


எத்தனை கோடி இன்பம் வைத்தாய் - எங்கள்
இறைவா! இறைவா! இறைவா!
சித்தனை அசித்துடன் இணைத்தாய் - அங்கு
சேரும் ஐம்பூதத்து வியனுலகு அமைத்தாய்.
அத்தனை உலகமும் வர்ணக் களஞ்சியமாகப்
பல பல நல்லழகுகள் சமைத்தாய்
பாரதி பாடிய அற்புதமான தீந்தமிழ்ப்படல்கள் கண்களிலும் மனதிலும்
புத்துணர்வு பூக்கச் செய்யும்...

உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக
காற்றில் மிதக்கும் ஒலிகளிலே கடலில் தவழும் அலைகளிலே
இறைவன் இருப்பதை நானறிவேன் என்னை அவனே தானறிவான்
தவழும் நிலவாம் தங்கரதம் தாரகை பதித்த மணி மகுடம்
குயில்கள் பாடும் கொண்டது எனது அரசாங்கம்
எல்லாம் எனக்குள் இருந்தாலும் என்னைத் தனக்குள் வைத்திருக்கும்
அன்னை மனமே என் கோயில் அவளே என்றும் என் தெய்வம்

நீண்டு நெடிய உயரமான மலைகள் அடர்ந்த காடுகள், கால் கொலுசுகளின் ஓசை போல சலசலவென்று ஒலி எழுப்பி வெள்ளி உருகிக் கொட்டுவதுபோன்ற நீர்வீழ்ச்சிகள், காதுகளுக்கு இனிமை தரும், தேமதுர இசைபோல் ஒலிக்கும் பறவைகளின் சப்தங்கள், கண்களுக்கு விருந்தளிக்கும் பச்சைப் பசேல் காட்சிகள், உடலை மென்மையாக தொட்டுத் தழுவும் இதமான குளிர் தென்றல் காற்று என ஒவ்வொரு நிகழ்வையும் கொஞ்சம் அமைதியாக நினைத்துப் பார்த்தாலே . உள்ளமும் உணர்வும் புத்துணர்வடையும்

கற்பனையான நினைவிற்கே இப்படி ஒரு அதிசயம் நிகழ்கிறது என்றால் நிஜமாகவே அந்தப் பகுதிக்குச் சென்றால் நிலை ஆனந்தமடையும்..
மலை வாசஸ்தலங்கள் போனதும் புதிய வானம் புதிய பூமி என்று துள்ளாத கால்கள் குறைவாகவே இருக்கும்.
மனிதன் ஒவ்வொரு முறையும் தன்னை புதுப்பித்துக்கொள்ளவும், எப்போதும் புத்துணர்வுடன் வாழவும் இயற்கை நமக்கும் எல்லா வற்றையும் படைத்துள்ளது.
மெய்மறக்கும் இசை மனக்காயங்களை ஆற்றுகின்ற மருந்தாகின்றது.
என் பாட்டுத் திறத்தாலே இந்த வையத்தினைப் பாலித்திட வேண்டும் என்று பாரதி சொன்னது நிஜமே.
பாடல் காதுகளை வைகுண்ட வாசலாக்குகின்றது.
பாடல் காதுகளை வைகுண்ட வாசலாக்குகின்றது.
மாயக் கண்ணனுக்குத் தாலாட்டுப் பாடலில் தொடங்கி….. என்னோடு தங்கு தங்கென்று சொன்ன தங்கக் குணத்தானை! எங்குநான் காண்பேன் இனி? என்று கவிமணி தொடர்புள்ள எதுகைப் பாடலும் இனிமை சேர்க்கும் அதிசயம் அனுபவித்தவர்களால் உணரமுடியும்..
சமயக் கோவில்கள் கூட இயற்கை சூழ்ந்த பகுதியிலேயே அமைந்திருக்கிறது. பனி சூழ்ந்த இமயமலையில்தான் இந்து சமயக் கடவுளான சிவன் குடியிருப்பதாக புராணங்கள் கூறுகின்றன.

