Friday, January 25, 2013

அன்னையின் அருள் ..








கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர்  கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும் கழுபிணி இலாத உடலும்
சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும் தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும் தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலும் ஒரு துன்பமில்லாத வாழ்வும்
துய்ய நின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய தொண்டரொடு கூட்டு கண்டாய்!
அலையாழி அரிதுயிலும் மாயனது தங்கையே! ஆதிகடவூரின் வாழ்வே!
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி! அருள்வாமி! அபிராமியே!....

இருளிலிருந்து ஒளிக்கும் பொய்மையிலிருந்து சத்தியத்துக்கும் 
பிறப்பு-இறப்பிலிருந்து பெருவாழ்வுக்கும் அழைத்துச் செல்லும் நூல்.   அபிராமி அந்தாதியை நாள்தோறும் மறவாமல் பயில்வது  நலன்களை வழங்கும் ...

""ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை அண்டமெல்லாம் 
பூத்தாளை மாதுளம்பூ நிறத் தாளைப் புவியடங்கக் 
காத்தாளை ஐங்கணை பாசாங்குசமும் கரும்பும் அங்கை 
சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே''

அபிராமி அந்தாதி வழி, அபிராமியை வழிபடுவோர்க்கு வாழ்வில் எக்காலத்திலும் எந்நிலையிலும் மங்கலங்களே பொங்கி வரும். 
மாசற்ற வாழ்க்கை அமைந்து அவர்கள் தேசுடன் புகழ் வீசும் வண்ணம், மண்ணில் நல்ல வண்ணம் வாழ்வார்கள் ....
தை மாத வெள்ளிக்கிழமை என்பது மகாலட்சுமியின் பரிபூரண அருளைப் பெறுகிற அற்புத நாள்.

தை மாதத்தின் வளர்பிறை சப்தமி என்னும் ஏழாம் நாள் இரத சப்தமி என்றும் சூரிய ஜெயந்தி என்றும் கொண்டாடப்படுகின்றது.


இரத சப்தமியன்று அருணன் சாரதியாக இருந்து செலுத்தும் ஏழு குதிரைகள் பூட்டிய சூரிய நாராயணரின் இரதம் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி திரும்புவதாக ஐதீகம்



44 comments:

  1. அபிராமி பட்டர் கதையின் நாயகியைத் தரிசித்தேன்.

    ReplyDelete
  2. தகவலுக்கு நன்றி. எனக்கு அய்யனாரப்பன் சுவாமிகள் பற்றிய தகவல் கிடைத்தால் பகிருங்களேன்

    ReplyDelete
  3. உங்கள் ஆன்மீகப் பதிவுடன் துவங்குகிறது இன்றைய தினம்..!

    ReplyDelete
  4. வெள்ளிக்கிழமைக் காலை அழகிய அம்பாளின் தரிசனம். மனதுக்கு நிம்மதியை தந்தது தங்களின் பதிவு. பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete
  5. 2
    =
    ஸ்ரீராமஜயம்
    ===========

    21.01.2011 அன்று
    முதல் பதிவாக

    “காயத்ரீ மந்திரம்”

    என்ற பதிவினைக்

    கொடுத்திருந்தீர்கள்.


    இன்று 25.01.2013

    799 வது பதிவாக

    “அன்னையின் அருள்”

    என்ற பதிவினைக்

    கொடுத்துள்ளீர்கள்.


    இன்று

    “தை வெள்ளிக்கிழமை” க்கு

    ஏற்றதோர் அழகான பதிவு.

    மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது! ;)

    >>>>>>

    ReplyDelete
  6. நாளை 26.01.2013

    இந்தியக்

    குடியரசுத்திருநாள்.


    நாளைக்கு வெற்றிகரமான

    தங்களின் 800 ஆவது பதிவு

    வெளியாக உள்ளதில் பெரும்

    மகிழ்ச்சியடைகின்றோம்.


