அறியாத விபரங்கள். சென்று தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் பெருகுகிறது. ஆனால் கோவில்கள் பழுதடைந்து கொண்டிருப்பது போல் தெரிகிறது அது தான் மனதுக்கு வருத்தமாக இருக்கிறது. அனைத்தும் அருமை வழமை போல.
ஏழு ஜென்மப் பாவம் தீருமென்றால் நிச்சயம் தரிசிக்க வேண்டும்.
நன்றி ...! தொடர வாழ்த்துக்கள்....!
அறியாத தகவல்கள் + கோயில்... சிறப்பான படங்கள் மூலம் தரிசனம் கிடைத்தது அம்மா... நன்றி...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
மிகவும்
ReplyDeleteஅன்பாகவும்
அழகாகவும்
அசத்தலாகவும்
அதிர்ஷ்டமாகவும்
அற்புதமாகவும்
அறிவாளியாகவும்
ஆரோக்யமாகவும்
வளர்ந்து
அன்றாடம்
என்
மனதுக்கும்
கண்களுக்கும்
மகிழ்ச்சிகளை
மட்டுமே
விருந்தாக்கி
இன்றுடன்
மூன்றாண்டுகள்
நிறைவு
பெறும்
“மணிராஜ்”
என்ற
மழலையான
என்
செல்லக்
குட்டிக்
குழந்தைக்கு
[ என்
பட்டுத்
தங்கமான
வலைப்பூவுக்கு ]
என்
அன்பான
இனிய
தித்திக்கும்
நல்வாழ்த்துகள்.
பிரியமுள்ள
VGK
>>>>>
ஸ்ரீ கண் நிறைந்த பெருமாளை இன்று தாங்கள் எனக்கு தரிஸிக்கக் கொடுத்துள்ளது, தங்களின் அதி புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்துவதாகவும், என் கண்களுக்கு மிகவும் ஆறுதல் அளிப்பதாகவும் உள்ளது.
ReplyDeleteஎல்லாப் படங்களையும் கண்களில் ஒற்றிக்கொண்டேன். முதல் படமே மிகவும் அற்புதமாக உள்ளது.
>>>>>
மலையடிப்பட்டிக்கே தாங்கள் என்னை அழைத்துச் சென்று ஸ்ரீ கண் நிறைந்த பெருமாளை, கண்குளிர ஸேவிக்க வைத்தது போன்ற திருப்தியோ திருப்தி ஏற்பட்டது.
ReplyDeleteஸ்ரீ கண் நிறைந்த பெருமாள் நிச்சயம் எனக்கு அருள் புரிவார் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
தங்களுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.
>>>>>
மேலும்
ReplyDeleteமேலும்
தங்களின்
புகழ்
பாரெங்கும்
ஒலிக்கட்டும்
ஜ க ம ணி யா க ! ;)
>>>>>
மேலும்
ReplyDeleteமேலும்
தங்களின்
புகழ்
பாரெங்கும்
ஒலிக்கட்டும்
ஜ க ம ணி யா க ! ;)
>>>>>
அனைத்துக்கும் ஒட்டு மொத்தமாக என் மனம் நிறைந்த பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள். நன்றியோ நன்றிகள்.
ReplyDeleteசகல செளபாக்யங்களுடனும் தாங்கள் நீடூழி வாழ்க !
o o o o o
மலையடிப் பட்டி கண்ணிறைந்த பெருமாளின் தரிசனத்தை கண் நிறையக் கண்டேன். நன்றி பகிர்விற்கு.
ReplyDeleteமிக மிக ஆச்சர்யமான ஆனந்தமான தரிசனம்.
ReplyDeleteஉண்மையில் - கண் நிறைந்த பெருமாள் தான்.
மிக்க மகிழ்ச்சி!..
எங்களுக்கு தற்சமயம் முகவும் தேவையான ஒரு பரிகாரத்தை காட்டியுள்ளீர்கள். அடுத்த முறை இந்தியா வரும்போது, கண்டிப்பாக இந்த கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று முடிவு எடுத்திருக்கிறேன்.
ReplyDeleteஇந்த பதிவை பகிர்ந்துக்கொண்டதற்கு மிக்க நன்றி அம்மா.
மலையடிப்பட்டி குடிவரைகோவில்கள் பற்றிய அரிய தகவல்கள் அறிய முடிந்தது.கண்நிறைந்த பெருமாளை கண் நிறைய காணவைத்ததற்கு நன்றி
ReplyDelete