தத்ர தத்ர க்ருதமஸ்த காஞ்சலிம்|
பாஷ்பவாரி பரிபூர்ண லோசனம்
மாருதீம் நமத ராக்ஷ ஸாந்தகம்||
எங்கெல்லாம் ஸ்ரீ ராமரது புகழ் பாடப்படுகிறதோ, பேசப்படுகிறதோ அங்கெல்லாம் சிரமேற்கூப்பிய கையுடனும் ஆனந்தக் கண்ணீருடன் தோன்றுபவர்ஹனுமான்.
‘ராம் ராம்’ என எங்கெல்லாம் சொல்லப்படுகிறதோ அங்கெல்லாம் நம் கண்களுக்குத் தெரியாமல்-ஆஞ்சநேயர்-கண்ணீர் மல்க நின்று கேட்பார்.
கி.பி. 15ம் நூற்றாண்டில் மகா முனிவராகத் திகழ்ந்த ஸ்ரீஸ்ரீ வியாஸராய மஹான் 732 ஆஞ்சநேய சிலைகளைப் பிரதிஷ்டை செய்தார்.
மத்வகுரு வியாசராய சுவாமிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்டு இன்றளவும் தினசரி பூஜைகள் நடந்து வரும் கோயில் பேரூரில் நொய்யல் ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஜெய வீர ஆஞ்சநேயர் ஆலயம்...
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட அற்புத ஆலயம் ..
கயிலாய மலையில் சிவ பெருமானும் பார்வதிதேவியும் வில்வமரத்தடியில் அமர்ந்திருந்த வில்வ மரத்தின் மீது இருந்த வயது முதிர்ந்த முசு (குரங்கு) ஒன்று வில்வ இலைகளை பறித்து அவர்கள் மீது போட்டு கொண்டே இருந்தது...
பரமன் அந்த முசுவுக்கு அஞ்ஞானத்தை அகற்றி மெஞ்ஞானத்தை அருளினார்.
ஞானம் பெற்ற குரங்கு கீழே இறங்கி வந்து அம்மை அப்பர் தாள் வணஙகி நின்றது.
ஈசன் நீ சிறந்த வில்வ பத்திரங்களால் என்னை அர்ச்சித்தாய். யாம் அகம் மகிழ்ந்து போனோம். நீ மனுவம்சத்தில் பிறந்து உலகை அரசாள்வாயாக என அருளினார்.
மானிடப்பிறவி எடுத்தாலும் உலக மாயையில் மயங்காதபடி இந்த குரங்கு முகத்துடன் பிறக்கும்படி அருளும்படி வேண்டியபடி அருள் புரிந்தார்.
அரிச்சந்திர மகாராஜா வம்சத்தில் குரங்கு முகத்துடன் மானிடப்பிறவி எடுத்து முசுகுந்த சக்ரவர்த்தியாக முடிசூட்டப்பட்டு ராஜராஜ சோழன் பிரதிநிதியாக கோவை பகுதியில் அரசாட்சி புரிந்து வந்தார்.
குரங்கு முகத்துடன் இருக்கும் முசுகுந்தரை உடலில் குறைபாடு நாட்டிலும் குறைப்பாடு என சிலர் விமர்ச்சித்தது மிகவும் பாதித்தது.
பிருகு மாமுனிவர் காஞ்சிமா நதிக்கரையில் ஒரு கோயில் எழுப்பி, அதில் ஆஞ்சநேயரை பிரதிஷ்டை செய்து பூஜித்து வந்தால் உடல் குறைபாடு நீங்கும். நீ அரசாட்சிபுரியும் நாடும் சுபிட்சம் பெரும் என்றார்.
காஞ்சிமா நதிக்கரையில் (தற்போது நொய்யல் ஆறு) சிறிய கோயில் எழுப்பி அதில் முசுகுந்த சக்ரவர்த்தியின் விருப்பப்படி மத்வகுரு வியாசாரய சுவாமிகளால் ஆஞ்சநேயர் பிரதிஷ்டை செய்யப்பட்டார்.
ஆதியில் அனுமந்தராய சுவாமி என்ற திருநாமத்தில் விளங்கியவர் தற்போது ஜெயவீர ஆஞ்சநேயர் என அழைக்கப்படும் ஆஞ்சநேயரின் திருமேனி ஒரே கல்லால் உருவானது.
அஷ்டாம்சம் பொருந்திய அவரது திருஉருவம் தனிப்பெருமை சிறப்பாகும்.
வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் ஜெய வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு ஆராதானைகள் நடைபெறுகிறது.
வார நாட்களில் காலை 7.30 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் 7.00 மணி வரையிலும் சனிக்கிழமைகளில் காலை 7.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரையிலும் தரிசன நேரங்கள்.
மார்கழி மாதம் மூல நட்சத்திர தினத்தில் கொண்டாடப்படும்.அனுமன் ஜெயந்தி திருவீதி உலா சிறப்பான நிகழ்வாகும்.
அன்று நடைபெறும் ஆராதனைகளில் கலந்த கொண்டு அனுமனை தொழுது ஜெயத்தோடு திகழலாம் ...
கோவை மாநகரில் பட்டீஸ்வரர் கோயிலிருந்து நொய்யல் நதிக்கு செல்லும் பாதையில் நதிக்கரையின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது.
ஸ்ரீ பிரசன்ன ஆஞ்சநேயர்,காய்கறி அலங்காரம் ...
Aha!!!!!!!!
ReplyDeleteSaturday.............
Hanuman darisam........
Thanks rajeswari.
Such a beautiful pictures.
Nice post.
viji
அனைத்தும் அற்புதம் பார்த்ததில் ஆனந்தம்
ReplyDeleteanjana garba sambhootham
ReplyDeletekumaaram brahmachaarinam.
dhushta griha vinaashayaa
hanumantham upaasmahe.
raamaaya rama bhadraaya rama chandraaya vedhase.
raghunaathaya naathaaya seethaaya
pathaye namaha.
One get all what one deserves and destined on worshipping Hanmuman.
subbu thatha.
http://pureaanmeekam.blogspot.com
படங்கள் கருத்துக்கள் அனைத்தும் அருமை . நன்றி
ReplyDeleteஅற்புதமான வரலாற்றுப் பகிர்வு நன்றிங்க.
ReplyDeleteரொம்ப, ரொம்ப நல்லா இருக்கும்மா, படங்களும், பகிர்வும். நன்றிகள்
ReplyDelete
ReplyDeleteகர்நாடகத்தில் ஆஞ்சநேய வழிபாடு பிரசித்தம். மாருதி என்னும் பெயரில் அதிகம் அறியப் படுகிறார். ஒரு முறை என் இளைய மகன் முதல் மாடியிலிருந்து கீழே விழுந்தும் எந்தக் காயமும் இல்லாமல் உயிர் பிழைத்தான். அப்போது அவன் ஒரு செயினில் ஆஞ்சநேயரின் டாலர் அணிந்திருந்தான். அவனுக்கு அதிலிருந்து ஆஞ்சநேய பக்தி அதிகம்.
நல்லதொரு ஆலயம் பற்றிய அழகான பகிர்வு! நன்றி!
ReplyDeleteசிறப்பான பகிர்வு. நன்றி.
ReplyDeleteகலைவண்ணத்தோடு காய்கறிகளால் செய்த அனுமர் மிக அழகு !
ReplyDeleteகாணக்கிடைக்காத அரிய படங்கள். காய்கறிகளாக அலங்காரம் செய்த ஆஞ்சநேயர் அருமை.ரெம்ப நன்றிகள்.
ReplyDeleteஜெகம் புகழும் புண்ணிய காவியத்தின் நாயகனின் திரு நாமத்தினையே சிந்தித்து, சிந்தித்து, அகமகிழும் ஜெய வீர ஆஞ்சனேயரின் சிறப்புமிகு பதிவு அருமை! அருமை!
ReplyDeleteஅருமையான படங்களோடு கூடிய அனுமன் கிருபை அள்ளி வழ்ங்கும் பதிவு. மிகவும் நன்றி.
ReplyDeleteஅன்பின் இராஜ ராஜேஸ்வரி ஆஞ்சநேய தரிசனம் அருமையான் தரிசனம் - பல்வேறு அரிய தகவல்கள் - அருமையான ஆஞ்சநேயரின் படங்கள் - அத்தனையும் அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteஸ்ரீ ஹனுமனைப்பற்றியே இதுவரை வெவ்வேறு தலைப்புக்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பதிவுகள் கொடுத்திருப்பினும் ஒவ்வொரு முறையும் ஓர் புதிய சக்தியையும் நம்பிக்கையையும் புது பலத்தையும் அளிப்பதாகவே உணர முடிகிறது, பாராட்டுக்கள்.
ReplyDelete