    அதற்கும்

    குடியரசுத் திருநாளுக்கும்

    சேர்த்து அன்பான அட்வான்ஸ்

    நல் வா ழ் த் து க ள். ;)))))

    >>>>>>>>

    ReplyDelete
  7. வலையுலகினில் தாங்கள்

    சின்னஞ்சிறு பெண் போலே சிற்றாடை இடை உடுத்தி

    செந்தாமரைச் சின்னத்துடன்

    “செந்தாமரையே செந்தேன் நிலவே”

    என்பது போல அடி எடுத்து வைத்த

    திருநாள் 21.01.2011.


    நாளைய தேதி: 26.01.2013.

    இந்த இரண்டாண்டு காலத்திற்குள்

    இடைப்பட்ட நாட்கள்: 737 மட்டுமே.


    ஆனால் தாங்கள் தந்துள்ள

    பதிவுகளோ 800 என்ற வெற்றி

    இலக்கினைத் தொட்டுள்ளது.


    737 நாட்களில் 800 பதிவுகள்.

    ஒவ்வொன்றும் தங்கம்,
    வைரம்,
    வைடூர்யம்,
    கோமேதகம்,
    புஷ்பராகம்,
    பவழம்,
    மரகதம்,
    மாணிக்கம்,
    நல்முத்து

    என நவரத்தினங்களாக

    ஜொலிக்கின்றன என்பது

    உலகறிந்த உண்மை! ;))))

    >>>>>>>>>

    ReplyDelete
  8. 737 நாட்களில் உலகத்தரம் வாய்ந்த படங்களுடன் 800 பதிவுகள்.

    புள்ளிவிபரப்படி 108.55%.

    அதாவது 100 நாட்களில் 108க்கும் மேற்பட்ட பதிவுகள். ;)))))

    தினமும் ஓர் பதிவுக்கு மேல் கொடுத்து அசத்தியுள்ளீர்கள்.

    நாளை 26.01.2013 இந்தியக் குடியரசு தினத்தன்று 800 ஆவது பதிவினை வெற்றிகரமாகத் தரப்போகும் தாங்கள், எதுவுமே அதிகம் அலட்டிக்கொள்ளாமல் தினம் ஒரு பதிவு என்ற தங்களின் இலக்கினில் சென்று வந்தாலே வரும் 15.08.2013 'இந்திய சுதந்திரத் திருநாள்' அன்று வெற்றிகரமன 1001 ஆவது பதிவினைத்தந்து அஷ்டபந்த கும்பாபிஷேகம் போலக் கொண்டாடிட முடியும் தான்.

    அதற்கு தங்களின் எழுத்துக்களின் + பதிவுகளின் தீவிர ரசிகர்களாகிய எங்களின் மனமார்ந்த வாழ்த்துகள்.

    -oOo-

    ReplyDelete
  9. கவியாழி கண்ணதாசன் said...
    தகவலுக்கு நன்றி. எனக்கு அய்யனாரப்பன் சுவாமிகள் பற்றிய தகவல் கிடைத்தால் பகிருங்களேன்//

    http://jaghamani.blogspot.com/2011/08/blog-post_07.html

    ஜயமளிக்கும் ஐயனாரும் ஐயப்பனும்
    என்ற பதிவு பார்வையிடுங்கள் ஐயா..

    நன்றி ...

    ReplyDelete
  10. வை.கோபாலகிருஷ்ணன் has left a new comment on your post "அன்னையின் அருள் ..":

    737 நாட்களில் உலகத்தரம் வாய்ந்த படங்களுடன் 800 பதிவுகள்.

    புள்ளிவிபரப்படி 108.55%.

    அதாவது 100 நாட்களில் 108க்கும் மேற்பட்ட பதிவுகள். ;)))))

    தினமும் ஓர் பதிவுக்கு மேல் கொடுத்து அசத்தியுள்ளீர்கள்.