தவம் செய்யும் சித்தர்கள், முனிவர்கள், ஞானிகள், ரிஷிகள் தங்களின் தவம் எளிதில் ஈடேறவே மலைப் பகுதிகளைத் தேர்ந்தெடுத்தனர்.
அமைதியான சூழ்நிலையில்தான் ஆழ்மனம் விழித்துக் கொள்ளும். பிரபஞ்ச சக்தி நிறைந்திருக்கும் என்கின்றனர் சித்தர்கள்.
இந்தியாவில் இமயமலைப் பகுதிகளிலும் மேற்குத் தொடர்ச்சி மலை, கிழக்குத் தொடர்ச்சி மலை, விந்திய மலைத் தொடர்களிலும் அடர்ந்த காடுகள் உள்ளன. கடலால் நிலப்பரப்பு அரிப்பதை தடுக்க இயற்கையாகவே ஒரிசாவில் சுந்தரவனக் காடுகள், தமிழ்நாட்டில் வேதாரண்யம், பிச்சாவரம், பகுதிகளிலும் காடுகள் நிறைந்துள்ளன.
திரிபுரா மாநிலம் தாவரங்களின் சொர்க்க பூமி என்றே அழைக்கப்படுகின்றது.
இந்தியாவின் எல்லாப் பகுதியிலும் மலைகள் சூழ்ந்துள்ளன. இந்த மலைகள் ஒவ்வொன்றும் தனிச்சிறப்பு வாய்ந்தவை. இங்குள்ள அரிய வகையான மூலிகைகளைப் பற்றி அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால் நாம் காடுகளையும், மலை வளங்களையும் வெகுவாக அழித்துக் கொண்டிருக்கிறோம்.
நம் முன்னோர்கள் கிராமங்களில் பயன்தரும் மரங்களை அதிகம் வளர்த்தனர். வீடுகளைச் சுற்றி தோட்டங்களை அமைத்தனர். இதனால் தூய்மையான காற்றை சுவாசித்தனர். ஆரோக்கியமாக வாழ்ந்தனர். ஆனால் நாமோ அதற்கு எதிர்மறையாக நடந்து கொண்டிருக்கிறோம்.
இதனால் நீர் வளம் குறைந்தும், தூய்மையான காற்றும் கிடைக்காமல் ஆயுள் முழுவதும் நோயோடும் மருந்தோடும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
ஆனால் மலைப் பகுதிகளில் அடர்ந்த காடுகளில் வாழும் மக்களைப் பாருங்கள். நோயின்றி ஆரோக்கியமாக வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.
இந்த மலைமக்களின் நோயற்ற வாழ்வுக்குக் காரணம் தூய்மையான காற்றும், இரசாயனம் கலக்காத இயற்கை உணவுகள்தான் என்கின்றனர் நம் ஆராய்ச்சியாளர்கள்.

தமிழக மலைப்பகுதியில்தான் அரிய வகையான சந்தனமரங்கள் கிடைக்கின்றன.
சந்தன மரங்கள் வனக் கொள்ளையர்களால் அதிக அளவு அழிக்கப்பட்டு விட்டன.
சந்தன மரங்கள் வனக் கொள்ளையர்களால் அதிக அளவு அழிக்கப்பட்டு விட்டன.


