ஸ்ரீ நிவாச கோவிந்தா ஸ்ரீ வெங்கடேச கோவிந்தா!
பக்தவத்சல கோவிந்தா பாகவதப்ரியா கோவிந்தா !!
நித்ய நிர்மல கோவிந்தா நீலமேகஸ்யாம கோவிந்தா !
புராண புருஷ கோவிந்தா !! கோவிந்தா ஹரி கோவிந்தா!!
அன்பென்னும் அகல் விளக்கை ஏற்றி வைத்தேன்
அதில் ஆசையென்னும் நெய்யை ஊற்றி வைத்தேன்
என் மனம் உருகிடவே பாடி வந்தேன்
உன் ஏழு மலை ஏறி ஓடி வந்தேன்
உன் ஏழு மலை ஏறி ஓடி வந்தேன்
திருப்பதி திருவேங்கடமுடையானுக்கு மூலவர் பாதத்திற்கு மட்டுமே அபிஷேகம் நடைபெறும். போக சீனிவாசப்பெருமாள் என்னும் சிறிய விக்ரஹத்திற்கே முழுமையான அபிஷேகம் உண்டு ..
வாசனைத்தைலம், திருமஞ்சனப்பொடி, பசும்பால், தேன், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்த பின், அலங்காரம் நடக்கும்.
கண்ணாடியில் பெருமாளுக்கு முகம் காட்டி, அவர் முன் குடை பிடித்து, சாமரம் வீசுவர். தீபாராதனை செய்யப்படும்.
திருப்பதி வெங்கடாஜபதிக்கு, யமுனைத்துறை மண்டபத்தில் இருந்து காலையில் கூடை நிறைய பூமாலைகளைச் சுமந்துவரும் இரு அர்ச்சகர்கள் முன் டமாரம் அடித்தபடி ஊழியர் ஒருவர் வருவார்.
அவருக்குப் பின் பள்ளியெழுச்சி பாடும் இருவர், திருப்பாவை பாடும் இருவர், மந்திரம் சொல்லும் இருவர் என்று ஆறுபேர் வருவர்.
பெருமாளுக்கு அணிவிக்கும் பூ அலங்காரம் கண்கொள்ளாக்காட்சி .!
முதலில் மார்பில் வீற்றிருக்கும் மகாலட்சுமிக்கு பூஅலங்காரம் நடைபெறும். பெருமாளின் இருதோள்களிலும் அணிவிக்கும் தோள்மாலை என்னும் மாலை
பெருமாளின் கிரீடம் முதல் பாதம் வரை நீண்டிருக்கும்ம்தரிசனத்திற்கு "தோமாலா சேவா' என்றே பெயர்.
அர்ச்சகர்கள் பூ சாத்தும்போது திருப்பள்ளியெழுச்சி, திருப்பாவை, சூக்தமந்திரம் ஓதப்படும்.
கண்ணுக்கு விருந்தாக "பூ' அலங்காரமும், காதுக்கு விருந்தாக"பா' சுரப் பாடல்களும் ததும்பி நிரம்பும் ......
திருப்பதி கோவிலில் இருந்து அனுப்பிவைக்கப்பட்ட மஞ்சள் நிற புடவையில் ஆண்டாள் ரங்கமன்னாருடன் அருள்காட்சி ..!
திருப்பதி கோவில் தங்க ரதத்தை பெண்கள் இழுக்கும் காட்சி .
pictures of tirupathi are nice
ReplyDeleteகாலையில் வேங்கடமுடையான் தரிசனம். அற்புதம்.பகிர்விற்கு நன்றி :-)
ReplyDeleteகாலையில் வேங்கடமுடையான் தரிசனம். அற்புதம்.பகிர்விற்கு நன்றி
ReplyDeleteகண்ணுக்கு விருந்தாக ’பூ’ அலங்காரமும் காதுக்கு விருந்தாக ‘பா’ சுரப் பாடல்களும் ததும்பி நிரம்பும்//
ReplyDeleteஎங்களுக்கும் இன்று அதே அனுபவம் கிடைத்தது.