    நாளை 26.01.2013 இந்தியக் குடியரசு தினத்தன்று 800 ஆவது பதிவினை வெற்றிகரமாகத் தரப்போகும் தாங்கள், எதுவுமே அதிகம் அலட்டிக்கொள்ளாமல் தினம் ஒரு பதிவு என்ற தங்களின் இலக்கினில் சென்று வந்தாலே வரும் 15.08.2013 'இந்திய சுதந்திரத் திருநாள்' அன்று வெற்றிகரமன 1001 ஆவது பதிவினைத்தந்து அஷ்டபந்த கும்பாபிஷேகம் போலக் கொண்டாடிட முடியும் தான்.

    அதற்கு தங்களின் எழுத்துக்களின் + பதிவுகளின் தீவிர ரசிகர்களாகிய எங்களின் மனமார்ந்த வாழ்த்துகள்.//

    மனம் நிறைந்த நன்றிகள் ஐயா தங்களின் வாழ்த்துகளுக்கும் பாராட்டுக்களுக்கும் ..

    தங்களின் ஊக்குவிக்குவிப்பும் வழிகாட்டுதல்களும் இல்லாமல் இவை சாத்தியப்பட்டிருக்க முடியாதுதான் ..

    ReplyDelete
  11. அபிராமி அன்னையின் இன்னருள் வியாபிக்கக் கண்டேன். அம்மா என்றாலே மனம் உவகையில் ஆழ்ந்துவிடும். தாயின் நல்லருள் யாவர்க்கும் கிடைத்திட வேண்டுகிறேன்.

    பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி!

    ReplyDelete
  12. Annai Abrami en venduthalukku irrangi van valleye inngu vanthanayoooo?
    Thanks for the post Rajeswari.
    viji

    ReplyDelete

  13. இதை எழுதுங்கள் அதை எழுதுவீர்கள் என்றெல்லாம் நான் கணிப்பதில்லை. எதிர்பாராமல் வரும் பதிவுகள் அதிக மகிழ்ச்சி அளிக்கும். என்ன.. யாரும் மொழிபெயர்ப்பு பற்றிக் கருத்துக் கூற வில்லையே( அடியேனைத் தவிர.)

    ReplyDelete
  14. அன்னை அபிராமியின் அருள் அனைவருக்கும் பூரணமாக கிடைக்கட்டும்....

    ReplyDelete
  15. அன்னை அபிராமியை காலையில் தரிசித்து அளவில்லாத ஆனந்தம் அடைந்தேன். மேலும் வளரட்டும் தங்கள் திருப்பணி. பேரன்புடன் ராம் ராம் லக்ஷ்மி நரசிம்ஹன், ஈரோடு

    ReplyDelete
  16. அன்னை அபிராமியை காலையில் தரிசித்து அளவில்லாத ஆனந்தம் அடைந்தேன். மேலும் வளரட்டும் தங்கள் திருப்பணி. பேரன்புடன் ராம் ராம் லக்ஷ்மி நரசிம்ஹன், ஈரோடு

    ReplyDelete
  17. தை வெள்ளிக்கிழமை அபிராமி அந்தாதியுடன் கூடிய பதிவு மனதுக்கு நிறைவை தருகிறது.

    உங்கள் எல்லாப் பதிவுகளிலும், புகைப்படங்களும் அதற்கேற்றே தகவல்களும் சிறப்பாக அமைந்து விடுகின்றன.

    வாழ்த்துகள்!

    ReplyDelete
  18. G.M Balasubramaniam said...

    இதை எழுதுங்கள் அதை எழுதுவீர்கள் என்றெல்லாம் நான் கணிப்பதில்லை. எதிர்பாராமல் வரும் பதிவுகள் அதிக மகிழ்ச்சி அளிக்கும். என்ன.. யாரும் மொழிபெயர்ப்பு பற்றிக் கருத்துக் கூற வில்லையே( அடியேனைத் தவிர.//

    மகிழ்ச்சி அளிக்கும் கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த நன்றிகள் ஐயா..

