




பச்சை மயில் வாகனனே சிவ பால சுப்ரமண்யனே வா வா -
நெஞ்சமெனும் கோவிலமைத்தே - அதில் நேர்மையெனும் தீபம் வைத்தே
செஞ்சிலம்பு கொஞ்சிடவே வா - வாவா சேவல் கோடி மயில் வீரா.
அலைகடல் ஓரத்திலே எங்கள் அன்பான சண்முகனே - நீ
அலையாய் வரம் தருவாய் - உனக்கு
அனந்த கோடி நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம். (பச்சை).


திருச்செந்தூர் முருகன் கோயிலில் மாசித்திருவிழாக் காலங்களில் சிறப்பு வாய்ந்த எட்டாம் திருவிழாவன்று காலையில் முருகப்பெருமான் எழுந்தருளும் கோலம் கண்கொள்ளாக் காட்சி ..!
சுவாமி ஆறுமுகநயினார், வள்ளி, தெய்வானை அம்பாளுடன் பச்சை கடைசல் சப்பரத்தில் பச்சை பட்டு உடுத்தி, பச்சை இலை மற்றும் மரிக்கொழுந்து மாலை அணிந்து பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி உலா வருகிறார் ..

பச்சை சாத்தி வரும் போது சுவாமிக்கு பக்தர்களால் செய்யப்படும்
பன்னீர் அபிஷேகத்தால், தேரோடும் வீதிகள் சேறாகின்றன.


தன்னைத் தரிசித்தவர்கள் வீட்டிலும், தரிசிக்க வராவிட்டாலும்
வீட்டில் இருந்தே நினைத்தவர்கள் வீட்டிலும்
செல்வச்செழிப்பு ஏற்படுவதற்காகவும் விவசாயம் செழிக்கவும்
பச்சை சாத்தி நிகழ்ச்சியை நடத்தப்படுகிறது ...







சிட்னியின் வைகாசிக்குன்றில் (Mays Hill) எழுந்தருளி அருள்பாலித்துக் கொண்டிருக்கும் வள்ளி தேவசேனா சமேத முருகப் பெருமா\ன் பார்க்க பரவசம் தரும் பச்சை வண்ணத்தில் பச்சை சாத்தி நம் இச்சைதணிவிக்க்
பச்சைக்கடைசல் சப்பரத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் அற்புத்ததிருக்காட்சி ..



சுயரூப பச்சை சாத்தி அனுமன் அலங்காரம்..