திருப்பதி பெருமாள் பற்றிய தகவல்கள் அருமை. படங்கள் சிறப்பாக இருக்கு. நன்றி பகிர்வுக்கு.
ReplyDeleteவழக்கம்போல் புகைப்படங்களும் அருமை. அதோடு தந்த விளக்கங்களும் அருமை! திருப்பதி செல்லாமல் பெருமாளை சேவிக்கமுடிந்தது உங்கள் பதிவால். அதற்கு நன்றிகள் பல!
ReplyDeleteதிருப்பதி மலை வாழும் வெங்கடேசா
ReplyDeleteதிருமகள் மனம் நாடும் ஸ்ரீனிவாசா...
தீராதவினையெல்லாம் தீர்க்கின்ற திருப்பதி வெங்கடேசரின் திவ்விய தரிசனம் உங்கள் தயவால் இன்று கிடத்தது...
மிக்க நன்றி...
படங்களுக்கும் பகிர்வுக்கும் நன்றிம்மா.
ReplyDelete
ReplyDeleteபாலாஜியின் ஆரத்தி தரிசன காணொளி நீங்கள் காண முயற்சிப்பதாகக் கூறி இருந்தீர்கள். நான் forward செய்த மெயிலில் கணினி பற்றி ஏதும் தெரியாத நானே காண முடிந்தது. மீண்டும் ஒரு முறை அனுப்பட்டுமா.?
G.M Balasubramaniam said...
ReplyDeleteபாலாஜியின் ஆரத்தி தரிசன காணொளி நீங்கள் காண முயற்சிப்பதாகக் கூறி இருந்தீர்கள். நான் forward செய்த மெயிலில் கணினி பற்றி ஏதும் தெரியாத நானே காண முடிந்தது. மீண்டும் ஒரு முறை அனுப்பட்டுமா.?
கருத்துரைக்கும் சிரத்தைக்கும் மிகவும் நன்றி ஐயா...
காணொளி கண்டு மனம் மகிழ்ந்தேன் ...
Its like you read my mind! You seem to know a lot about this, like you wrote the book in it
ReplyDeleteor something. I think that you can do with a few pics to drive the message home a little bit, but other than that, this is excellent blog.
An excellent read. I will definitely be back.
My blog - louis vuitton official website
திருப்பதி செல்லாமலே உங்கள் புண்ணியத்தில் பெருமாளை தரிசித்தேன்.
ReplyDeleteஎனக்கும் உங்களைப் போல் குறையுண்டு.தீப ஆராத்தி பார்த்ததில்லை என்று.திருப்பதி போக வேண்டும் என்ற ஆவலை உண்டாக்கி விட்டீர்கள்.
பகிர்விற்கு மிக்க நன்றி.
ராஜி
திருப்பதி வெங்கடேசனின் காட்சி உங்கபதிவினூடாக கண்டுகளித்தேன். நன்றி.
ReplyDeleteதிருப்பதி வெங்கடேசப் பெருமாளை ஜருகண்டி, ஜருகண்டி தள்ளு முள்ளு இல்லாமல் - உங்கள் பதிவில் சேவித்தது நிறைவாக இருக்கிறது.
ReplyDeleteநெஞ்சை அள்ளும் கண்ணை கவரும் படங்கள்
ReplyDeleteபாராட்டுக்கள்.
அலங்காரப் பிரியரின் அழகைக் காணக் கண் கோடி போதுமோ...!
ReplyDeleteதிருப்பதிக்கு நேரே சென்றால் கூட இவ்வளவு அருமையாக ஸேவிக்க முடியுமா என்பது நிச்சயம் இல்லை.
ReplyDeleteதங்கத்தேர் பெண்கள் இழுப்பது நல்லா இருக்கு.
எல்லாப்படங்களும் அழகு.
பாராட்டுக்கள்
ஸ்ரீநிவாஸா கோவிந்தா !