    மொழி பெயர்ப்பு இப்போதுதானே ஆரம்பம் ..அதனால் அப்படி இருக்கலாம் ..நிறைய மொழி ஆர்வலர்கள் பங்கேற்று திருத்தி அமைத்தால் பாராட்டும்படி அமையும் என்பது காலத்தின் கட்டாயம் ...

    ReplyDelete
  19. பழனி. கந்தசாமி said...
    அபிராமி பட்டர் கதையின் நாயகியைத் தரிசித்தேன்./

    கருத்துரைக்கு இனிய நன்றிகள் ஐயா...

    ReplyDelete
  20. கோவை ஆவி said...
    உங்கள் ஆன்மீகப் பதிவுடன் துவங்குகிறது இன்றைய தினம்..!/

    இனிய கருத்துரைக்கு
    நிறைவான நன்றிகள்..

    ReplyDelete
  21. RAMVI said...
    வெள்ளிக்கிழமைக் காலை அழகிய அம்பாளின் தரிசனம். மனதுக்கு நிம்மதியை தந்தது தங்களின் பதிவு. பகிர்விற்கு நன்றி./

    அழகிய கருத்துரைகளுக்கு
    இனிய நன்றிகள்..

    ReplyDelete

  22. Anonymous said...
    2
    =
    ஸ்ரீராமஜயம்
    ===========

    21.01.2011 அன்று
    முதல் பதிவாக

    “காயத்ரீ மந்திரம்”

    என்ற பதிவினைக்

    கொடுத்திருந்தீர்கள்.


    இன்று 25.01.2013

    799 வது பதிவாக

    “அன்னையின் அருள்”

    என்ற பதிவினைக்

    கொடுத்துள்ளீர்கள்.


    இன்று

    “தை வெள்ளிக்கிழமை” க்கு

    ஏற்றதோர் அழகான பதிவு.

    மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது! ;)//

    அன்னையின் அருளால் மகிழ்ச்சியளிக்கும் தங்கள் கருத்துரைகள் அருளப்பட்டதற்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  23. Anonymous said...
    நாளை 26.01.2013

    இந்தியக்

    குடியரசுத்திருநாள்.


    நாளைக்கு வெற்றிகரமான

    தங்களின் 800 ஆவது பதிவு

    வெளியாக உள்ளதில் பெரும்

    மகிழ்ச்சியடைகின்றோம்.


    அதற்கும்

    குடியரசுத் திருநாளுக்கும்

    சேர்த்து அன்பான அட்வான்ஸ்

    நல் வா ழ் த் து க ள். ;)))))/

    முதல் குடியரசு தின நல்வாழ்த்துகள் தங்களிடம்மிருந்து கிடைக்கப் பெற்றதற்கு உள்ளம் நிறைந்த அன்பான நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  24. இளமதி said...
    அபிராமி அன்னையின் இன்னருள் வியாபிக்கக் கண்டேன். அம்மா என்றாலே மனம் உவகையில் ஆழ்ந்துவிடும். தாயின் நல்லருள் யாவர்க்கும் கிடைத்திட வேண்டுகிறேன்.

    பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி!/

    அன்பு வியாபித்த தங்களின் இனிய கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த நன்றிகள் சகோதரி.

    ReplyDelete
  25. viji said...
    Annai Abrami en venduthalukku irrangi van valleye inngu vanthanayoooo?
    Thanks for the post Rajeswari.
    viji //

    ஆஹா ..தங்கள் வேண்டுதலுக்கு அன்னை பிரத்யட்சமாக அருளியிருக்கும் இனிய கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த நன்றிகள்..

    ReplyDelete
  26. வெங்கட் நாகராஜ் said...
    அன்னை அபிராமியின் அருள் அனைவருக்கும் பூரணமாக கிடைக்கட்டும்..../

    இனிய கருத்துரைகளுக்கு
    நிறைவான நன்றிகள்.