படங்களைப்பார்க்கும்போது எத்தனை கோடி இன்பம்வைத்தாய் இறைவா, இறைவான்னு பாடத்தான் தோனுது.
ReplyDeleteஇயற்கை என்றுமே இன்பம் தான் ராஜி.
ReplyDeleteபடங்களும் பதிவும் அருமை.
நல்ல இயற்கையான படங்கள் செயற்கையுடன்! நல்ல பதிவு! வாழ்க வளமுடன்!
ReplyDeleteநல்ல இயற்கையான படங்கள் செயற்கையுடன்! நல்ல பதிவு! வாழ்க வளமுடன்!
ReplyDeleteNice. Valuable information.
ReplyDeleteஎத்தனைக் கோடி இன்பம்! ;))))
ReplyDeleteஉலகம் பிறந்தது எனக்காக ....
பாடலுடன் கொடுத்துள்ளது தனிச் சிறப்பு.
கோடிக்கணக்கான இன்பமாக கொடுத்திருப்பதால் நன்கு பார்த்து ரஸித்துவிட்டு மீண்டும் வர மேலும் தாமதமாகுமே!
முதல் படத்தில் அசையும் இறக்கைகளுடன் பல வண்ணத்தில் வண்ணத்துப்பூச்சி, நடுவில் அழகாக மொட்டிலிருந்து மலர்ந்து வரும் அந்த அழகிய பட்டு ரோஜா மிகவும் மனதைக கவருகிறது.
ReplyDeleteஇரண்டாவது படம் குற்றால ஐந்தருவியில் குளித்த சுகத்தைத் தந்து மனதை மயக்குகிறது.
ReplyDeleteபாரதி பாடலுக்குக்கீழே கொடுத்துள்ள செங்கதிரவனின் அஸ்தமிப்பும், செவ்வானமும், கீழே அசைந்தாடும் நீரில் அதன் பிரதிபிம்பமும், ஆஹா காணக்கண்கோடி வேண்டும். !;))))
ReplyDeleteஅடுத்த உலக உருண்டை போன்ற படத்தில், இயற்கைக்காட்சிகளே உண்மையான உலகம்; மற்றவையெல்லாம் செயற்கையே;
ReplyDeleteஇயற்கையை செயற்கை என்றுமே வெல்ல முடியாது என்பது போலக் காட்டியுள்ளது அருமை.
படத்தில் காட்டியுள்ள கற்பனை நினைவுகளுக்கே இப்படியொரு மகிழ்ச்சி ஏற்படுகிறது என்றால், தாங்கள் சொல்லியுள்ளது போல நிஜமாக அந்தப் பகுதிகளுக்குச் சென்றால் ஆனந்தமாகத் தான் இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை தான்.
ReplyDeleteபுதிய வானம் .... புதிய பூமி ....
இங்கு தேன் மழை பொழிகின்றது ..
என்று பாடத்தான் தோன்றும்.
துள்ளாத மனமும் துள்ளும்!
சொல்லாத வார்த்தைகள் சொல்லும்!
நிச்சயமாக மனித மனம் தன்னைப் புதிப்பிக்கத்தான் செய்யும் இந்த இயற்கைச் செல்வங்களால்.
இறக்கை கட்டி குளத்து நீரில் குனியும் குழந்தையும், ஊஞ்சலாடும் குழந்தையும் நல்ல அழகோ அழகு தான்.
ReplyDeleteமனதை மயக்குவதாக உள்ளது.
மெய் மறக்கச்செய்யும் இசையும், நல்ல இனிமையான அர்த்தம் பொதிந்த பாடல்களும் காதுகளை வைகுண்ட வாசலாக்குகிறது, என்று உவமை சொல்லியுள்ளது, எனக்கு மிகவும் பிடித்துள்ளது. ;)))))
//மாயக்கண்ணனுக்குத் தாலாட்டில் தொடங்கி, என்னோடு தங்கு தங்கென்று சொன்ன தங்கக் குணத்தானை! எங்கு நான் காண்பேன் இனி?
ReplyDeleteகவிமணி தொடர்புடைய எதுகைப் பாடலும் இனிமை சேர்க்கும் அதிசயம்
அனுபவித்தவர்களால் உணர முடியும்.//
இப்போதே தங்களால் நாங்களும் ஓரளவு அனுபவிக்க முடிந்ததே அதிசயம்! ;)))
ஆகா1என்ன அழகான இயற்கைக் காட்சிகள்!மனதுக்கு இதம்!இன்பம்!
ReplyDeleteஅடடா! இமயமலையில் ஆரம்பித்து அனைத்து மலைகளையும் பற்றி, மலை மலையான தகவல்கள் கொடுத்து மலைக்க வைத்து விட்டீர்களே! ;))))
ReplyDeleteசந்தனமலைக்காடுகளையும் விடாமல் கூறியுள்ளது, சந்தனம் போன்று நறுமணம் கமழ்கிறது.
//இந்த மலைமக்களின் நோயற்ற வாழ்வுக்குக் காரணம் தூய்மையான காற்றும், இரசாயனம் கலக்காத இயற்கை உணவுகள் தான் என்கின்றனர் நம் ஆராய்ச்சியாளர்கள்.//
