ஸாந்த்ரானந்தாவபோதாத்மகமனுபமிதம் காலதேசாவதிப்யாம்
நிர்முக்தம் நித்யமுக்தம் நிகமசதசஹஸ்ரேண நிர்பாஸ்யமானம்
அஸ்பஷ்டம் த்ருஷ்டமாத்ரே புனருரு புருஷார்தாத்மகம் ப்ரஹ்மதத்வம்
தத்தாவத்பாஸி சாக்ஷாத்குருபவனபுரே ஹந்த பாக்யம் ஜனானாம்
மோக்ஷத்தின் உருவாக இருப்பதும், புரிந்துகொண்ட உடன் மாயையிலிருந்து விடுவிப்பதும், குருவாயூர் ஆலயத்தில் நமது கண்முன் ஒளிவிட்டுக்கொண்டிருப்பதுமானவரே, இது மனித குலத்தின் அதிர்ஷ்டம்
ஸ்ரீ குருவாயூரப்பன். அந்த வடிவழகைத் தரிசனம் செய்வோருக்கு அவர், தமது அருளை வாரி வழங்குகிறார்.
கோவையில் புகழ் பெற்ற ஆலயத்தில் நாராயணீயம் வாசித்துக்கொண்டிருந்த நேரம் காஞ்சிபெரியவர் ஆலய கும்பாபிஷேகத்திற்கு வந்து தங்கியிருந்த போது நாராயணீயம் மாதம் இருமுறை துவாதசி திதிகளில் வாசிப்பதை குறிப்பிட்டார்கள் வாசிப்பவர்கள்..
காஞ்சிமுனிவரின் வாக்கிலிருந்து ""மூலம் இல்லாமலா ""என்று சொல் உதிர்ந்தது..
நாராயணீயத்தின் மூலம் எது என்று பார்த்தால் பாகவத்தின் சாரம் நாராயணியம் என்று கண்டார்கள்.. பாகவதமே மூலம்..
ஆலயத்தில் பாகவதம் வாசிக்கத் திரு உள்ளம் கொண்ட நேரம்.. பகவானே ஆனந்தம் கொண்டு கேரளத்தில் பழுத்த வாசிப்பனுபவம் கொண்ட நம்பூதிரிகள் ஒருவர் வந்து பாகவதம் புத்தகம ஒன்றை கையில் வைத்துக்கொண்டு ஆன்ந்தக்கண்ணீருடன் வாசித்துக்கொண்டிருப்பதைக் கண்ணுற்று தங்களுக்கும் வாசிக்க சொல்லித்தரும்படி கேட்டார்கள்..
அவரும் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டு ஒவ்வொரு ஸ்லோகமாக அர்த்ததுடன் சொல்லிக்கொடுத்தார்..காலை சூரிய உதயத்திலிருந்து மாலை சூரிய அஸ்தமனம் வரைதான் படிக்கவேண்டுமாம்.. மதியம் எளிமையாக ரசம் சாதம் போடுங்கள் போறும் என்று சொல்லி சிரத்தையுடன் சொல்லிக்கொடுத்தார்..
அகிலத்திற்கே ஒருநாழி நெல் கொண்டு முப்பத்தாறு அறங்களை வளர்க்கும் அறம்வளர்த்தநாயகி வாடாமல் வதங்காமல் வசதி வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுத்து வருடத்தில் இருமுறை உத்ராயணத்திலும், தட்சிணாயன மாதங்களிலும் பல ஆண்டுகளாக பாகவத பாராயணம்
நடைபெற்றுவருகிறது..
குருவாயூரை பிறந்தகமாகப் பெற்ற மாமி ஒருவர் பாகவத்திலும் நாராயணீயத்திலும் தேர்ச்சி பெற்றவர்.. அங்கே பாகவத புராணமெல்லாம் ஆண்கள்தான் படிக்கவேண்டும் என்ற கட்டுப்பாடுள்ள காலத்தில் சீக்கிரம் சமையல்வேலைகளை முடித்து பெண்களாகச் சேர்ந்து பாகவதம் படித்து உரைகளைப் பார்த்து அர்த்தம் தெரிந்துகொண்டார்களாம்.. இல்லத்தில் விளக்கேற்றி தினமும் பாகவதம் நாராயணீயம் பாராயணம் செய்யும் வழக்கம் கொண்டவர்கள்..