    ReplyDelete
  27. Ram Ram Lakshmi Narasimhan V said...
    அன்னை அபிராமியை காலையில் தரிசித்து அளவில்லாத ஆனந்தம் அடைந்தேன். மேலும் வளரட்டும் தங்கள் திருப்பணி. பேரன்புடன் ராம் ராம் லக்ஷ்மி நரசிம்ஹன், ஈரோடு/

    அளவில்லாத ஆனந்தம் அளித்த அருமையான கருத்துரைகளுக்கு
    அன்பான இனிய நன்றிகள்...

    ReplyDelete
  28. Ranjani Narayanan said...
    தை வெள்ளிக்கிழமை அபிராமி அந்தாதியுடன் கூடிய பதிவு மனதுக்கு நிறைவை தருகிறது.

    உங்கள் எல்லாப் பதிவுகளிலும், புகைப்படங்களும் அதற்கேற்றே தகவல்களும் சிறப்பாக அமைந்து விடுகின்றன.

    வாழ்த்துகள்!/

    சிறப்பான கருத்துரைகளும் வாழ்த்துகளும் அளித்து பெருமைப்படுத்தியதற்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்..

    ReplyDelete
  29. அபிராமி அன்னை தரிசனம் உங்கள் தயவால் கிட்டியது.

    மிக்க நன்றி.

    ராஜி

    ReplyDelete
  30. rajalakshmi paramasivam said...
    அபிராமி அன்னை தரிசனம் உங்கள் தயவால் கிட்டியது.

    மிக்க நன்றி.

    ராஜி/


    அருமையான கருத்துரைகளுக்கு
    அன்பான இனிய நன்றிகள்...

    ReplyDelete
  31. கோபு ஸார் குறிப்பிட்டுள்ளதைப் போல வரும் சுதந்திரதினம் உங்களின் 1௦௦1 ஆம் பதிவு வெளி வர மனமார்ந்த வாழத்துகள்!

    உங்களது பதிவுகளால் மன அமைதியும், ஆன்மீகத் தகவல்களும் கிடைக்கின்றன.
    வேறு என்ன வேண்டும்?

    இன்னும் பல நூறு இனிய பதிவுகள் கொடுக்க உளமார வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  32. அன்பின் இராஜ ராஜேஸ்வரி - அருமையன பதிவு - வழக்கம் போல் சிறந்த படங்கள் - அழகான் படங்கள் - அருமையான விளக்க்கங்கள் - வாழ்க வளமுடன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  33. அன்பின் வை.கோ - வழக்கம் போல தங்களின் மறுமொழிகள் இங்கு எழுதுப்வரை ஊக்குவிக்கீன்றன - மேன்மேலும் சிறப்புடன் எழுத தங்களீன் மறுமொழிகள் வழி வகுக்கின்றன. அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் - சுதந்திர தின வாரத்தில் மகிழ்வுடன் கலந்து கொள்ள எதிர் பார்த்துக் காத்திருக்கிறோம். நல்வாழ்த்துகள் வைகோ - நட்புடன் சீனா

    ReplyDelete
  34. அருமையான படங்கள். அபிராமியின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.

    ReplyDelete
  35. ரஸித்துப்,படித்து,பார்த்து மகிழ.
    பக்திபரவசப்பட, மனதெல்லாம் வியாபிக்கும் ஒரு நல்ல தெய்வீக உணர்ச்சியை என்னென்று சொல்வது.?

    ReplyDelete
  36. //Ranjani Narayanan said...
    கோபு ஸார் குறிப்பிட்டுள்ளதைப் போல வரும் சுதந்திரதினம் உங்களின் 1௦௦1 ஆம் பதிவு வெளி வர மனமார்ந்த வாழத்துகள்! //

    அன்புள்ள திருமதி ரஞ்ஜனி மேடம். வாருங்கள். வணக்கம்.

