




மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தல் கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து என்னைக்
கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழீ நான்
என்று பெரிதினும் "பெரிது" கேட்டுப்பெற்ற ஸ்ரீஆண்டாளின் கனவு நனவாகிய பெருமை மிக்க ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் திருப்பாவை உற்சவ திருவிழா நடைபெறும்
கோலாகலமாக பகல் பத்து, ராப்பத்து, எண்ணெய் காப்பு என தொடங்கும் விழாவில், முதலில் பகல் பத்து வைபவ விழாவில் தினமும் ஆண்டாள் மற்றும் ரங்கமன்னாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று சிறப்பு நிகழ்ச்சியான வைகுண்ட ஏகாதசி திருநாளான அதிகாலையிலேயே நடை திறக்கப்படும்..!

சொர்க்கவாசல் திறக்கப்பட்டதும், பக்தர்கள் கோவிந்தா கோஷத்துடன் பெரிய பெருமாள் முதலில் அதன் வழியே வந்து ஆண்டாள், ரங்க மன்னார், பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்கள்..1

![]() |
ஸ்ரீஆண்டாள் எண்ணைய்காப்பு சேவை கண்டருளிய பின், நீராட்ட தொட்டிக்கு எழுந்தருளி அலங்கார திருமஞ்சனம், அம்மானை விளையாடுதல், படியேற்ற சேவை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும்..!![]() |
ஒவ்வொரு நாளும் ஸ்ரீஆண்டாள் புறப்பாடு நடைபெற்று, வெவ்வேறு மண்டபங்கள் வழியே எண்ணெய்காப்பு மண்டபம் எழுந்தருளிஒவ்வொரு நாளும் வெவ்வேறு திருக்கோலத்தில் ஸ்ரீஆண்டாள் பக்தர்களுக்கு அருள்பாலிப்பது கண்கொள்ளாக்காட்சி..! |


தங்கப்பல்லக்கில் நின்ற கோலத்தில் ஸ்ரீஆண்டாள் அருள்பாலிக்க
ஸ்ரீமணவாள மாமுனிகள் மங்களாசாசனம் நடைபெறும்..!
ஸ்ரீஆண்டாளுக்கு, ரெங்கமன்னாருடன் சேர்த்து சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்ற, பின் மூலஸ்தானம் எழுந்தருளுவார்..!.
ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ஸ்ரீரங்கம் வரை வழி எங்கும் தோரணங்கள் கட்டி பல்லக்கில் ஆண்டாளை ஏற்றிக் கொண்டுவந்து தன்னோடு அவளை ஐக்கியப்படுத்திக் கொண்டான் என்பது ஆண்டாளுடைய வரலாறு.
“மானிடர்க்கென்று பேச்சுப்படின் வாழகில்லேன் கண்டாய், மன்மதனே!என்று மன்மதனையே வென்றவள்.. திருப்பாவை பாடல்களை பாடியதை நினைவுபடுத்தும் விதமாக மார்கழி மாதம் 30 நாட்களும் ஆண்டாள் பாடிய திருப்பாவைகள் கோவிலில் பாடப்பட்டு பூஜை செய்யப்படுகிறது.
ஆண்டாள் கோவிலில் பகல்பத்து உற்சவ திருவிழாவில் ஆண்டாள் தனது பிறந்த வீடான பெரியாழ்வார் வீட்டுக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியில் பெரியாழ்வார் வழிவந்த வேதபிரான் பட்டர் தலைமையில் ஆண்டாளுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டு திருநாழிகைக்கு அழைத்து செல்லப்படுவார்.

அங்கு அவருக்கு சீதனமாக பச்சை காய்கறிகள், கரும்பு, கிழங்கு மற்றும் ஆண்டாளுக்கு மிகவும் பிடித்தமான மணி பருப்பு, திரட்டு பால் போன்றவை வழங்கப்படும்..!பின்னர் வேதபிரான் இல்லத்தில் தயாரிக்கப்படும் உணவு அவருக்கு படைக்கப்பட்டு பூஜை நடக்கும் ... தொடர்ந்து பகல்பத்து திருவிழா ஆண்டாள் வடபத்ர சயனர் சன்னதியில் கோபாலவிலாசம் என அழைக்கப்படும் பகல்பத்து மண்டத்தில் திருப்பாவை, திருப்பல்லாண்டு, அரையர் சேவை நடைபெறும்..!