இவ்வாறு கோபிகைகளாக கண்ணன் புகழ்பாடும் சத்சங்கம் உருவானது..
மிகச்சிறு பிராயத்து பிள்ளைகள் பாகவதம், பகவத் கீதை, அனுமன் சாலீஸா திருப்புகழ், மற்றும் பல ஸ்லோகங்களை மனப்பாடமாக ராகங்களுடன் பாடுவதை கேட்டு வியந்திருக்கிறே.ன் அப்படி ஒரு வளர்ப்பு...
பக்தியில் திளைத்த அந்த நம்பூதிரிப்பிராமணருக்கு இரத்தப்புற்று நோயாம்..அவருக்கு மூக்குப்பொடி போடும் வழக்கம் உண்டு..
நல்லவேளை பல சினிமாக்களில் யாரையாவது பரலோகம் அனுப்பவேண்டுமென்றால் இந்தப் புற்று நோய் தலையில் சுலபமாக பழி போடும் படங்களைப்பார்த்து இடிந்து போகவில்லை..
அவருக்கு சினிமாபார்க்கும், சீரியல் பார்க்கும் வழக்கம் எதுவும் இல்லை..
நல்லவேளை பல சினிமாக்களில் யாரையாவது பரலோகம் அனுப்பவேண்டுமென்றால் இந்தப் புற்று நோய் தலையில் சுலபமாக பழி போடும் படங்களைப்பார்த்து இடிந்து போகவில்லை..
அவருக்கு சினிமாபார்க்கும், சீரியல் பார்க்கும் வழக்கம் எதுவும் இல்லை..
வீடியோகேம் விளையாடும் இளம் வயது சிறுவன் கட்டுப்பாடில்லாத செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்த மருத்துவர் சிகிச்சை அளிக்கிறார் என்பதைப்புரிந்துகொண்டு வீடியோகேம் விளையாட்டில் துப்பாக்கியால் இலக்காக தன் பெருகும் செல்களைச்சுடுவதாக கற்பனையில் நினைத்து விளையாட்டாகவே புற்று நோயைப் புறம் கண்ட முன்னோடி போல தன் பக்தியால் ஹே குருவாயூரப்பா! நாராயணா என்று கதறி நம்பிக்க்கையுடன் பிரார்த்தித்து பட்டத்திரியின் வாத நோயை போக்கின பரந்தாமன் மேல் பாரத்தைப்போட்டார்..
சரியான நவீன சிகிக்சையும் பெற்று இப்போது அவர் நலமடைந்துள்ளார்..
சரியான நவீன சிகிக்சையும் பெற்று இப்போது அவர் நலமடைந்துள்ளார்..
பிரார்த்தனையுடன் துப்பாக்கியையும் தயாராகவைத்துக் கொள்ளுங்கள் என்ற போர்த் தளபதியின் ஆணை போல செயல்பட்டார்..
கடவுள் அன்றாடம் பல அற்புதங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்.அன்றாடம் நடந்து கொண்டிருப்பதால் நாம் அவைகளுக்கு அதிக மதிப்பு தருவதில்லை. கடவுள் தன் பணியை தொடர்ந்து செய்து கொண்டுதான் இருக்கிறார்..
தெய்வீக அதிர்வுகள் நமக்கு ஒரு பரவசத்தையும், நம்பிக்கையும் கொடுக்கும். அதற்குத்தான் கூட்டுப் பிரார்த்தனை பற்றி சிறப்பாக பேசுகிறோம்.
வாழ்க்கையில் நடந்த, ஆனால் எளிதில் நம்ப முடியாத அற்புதத்தைப் பற்றி எழுதியிருக்கிறேன்.. ..
நேசம் +யுடான்ஸ் இணைந்து வழங்கும் கதைப் போட்டிக்காக !
நேசம் +யுடான்ஸ் இணைந்து வழங்கும் கதைப் போட்டிக்காக !
ஆகவே நலமளிக்கும் நம்பிக்கையான பிரார்த்தனையும், தகுந்த மருத்துவ சிகிச்சையும் நிச்சயம் நலம் பெற வழிவகுக்கும் நேசமுடன் அந்த விழிப்புணர்வை வளர்க்கும் குழுவினருக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்..