    உங்கள் கம்ப்யூட்டரில் 0 [ZERO] என்ற எண்ணின் பித்தான் வேலை செய்யவில்லை என்று நினைக்கிறேன்.

    ஏற்கனவே 2-3 இடங்களில் இதை நான் கவனித்து விட்டேன்.

    மேலே 1001 என்று அடித்துள்ளதாக நினைத்து பின்னூட்டம் இட்டுள்ளீர்கள். அது எங்களுக்கு 11 என்று மட்டுமே படிக்க முடிகிறது.

    அது போல இதற்கு அடுத்த பதிவினில் 1000 என்பதற்கு பதில் வெறும் 1 என விழுந்துள்ளது.

    ஒன்று செய்யுங்கோ.

    அதற்காக இப்போதுள்ள கணினியைத் தூக்கி எறிந்து விட்டு, வேறு புதிய கணினி கேட்டு, மாமாவைப் படுத்தாதீங்கோ.

    இதே கணினியில் ZERO அடிக்க வேண்டிய இடங்களில் CAPITAL LETTER 'O" ஓ அடியுங்கள்.

    அதாவது ’ஓ’ போடுங்கள்.! ;)))))

    என் இந்த ஆலோசனைக்கு ஒரு ‘ஓ’ போட்டு ஒரு பதில் பின்னூட்டமும் போடுங்கோ ப்ளீஸ்.

    என் ஸ்பெஷல் அழைப்பினை ஏற்று இங்கு வருகை தந்ததற்கு என் நன்றிகள்..

    >>>>>>>

    ReplyDelete
  37. //cheena (சீனா) said...
    அன்பின் வை.கோ - வழக்கம் போல தங்களின் மறுமொழிகள் இங்கு எழுதுப்வரை ஊக்குவிக்கின்றன - மேன்மேலும் சிறப்புடன் எழுத தங்களின் மறுமொழிகள் வழி வகுக்கின்றன. அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் - சுதந்திர தின வாரத்தில் மகிழ்வுடன் கலந்து கொள்ள எதிர் பார்த்துக் காத்திருக்கிறோம். நல்வாழ்த்துகள் வைகோ - நட்புடன் சீனா//

    அன்பின் திரு சீனா ஐயா அவர்களே, வாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா.

    என் அன்பான அழைப்பினை ஏற்று இங்கு வருகை தந்து சிறப்பித்துள்ளதற்கு என் மனமார்ந்த நன்றிகள்.ஐயா.

    அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேகம் ஒன்பது நாட்கள் மிகச்சிறப்பாக நடைபெற பிரார்த்திக்கிறேன் ஐயா.

    தாங்கள் தான் அதற்கான தலைமைப் பொறுப்பினை ஏற்று வழி நடத்த வேண்டும் ஐயா.

    நான் ஒரு

    ‘தொண்டரடிப் பொடியாழ்வார்’

    ஆக மட்டுமே இருக்க நினைக்கிறேன், ஐயா.

    அதற்கு “அன்னையின் அருள்” கிடைக்கட்டும் ஐயா.

    [நான் “அன்னையின் அருள்” என்று இங்கு குறிப்பிட்டுள்ளது, இந்தப்பதிவின் தலைப்பை மட்டுமே குறிக்கிறது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், ஐயா].

    -oOo-

    ReplyDelete
  38. //Kamatchi said...
    ரஸித்துப்,படித்து,பார்த்து மகிழ.
    பக்திபரவசப்பட, மனதெல்லாம் வியாபிக்கும் ஒரு நல்ல தெய்வீக உணர்ச்சியை என்னென்று சொல்வது.?//

    பிரியமுள்ள காமாக்ஷி மாமி,

    அநேக நமஸ்காரங்கள்.

