மார்கழி கடைசி நாளன்று போகி கொண்டாடப்படுகிறது. அந்நாளில், பழையன கழித்து புதியன புகுத்தல் வழக்கம்.
"இன்று புதிதாய் பிறந்தோம்'' என்ற சிந்தனையை போகி நமக்கு வழங்குகிறது.
பழயன கழிந்து புதியன புகுதலே தை பொங்கலின தாத்பர்யம்
போகியன்று, வீட்டின் கூரையில் செருகப்படும் பூலாப்பூ
தைத் திங்கள் தண்கயம் படியும்” என்று நற்றிணை
“தைத் திங்கள் தண்ணிய தரினும்” என்று குறுந்தொகை
“”தைத் திங்கள் தண்கயம் போல்” என்று புறநானூறு
“தைத் திங்கள் தண்கயம் போல” என்று ஐங்குறுநூறு
“தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ” என்று கலித்தொகை
கரும்பு உழைப்பின் அருமையை நமக்குக் கற்றுத்தருகிறது.
கரும்பின் ன் மேல்பகுதிஉப்புத்தன்மையுடனும், அடிக்கரும்பு இனிமை மிக்கதாகவும் இருக்கும்.
வாழ்க்கையும் அப்படித்தான். இளமையில் கஷ்டப்பட்டு உழைக்க எந்த வித தயக்கமும் கொள்ளக்கூடாது.
அப்படியானால் தான் முதுமையில் சிரமமில்லாமல் இனியவாழ்வு வாழ முடியும். இந்த உண்மையை உணர்ந்து கரும்பைச் சுவைக்க வேண்டும். உழைத்து வாழ்வில் முன்னேற்றம் பெற கரும்பு நமக்கு ஒரு நல்ல உதாரணம்.
தைமாச பல்லாக்கில் வருகிறது தித்திக்கும் திருவிழா
உள்ளங்கள் பொங்கி வழிய பொங்கல் திருவிழா
வாழ்விற்கு வசந்தம் சேர்த்த மகுடம் சூட்டி மகிழ்ந்த
பூமித் தாயே பெருமிதம்கொள்
பண்பட்ட கலாச்சாரத்தின் விதைகளை ஆழ உழுது வை .,
உழவர்கள் இல்லையேல் இந்த விந்தைகள் எதுவும் இல்லை
என்பதை சிந்தையில் தை ...
திங்கள் பார்த்து பொங்கி வழியும் பொங்கல் பானைகளாக
நம் அனைவரின் இதயங்களிலும் சந்தோசம் பொங்கி வழியட்டும் .
பொங்கல் என்பது லட்சுமி வீட்டிற்கு வரும் நாள் என்று எண்ணுவதால், அவளைத் தங்க வைப்பதற்காக வீட்டை விட்டு எதையும் வெளியேற்றக் கூடாது என்பது ஐதீகம்..
சூரியனில்லாத பூமி இருண்டு விடும். மழையோ, நீரோ இருக்காது.
உயிர்கள் எதுவும் உற்பத்தியாகவோ, வாழவோ முடியாது.
பூமியின் ஜீவாதாரமாக சூரியனின் இயக்கம் இருந்து வருகிறது.
வீடுகள், மாட்டுத் தொழுவங்களுக்கு வண்ணம் தீட்டி, பச்சரிசி, புது வெல்லம், செங்கரும்பு, மஞ்சள், மாக்கோலம், புத்தாடையுடன் பாரம்பரியம், பண்பாட்டை பறைசாற்றும் பண்டிகை
கால்நடைகளை நீராடச் செய்து, தான் உண்ட பொங்கலை அவற்றிற்கு பரிவுடன் அளிக்கும் அன்புத்திருநாள் ...
பிழைப்புக்காக திரைகடல் ஓடி திரவியம் தேட திசைகள் எட்டும் சென்ற பந்தங்கள் ஒன்றுகூடி மகிழும். திருநாள் ...
