அருமறை முதல்வனை ஆழி மாயனை
கருமுகில் வண்ணனை கமலக் கண்ணனை
திருமகள் தலைவனை தேவ தேவனை
இருபதம் முளிரிகள் இறைஞ்சி ஏத்துவாம்
இந்தியாவின் ஆன்மிகம், கலாசாரம் ஆகிய இரண்டையும் இணைக்க்கும் உடுப்பி ஆலயத்தில் பேரழகு வாய்ந்த உடுப்பி ஸ்ரீகிருஷ்ணர் விக்கிரகம் அழகுக்கு அழகூட்டும் வகையில் நிறைய நகைகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது .....
துவாரகையிலிருந்து ஒரு கப்பல் மால்பே என்னும் இடத்தினை கடக்கும் சமயம் பெரும் சூறாவளிக் காற்றில் சிக்கி மூழ்கிவிடும் என்ற நிலையில் அதை கரையிலிருந்து கவனித்த மத்வாச்சாரியார், தன் காவித் துண்டின் நுனியை காற்றில் ஆட்டி தனது மகிமையினால் சூறாவளியின் வேகத்தைக் கட்டுப்படுத்தி கப்பலை பாதுகாப்பாக கரை சேர்த்தார்.
இதனால் மிக்க மகிழ்ச்சியடைந்த அதன் தலைவன் அவரை வணங்கி அவருக்கு தன் நன்றியைத் தெரிவித்துக் கொள்ள மத்வர் கப்பலின் அடித்தளத்தில் இருந்த கோபி சந்தனத்தால் ஆன பாறாங்கல் வேண்டுமென்றுக் கேட்டார்.
மத்வ மதத்தினர் கோபி சந்தனத்தால்தான் சிறு திலகம் போன்ற புனித சின்னம் இட்டுக் கொள்கின்றனர். அந்த புனிதமான கோபி சந்தனத்தாலான பாறையின் உள்ளே மறைந்து இருந்ததுதான் நாம் இன்றும் உடுப்பியில் தரிசிக்கும் ஸ்ரீகிருஷ்ணரின் விக்கிரகம். அதை தனது ஞானதிருஷ்டியினால் தெரிந்துக் கொண்ட மத்வர் அதன் உள்ளே கையைவிட்டு சாலிகிராமத்தினால் ஆன ஸ்ரீகிருஷ்ணரின் விக்கிரகத்தை வெளியே எடுத்து அதை சுத்தப்படுத்தி மடத்தில் நிறுவினார்
, ‘விசுவகர்மா என்ற தெய்வச்சிற்பியால் செய்யப்பட்டு, துவாரகையில் துவாபரயுகத்தில் ஸ்ரீருக்மணியால் பூஜிக்கப்பட்டு, பிற்பாடு துவாரகை மூழ்கியபோது கடலில் மூழ்கிய விக்கிரகம் அது’!
கிருஷ்ணரை தரிசிக்க உடுப்பி வந்த கனகதாசர் உள்ளே அனுமதிக்கப் படவில்லை. .
கிருஷ்ணா… உன் அழகை கண் குளிரப் பருகவும், உன் சந்நிதியில் மெய்யுருகப் பாடவும்தானே நான் ஓடோடி வந்தேன்? எனக்கு உன் தரிசனம் மறுக்கப்படுவது நியாயமா? சதா சர்வ காலமும் உன் நினைவிலேயே மூழ்கித் திளைக்கும் இந்த பக்தன் மீது நீ கருணை காட்டமாட்டாயா?” கோயிலைச் சுற்றி, பின்பக்கமாக வந்து கதறினார் கனகதாஸர்.
அதுவரையிலும், கோயிலின் வாயிலை நோக்கி, கிழக்கு முகமாக நின்றிருந்த கிருஷ்ணர், பக்தனின் பரிதவிப்பைக் கேட்டு மனம் இளகி, மேற்கு நோக்கித் திரும்பினார்.
கையிலிருந்த மத்தால் சுவரில் துவாரம் ஏற்படுத்தினார். அந்தத் துவாரம் வழியே கனகதாஸருக்கு உடுப்பி கிருஷ்ணனின் ஆனந்த தரிசனம் கிடைத்தது!
இன்றும் உடுப்பியில் கிருஷ்ணர், மேற்கு திசையைப் பார்த்தபடிதான் நின்றுகொண்டிருக்கிறார். கனகதாஸருக்கு தரிசனம் கிடைக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்த அந்த துவாரம் ‘கனகன கிண்டி’ என்று அழைக்கப்படுகிறது.
Hmm it seems like your website ate my first comment (it was super long) so I guess I'll just sum it up what I wrote and say, I'm thoroughly enjoying
ReplyDeleteyour blog. I as well am an aspiring blog writer but I'm still new to everything. Do you have any suggestions for first-time blog writers? I'd really appreciate
it.
My website cheap jerseys china
ரசித்தேன்.
ReplyDeleteஉடுப்பி கிருஷ்ணரின் ஆனந்த தரிசனம் எங்களுக்கும் கிடைத்ததில் மகிழ்ச்சி.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteபொங்கல் மற்றும் சில வேலைக்காரணமாக பிளாக் பக்கம் வரலங்க.
ReplyDeleteகாலையில் பூஜையை முடித்துட்டு இங்க வர, கண்ணனின் தரிசனம்..ஹரி ஓம்.நன்றி.
நல்ல தகவல் , விளக்கம் .படங்கள் அருமை நன்றி
ReplyDeleteUdupi Krishna...liked all the photos
ReplyDeleteஇவ்வளவு காலமும் இப்ப் பெயரினை மட்டும் அறிந்திருந்தேன். இன்று உங்களால் இப்பெயர் கொண்ட கிருஷ்ணரின் வரலாறு அறிந்து கொண்டேன். படங்களும் அற்புதம்...
ReplyDeleteஅருமையான பகிர்வு. மிக்க நன்றி சகோதரி!
உள்ளம் கொள்ளை கொள்ளும் பதிவுகள்
ReplyDeleteஉடுப்பி கிருஷ்ணரின் அழகிய படங்களும் தல புராணமும் மிகவும் சிறப்பாக பகிர்ந்துள்ளீர்கள்! வாழ்த்துக்கள்! நன்றி!
ReplyDelete
ReplyDeleteகதைகள் எல்லாம் சுவாரசியமாக இருக்கிறது.உங்கள் பதிவில் அழகான படங்களுடன் அறியாத கதைகளும் கிடைக்கின்றன. வாழ்த்துக்கள்.
ReplyDeleteபுதிதாக கூகிள் ஆங்கில மொழியாக்கம் பார்த்தேன். !தமாஷாக இருக்கிறது.!
பார்க்கப் பார்க்கத் தெவிட்டாத உடுப்பி கிருஷ்ணனின் முகம்! உங்கள் பதிவின் புகைப்படங்களில் மீண்டும் மீண்டும் கண்டு மகிழ்ந்தேன்.
ReplyDeletenice information about krishna
ReplyDeleteஉடுப்பி கிருஷ்ணன் - மனதை கொள்ளை கொண்டான்.....
ReplyDeleteThe story i had heard about Guruvayurappa too.
ReplyDeleteNice pictures.
Nice narration.
viji
உடுப்பி ஸ்ரீகிருஷ்ணரைப்பற்றி வெகு அழகான படங்களும் விளக்கங்களும் மிகவும் நன்றாக உள்ளன.
ReplyDelete’கனகன கிண்டி’ துவாரம் ! ;)))))