ரசித்தேன்.
ReplyDeleteஇன்றைய பதிவு பசுமையாய் பதிந்துவிட்டது.அழகான படங்கள் எப்படித்தான் கிடைக்கிறது உங்களுக்கு. ஒரு பதிவுக்கு ஒரு பொருத்தமான படம் தேடுவதற்கே என்னால் முடியவில்லை.
ReplyDeleteஅருமை
கண்ணைக் கவரும் மயில்... அழகு முருகன்...
ReplyDeleteகண்ணைக் கவரும் மயில்... அழகு முருகன்...
ReplyDeleteஅருமையான தரிசனம் கிடைத்தது...
ReplyDeleteபச்சை மயில் வாகனின் புகழ் பாடும் தங்கள் பதிவு
ReplyDeleteபசுமைப் பூந்தோட்டம்.
அதில் பாடும் பக்தர் மனமெல்லாம்
ஆகிடுமே கந்தன் கோட்டம்.
நானும் பாடுவேன்.
சுப்பு ரத்தினம்.
மயிலாட்டம் அருமை . சுவாமிகளின் பச்சை வர்ண கோலங்கள் அருமை . நன்றி
ReplyDeleteபடங்கள் கண்ணுக்கு குளிர்ச்சியாகவும், தகவல் குறிப்புகள் மனதுக்கு குளிர்ச்சியாகவும் இருக்கு.நன்றி பகிர்வுக்கு.
ReplyDeleteமுடங்கிப் போகும் விண்டோஸ் இயக்கம் - http://mytamilpeople.blogspot.in/2013/01/computer-problem-and-solutions.html
ReplyDeleteபச்சை மயில் வாகனனே பாலசுப்ரமணியனே வா
ReplyDeleteஎன் இச்சையெல்லாம் உன்னிடத்திலே
அதில் எள்ளவும் ஐயம் இல்லையே!
பச்சை சாத்தி வந்த செந்தில் குமரனைக் கண்டேன். மகிழ்ச்சி அடைந்தேன்.
உலகம் எங்கும் பசுமை நிலைக்கட்டும்.
படங்கள், செய்திகள் அருமை.
வாழ்த்துக்கள்.
பச்சைசாத்திய முருகன் மிக அழகான தரிசனம். அழகான, குளிர்மையான படங்கள். நன்றி
ReplyDeleteபச்சை சாத்தி முருகனின் அற்புதத் திருக்கோலம் தந்த அருமையான பதிவுக்கு நன்றி. ஆவணி, மாசி இரு மாதங்களும், பச்சை சாத்திய திருக்கோலத்தில் திருச்செந்தூர் ஆறுமுக நயினாரைத் தரிசிக்கலாம். ஆவணியில் தரிசிக்கும் போது வேண்டிக் கொள்ளும் வேண்டுதல், மாசி பச்சை சாத்திக்குள்ளும் அது போல் மாசியில் வேண்டிக்கொண்டால், ஆவணிக்குள்ளும்(ஆறு மாதத்திற்குள்) நிறைவேறும் என்பது நம்பிக்கை. நேரில் தரிசிக்க முடியாத குறையை நிவர்த்தி செய்த பதிவுக்கு நன்றி.
ReplyDeleteபச்சை சாத்தித் திருக்கோலம், முருகனின் விஷ்ணு ஸ்வரூபத்தைக் குறிக்கும். அது போல், பிரம்ம, ருத்ர ஸ்வரூபத்தைக் குறிக்கும் விதமாக, வெள்ளை, சிவப்பு சாத்தியிலும் அதே தினத்தில், முருகனின் திருவீதி உலா நடைபெறும். அந்தப்படங்களையும் இயன்றால் பிரசுரிக்குமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
அழகென்ற சொல்லுக்கு முருகா!
ReplyDeleteஅழகு முகனைப்பற்றி அருமையான பதிவு இன்று! பாலமுருகணிப் பார்த்துக்கொண்டே இருக்கலாம்...கொள்ளை அழகு!
பச்சை சாத்திப் பவனிவரும் பன்னிருகையா குகா!
பக்தருக்கெல்லாம் பழவினை தீர அருள் தா! தா!
இச்சை கெட இன்னருள் கேட்டு உன்னிடம் வந்தோம்
சச்சிதானந்தினின் சற்குருநாதனே சண்முகா! சரவணபவா!
பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி!
பசுமையும், தெய்வீகமும் இரண்டும் சேர்ந்து கண் கொள்ளா காட்சி! நன்றி!
ReplyDeleteபசுமையும், தெய்வீகமும் இரண்டும் சேர்ந்து கண் கொள்ளா காட்சி! நன்றி!
ReplyDeleteபுதிய செய்தியாக இருந்தது.
ReplyDeleteபகிர்விற்கு நன்றி !
பச்சை சாத்தி செந்திலாண்டவனை தரிசித்த பின் மன மகிழ்ச்சியடைந்தேன்.
ReplyDeleteநன்றி பகிர்விற்கு.
ராஜி
சிறப்பான படங்களுடன் சீரிய பதிவு! மிக்க நன்றி!
ReplyDeleteபச்சை மயில்வாகனன் உலாவரும் காட்சிகள் நிறைந்து நிற்கின்றன.
ReplyDeleteஎங்கும் பசுமை....
ReplyDeleteநடனமிடும் மயில் மனதோடு ஒன்றி விட்டது.
ReplyDeleteபச்சை பசேலென்ற வயலும், பச்சை சார்த்திய கடவுளர்களும், பச்சை மயிலும், சுற்றி வரும் வண்ணத்துப்பூச்சிகளுமாக மனம் இயற்கையில் ஒன்றி விட்டது.
ReplyDeleteஅருமை, அருமை, அருமை!
படங்கள் யாவும் கொள்ளை அழகு அந்த அழகான மயில்களைப்போலவே.
ReplyDeleteபசுமை நிறைந்த நினைவலைகளைத் தட்டியெழுப்பிடும் தங்கமான பகிர்வுக்கு நன்றியோ நன்றிகள்.
It is a rare and pretty post with pictures, i never had seen before.
ReplyDeleteviji