சுற்றுப்பயணிகளின் சொர்க்க பூமியாக லங்காவி தீவுகள் கொண்டாடப்படுகின்றன.
தீபகற்ப மலேசியாவின் வடக்கிழக்கில் உள்ள 104 தீவுகளை உள்ளடக்கியது லங்காவி தீவு. அந்தமான் கடலும் மலாக்க நீரிணையும் இணையும் இடத்தில்லங்காவி தீவு அமைதிருக்கிறது
தீபகற்ப மலேசிய வடக்கிழக்கு கடற்கரையிலிருந்து 30 கிலேமீட்டர் தொலைவில் உள்ளது.
கெடா மாநிலத்தின் ஓரு பகுதியாக கருதப்படுகிறது. தாய்லாந்து எல்லைக்கு அருகில் இருக்கிறது. இந்த தீவுக்கு வரும்போது செல்பேசியில் மலேசியா மற்றும் தாய்லாந்து தொலைதொடர்பு சிக்னல் மாறி மாறி காட்டும்.
லங்காவி என்றால் மலாய் மொழியில் செம்பழுப்பு கழுகு என்று பொருள் படும். மலாய் மொழியில் helang என்றால் கழுகு. இதன் சுருக்கம் "lang". Kawi என்றால் செம்பழுப்பு என்று பொருள். இரு சொற்களையும் சேர்த்து Langkawi என்று அழைக்கப் படுகின்றது.
லங்காவித் தீவிற்கு கெடாவின் பொன்கலன் என்று சிறப்புப் பெயர் உண்டு..
இராமனின் பாதச்சுவடு லங்காவியில் இருப்பதாகச்சொல்கிறார்கள்..
லங்காவி டூட்டி ஃப்ரீ ஜோன் (Duty Free Zone)
பொருட்கள் மிக மிக மலிவாகவூம் வரிவிலக்கும் கொடுக்கப்படும். குறைதது 48 மணி நேரம் லங்காவியில் இருந்தாலே வரிவிலக்கு வாங்கும் பொருட்களுக்கு அளிக்கப்படும்.
12 மீட்டர் உயரபருந்து லங்காவி என்ற பெயருக்கு அடித்தளம்..
ஃபெர்ரி (Ferry) சவாரிதான் மிகவும் ரசிக்கும் மிக அருமையான பயணம்.
லங்காவியில் நிறைய புராண மற்றும் விசித்திர கதைகள் வழங்கப்படுகிறது..
லேஜேண்டா பூங்கா (Taman Legenda).50 ஏக்கர் நில பரப்புடன் அமைதியான சுற்று சூழல் கொண்டது..
திறந்த வெளி தொல்பொருட்காட்சி நிலையம் (Open Air Museum)-சிறப்பானது..
பூங்கா முழுதும் பூத்து குலுங்கும் பூக்கள், மரங்கள், லங்காவி லெஜெண்ட்ஸ் என்ற பல அரிய மரங்கள் , இயற்கை காட்சிகள் எனறு நடக்கும் நடைபாதை முழுதும் அலங்கரித்திருக்கும்.
1989-இல் கலந்துக்கொண்ட எல்லா நாட்டு கொடியும் ஏற்றப்பட்டுள்ள குவாவில் உள்ள சுற்றுலா தளம் CHOGM Park காமன்வெல்த் மீட்டிங்கிற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டது...
cable car)
பில்லா படத்தில் (அஜித்) ஒரு தொங்கு பாலத்திலிருந்து கிழே இறங்குவாரே, அந்த பாலத்தின் அருமையான காட்சி..
பில்லா பாலம் !!!
காற்று அதிகம் அடித்தால் பாலம் அசையும்.
பாலத்தில் இருந்து பார்த்தால், கடற்கரை, மலை, தீவுகள், பாதாளம் என்று வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத காட்சி.
1980 களின் தொடக்கத்தில் இந்ததீவைச் சுற்றுலாத்தளமாக மாறி அமைக்க திட்டமிட்டு அதனைச் செவ்வனே செய்து முடித்தவர். தான் ஓய்வு பெற்று விட்டாலும் அதன் எஞ்சிய வேலைகள் சுணக்கம் காணாமல் நடந்த வண்ணமிருக்க முன்னேற்பாடுகள் செய்துவிட்டு வெளியேறியவர்.மலேசியாவின் நான்காவது பிரதமராக 20 ஆண்டுக்கும் மேலாக இருந்த துன் மகாதிர் ( துன் என்பது பேரரசர் வழங்கிய மிகப்பெரிய கௌரவ விருது)
தென்கிழக்காசியாவின் இன்னொரு உல்லாசப் பயணிகள் மையமாக மாறி வருகிறது லங்காவி.
