












மனித குலத்திற்கு வரமாய் வந்தவை தாவரங்கள்..
கம்பீரத்தின் உருவாய் வளர வேண்டிய விசுவரூப மரங்கள் ....
உயரம் குறைத்து கம்பீரம் கரைத்து வேர்கள் நறுக்கி சிறு தொட்டிக்குள்
அடைக்கும் போன்சாய் ஆக குறுக்கப்பட்டு வளர்க்கப் படும் மரங்களின்
சந்தை மதிப்பு மிக அதிகம்.
சந்தை மதிப்பு மிக அதிகம்.
ஜப்பானிய கலையான போன்சாய் ஆலமரம் , அரசமரம் போன்ற நூற்றாண்டு தாவரங்களையும் ஜாடிக்குள் வளர்த்து வியப்பளிக்கிறது...
ஜப்பானிய மொழியில் போன் என்றால் ஆழமற்ற தட்டுக்கள்
சாய் என்றால் செடிகள் என்று பொருள் .
சாய் என்றால் செடிகள் என்று பொருள் .

போன்சாய் மரங்கள் அழகுக்காகவும், பொழுதுபோக்குக்காகவும், வாஸ்துக்காகவும் அலுவலகங்களிலும் வரவேற்பறையிலும் வீடுகளிலும் வளர்க்கப்படுகின்றன.
உணவு,மருத்துவம் போன்ற தேவைகளுக்கு பொதுவாக பயன்படுத்துவதில்லை அழகுக்காக மட்டுமே பயன்படுத்துகிறார்கள்
100 முதல் 200 ஆண்டுகள் வயது வாழும் தாவரங்களையும் , எந்த பல்லாண்டு தாவரத்தையும் போன்சாயாக வளர்க்க முடியும்
போன்சாய் தாவரங்கள் பரம்பரை முறையில் குள்ளமாக்கப்படாமல்
வளர்ந்து கொண்டிருக்கும் தாவரம் ஒன்றின் குருத்து இலைகள் ,வேர்கள் போன்றவற்றை கத்தரித்தல் இராசயனங்களை தூவுதல் போன்றவற்றால்
குள்ளமாக்கப்படுகின்றது
மரங்களின் தண்டுபாகம் தடிமனாகவும், கீழ்புறத்தில் அதிகமாகவும், மேற்புறத்தில் குறைந்ததாகவும் கிளைகள் கொண்டதாக இருக்க வேண்டும்.
கிளைகளுக்கு நடுவே இடைவெளி இருப்பது அவசியம்.
காய்ந்த இலைகளை அவ்வப்போது அகற்ற வேண்டும்.
காலை, மாலை வேளைகளில் நீர் ஊற்ற வேண்டும்.
ஆனால், தண்ணீர் தேங்க கூடாது.

மாதத்திற்கு ஒருமுறை தண்ணீரில் கரையும் உரங்களை இடலாம். மரங்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்த, இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தொட்டியை மாற்ற வேண்டும்.
அப்போது, தடிமனான வேரை வெட்டிவிட வேண்டும்.

அலுமினிய ஒயர்களை கொண்டு விரும்பிய வடிவத்திற்கு கிளைகளை வளைக்கலாம்.
வீடுகளில், எல்லா தட்ப, வெப்ப நிலைகளிலும் போன்சாய் மரங்கள் வளரும்.
ஆல், அரசு, வேம்பு, புளி, எலுமிச்சை, சப்போட்டா, மூங்கில், நாவல், சவுக்கு, கொன்றை போன்றவை போன்சாய் முறையில் வளர்க்க ஏற்றவை.

ஏறத்தாழ 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் தோன்றிய போன்சாய் மரங்கள் வளர்ப்பு கலை ஜப்பானில் முக்கிய கலையாக உள்ளது.
தற்போது இந்தியா உட்பட உலகம் முழுவதும் போன்சாய் வளர்ப்பு பிரபலம் அடைந்துள்ளது.
உள்ளங்கையில் தாங்கிக்கொள்ளக்கூடிய அளவில், விழுதுகள் கொண்ட ஆலமரம், இரண்டடி உயரமே கொண்ட எலுமிச்சை, சப்போட்டா மரங்கள் காய்த்து குலுங்கும் அதிசயத்தை ரசிக்கலாம் ...


