Thursday, January 10, 2013

திரி நேத்ர தசபுஜ வீர ஆஞ்சனேயர்




Happy Hanuman Jayanti
தருணாருணமுககமலம் கருணாரஸபூர பூரிதாபாங்கம்
ஸஞ்ஜீவனமாஸாஸே மஞ்சுல மஹிமானமஞ்ஜனாபாக்யம்
ஸம்பரவைரிஸராதிக மம்புஜதள விபுலலோசனோதாரம்
கம்புகளமநிலதிஷ்டம் பிம்பஜ்வலிதோஷ்ட மேகமவலம்பே 
- ஆதிசங்கரர் அருளிய ஹனுமத் பஞ்சரத்னம்

சூரியனைப் போல ஒளிமிகுந்த, அழகிய முகம் கொண்டவரே, 
கருணை மழைபொழியும் கண்களை உடையவரே, 
ஆஞ்சநேயா,  நமஸ்காரம். 

யுத்தத்தில் மூர்ச்சித்தும் இறந்தும் விழுந்தவர்களை, 
சஞ்சீவி மலை கொண்டுவந்து பிழைக்கச் செய்தவரே, 
அனைவரும் புகழத்தக்க  மகிமை பொருந்தியவரே, 
அஞ்சனாதேவியின் புதல்வரே, ஆஞ்சநேயா நமஸ்காரம். 

மன்மத பாணத்தைக் கடந்தவரே, தாமரை இதழ் போன்ற அகண்ட  
அழகிய கண்களைக் கொண்டவரே, 
சங்கு போன்ற கழுத்தை உடையவரே, 
வாயுதேவனின் பாக்ய புதல்வரே, ஆஞ்சநேயா, நமஸ்காரம்.
அனுமன் ஜெயந்தி அன்று   எல்லா நன்மைகளும், 
அனுமனின் திருவருளால் கிடைக்க துதிக்கவேண்டும் ....
அனுமன் பிறந்த நாளன்று காலையிலேயே  சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும். , அனுமனின் ஆசிரியர் சூரியரிடமே அனுமன் இலக்கணம் படித்து, சர்வ வியாகரண பண்டிதர் என்னும் பட்டம் பெற்றார்
தெளிந்த நல் அறிவு வேண்டும்; தேகத்தில் வலிமை வேண்டும்!
பொலிவுறும் தேஜஸ் வேண்டும்; பண்பினில் துணிவு வேண்டும்!
அச்சமில் இயல்பு வேண்டும்; ஆரோக்ய உடலும் வேண்டும்!
இச்சைகள் அடக்கும் தன்மை இனியசொல் வினயம் வேண்டும்!
வினையாற்றும் திறமை வேண்டும்; விவேகம் நிரம்ப வேண்டும்!
அனுமனைத் தியானம் செய்தால்   அனைத்துமே சித்தியாகும்!
Jai Shri Hanuman
காணற்கரிதான நல் வாயுமைந்தா
கானந்தொரு தாந்திரி நீதி யுளோய்
வானத்தவர் பூவுளோர் வாழ்த்திடுமோர்
மோனத்தவ மாருதியைப் போற்றுதுமே

காலனிடமிருந்து மார்க் கண்டேயனை ஈசன் காத்த திருக்கடவூருக்குத் தென்கிழக்கே நான்கு கி.மீ. தொலைவில் உள்ளது அனந்தமங்கலம் என்ற திருத்தலத்தில் உபய நாச்சியாரோடு கூடிய வாசுதேவப் பெருமாள் மூலவராக எழுந்தருளியுள்ள ஆலயத்தில் திரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சனேயர் மகா சக்தி வாய்ந்தவராகப் போற்றப் படுகிறார்.

இராவண வதத்தை முடித்துவிட்டு ஸ்ரீராமர் சீதா பிராட்டியுடன் அயோத்திக்குத் திரும்பி வந்தபோது, பரத்வாஜ மகரிஷியின் அழைப்பை ஏற்று அவரது குடிலில் தங்கினார். 

நாரதர், "இராவண வதம் முடிந்துவிட்டாலும், நீண்ட நாட்களாக நீருக்கடியில் ஒளிந் திருக்கும் ரக்தபிந்து, ரக்தாட்சன் ஆகிய இரண்டு அரக்கர்களை அழித்தால் தான் தீய சக்திகள் முற்றிலுமாக ஒழியும்' என்று கூறினார்.
Hindu-God-Hanuman-Photo-0007.jpg
குறிப்பிட்ட காலத்திற்குள் ஸ்ரீராமர் அயோத்திக்குச் செல்லவில்லை என்றால், அவருடைய வருகைக்காகக் காத்திருக்கும் பரதன் தீக்குளித்துவிடுவான் என்பதால், தான் உடனே அயோத்திக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலையை ஸ்ரீராமர் எடுத்துரைத்தார். 
ஆஞ்சனேயர் தானே சென்று அரக்கர்களை அழித்துவிடுவதாகக் கூறி, ஸ்ரீராமரை அயோத்திக்குச் செல்லும்படிக் கேட்டுக் கொண்டார்.

ஆஞ்சனேயர் கூறியதைக் கேட்டு மனம் மகிழ்ந்த தேவர்கள் அவரை ஆசீர்வதித்தனர். 

அரக்கர்களை அழிக்க தேவர்கள் தங்கள் ஆயுதங்களையும் அனுமனுக்குக் கொடுத்தனர்.