    தாங்கள் என் மீதுள்ள பிரியத்த்தினால் இங்கு வருகை தந்து ஆசீர்வதித்துள்ளது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, மாமி.

    இரண்டு இணைப்புகள் தங்களுக்கு அனுப்பியிருந்தேன்.

    மற்றொன்று தெய்வ சம்பந்தப்பட்டது அல்ல என்பதனாலோ அல்லது உங்களுக்கே உள்ள பல்வேறு சிரமங்களினாலோ கருத்து ஏதும் சொல்லியிருக்க மாட்டீர்கள் என நானும் நினைத்துக் கொண்டேன்.

    எப்படியும் அதில் நான் எழுதியுள்ள பின்னூட்டங்களைப் படித்தே நீங்கள் மிகவும் களைத்துப் போயிருக்கக்கூடும் என நான் நினைக்கிறேன்.

    இந்தப்பதிவரையும் என்னையும் தாங்கள் மனதார ஆசீர்வதுக்கணும் மாமி.

    இவர்கள் கடந்த இரண்டு ஆண்டு காலத்திற்குள் 800 பதிவுகள் கொடுத்து விட்டார்கள்.

    ஆயிரத்தை எட்டப்போகிறார்கள்.

    தினமும் ஒரு பதிவு வீதம் சளைக்காமல் தந்து வருகிறார்கள்.

    இன்னும் 200 நாட்களில் மிகச்சரியாக 14.08.2013 அன்று பதிவு எண்: 1000 வெளியிடப்போகிறார்கள்.

    இவர்களின் 90% பதிவுகள் தெய்வ் சம்பந்தமானவை.

    மிக அழகான படங்களுடன், மிகச்சுவையான விஷயங்களுடன் அள்ளி அள்ளி அமிர்தம் போலத் தந்து வருகிறார்கள்.

    அதனால் தான் உங்களை நான் சிரமப்படுத்தி வலியுறுத்தி இங்கு அழைத்தேன்.

    தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், மீண்டும் என் மனமார்ந்த நன்றிகள், மாமி. .

    பிரியமுள்ள கோபாலகிருஷ்ணன்

    ReplyDelete
  39. இந்த மாதிரி பதிவுகளைப் படிக்க கொடுத்து வைத்திருக்கவேண்டும். இதனை எழுதும், இராஜ ராஜேச்வரியை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அக்காரியம் உங்கள் மூலம் தெரிந்து கொண்டதில் உங்களுக்கு நன்றி. இராஜ ராஜேச்வரியைப் பற்றியும் தெரிந்து கொள்ள மிகவும் ஆவல். ஆச்சரியமாக இருக்கிரது. அவர்களின் சாதனை. எல்லோரும்
    இன்பமாக அனுபவிக்க ஒரு சாதனத்தை அழகாக உபயோகிப்பது.
    மேன்மேலும் புகழ்பெற்று இம்மாதிரி
    சேவைகள் செய்ய வேண்டும் அம்மா.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  40. Kamatchi said...
    இந்த மாதிரி பதிவுகளைப் படிக்க கொடுத்து வைத்திருக்கவேண்டும். இதனை எழுதும், இராஜ ராஜேச்வரியை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அக்காரியம் உங்கள் மூலம் தெரிந்து கொண்டதில் உங்களுக்கு நன்றி. இராஜ ராஜேச்வரியைப் பற்றியும் தெரிந்து கொள்ள மிகவும் ஆவல். ஆச்சரியமாக இருக்கிரது. அவர்களின் சாதனை. எல்லோரும்
    இன்பமாக அனுபவிக்க ஒரு சாதனத்தை அழகாக உபயோகிப்பது.
    மேன்மேலும் புகழ்பெற்று இம்மாதிரி
    சேவைகள் செய்ய வேண்டும் அம்மா.
    வாழ்த்துகள்.//

    தங்களின் அழகான ஆசீர்வாதங்களுக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த இனிய ந்னறிகள் அம்மா ..!