மேல் நாட்டுப்பணக்காரர்கள் சொந்தமாக உல்லாசக்கப்பல்களை வாங்கி கடலில் உல்லாசமாகப் பொழுதைப்போக்குகிறார்கள். அதற்கான இரண்டு துறைமுகங்களை அரசு கட்டிக்கொடுத்திருக்கிறது. குடும்பமாகவோ தனியாகவோ கடலாடி மகிழும் வெளிநாட்டுக்காரர்களின் சொர்க்கபூமி!
மலைத்தொடர்களுக்கு இடையே கேபிள் கார்களை ஓடவிட்டு பிரமிப்பை உண்டாக்கியிருக்கிறார்கள். கடல் திட்டிலிருந்து ஏறக்குறைய 1000 மீட்டர் உயரத்தில், ஒரு மலை உச்சிக்கும் இன்னொரு மலை உச்சிக்கும் இடையே பாலம் கட்டி கடலையும் அதன் அழகையும் ரசிக்க வசதி செய்திருக்கிறார்கள். 1000 மீட்டர் மேலிருந்து பார்த்தால் கால்கள் சில்லிட்டுக்கொள்கிறன. ஒட்டினார்போல கல் மலை சரிந்து கடலை நோக்கி ஓடுகிறது.குளிர்த் தென்றல் இதமாக இருக்கிறது.
லங்காவித் தீவுக்கு நம் நாட்டு இராமாயணம் போன்ற கதை வழங்கப்படுகிறது..
இளம் மனைவியான.மசூரியின் கணவர் வெளியூர் சென்றுவிட, அவள் குற்றம் சுமத்தப்பட்டு , எவ்வளவு மன்றாடியும் அக்கிராமத்து சட்டப்படி அக்கிரமமாக , ஊர்க்காரர்கள் மத்தியில் மசூரி மரத்தில் கட்டிப்போட்டு ஈட்டியால் குத்த(அவள் உடலிலிருந்து வெள்ளை ரத்தம் வடிந்ததாம்-தூய்மையானவள் என் நிறுவ) ......
லங்காவிக்கு இனி வரும் ஏழு தலைமுறைக்கு விமோசனம் கிடைக்காது என்ற மசூரியின் சாபம்தான் பலித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. 1970கள் முடிய ஏழு தலைமுறை முடிந்துவிட்டது.
80களில் லங்காவி துரித முன்னெற்றம் காணத்துவங்கி
பொன் ஆபரணமாகவும், சொர்க்கபூமியாகவும் திகழ்கிறது..
லங்காவிக்கு இனி வரும் ஏழு தலைமுறைக்கு விமோசனம் கிடைக்காது என்ற மசூரியின் சாபம்தான் பலித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. 1970கள் முடிய ஏழு தலைமுறை முடிந்துவிட்டது.
80களில் லங்காவி துரித முன்னெற்றம் காணத்துவங்கி
பொன் ஆபரணமாகவும், சொர்க்கபூமியாகவும் திகழ்கிறது..
அருமையான பதிவு.
ReplyDeleteஅற்புதமான படங்கள்.
வாழ்த்துகள் அம்மா.
அன்பின் இராஜ இராஜேஸ்வரி - அருமையான படங்களூடன் கூடிய - லங்காவி தீவினைப் பற்றிய விளக்கம் நன்று. மிகமிக இரசித்தேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteலங்காவி சொர்க்க பூமிதான் சந்தேகம் இல்லை.
ReplyDeleteபடங்களும், விவரிப்பும் அதை உண்மை என்கிறது.
அழகிய படங்களுடன் லங்காவி தீவுகள் பற்றிய அருமையான விளக்கங்களுடன் சிறந்த பதிவு மேடம்,நன்றி பகிர்வுக்கு.
ReplyDeleteலங்காவி படங்களும் பதிவும் நல்லா இருக்கு. வாழ்த்துகள்.
ReplyDeleteஅருமை...கண்ணுக்கு குளிர்ச்சியான படங்கள் மலேசியா செல்லும் போது லங்காவி போகவேண்டும் நன்றி!
ReplyDeleteஎப்போ வந்தாலும் அதிசயம்,அற்புதம்,அபாரம்தான் !
ReplyDeleteஅருமையான பதிவு...
ReplyDeleteஅற்புதமான லங்காவி படங்கள்...
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
"லயிக்கவைக்கும் லங்காவி"
ReplyDeleteஆஹா [ல ல வில்] இன்று வித்யாசமான விருந்தா எங்களுக்கு!
