"காசினி இருளை நீக்கும் கதிரொளி ஆகியெங்கும்
பூசனை உலகோர் போற்றப் புசிப்போடு சுகத்தை நல்கும்
வாசி ஏழுடைய தேர்மேல் மகாகிரி வலமாய் வந்த தேசிகா
எனை ரட்சிப்பாய் செங்கதிரவனே போற்றி"
சூரிய வழிபாடு செய்ய தை முதல் நாள் உகந்த நாளாகும்.
அஸ்வத் வஜாய வித்மஹே! பத்மஹஸ்தாய தீமஹி!
தந்நோ சூர்ய ப்ரசோதயாத்!!
எனவேதான் அன்று சூரியக்கடவுளுக்கு விருப்பமான சர்க்கரைப் பொங்கல், கரும்பு முதலிய பொருட்களைப் படைக்கிறோம்.
சூரியனை வழிபடுவதால் உலகில் அடைய முடியாதவையே இல்லை.
நாஸ்திகர்களாலும் இல்லை என்று கூற முடியாத பிரத்யட்ச கடவுள் சூரிய பகவானே..
சூரியன் ஆன்மாவைத் தட்டி எழுப்பி தன்வழிப்படுத்துபவர் என்பதை வேதம், புகழ்கிறது.
உடல் ஆரோக்கியத்தை அளிப்பதிலும் அருட் கடல் , இதயநோயை நீக்குபவர் என்பதை, குறிப்பிடுகிறது.
இவரே மழை பெய்யக் காரணம்
மகாபாரதத்தில் திரௌபதிக்கு அட்சய பாத்திரம் அளித்து, என்றும் வற்றாத உணவு அளித்ததும் கதிரவனே ..
பெண்கள் சூரியனுக்கு அர்க்யம் கொடுத்தால், ஏழு ஜென்மங்கள் எடுத்தாலும் விதவைக் கோலத்தை அடையமாட்டார்கள் என்று ஸ்ம்ருதிகள் கூறுகின்றன.
ஞாயிற்றுக்கிழமை பானுவார விரதம் இருந்து சூரியனை வழிபடுவது சிறப்பு ..
சூரியனுக்குரிய "ஆதித்ய ஹ்ருதயம்' ஸ்தோத்திரத்தை ஜெபித்தபின்பே ராமபிரான் ராவண வதம் செய்தார்.
ராமாயணத்தில் வரும் சுக்ரீவன் என்ற வானரனும், பாரதத்தில் வரும் கர்ணனும் சூரிய புத்திரர்கள் ஆவார்கள்.
வாலகில்யர்கள் எனப்படும் 60,000 முனிவர்கள் சூரியனது சீடர்கள் ஆவர். இவர்கள் மிகச்சிறிய வடிவம் உடையவர்கள். தண்டி, பிங்களன் என்பவர்கள் இவரது முக்கிய ஏவலர்களாவர்.
தை மாதம் முதல் தேதியில் திருவண்ணாமலை, திருவையாறு ஆகிய தலங்களில் இறைவன் சிறப்பாக ஆராதிக்கப்பட்டுத் தீர்த்தம் கொடுக் கிறார்.
மன்னார்குடி என்ற வைணவத்தலத்தில் "ஸங்க்ரமண உத்ஸவம்' சங்கராந்தி யன்று முதல் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
மதுரையம்பதியில் இறைவன் கல் யானைக்குக் கரும்பு அளித்த திருவிளையாடல் நடந்த நன்னாள் இதுவேயாகும்.
சபரிமலையில் ஐயப்பனுக்குரிய "மகரஜோதி தரிசனம்' காண்பதும் புண்ணிய தினத்தன்றேயாகும்.
உத்தராயனத்தில் இறந்த உயிர்கள் முக்தி பெறுவதைப் பற்றி விவரிக்கும் பகவத்கீதை, "அக்னிர் ஜோதிர் அஹ: சுக்ல: ஷண்மாஸா உத்தராயனம்' என்று கூறுகிறது.
இத்தகைய பவித்ரமான உத்தராயன புண்ணிய காலம் தொடங்கும் தை மாத முதல் நாளாம் பொங்கல் திருநாளில்- மகர சங்கராந்தி தினத்தன்று நாம் அனைவரும் சூரிய வழிபாடு செய்து, கிரக தோஷங்கள் நீங்கி எல்லா வளமும் பெறுவோமாகுக..!
சூரிய பகவானின் சிறப்புக்களை அழகுற எழுதியுள்ளீர்கள்.
ReplyDeleteஎத்தனை விவரங்கள்!!!!!!!!