குல்மொஹர், காகிதப்பூ, இம்பால் லில்லி உள்ளிட்ட பூ மரங்கள், பார்த்துக் கொண்டே இருக்கும் படி தோற்றம் கொண்ட அழகுக்காக வளர்க்கப்படும் மரங்களும், மா, சீத்தா, கொடுக்காப்புளி, சப்போட்டா உள்ளிட்ட பழவகை மரங்களும் கண்களையும் கருத்தையும் கவருகின்றன..
சாதாரண மரங்களைப் போலவே பூத்துக் காய்த்து, கனிகள் தருகின்றன. எல்லாமே அளவில் மிகச் சிறியதாக இருக்கும்.
சோலார் தொழில்நுட்பத்துடன் கூடிய சார்ஜர் மரம்

போன்சாய் கலையையும், சோலார் தொழில்நுட்பத்தையும் சேர்த்து போன்சாய் சார்ஜர் மரம் என்று புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளார் பிரான்சின் மெட்ஸ் பகுதியை சேர்ந்த விஞ்ஞானி விவியன் முல்லர்.
சூரிய ஒளியை பயன்படுத்தி தாவரங்கள் ஒளிச்சேர்க்கை மூலம் உணவு தயாரிக்கும் முறை தான் போன்சாய் சார்ஜர் உருவாக்கும் திட்டத்திற்கு அடிப்படையாக இருந்தது. இதற்கு எலக்ட்ரீ என்று பெயர்...
வீட்டில் ஜன்னல், கதவு அருகில் என சூரிய ஒளி படும் இடங்களில் வைத்துக் கொள்ளலாம். நல்ல வெயிலில் முழுவதாக சார்ஜ் ஏற 36 மணி நேரம் ஆகும். மழை, பனி காலத்தில் சற்று அதிக நேரம் ஆகும்.
சூரிய ஒளியை கிரகிக்கும் வகையில் நுண்ணிய சோலார் பேனல்கள் கொண்ட 27 இலைகள் இதில் உள்ளன. இலைகளில் பொருத்தப்பட்டுள்ள உயர்தர அமார்பஸ் சிலிகான் சோலார் பேனல்கள் சூரிய வெப்பத்தை எளிதில் கிரகித்துக் கொள்ளும்.
இதன் மூலம் உருவாகும் எரிசக்தியை மரத்தின் அடியில் அதாவது வேர்ப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள அதிக சக்தி கொண்ட பேட்டரி தக்கவைத்துக் கொள்ளும்.
முழுவதுமாக சார்ஜ் செய்யப்படும் எலக்ட்ரீ 13,500 மில்லி ஆம்பியர் அளவு எரிசக்தியை தன்னுள் சேமித்து வைத்துக் கொள்ளும்.
இதன் மூலம் செல்போன், ஐபோன், யுஎஸ்பி சாதனங்கள், ஸ்மார்ட் போன்கள், எம்பி 3 பிளேயர் போன்றவற்றை எளிதில் சார்ஜ் செய்து கொள்ளலாம் ...

போஸ்கோ வெர்டிகல் என்ற கட்டிடம் 27 மாடிகளுடன் கான்கிரீட் காடாக, . எதிர்காலத்தில் வடிவமைக்கப்படும் கட்டிடங்கள் பசுமைக் கட்டிடங்களாக முன்மாதிரியாக வடிவமைக்கப்பட உள்ளது..
Vertical Forest.....at Milan, Italy.










