


வெற்றிமிகுத்து வேழவனைத் தொழ புத்தி மிகுத்துவரும்
வெள்ளிக்கொம்பின் விநாயகனைத் தொழ
துள்ளி ஓடும் தொடர்ந்த வினைகளே.'
விநாயகரை 16 வடிவங்களில் அலங்கரிக்கலாம்.

பாலகணபதி: மா, பலா, வாழை ஆகிய மூன்று பழங்களையும்
கரும்பையும் தம் கரங்களில் ஏந்தி சூரியோதய காலத்துச்
சிவப்பு வண்ண மேனியுடன் பிரகாசிக்கும் பாலகனைப் போன்ற உருவமுள்ளவரை வழிபடுவதால் தோஷங்கள் நீங்கும்.

தருண கணபதி: பாசம், அங்குசம், அப்பம், விளாம்பழம்,
நாவற்பழம், முறித்த ஒற்றை தந்தம், தெற்கதிர், கரும்பு
ஆகியவற்றை தம் எட்டுக்கைகளில் ஏந்தி, சூரியோதய
கால ஆகாயத்தின் செந்நிற மேனியுடைய இளைஞனாகக்
காட்சி தருபவரை வழிபடுவதால் முகக்களை உண்டாகும்.


பக்தி கணபதி: தேங்காய், மாங்காய், வாழைப்பழம்,
வெல்லத்தினாலான பாயாசம் நிரம்பிய சிறுகுடம்
ஆகியவற்றை தம் நான்கு கைகளில் ஏந்தி நிலா
ஒளியை ஒத்த வெண்மை நிற மேனியுடன்
காட்சியளிப்பவரை வழிபடுவதால் இறை
வழிபாடு உபாசனை நன்கு அமையும்.

வீர கணபதி: தனது பதினாறு கரங்களில் ஒன்றில்
வேதாளத்தையும், மற்ற கரங்களில் ஆயுதங்களும்
ஏந்தி, ரவுத்ராகாரமாக வீராவேசத்தில்
செந்நிற மேனியுடன் விளங்கும் ரூபத்தை உடையவரை
வழிபடுவதால் தைரியம், தன்னம்பிக்கை உண்டாகும்.

சக்தி கணபதி: பச்சைநிற மேனியுடைய சக்தியுடன்
பாசம், அங்குசம் ஏந்தியிருப்பவர். பயத்தை நீக்குபவர்.
செந்தூர வண்ணம் கொண்டவரை வழிபடுவதால்
உடல் ஆரோக்கியம் ஏற்படும்.


துவிஜ கணபதி: இரண்டு யானை முகங்களுடன் இடது கையில்
சுவடி, அட்சயமாலையும், தண்டமும், கமண்டலமும் ஏந்தியவர்.
வெண்ணிற மேனி கொண்டவரை வழிபடுவதால் கடன் தொல்லை நீங்கும்.

சித்தி கணபதி: பழுத்த மாம்பழம், பூங்கொத்து, கரும்புத்துண்டு,
பாசம், அங்குசம் ஆகியவற்றைக் ஏந்தி ஆற்றலைக் குறிக்கும்.
சித்தி சமேதராகவும் பசும்பொன் நிறமேனியானவரான இவருக்குப்
பிங்கள கணபதி என்ற பெயர் வந்தது. வழிபடுவதால்
சகல காரியம் சித்தியாகும்.

உச்சிஷ்ட கணபதி: வீணை, அட்சமாலை, குவளை மலர்,
மாதுளம் பழம், நெற்கதிர், பாசம் ஆகியவற்றையும் ஏந்தியுள்ளார்.
கருநீல வண்ணமேனியுடையவரை வழிபடுவதால்
வாழ்க்கை உயர்வு, பதவிகளை பெறலாம்.

விக்னராஜ கணபதி: சங்கு, கரும்பு, வில், மலர், அம்பு, கோடாரி,
பாசம், அங்குசம், சக்கரம், தந்தம், நெற்கதிர், சரம் ஆகியவற்றை
தன் பன்னிரு கைகளில் ஏந்தி ஸ்வர்ண நிற மேனியுடன்
பிரகாசமாக விளங்குபவரை வழிபடுவதால்
விவசாயம் விருத்தியாகும்.