மூலம் இல்லாமலா?
ReplyDeleteபாகவதமே மூலம்.
அருமை. ;)))))
போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்.
ReplyDeleteநம்பிக்கையுடன் ஸ்ரீ குருவாயூரப்பனைப் பிரார்த்தித்த அந்தப் பட்டத்திரி போல இவரும் காக்கப்பட்டது கேட்க மிக்க மகிழ்ச்சி!
ReplyDelete”நேசம் மறப்பதில்லை நெஞ்சம்”
ReplyDeleteஎன்ற தலைப்பு, போட்டிக்குப் பொருத்தமானதாகத்
தேர்ந்தெடுத்துள்ளது அழகு!
படங்கள் யாவும் வழக்கம்போல் அருமை.
ReplyDeleteகடைசி படத்தில் யானைக்கூட்டமும், நடு படத்தில் அழகாக ஏற்றப்பட்டுள்ள வரிசையான விளக்குகளும் மிகவும் ரம்யமான காட்சியாக உள்ளன.
ஸ்ரீ குருவாயூரப்பன் நம் அனைவரையும் நிச்சயமாகக் காப்பாற்றுவார்.
அன்பான வாழ்த்துகள்.
பாராட்டுக்கள். நன்றிகள்.
கூட்டுப்பிரார்த்தனைகளுக்கு நிச்சயம் பலன் இருக்கத்தான் செய்யும்.
ReplyDeleteஅதனால் தான் ஸ்ரீ ராதா கல்யாணம், ஸ்ரீ ஸீதாகல்யாணம் போன்ற மஹோத்ஸவங்கள், பஜனைகள், திருவிளக்கு பூஜைகள் என ஆங்காங்கே மிகச்சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
இதுபோன்றவற்றில் நாமும் கொஞ்சமாவது ஈடுபடுவதால் மனதுக்கு மிகவும் சந்தோஷங்கள் ஏற்படுவதும் கண்கூடு.
இதுபோல நிகழ்ச்சிகள் தினமும் நடக்காதபோது, நாம் தனியே அமர்ந்து, சற்று நேரமாவது, மனதை ஒருமுகப்படுத்தி தியானம் செய்வதும் மிகமிக அவசியம். சந்தியாவந்தனம் காயத்ரி ஜபம், ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் போன்றவற்றின் தாத்பர்யமே இது தான்.
அலைமோதும் நம் மனதை, அணைபோட்டுத் தடுக்கத்தான், இவையெல்லாம் நம் முன்னோர்களால் சொல்லிச்சொல்லி, பழக்கத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்...
ReplyDeleteகூட்டு பிராத்தனைக்கு நிச்சியம் பலனுண்டு.
ReplyDeleteநம்பிக்கை பொய்பது இல்லை.
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்,
breathtaking photos! அதுவும் கடைசிப்படம்.. அத்தனை யானைகளை இப்பொழுது தான் முதல் முறையாக ஒரு சேரப் பார்க்கிறேன்.
ReplyDeleteசுவையான கட்டுரை. வாழ்த்துக்கள்.
//கடவுள் அன்றாடம் பல அற்புதங்களை நிகழ்த்திக் கொண்டிருப்பதால்,நாம் அவைகளுக்கு அதிக மதிப்பு தருவதில்லை, கடவுள் தன் பணியை தஒடர்ந்து செய்து கொண்டுதான் இருக்கிறார்.//
ReplyDeleteசிறப்பான கருத்து,மேடம்.
பரிசு பெற வாழ்த்துக்கள்.
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.
ReplyDeleteபாகாவத -நாராயணீயத்தின் பெருமைகளைச் சொன்னதற்கு நன்றி. அருமையாண பதிவு, வெற்றிபெற வாழ்த்துக்கள்
ReplyDeleteபோட்டியில் வெற்றி பெற நல்வாழ்த்துகள். நட்புடன் சீனா
ReplyDeleteபோட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.
ReplyDeleteபகவானுக்கு கோடி நமஸ்காரம். பக்தர் நலம் பெற்றது மெத்த மகிழ்ச்சி.
ReplyDeleteபோட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்.
ReplyDelete2140+7+1=2148
ReplyDelete