ReplyDeleteபிரகாசமான பதிவு !
ReplyDeleteமனம் கவர்கிறது !
நல்ல படங்கள்.. நன்றி...
ReplyDeleteசூரிய வழிபாடு பற்றி சிறப்பான படங்களுடன் பகிர்ந்துகொண்டதற்கு நன்றிம்மா.
ReplyDeleteஞாயிறு போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்!-
ReplyDeleteகாவிரி நாடன் திகிரிபோல், பொன் கோட்டு
மேரு வலம் திரிதலான்.
- இளங்கோ அடிகள் (சிலப்பதிகாரம்)
சூரியவழிபாடு பற்றிய பயனுள்ள தகவல்கள்.நன்றி
ReplyDeletevery nice post.
ReplyDeleteviji
சூரிய வணக்கத்தைப் பற்றிய பதிவு அருமையாக இருந்தது.
ReplyDeleteஅறிய தகவல்களுக்கு நன்றி.
ராஜி
Keep on writing, great job!
ReplyDeleteMy web page :: cheap jerseys
சூரியனை வழிபாடு பற்றிய சிறப்பான தகவல்கள் தெரிந்து கொண்டேன். படங்கள் அனைத்தும் அருமை.
ReplyDelete
ReplyDeleteவழக்கம்போல் ஒரு அருமையான பதிவு. உங்கள் பதிவுகள் சிலதைப் படிக்கும்போது நான் கேட்க வேண்டிய கதைகள் பலவும் இருப்பது தெரிகிறது. வாழ்த்துக்கள்.
சூரியபகவானைப்பற்றி நன்றாக விளக்கமாய் சொல்லிவிட்டீர்கள்.படங்கள் எல்லாம் அழகு.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
பிரத்யட்ச கடவுள் என்று குறிப்பிட்டிருப்பது மிகவும் உண்மை. நமது மன இருளைப் போக்கி ஆரோக்கிய வாழ்வையும் தரும் சூரிய வழிபாடு பற்றிய பதிவு அருமை.
ReplyDeleteயோகாவில் சூரிய நமஸ்காரம் மிகவும் முக்கியமான ஒன்றாயிற்றே!
சூரியனை பற்றிய தகவல்கள் அற்புதம்! அழகான படங்களுடன் பகிர்வு சிறப்பு! நன்றி!
ReplyDeletesuper thank you OM SIVAYA NAMAHA
ReplyDeleteசூரிய காயத்ரி தெரியவில்லை என்றாலும், ஓம் ஆதித்யாய நமஹ என்று தினமும் சூரிய உதயத்தின் போது, ஆதித்யனைப் பார்த்து சொல்லி கை தொழுது வருதல் நலம் பயக்கும்!
ReplyDeleteஆதித்யனைப் பற்றிய சிறப்பானதொரு பகிர்வு!
சிறப்பான தகவல்கள் மற்றும் வழமை போல் நல்ல படங்கள்......
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி.
//நாஸ்திகர்களாலும் இல்லை என்று கூற முடியாத பிரத்யட்ச கடவுள் சூரிய பகவானே.. சூரியன் ஆன்மாவைத் தட்டி எழுப்பி தன்வழிப்படுத்துபவர் என்பதை வேதம், புகழ்கிறது.
ReplyDeleteஉடல் ஆரோக்கியத்தை அளிப்பதிலும் அருட் கடல், இதயநோயை நீக்குபவர் என்பதை, குறிப்பிடுகிறது.
இவரே மழை பொழியவும் காரணம் //
சூர்யனே நேரில் வந்து பதிவிட்டது போல ‘கோடி சூர்யப்பிரகாசம்’ ஆக உள்ளது இந்தப்பதிவு.
>>>>>>
//பெண்கள் சூரியனுக்கு அர்க்யம் கொடுத்தால், ஏழு ஜென்மங்கள் எடுத்தாலும் விதவைக் கோலத்தை அடையமாட்டார்கள் என்று ஸ்ம்ருதிகள் கூறுகின்றன.
ReplyDeleteஞாயிற்றுக்கிழமை பானுவார விரதம் இருந்து சூரியனை வழிபடுவது சிறப்பு ..
சூரியனுக்குரிய "ஆதித்ய ஹ்ருதயம்' ஸ்தோத்திரத்தை ஜெபித்தபின்பே ராமபிரான் ராவண வதம் செய்தார்//
நல்ல நல்ல இனிமையான தகவல்கள்.
இனிக்கும் சர்க்கரைப் பொங்கலாக ..
தேன் மழையாக ..
தெவிட்டாத இன்பமாக ..;)))))
பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.
-oOo-