க்ஷிப்ர கணபதி: கற்பகக்கொடி, தந்தம், பாசம், அங்குசம் ஆகியவற்றை
தன் நான்கு கரங்களிலும் ரத்தினங்களை பதித்த கும்பத்தை
தனது துதிக்கையிலும் ஏந்திய செம்பருத்தி மலரைப்
போன்ற சிவந்த மேனியுடைய சீக்கிரமாக
அருள்புரிபவரை வழிபடுவதால் கல்வி விருத்தியாகும்.

ஹேரம்ப கணபதி: அபய ஹஸ்தங்களுடன்
பாசம், அங்குசம், தந்தம், அட்சமாலை, கோடாரி,
வலக்கை, மோதகம், பழம் ஆகியவற்றை ஏந்தி,
பத்து கைகளும், ஐந்து முகங்களும் அமைந்து
வெண்ணிற மேனியுடன் சிம்ம வாகனத்தில் அமர்ந்து
காட்சி தருகிறார். இவரை வழிபடுவதால் விளையாட்டு,
வித்தைகள் இவற்றில் புகழ் பெறுவார்கள்.



லட்சுமி கணபதி: பச்சைக்கிளி, மாதுளம் பழம், பாசம்,
அங்குசம், கற்பகக்கொடி, கத்தி ஆகியவற்றை
தன் ஆறு கைகளிலும், மாணிக்க கும்பத்தை தன் துதிக்கையிலும்
ஏந்தி தன் இரு புறமும் இரு தேவிகளை அணைத்துக்
கொண்டு வெள்ளைமேனியாய் அமர்ந்து அருள்புரிபவர்.
இவரை வழிபடுவதால் பணம், பொருள் அபிவிருத்தியாகும்.
இவரை வழிபடுவதால் பணம், பொருள் அபிவிருத்தியாகும்.

மகா கணபதி: பிறை சூடி, மூன்று கண்களுடன் தாமரை மலர்
ஏந்தி தன் சக்தி நாயகராகிய வல்லபையை அணைத்த வண்ணம்
கைகளில் மாதுளம்பழம், கதை, கரும்பு, சக்கரம், பாசம், நெய்தல், புஷ்பம், நெற்கதிர், தந்தம், கரும்பு, வில், தாமரை மலர்
ஆகியவற்றையும் துதிக்கையில் ரத்தின கவசத்தையும் ஏந்தி
சிகப்புநிற மேனியாய் விளங்குபவரை வழிபடுவதால்
தொழில் விருத்தியாகும்.


புவனேச கணபதி: விநாயகர் தன் தந்தத்தை முறித்து வீசியதால்
அசுரனது சக்தி ஒடுங்கி சிறு மூஞ்சூறு வடிவத்துடன்
ஓடிய கஜமுகாசுரன் மீது பாய்ந்து ஏறி அவனை தன் வாகனமாக்கிக்
கொண்ட செந்நிற மேனியுடன் பாசம், அங்குசம், தந்தம்,
மாம்பழம் ஏந்தி கற்பக விருட்சத்தின் கீழ் காட்சி தருகிறார்.
இவரால் விவகாரம், வியாஜ்ஜியம் வெற்றியாகும்.

நிருத்த கணபதி: மஞ்சள் மேனியுடன் பாசம், அங்குசம், அப்பம்,
கோடரி, தந்தம் ஆகியவற்றை ஐந்து கைகளில் ஏந்திய மோதகம்
இருக்கும் துதிக்கையை உயர்த்தி ஒற்றைக் காலில்நிருத்த
கணபதியாகக் அருள்பவரை வழிபடுவதால் சங்கீதம்,
சாஸ்திரங்களில் சிறப்பு பெறுவார்கள்.


ஊர்த்துவ கணபதி: பொன்னிற மேனியுடைய
எட்டு கைகள் கொண்டவர். தேவியை தன் இடதுபுறம்
அணைத்துக் கொண்டு வீற்றிருக்கிறார்.
இவரை வழிபடுவதால் இல்வாழ்க்கை சிறக்க அருள்கிறார்..
[மதுரை ஊர்த்துவ கணபதி