//சுற்றுப்பயணிகளின் சொர்க்க பூமியாக லங்காவி தீவுகள் கொண்டாடப்படுகின்றன.//
நாங்கள் அந்த சொர்க்கத்திற்கு நேரில் செல்லாமல் இருந்தாலும், அந்த சொர்க்க பூமியை கொண்டு வந்து எங்கள் முன் நிறுத்திவிட்டீர்களே! ;))))
முதல் படத்தைப்பார்க்கவே எங்கள் மனம் மகிழ்ச்சிக்கடலில் மூழ்குவது போல உள்ளதே! ;))))
இரண்டாவது படத்தில் அந்தக் கழுகார் மிகவும் கம்பீரமாகவே தன் இறக்கைகளை விரித்தபடி அமர்ந்திருக்கிறார்.
ReplyDelete//லங்காவி என்றால் மலாய் மொழியில் செம்பழுப்பு கழுகு என்று பொருள் படும். மலாய் மொழியில் helang என்றால் கழுகு. இதன் சுருக்கம் "lang". Kawi என்றால் செம்பழுப்பு என்று பொருள். இரு சொற்களையும் சேர்த்து Langkawi என்று அழைக்கப் படுகின்றது.//
மிகவும் அருமையான அசத்தலான பெயர் காரண விளக்கம்.
இரண்டாவது கழுகாரை விட மூன்றாவது கழுகார் தான் செம்பழுப்புக்கலரில் காட்டப்பட்டுள்ளார். வெண்தலையும் கழுத்தும்; கழுக்குக்கண்கள், கூரிய வளைந்த நகத்துடன் பயங்கர வெள்ளைப்பாதங்கள். ப்ளேன் ஒன்று டேக்-ஆஃப் ஆவது போன்றே அவர் தெரிகிறார் என் கண்களுக்கு! ;))
ReplyDelete//இராமனின் பாதச்சுவடு லங்காவியில் இருப்பதாகச்சொல்கிறார்கள்//
ReplyDeleteஅதானே பார்த்தேன்! ஆன்மிக வரிகள் எதையும் காணோமே என்று!! இதோ கொடுத்து அசத்தி விட்டீர்களே!!!
அடுத்து தென்னைமரங்கள் வரிசையாக அணிவகுத்து நிற்கும் இயற்கைக் காட்சி அழகு தான்.
//லங்காவி டூட்டி ஃப்ரீ ஜோன் (Duty Free Zone)
ReplyDeleteபொருட்கள் மிக மிக மலிவாகவூம் வரிவிலக்கும் கொடுக்கப்படும். குறைதது 48 மணி நேரம் லங்காவியில் இருந்தாலே வரிவிலக்கு வாங்கும் பொருட்களுக்கு அளிக்கப்படும்//
மிகவும் ஆச்சர்யமான செய்தியாக உள்ளதே!
நீங்கள் இந்த இடங்களுக்கு நேரில் போய் வந்துள்ளீர்களா? என்பதை அறிய ஆவலாக உள்ளதே!
//12 மீட்டர் உயரக்கழுகார் அவரே அடித்தளம்//
ReplyDeleteஇவர் என்ன இப்படி ஒரேயடியாக ஜொலிக்கிறார்! ;))))
இவரும் இவருக்கு அடுத்த குட்டிப்பயலும் தான், இன்றைய பதிவிலேயே மிகவும் அழகாகத் தெரிகின்றார்கள்.
தொங்கு பாலங்களும் மிகச் சிறப்பாகப் படமாக்கப்பட்டுள்ளன.
ReplyDeleteதுன் மகாதிர் வாழ்க!
படமெடுத்து பதிவிட்டவர்களும் வாழ்க, வாழ்க!!
பாவம் அந்த வெள்ளை ரத்தம் சிந்திய மசூரி என்ற பெண். நல்ல வேளையாக 7 தலைமுறை முடிந்த இப்போது சொர்க்க பூமியாகத் தோன்றுகிறதே! அதுவரை மகிழ்ச்சியே!
கடைசி 4 படங்களில் அழகிய மலர் தோட்டம்;
ReplyDeleteKilim Geoforest Park சுற்றுச்சூழல்கள்;
அழகிய சிவந்த அந்தி வானமும், சூரியனும்;
வெண் கொக்கோ, நாரையோ, வாத்துக்களோ அழகாக அணிவகுத்துள்ள கடைசிப்படம்
எல்லாமே நல்ல அழகு தான்.