நீராடல் உற்ஸவத்தின் ஒவ்வொரு நாளும் தங்கப் பல்லக்கில்
வட பெருங்கோவிலின் ராஜகோபுர வாசலில் ஸ்ரீ ஆண் டாள் எழுந்தருள, நாள்பாட்டு’ வைபவம் நடைபெறும். அதாவது, ஒவ்வொரு நாளும் அந்த நாளுக்கான திருப்பாவைப் பாடல் பாடப்படுவதே இந்த நிகழ்ச்சி.
இதில் ‘மாலே மணிவண்ணா’ பாசுரத்தை ஸ்ரீ ஆண்டாளே சொல்வதாக ஐதீகம். இந்தப் பாடல், ஆலின் இலை யாய் அருளேலோ எம்பாவாய்’ என்று முடிவுறும்.
சமஸ்கிருதத்தில் ‘வட விருட் சம்’ என்றால் ஆலமரம் என்றும், ‘பத்ரம்’ என்றால் இலை என்றும் பொருள் ஆக... ‘வடபத்ரசாயி’ என்பதையே, ‘ஆலின் இலையாய்’ என்று அழகுத் தமிழில் ஆண்டாள் கூறுகிறாள்.
ஸ்ரீ ஆண்டாள் நீராடல் உற்சவத்தின்
2ஆம் நாள் கள்ளழகர் திருக்கோலம்.
3ஆம் நாள் கண்ணன் கோலம்,
4ஆம் நாள் முத்தங்கி சேவை,
5ஆம் நாள் பெரியபெரு மாள் கோலம்,
6ஆம் நாள் மஹாராணியாக அமர்ந்த கோலம்,
7ஆம் நாள் தங்க கவச சேவை என தரிசனம் தருவது சிறப்பு.
திருமுக்குளம் கரையில் உள்ள நீராட்ட மண்டபத் தில், மாலை 3 மணி க்கு ஆண்டாளுக்கு ‘எண்ணெய் காப்பு’ வைபவம் நடை பெறும்.
நெற்றிச் சுட்டி, தலைநகர் தங்க ஜடை, சூரிய சந்திரர், ராக்கொடி ஆகிய தலை அலங்காரத்துடன், சவுரி தரித்து கோதா ராணியாக அமர்ந்த நிலையில் காட்சி தரும் ஆண்டாளின் அழகுக் கோலத்தைத் தரிசிப்பது பாக்கியமே!
‘பிறகு, தலையில் அணிந்துள்ள ஆபரணங்களை ஒவ்வொ ன்றாக எடுத்து, தலையைக் கோதி, சிடுக்கு நீக்கி, சுகந்த தைலம் சாத்துவர். இவ்வாறு மூன்று முறை எண்ணெய் காப்பு சாற்றி, சவு ரியை பெரிய கொண் டையாக முடித்து மலர் மாலைகள் அணிவிப்பர். தொடர்ந்து, ‘பத்தி உலாத்துதல்’ வைபவம் முடிந்து நீராடல் வைபவம்.
அப்போது சங்க நிதி, பதும நிதி மற்றும் ஆயிரம் துளைகள் கொண்ட வெள்ளித் தாம்பாளம் கொண்டு மஞ்சள் மற்றும் திரவியப் பொடிகளால் அபிஷேகம். முடிவில் தங்கக் குடத்தால் அபிஷேகம் செய்வார்கள்...!





உற்சவ திருவிழா தகவல்கள் + விளக்கங்கள் அனைத்தும் மிகவும் அருமை... படங்கள் மிகவும் சிறப்பு அம்மா... நன்றி...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
திருப்பாவை உற்சவ திருவிழா அறிந்தேன் நன்றி சகோதரியாரே
ReplyDeleteமிக அருமை.
ReplyDeleteபடங்கள் ஆண்டாள் மார்கழி உற்சவ சேவையை நேரில் பார்த்த உணர்வை கொடுத்தது.
வாழ்த்துக்கள்.
உற்சவ விழாவை நேரடியாகத்
ReplyDeleteதரிசிப்பதைப் போல இருந்தது
அருமையான விளக்க உரையுடன்
அருமையான திருவுருவக் காட்சிகளுடன்
சிறப்பான பதிவு தந்தமைக்கு மனமார்ந்த நன்றி
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாளைப் பற்றிப் பேசுவது என்றால் இந்த ஒரு நாளும் போதுமா!..
ReplyDeleteBeautiful post describing Margazhi Thiruppavai Urchavam of Shri Andal with appealing and eye catching pictures.. Elaborate account of the sevas performed at Srivilliputtur mentioning even the minute details was a joy to read..
ReplyDeleteஆண்டாள் பற்றிய மிக அழகான பதிவு.
ReplyDeleteபடங்கள் அத்தனையும் வழக்கம்போல மிகச் சிறப்பாக உள்ளன.
நானும் வழக்கம்போல என் கண்களில் ஒற்றிக்கொண்டேன். நன்றி.
ஸ்ரீவில்லிப்புத்தூரில் சில நாட்கள் வேலை செய்திருக்கிறேன். உற்சவ சேவை பற்றி அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். படங்கள் வழக்கம்போல அருமை.
ReplyDeleteஇரண்டு வருடங்களுக்கு முன் ஸ்ரீவில்லிபுத்தூர் சென்று நீராட்ட உத்சவம் சேவித்துவிட்டு வந்தோம். இன்று நினைத்தாலும் மனம் குளிர்ந்து போகும் அனுபவம்.
ReplyDeleteஇன்னொருமுறை படங்களையும், தகவல்களையும் உங்கள் பதிவில் படித்தது நிறைவாக இருந்தது.
ஸ்ரீ வில்லிபுத்தூர் உற்சவம் கண்டு மகிழ்ந்தேன். நல்ல விரிவான விளக்கம் படங்களுடன்.
ReplyDeleteஆண்டாள் தரிசனம் அழகு...
ReplyDeleteபடங்கள் கொள்ளை கொண்டன...
அருமையான பகிர்வு அம்மா...
படங்களும் இறை தரிசனமும் மிக அருமை.
ReplyDeleteநேரில் சென்ற உணர்வு தந்தது.
மிக்க நன்றி.
இனிய பொங்கல் வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
உற்சவ திருவிழாவைப் பற்றி தெரிந்துக்கொள்ள முடிந்ததற்கு மிக்க நன்றி.
ReplyDeleteஅழகு மிளிரும் படங்கள் ஆகா
ReplyDeleteஇனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் அக்கா
அம்மாவிற்கு வணக்கம்
ReplyDeleteஉற்சவ தகவல்கள் மற்றும் விளக்கங்கள் உற்சாகம் அளிக்கிறது. தங்களுக்கே நன்றிகள்..
------
தங்களுக்கும், இல்லத்தார் அனைவருக்கும்,நண்பர்களுக்கும் எனது அன்பான தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துகள்..