மிகவும் நல்ல தகவல். அப்படியே அது 100% உண்மையும் கூட.
இன்றைய அழகழகான படங்களும், அரிய பெரிய விளக்கங்களும், ”எத்தனை கோடி இன்பம்!” என்ற தலைப்புத் தேர்வும், வழக்கம் போல மிகச்சிறப்பாகவே உள்ளன.
பாராட்டுக்கள்.
வாழ்த்துகள்.
அழகான பதிவுக்கும், அருமையான பகிர்வுக்கும், இன்று தங்களுக்குள்ள பல்வேறு [கோடிக் கணக்கான இன்பப்] பொறுப்புக்களுக்கு இடையேயும், எங்களுக்காகவே, அதுவும் வழக்கமான நேரத்திற்கு முன்பாகவே வெளியிட்டதற்கும், மனமார்ந்த நன்றிகள்.vgk
தூமையான காற்றும், பூச்சி மருந்து கலக்காத உணவும் நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றது தான்.
ReplyDeleteஇயற்கை இன்பத்தை அள்ளி அள்ளி தந்து விட்டீர்கள்.
நன்றி.
ரசித்தேன்.
ReplyDeleteஇறைவன் வையத்துள் படைத்திட்ட அனைத்துமே
ReplyDeleteஒவ்வொரு அழகு ...
அழகான பதிவு சகோதரி.
ஒவ்வொரு வரிகளும் தகவல்களும் அதற்க்கு ஏற்பான படங்களும், பாடல்களும் என்னையும் இனிய இயற்க்கை சுற்றலாவிர்க்கு இட்டுச்சென்றது. குளிர்ந்த தென்றலை நினயும்போது "எங்கிருந்து வந்ததோ இனிதாகவே தென்றல்" எனும் .A.M. ராஜாவின் பாடலும் மனதில் ஓடுகிறது.
ReplyDeleteஇயற்கை தரும் எழிலான காட்சி
ReplyDeleteஇராஜராஜேஸ்வரியின் அருமையான பதிப்பு
வாழ்த்துக்கள்.....உங்களின் பணி அருமை.
இறைவனின் படைப்பில் எல்லாமே அற்புதமானது தான்...
ReplyDeleteநாம் அவற்றை பாழ்படுத்தாமல் இருந்தால்......
படங்கள் எல்லாமே சூப்பராக இருக்கிறது.
'அமைதியான சூழ்நிலையில்தான் ஆழ்மனம் விழித்துக் கொள்ளும்'
ReplyDeleteஎத்தனை உன்னதமான சூத்திரம் !
பல பிரச்சனைகளுக்கு அமைதியாக இருப்பதே அவற்றை மேலும் வளர்க்காது அல்லது அப்பிரச்சனையில் என்ன முடிவு எடுத்தால் அது சரிவரும் என்பது தெரிய வரும். மனம் எப்போது அமைதியாக இருக்கும்.. அமைதியான சூழல் இருக்கும் இடத்தில் அந்த அமைதி உருவாகும்.
விதுர நீதியை படிக்கும் போது நான் ஒரு விஷயத்தை கற்றுக் கொண்டேன். அதாவது, அதில் விதுரர் என்ன சொல்கிறார் என்றால், முக்கிய முடிவுகளை எடுக்கும் போது பசுமையான காடுகள் சூழ்ந்த, மலையில், குளிர்ச்சியான நிலையில் அமர்ந்து, தூய்மையான காற்றை சுவாசித்து சிந்தித்தால், சரியான முடிவு தோன்றும்.
தங்கள் பதிவின் மேற்கண்ட மேற்கோள் வரிகளை வாசித்த போது எனக்கு இந்த இயற்கை தத்துவம் நினைவுக்கு வந்தது.
உள்ளபடியே இறைவன் நமது பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டுபிடிக்கும் திறனை இயற்கையின் வாயிலாக வழங்கியுள்ளார். கோடி இன்பம் நமது இயற்கையில் கொட்டி கிடக்கின்றது.
உற்சாகம் தரும் பதிவுக்கு வாழ்த்துகள்.
"பூஜை அறை எப்படி இருக்க வேண்டும் ?"
ReplyDeleteவாருங்கள் வாசிக்க அழைக்கின்றேன்...
http://sattaparvai.blogspot.com/2012/01/blog-post_17.html
'எத்தனைகோடி இன்பம்' இயற்கை கொட்டிக் கிடக்கின்றது.
ReplyDeleteஅழகான படங்கள்! அருமையான விளக்கங்கள்!! வாழ்த்துக்கள்!!!பாராட்டுக்கள்..
ReplyDeleteமிகவும் அழகான படங்களுடன் அற்புதமான தகவல்களுடன் சிறப்பான பதிவு
ReplyDelete;) ஸ்ரீராமஜயம்
ReplyDelete2037+10+1=2048
ReplyDelete