மஞ்சுவிரட்டு, பாரம்பரிய விளையாட்டுகள் என செயற்கைத் தனம் இல்லாத குதூகலமாக விவசாயிகள் தைத் திருநாளை கொண்டாடுகின்றனர்...
Poolaipoo kappu kattum nalai nookki manam odukirathu Rajeswari.
ReplyDeleteEnna innemaiyana natkal.....
Ennai kovaikku kooti chendru, manathal thulla saitha, ungal postikku nandri dear.
viji
உங்களுக்கும்,வருகை தரும் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்
ReplyDeleteபடங்களும் பகிர்வும் மிக அருமை.
ReplyDeleteஇனிய பொங்கல் வாழ்த்துக்கள்!
உங்களின் படங்களைப் பார்த்த பின் பொங்கலே கொண்டாடியதுபோன்ற மகிழ்ச்சியாய் உள்ளது
ReplyDeleteஅழகான படங்களுடன் பகிர்வுக்கு நன்றிம்மா. உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துக்கள்.
ReplyDelete//பழையன கழித்து புதியன புகுத்தல் வழக்கம்."இன்று புதிதாய் பிறந்தோம்'' என்ற சிந்தனையை போகி நமக்கு வழங்குகிறது. பழயன கழிந்து புதியன புகுதலே தை பொங்கலின தாத்பர்யம்//
ReplyDeleteஉற்சாகமூட்டும் தலைப்பு ..
உரமூட்டும் வரிகள்...
பிறக்கும் தையில்
புதிதாகிறது சிந்தை...
உங்கள் பதிவு
உள்ளம் மகிழ்விக்கிறது!
பொங்கும் தை தொடர்ந்து
பெருகட்டும் இன்பங்கள் !
எங்கும் மங்களம் தளைக்கும்
பொங்கல் திருநாள் வாழ்த்துகளுடன்.
என்றும் அன்புடன்
பி.ஆர்.ஜெ.
அருமை..அருமை..
ReplyDeleteபொங்கலோ பொங்கல்...
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இங்கு கூடிவரும் அனைத்து நண்பர்களுக்கும் என் இனிய பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்கள்!!!
அனைவருக்கும் இனிய பொங்கல் தினங்கள் ..வாழ்த்துக்கள் !
ReplyDeleteஅன்பின் இராஜ ராஜேஸ்வரி
ReplyDeleteபுதியன் புகுத்தும் போகித்திருநாள் பதிவு அருமை - படங்கள் கண்ணைக் கவர்கின்றன - விளக்கங்கள் அருமை - நற்றினை, குறுந்தொகை, புற நானூறு, ஐங்குறுநூறு மற்றும் கலித்தொகை ஆகிய சங்க இலக்கியங்களில் தைத்திங்கள் பற்றிக் குறிப்பிட்டுள்ளதை எடுத்தியம்பியது நன்று.
உப்புக் கரிக்கும் கரும்பின் மேல்பகுதியும் இனிக்கும் கரும்பின் அடிப்பகுதியும் வாழ்க்கையின் இளமைக்கால் துயரங்களையும் முதுமைக்கால மகிழ்வினையும் நினைவூட்டுவதாகக் குறிப்பிடுவது சிறந்த சிந்தனை.
உழவர் திருநாளாகிய பொங்கல் பண்டிகையின் பெருமைகளை விளக்கும் பதிவு
நல்லதொரு பதிவு - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
பண்பாட்டுத்திருவிழா என்றது அருமை !
ReplyDeleteஇனிய பொங்கல் வாழ்த்துக்கள் !
ReplyDeleteஅந்த கிராமிய சூழலில் பொங்கல் கொண்டாடுவதுபோல் இருக்கிறது. அருமை. இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
கோவையில் கிடைக்கும் பூலாப்பூ இங்கு கிடைப்பது இல்லை.
ReplyDeleteகரும்பு தரும் விளக்கம் அருமை.படங்களும் பகிர்வும் அருமை.
உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர்களுக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.
கோவையில் கிடைக்கும் பூலாப்பூ இங்கு கிடைப்பது இல்லை.
