

ஆஸ்திரேலியாவில் பாராளுமன்றக் கட்டிடத்தின் எதிரே போர் நினைவுச்சின்னம் அமைந்திருக்கிறது ..
பிரதமர் ஏதேனும் முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகள் எடுக்குமுன் அந்தகட்டிடத்தைப்பார்த்து போரில் உயிர் தியாகம் செய்த தியாகிகளை எண்ணிப்பார்த்துக்கொள்ள ஏதுவாக அமைந்திருக்கிறது...
இந்த போர் நினைவுச்சின்ன கட்டிடம் பிரம்மாண்டமாக அமைந்திருக்கிறது ..
ஏழு ஆண்டுகளாக அங்கே பணிபுரியும் வழிகாட்டி கூட இன்னும் முழுமையாக அத்தனை பகுதிகளையும் பார்த்ததில்லையாம் .. என்னும் போது வியப்பின் எல்லைக்கே செல்கிறோம் ..
கலிபொலி போர் , முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்களில் பயன் படுத்தப்பட்ட ஆயுதங்கள் ,தள்வாடங்கள் , வாகனங்கள் , உடைகள் , என்று காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்..
King helicopter at the Australian War Memorial

போரில் கலந்துகொண்ட வீரர்களின் பெயர்கள் ஆயிரக்கணக்கில் பொறித்து வைத்திருக்கிறார்கள்..அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக பாப்பிமலர்களை அர்ப்பணித்திருக்கிறார்கள் ..

தத்ரூபமான மெழுகுச்சிலைகளும் போர்க்களக்காட்சிகளை சித்தரிக்கும் விதமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்..
ஒரு முறை இந்த காட்சிகளை மனம் கலங்க பார்த்தால் மீண்டும் ஒரு யுத்த நிகழ்வுக்கு ஆட்சியாளர்கள் மனதளவிலும் துணையாக மாட்டார்களே ..!
Models of battle at australian war memorial museum

மாலை ஆறு மணிக்கு மியூசியத்தை கதவடைக்கும் முன் குளோசிங் செரிமனி என்று வித்தியாசமாக கண்கவரும் வண்ணம் காட்சிப்படுத்துகிறார்கள்..
உலகம் முழுவதும் குளிர்காலமான இந்த டிசம்பர் மாதத்தில் கான்பெராவில் வெயில் காலமாக இரவு ஒன்பது மணிக்கும் சூரிய வெளிச்சத்துடன் திகழ்வது கண் கொள்ளாக்காட்சி ...
தென் முனையில் இருக்கும் டாஸ்மேனியா நகரில் நள்ளிரவு பன்னிரன்டு மனிக்கும் சூரிய வெளிச்சத்தை காணமுடியுமாம் ..இதற்கு சுற்றுலாவாகவும் அழைத்துச்செல்கிறார்களாம் ...
பூமிப்பந்தின் தென் அரைக்கோளத்தில் இங்கே அமெரிக்காவின் நாஸா விண்வெளி ஆராய்ச்சி நிலையம் பெரிய டிஷ் ஆண்டெனா கருவியை அமைத்திருக்கிறது ... விண்வெளி ஆராய்ச்சிப்படிப்பு மாணவர்கள் பயன்படுத்தி பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்துகிறார்கள்...






படங்கள் அனைத்தும் புருவத்தை உயர்த்த வைக்கிறது நைஸ்....!
ReplyDeleteபடங்கள் அருமை.
ReplyDeleteபடங்களுடன் பதிவு மிக மிக அருமை
ReplyDeleteபகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
அந்தப் பாப்பி மலர்களின் செங்குருதி நிறம்...! போர் விழையா மனம் கொடு இறைவா!
ReplyDeleteஆஸ்திரேலியாவின் அழகு விரியும் படங்கள் அற்புதம்.
வணக்கம்
ReplyDeleteஇராஜராஜேஸ்வரி(அம்மா)
அருமையான படங்கள் அவுஸ்திரேலியா போகாமல் உங்கள் வெப்சைட்டில் பார்க்கலாம் போல உள்ளது அவுஸ்திரேலியா சின்னங்களை படங்கள் அருமை
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
rajesh c.s
ReplyDeleteVery nice thank u akka..//
கருத்துரைக்கு இனிய நன்றிகள்...
படங்கள் அருமையாக இருந்தது.
ReplyDeleteஅருமையான படங்களுடன் கூடிய நல்ல பதிவு! பகிர்விற்கு நன்றி!
ReplyDeleteஅருமையான படங்கள் மற்றும் தகவல்கள்.....
ReplyDeleteகொள்ளை கொள்ளும் அழகுப் படங்கள்...
ReplyDeleteஞாயிற்றுக்கிழமைக்கு றிலாக்ஸ் பண்ணிக்கிறதுக்கு ஏற்ற நல்ல பகிர்வு...:).
நன்றி சகோதரி!
ின் இராஜ ராஜேஸ்வரி - படங்கள் அததனையும் அருமை - விளக்கங்களூம் அருமை - நல்லதொரு பதிவு - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDelete
ReplyDeleteவணக்கம்!
வரலாறு தந்த வழிகளைக் கண்டுணா்ந்தால்
இரவேது நெஞ்சுள் இயம்பு!
ReplyDeleteதகவல் பரிமாற்றத்துக்கு நன்றி.. படங்கள் அருமை.வாழ்த்துக்கள்.
அருமையான படங்களுடன் அறிய தகவல்கள்.
ReplyDeleteபகிர்விற்கு நன்றி.
அன்புடன்,
ராஜி
//பிரதமர் ஏதேனும் முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகள் எடுக்குமுன் அந்தகட்டிடத்தைப்பார்த்து போரில் உயிர் தியாகம் செய்த தியாகிகளை எண்ணிப்பார்த்துக்கொள்ள ஏதுவாக அமைந்திருக்கிறது...//
ReplyDeleteநமது குடும்பத்திற்கு நல்லது செய்து மறைந்த குடும்ப பெரியவர்களை நினைத்து காரியத்தில் இறங்குவதைப் போல... படங்கள் பளிச்சென உள்ளன..
உட்கார்ந்த இடத்திலேயே ஆஸ்திரேலியாவை சுற்றிப் பார்த்தாயிற்று!
ReplyDeleteபடங்கள் கண்ணைக் கவருகின்றன.
உங்கள் பதிவுகளின் சிறப்பே இந்தப் படங்கள்தான்!
நானும் போய் பார்த்திருக்கிறேன் நினைவுச்சின்னத்தை.அழகான அமைதியான சிட்டி கான்பெரா. அழகான நாடு. நினைவுகளை மீட்டவைத்தமைக்கு நன்றி.
ReplyDeleteஅழகிய படங்களுடன் பகிர்வு.
ReplyDeletevery good post.
ReplyDeleteThank you so much.
congratz.
Vetha.Elangathilakam.
ஆஸ்திரேலியா பற்றி அழகான படங்கள். அற்புதமான தகவல்கள்.
ReplyDeleteடாஸ்மேனியா நகரில் இருப்பவர்கள் பிறகு எப்போது தான் நிம்மதியாகத் தூங்க முடியும்?
நள்ளிரவு 12 மணிக்கும் சூரிய வெளிச்சத்தைக் காண்முடியுமா?
அடடா! அப்போ அங்கே யாருக்காவது புதுசா கல்யாணம் ஆச்சுன்னு ரொம்ப கஷ்டமா இருக்குமே !
நடுராத்திரியும் ஏதாவது சமையல் செய்து சாப்பிட்டுக்கிட்டே இருப்பாங்க போலிருக்கு.
பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.