arumai!
ReplyDeletearumai!
nalla pakirvu..
நீங்கள் பகிர்ந்துகொள்ளும் அத்தனை கட்டுரைகள் படங்கள் போன்ற விஷயங்களுமே அழகுதான் .அதுவும் காலையில் சூடான தேநீர்போல .நன்றி வாழ்த்துக்கள்
ReplyDeleteவண்ண, வண்ண மலர்களுடன், பச்சை பசேல் இலைகளுடன் மரங்கள் பார்க்கப்பார்க்க அழகுதான். பகிர்வுக்கு நன்றிம்மா.
ReplyDeleteசோலார் தொழில்நுட்ப போன்சாய் சர்ஜ்ர் மரம் வியக்க வைக்கும் செய்தி.
ReplyDeleteபோன்சாய் மரங்களை பார்த்தால் எனக்கு எப்போது வருத்தம் வரும் சுந்திரமாய் அதை வளரவிடாமல் அதன் கை கால்களை முடக்கி போடுகிறார்களே என்ற எண்ணம் வரும்.
படங்கள் எல்லாம் அருமை.
போன்சாய் கலை பற்றி தெரிந்து கொண்டேன். ஆன்மிகம் மட்டுமல்ல அறிவியல் தகவல்களும் தந்து அசைத்து கிறீர்கள். தொடர்க!
ReplyDeleteநல்ல படங்கள்,வீடா அல்லது தோட்டமா அது தெரியவில்லை?சரி படங்கள் அசைவது எப்படி கொஞ்சம் சொல்லலாமா?
ReplyDeleteஅன்பின் இராஜ ராஜேஸ்வரி
ReplyDeleteஅருமையான் பதிவு - எத்தனை எத்தனை படங்கள் - எத்தனை எத்தனை தகவல்கள் - விளக்கங்கள் - கடும் உழைப்பினால் விளைந்த பதிவு - போன்சாய் மரங்கலீஆப் போலவே ஒரு பதிவினில் அத்தனையும் அடக்கப் பட்ட முறை நன்று. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
அனைத்து படங்களும் அருமை.. அசையும் வெள்ளை செம்பருத்தி அருமை.
ReplyDeleteஅழகு! அழகான படங்களுடன் அழகான கவிதையான பதிவு! பகிர்விற்கு நன்றி!
ReplyDeleteபோன்சாய் பற்றி அரிய நல்ல பல தகவல்கள்...
ReplyDeleteஎனக்கும் நண்பி ஒருத்தி அதிர்ஷ்டம் கொடுக்கும் போன்சாய் என்று ஒன்றை எனக்குத்தந்து என் அறை ஜன்னலோரம் வைத்திருக்கிறேன். ..நல்ல கரும்பச்சை இலைகள்...பார்த்துக்கொண்டே இருக்கலாம்...
ஆல் அரசுகூட போன்சாய் மரமாக இருக்கிறதா...ஆச்சரியம்தான்..கிடைத்தால் வாங்கணும்...:)
நல்ல பகிர்வு..மிக்க நன்றி.
சோலார் சார்ஜர் மரம் அரிய செய்தி.
ReplyDeleteஇந்த போன்சாய் மரங்களைப் பார்த்தால் எனக்கு பாவமாக இருக்கும்.
நம் சந்தோஷத்திற்காக வளர விடாமல் தடுக்கின்றோமே என்று தான்.
நல்லதொரு பதிவு.
ராஜி
போன்சாய் மரம், சார்ஜர் மரம், பசுமை கட்டட மரம் - நிறைய விவரங்கள் மனதில் பசு மரத்தாணியாக பதிந்தது. பதிவுக்கு நன்றி.
ReplyDelete
ReplyDeleteபோன்சாய் பற்றி நிறைய விவரங்கள் கொண்ட பதிவு. போன்சாய் முறையும் ஒருவகையில் இயற்கைக்கு எதிராக மனிதன் நடத்தும் ஒருவகையான கொடுமை என்பது எனது கருத்து.
அழகான படங்கள். அருமையான கருத்துகள்.
ReplyDeleteவாவ்...உண்மையில் அழகுள்ள பூத்துக் குலுங்கும் மரங்கள் மனதைக் கொள்ளை கொள்கின்றன.பகிர்வுக்கு மிக்க நன்றி.
ReplyDeleteவீட்டில் இருந்தபடி வருமானம் பெறுவதற்கு இலகுவான ஓர் வழி.
படங்களுடன் தந்திருக்கும் தகவல்கள் அருமை. பெங்களூரில் சென்ற மலர் கண்காட்சியில் போன்சாய் மரங்களைத் தனிப்பிரிவாக காட்சிக்கு வைத்திருந்தார்கள்.
ReplyDeleteபோன்சாய் பற்றிய தகவல்களும்,படங்களும் அருமை.
ReplyDeleteநல்ல அருமையான படங்கள்.
ReplyDeleteபோன்சாய் மரங்கள் அருமை
ReplyDeleteBonsai alagu than. Analum parkumpothu oru chinna varutham kooda varukirathu.
ReplyDeleteAha ha vellai chemparathi ennai va va ennru alakirathu. rasithu rasithu neeraya neram parthan dear. Thanks.
viji
சூரிய ஒளி பெறும் மரம் வெகு அருமை.
ReplyDeleteமிகவும் வேண்டிய தேவை கூட.
anaiththum supper
ReplyDeleteபசுமைக் கட்டிடங்கள் கான்செப்ட் அருமை ... அனைத்துமே !
ReplyDeleteஅழ'குள்ள' மரங்கள் பதிவு ரசிக்க வைத்தது.
ReplyDeleteசோலார் சார்ஜர் போன்சாய் கான்செப்ட்டும் நன்றாக இருக்கிறது.
இந்த 'குள்ள' மரங்களை வளர்க்க அதன் ஆணி வேரை வேட்டி விடுவார்கள் என்று படித்திருக்கிறேன். வருத்தமாக இருந்தது.
காட்டைஎல்லாம் அழித்து நாடாக்கினால் மரங்களை இப்படித்தான் வளர்க்க முடியும் போல் இருக்கிறது!
பட்ங்க்ள் ப்லவும் என்னை பிரமிக்க வைக்கின்றன.
ReplyDeleteபோன்சாய் பற்றிய விளக்கங்களும் அவற்றின் விலை மதிப்பும், பராமரிக்க வேண்டிய முறைகளும் மிகச்சிறப்பாக எடுத்துச்சொல்லியிருக்கீங்கோ.
பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
வணக்கம்...
ReplyDeleteஉங்களின் இந்தப் பகிர்வு வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_23.html) சென்று பார்க்கவும்... நன்றி...
http://blogintamil.blogspot.ae/2013/06/blog-post_23.html
ReplyDeleteஇன்று வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்,அருமை. பகிர்வுக்கு நன்றி.