ReplyDeleteகரும்பு தரும் விளக்கம் அருமை.படங்களும் பகிர்வும் அருமை.
உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர்களுக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.
வாவ்! அருமையான பதிவு கலக்கிட்டிங்க... இனிய பொங்கல் நல் வாழ்த்துகள். உங்களுக்கும் உங்களுடைய குடும்பத்திற்கும்.
ReplyDeleteஅருமையான பொங்கல் பதிவு.
ReplyDeleteஉங்களுக்கும்,உங்க குடும்பத்தவர்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
ReplyDeleteவணக்கம்!
தாமரைப் படத்தை இட்டுத்
தமிழ்மணம் நல்கும் தோழி!
நாமரைச் செல்வி உன்னுள்
நடமிட நன்றே வாழி!
மாமறைக் கண்ணன் தாளை
மனமுற பாடும் உன்னைப்
பாமறை தீட்டும் நானும்
பணிவுடன் வணங்கு கின்றேன்!
புனைந்திடும் பக்கம் யாவும்
புகழ்த்தமிழ் மாண்பைப் போற்றும்!
அணிந்திடும் அணியைப் போன்றே
அழகுற போரைத் தீட்டும்!
இணைந்திடும் தோழி தோழா்
இயம்பிடும் வண்ணம் காண்க!
இனித்திடும் பொங்கல் வாழ்த்தே!
இன்புற வாழ்க வாழ்க!
கவிஞா் கி. பாரதிதாசன்
பிரான்சு
கரும்பு போல்,பொங்கல் போல் இனிக்கிறது பதிவு
ReplyDeleteகாப்பு கட்டும் பழக்கம் கோவையோடு போய் விட்டது.
ReplyDeleteஇனிய பொங்கல் வாழ்த்துகள்.
இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்!
ReplyDeleteதை மகளை வரவேற்கும் இனிய பதிவினை பகிர்ந்தமைக்கு நன்றி சகோதரி!
படங்களும் பதிவும் அருமை!
Iniya Pongal nal vaazhththukkal!
ReplyDeleteகரும்பில் இத்தனை விஷயங்களா.. இனிப்பான தகவல்கள் அறிந்ததில் மகிழ்ச்சி..
ReplyDeleteஎங்க ஊர்லயும் மாட்டு பொங்கல் அன்று மாட்டை குளிப்பாட்டி அலங்கரித்து நாலேரி விடுவார்கள். வரிசையான மாடுகளின் அணிவகுப்பு எங்க ஊர் நாலேரியை நியாபகபடுத்துகிறது.
இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் மேடம்.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!
ReplyDelete//மார்கழி கடைசி நாளன்று போகி கொண்டாடப்படுகிறது. அந்நாளில், பழையன கழித்து புதியன புகுத்தல் வழக்கம்.
ReplyDelete"இன்று புதிதாய் பிறந்தோம்" என்ற சிந்தனையை போகி நமக்கு வழங்குகிறது.
பழையன கழிந்து புதியன புகுதலே தை பொங்கலின தாத்பர்யம் //
மிகச்சிறப்பான தாத்பர்யம்.
தேவையற்ற, கசப்பான, பழைய எண்ணங்களையும், அனுபவங்களையும் கொளுத்தி மகிழ்வோம்.
இன்று புதிதாய் பிறந்தோம் என நினைத்து மனதினில் பூரிப்படைவோம்.
>>>>>>>
//கரும்பு உழைப்பின் அருமையை நமக்குக் கற்றுத்தருகிறது.
ReplyDeleteகரும்பின் மேல்பகுதி உப்புத் தன்மையுடனும், அடிக்கரும்பு இனிமை மிக்கதாகவும் இருக்கும்.//
அடிக்கரும்பாகத்தான் இனிக்கிறீர்கள், இந்த வரிகளில்.
ஜூஸாகப்பிழிந்து குடிக்க ஆசையாக உள்ளதாக்கும். ;)))))
பாராட்டுக்கள். வாழ்த்துகள், நன்றிகள்.
ooooo