இன்றைக்கு மிக நல்லதொரு பட விருந்து கொடுத்து அனைவர் பசியையும் அடக்கிவிட்டீர்கள்.
காணக்கண்கோடி வேண்டும்!
இயற்கையில் இதுபோன்று ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு பகுதிகளிலும் எவ்ளோ அழகு கொட்டிக்கிடக்கின்றன.
எல்லா இடங்களுக்கும் எல்லோராலும் போய் நேரில் பார்க்க வாய்ப்பு அமையாதல்லவா!
அந்தக்குறையை நீங்கள் இதுபோன்று பதிவுகள் கொடுத்து, நிவர்த்தி செய்து விடுகிறீர்கள்.
வாரம் ஒருமுறை இது போன்ற மாறுபட்ட பதிவாகக் கொடுத்து அசத்துங்கள்.
மிகவும் திருப்தியாக உள்ளது.
பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள். vgk
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDelete//லங்காவி டூட்டி ஃப்ரீ ஜோன் (Duty Free Zone)
பொருட்கள் மிக மிக மலிவாகவூம் வரிவிலக்கும் கொடுக்கப்படும். குறைதது 48 மணி நேரம் லங்காவியில் இருந்தாலே வரிவிலக்கு வாங்கும் பொருட்களுக்கு அளிக்கப்படும்//
மிகவும் ஆச்சர்யமான செய்தியாக உள்ளதே!
நீங்கள் இந்த இடங்களுக்கு நேரில் போய் வந்துள்ளீர்களா? என்பதை அறிய ஆவலாக உள்ளதே!/
ஆம்.. சென்று வந்திருக்கிறோம்..
பதிவும் புகைப்படங்களும் அழகு! அதிலும் அந்த கழுகின் புகைப்படம் மிக அழகு!!
ReplyDeleteமிகவும் கிட்டவாக போக இருந்து பின்னர் மகளவை மட்டும் போய் வந்தவை. மலேசிய மருமகள் தான் போகலாம் போவோம். உங்கள் தகவல்கள் அருமை. வாசித்தது மகழ்ச்சி. வாழ்த்துகள்.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
http://kovaikkavi.wordpress.com
நல்ல விவரங்கள். போய்ப் பார்க்கவேண்டுமென்ற ஆசையைத் தூண்டுகின்றன.
ReplyDeleteவழக்கமான பதிவிலிருந்து மாறுபட்ட பதிவு. சிறப்பாக உள்ளது. பாராட்டுக்கள்.
ReplyDeleteசிறப்பான தகவல்கள் ஒரு தீவைப்பற்றி அறிந்து கொண்டேன் படங்கள் அருமை
ReplyDeleteசத்தியமாக இந்த தீவை பற்றி இப்போதுதான் கேள்வி படுகிறேன்
ReplyDeleteமேடம் அருமையான பதிவு..இந்த முறை போகும் போது கண்டிப்பா பாத்துடரேன்...நன்றி!
ReplyDeleteஅனைத்தும் அருமை தோழியே !
ReplyDeleteகண்களிற்கு விருந்து !
அருமையான இடமாக இருக்கிறது லங்காவி....பார்க்கத் தூண்டுகிறது.
ReplyDeleteபடங்களும் தகவல்களும் அருமையாயிருக்கு..
ReplyDeleteபடங்கள் பேசுகின்றன...
ReplyDeleteஅருமையான விளக்கம்...
சென்று வந்தது போன்ற உணர்வு உண்டாகிறது தோழி...
- நுண்மதி
லங்காவி தீவு வியக்க வைக்கிறது .
ReplyDeleteகாற்றுக்கு ஆடும் பாலமா ??படங்கள் எல்லாம் அழகு .அந்த கடற்கரையோர
காட்சி மிகவும் அருமை
மிகவும் அழகான படங்களுடன் அற்புதமான தகவல்களுடன் சிறப்பான பதிவு
ReplyDeleteமிகவும் அழகான படங்களுடன் அற்புதமான தகவல்களுடன் சிறப்பான பதிவு
ReplyDelete1975+9+1=1985 ;)
ReplyDeleteகேட்ட கேள்விக்கு ஓரே வார்த்தையில் கொடுத்துள்ள மிகச்சுருக்கமான பதிலுக்கு நன்றிகள்.
அன்புடையீர்! வணக்கம்!
ReplyDeleteஇந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (08/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை வலைச்சரத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
வலைச்சர இணைப்பு:
http://www.blogintamil.blogspot.in/2015/06/6.html
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
FRANCE
படங்களும் தகவல்களும் பிரமாதம். பாராட்டுகள் மேடம்.
ReplyDelete