எத்தனை எத்தனை விநாயகர்கள்?
ReplyDeleteவேழமுகத்து விநாயகனைத் தொழவாழ்வு மிகுந்து வரும்.//
ReplyDeleteஎத்தனை விநாயகர் ! எல்லோரையும் வணங்கி நன்மைகளை பெற்றுக் கொண்டேன். படங்கள் எல்லாம் அற்புதம்.
நன்றி.
வாழ்த்துக்கள்.
விநாயகரைப் பல வடிவங்களில் தரிசனம் செய்தாயிற்று.அதிலும் ஸ்கூட்டர் ஓட்டும் விநாயகர் ரொம்பவே கவர்ந்துவிட்டார்.
ReplyDeleteஒவ்வொரு புள்ளையாரும் அழகு.
ReplyDeleteவிநாயகன் என்றாலே வினைகளைத் தீர்ப்பவன்... அந்த அற்புத விநாகரின் அழகிய படங்களும் அவர்பற்றிய அரிய பல விஷயங்களும் அருமை சகோதரி!
ReplyDeleteமிக்க நன்றி!
இது ஒரு அரிய பதிவு... பகிர்ந்தமைக்கு பெருமை கொள்கின்றோம்...
ReplyDeleteஷோடச கணபதி! படங்களும் விளக்கங்களும் மிகச்சிறப்பு! பகிர்வுக்கு நன்றி!
ReplyDelete6543210 - இது எல்லோருக்கும் பிடித்த நம்பர் ..!
ReplyDeletehttp://sattaparvai.blogspot.in/2013/01/6543210.html
excellent post
ReplyDeleteவிநாயகரின் தரிசனம் கிடைக்கப் பெற்றோம்.
ReplyDeleteஅத்தனையும் அருமை
ReplyDeleteவிக்னங்கள் தீர்க்கும் விநாயகர் பற்றி தகவல்கள் மேலும் அறிந்துகொண்டேன் தங்கள் பகிர்வின் ஊடாக.மிக்க நன்றி.
ReplyDeleteஇருமுகவிநாயகர் இந்தியாவில் எந்த இடத்தில் இருக்கிறார்?
விதம் விதமாக எத்தனை விநாயகர்கள்!
ReplyDeleteஅருமை, அருமை!
ஆன்மிகத்திற்கு உங்கள் வலைத்தளம் ஒரு அருமையான இடம்!
This comment has been removed by the author.
ReplyDeleteRevised
ReplyDeleteபி ள் ளை யா ர ப் பா !
உன்னை எப்படியெல்லாம் அலங்கரிக்கலாம்,
எப்படியெல்லாம் வழிபடலாம்,
அதனால் என்னென்ன கிடைக்கும்
என்றெல்லாம் ஜோரா எழுதியிருக்காங்களேப்பா.
மெய்சிலிர்க்குதுப்பா!
பதினாறு வடிவங்கள் போதுமாப்பா.
பதினாறு ஆயிரம் வடிவங்களில் உன்னை நான் என் மனதினில் இதுவரை அலங்கரித்துப் பார்த்து மகிழ்ந்துள்ளேனேயப்பா.’
அது உனக்குத் தெரியுமாப்பா ;)
அனைவரையும் காப்பாத்துடாப்பா.
மிகவும் மகிழ்ச்சி தரும் பதிவு அளித்துள்ளதற்கு நன்றியோ நன்றிகள்,
-oOo-
உன் பக்தன் நான் இவ்வளவு கேள்வி கேட்கிறேனேயப்பா!
ReplyDeleteபதில் ஏதும் சொல்லக்காணோமேயப்பா !!
உன் வாயில் என்ன
கொழுக்கட்டையாப்பா?
OK OK சரிப்பா .... அத்தைவிடு
நீ ஸ்கூட்டர் கூட ஓட்ட ஆரம்பிச்சுட்டயாப்பா?
பார்த்துப்போப்பா .....
ஹெல்மெட் போட்டுக்கிட்டு ஓட்டுப்பா !!
ஏற்கனவே உன் தலையை வாங்கி யானைத்தலையை ஒட்ட வெச்சிருக்காங்கப்பா, உங்கப்பா !!!
ooooooo
வை.கோபாலகிருஷ்ணன் said..//
ReplyDeleteவிநாயகரை வியக்கவைக்கும் அலங்காரக் கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த நன்றிகள் ஐயா..
கணபதி பார்த்துத்தான் ஓட்டுவார் .. கிரீடமெல்லாம் வைத்திருக்கிறாரே ...!
விக்னராஜ கணபதியின் படம்
ReplyDelete