    ReplyDelete
  41. Kamatchi said...

    பிரியமுள்ள காமாக்ஷி மாமி,

    வாங்கோ அநேக நமஸ்காரங்கள்.

    இரண்டு இணைப்புகளை இரண்டு தடவை கொடுத்திருந்தேன்.

    இந்தப்பதிவுக்கே இரண்டு முறை வந்துட்டேள். இருப்பினும் சந்தோஷமே.

    //இந்த மாதிரி பதிவுகளைப் படிக்க கொடுத்து வைத்திருக்கவேண்டும்.//

    ஆமாம். மிகச்சரியாகவே நீங்க சொல்லிட்டீங்கோ.

    //இதனை எழுதும், இராஜ ராஜேச்வரியை எவ்வளவு பாராட்டினாலும் தகும். //

    ஆமாம் மாமி. அதே அதே.

    //அக்காரியம் உங்கள் மூலம் தெரிந்து கொண்டதில் உங்களுக்கு நன்றி.//

    இதற்கெல்லாம் எதற்கு நன்றி.

    நல்லவாளை நல்லவாளுக்கு அறிமுகம் செய்து வைப்பது என் கடமையல்லவா?

    //இராஜ ராஜேச்வரியைப் பற்றியும் தெரிந்து கொள்ள மிகவும் ஆவல். ஆச்சரியமாக இருக்கிறது.//

    பிறகு ஒரு நாள் ஃப்ரீயா இருக்கும் போது நிறையச்சொல்றேன். தங்கம். கட்டித்தங்கம் அவர்கள்.

    அவர்களின் ஒருசில ரொம்ப ரொம்ப ஜோரான பதிவுகளாக ஒரு பத்து தேர்ந்தெடுத்து உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். ஒழிந்த போது படியுங்கோ.

    அவர்களை ஆசீர்வாதம் செய்ததற்கு உங்களுக்கு என் நன்றிகளும், மாமி.

    பிரியமுள்ள
    கோபாலகிருஷ்ணன்

    ReplyDelete
  42. அன்புள்ள கோபு ஸார்!
    உள்ளேன் ஐயா!
    நீங்கள் சொல்வதுபோல இனி ஓ போட்டு விடுகிறேன்.
    தவறை சுட்டிக் காட்டியதற்கு நன்றி!

    ReplyDelete
  43. //Ranjani Narayanan said...
    அன்புள்ள கோபு ஸார்!
    உள்ளேன் ஐயா!
    நீங்கள் சொல்வதுபோல இனி ஓ போட்டு விடுகிறேன்.
    தவறை சுட்டிக் காட்டியதற்கு நன்றி!//

    வாங்கோ, நேற்று முன்தினம் அலைபேசியில் நாம் பேசியபோதே இதைப்பற்றிச்சொல்லணும் என்று நினைத்திருந்தேன். வேறு ஏதேதோ பேசியதில் இது மறந்து போச்சு.

    ஆமாம். நான் சொல்லிக்கொடுத்தபடி, பின்னூட்டம் யாருக்கு அனுப்பினாலும். SUBSCRIBE BUTTON ஐ அழுத்திவிட்டு அனுப்பவது இல்லையா?

    ஏன் கேட்கிறேன் என்றால், இன்று ஒரு மெயில் தனியாக உங்களுக்குக் கொடுத்து ‘ஓ’ போட வாங்கோன்னு நான் மீண்டும் ஒருமுறை அழைக்க வேண்டியதாக இருக்கிறது.

    SUBSCRIBE BUTTON ஐ அழுத்தியிருந்தீர்களானால் அதுவே உங்கள் மெயில் இன் பாக்ஸுக்கு வந்து, உங்களை ஆட்டோமேடிக்காக ‘ஓ’ போட வைத்திருக்கும் அல்லவா!

    இனிமேலாவது அப்படிச்செய்யுங்கோ.
    OK யா? Bye Bye !

    ReplyDelete