திருமால் சங்கு, சக்கரத்தையும்; 

சிவபெருமான் நெற்றிக் கண், மழு ஆகியவற்றையும்; 
பிரம்மா கபாலத்தையும்; 
இந்திரன் வஜ்ராயுதத்தையும்; 
கருடாழ்வார் தம் சிறகுகளையும் அளித்தனர். 
இவற்றைப் பெற்றுக் கொண்டு புறப்பட்டுச் சென்ற ஆஞ்சனேயர் அசுரர்களை அழித்துவிட்டு வெற்றியோடு திரும்பினார். 
 வெற்றியுடன் ஆனந்தமாக மங்கலத்துடன் திரும்பி வந்து அஞ்சனை மைந்தன் அமர்ந்த இடம் ஆனந்தமங்கலம் என வழங்கி அனந்தமங்கலம் என மாறியது.

ஆதியும் அந்தமும் இல்லாதவனாகிய அனந்தன் (திருமால்) எழுந்தருளியிருப்பதால், அத்துடன் மங்கலத்தைச் சேர்த்து அனந்தமங்கலம் என்ற பெயர் வழங்கப்படுகிறது ....

ஆஞ்சனேயர் மூன்று கண்களும் பத்து கைகளோடும் காட்சி அளிப்பதால், 

திரி நேத்ர தசபுஜ வீர ஆஞ்சனேயர் என அழைக்கப் படுகிறார்.

விரிந்த மார்பு, திண்தோள்கள், தலையில் நீண்டுயர்ந்த மணிமகுடம் ஆகியவற்றைக் கொண்ட கம்பீரமான தோற்றத்துடன், நின்ற கோலத்தில் ஸ்ரீஆஞ்சனேயர் காட்சி அளிக்கிறார். 


கரங்களில் சங்கு, சக்கரம், சூலம், கபாலம், மழு, பாசம், வில், அம்பு, சாட்டை, நவநீதம் ஆகிய வற்றைத் தாங்கி, இரு சிறகுகளுடன் காணப்படும் இவரது தோற்றம் மெய்சிலிர்க்க வைக்கிறது ...

செங்கமலத் தாயார் தனிக்கோவில் கொண்டு எழுந்தருளியுள்ளார்.
 [Gal1]
ருக்மிணி, சத்யபாமாவுடன் கூடிய ஸ்ரீராஜகோபால சுவாமி, தாயார் செங்கமலவல்லி, ஸ்ரீஆண்டாள், சந்தான கோபாலன் ஆகிய உற்சவத் திருமேனிகளும் உள்ளன.
  
[Gal1]
தெற்கு நோக்கிய விமானத்துடன் கூடிய சந்நிதியில் திரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சனேயர் எழுந்தருளி அருள்கிறார்..  

கோவிலுக்கு வெளிப்புறமுள்ள சந்நிதித் தெருவின் வலப்புறத்தில் வடக்கு நோக்கிய தனிக்கோவிலில், கஜாசுரனை வதம் செய்த சதுர்புஜ ஆஞ்சனேயர் சங்கு, சக்கரம், சாட்டை, நவநீதம் ஆகியவற்றை நான்கு கைகளில் தாங்கியபடி தரிசனம் அளிக்கிறார். 

மூல ஆஞ்சனேயர் தனிக்கோவிலிலும், இடப்புறத்தில் பூமிதேவியும் அருள்பாலித்து வருகிறார்கள்.

ஆபத்துக் காலத்தில் கைகொடுக்கும் தெய்வமான ஆஞ்சனேயரை உண்மையான பக்தியுடன் வழிபடுவோர் அனைத்து நலன்களையும் பெறுவர். புத்திர விருத்தி, உடல் பலம், மனோ பலம், ஆன்ம பலம் கிட்டும். பயம், நோய் போன்றவை நீங்கி நல்வாழ்வு பெறலாம்!



ஜெய் அனுமான், ஜெய் ஹனுமான்,
 ஜெய் ஆஞ்சநேயா, ஜெய் ஜெய் அஞ்சனி புத்ரா. 

Viswaroopa Panchamukha Anjaneyaswami
tiruvallur_pranaprathista.jpg
Hanumaninfo

Hanuman Jayanti Glitters- Click to get more

18 comments:

  1. திரிநேத்ர, தசபுஜ ஹனுமானின் தரிசனம் சூரியன் உதிக்கும் முன்பாகவே கிடைத்தது பாக்கியம்.

    ReplyDelete
  2. ஜெய ஜெய ஆஞ்சிநேய!
    அழகோ அழகு அத்தனையும் அழகு

    ReplyDelete
  3. ஜெய் ஆஞ்சநேய...
    அழகழகான படங்கள் சகோதரி...

    அஞ்சனை குமாரனுக்கு
    எங்கள் ஊரில் (தூத்துக்குடி) இருந்து
    திருநெல்வேலி செல்லும் சாலையில்
    தெய்வச்செயல் புரம் என்ற ஊரில்
    சுந்தர ஆஞ்சநேயர் எனும் பெயரில்
    ஆலயம் இருக்கிறது...
    நல்ல உயரமான மூர்த்தியாய் காட்சி தருகிறார்....

    ReplyDelete
  4. ஜெய ஹனுமான் ஜெய ஹனுமான்
    ஆஞ்சநேய ஜெயஹனுமான்
    அஞ்சனை புத்ரா ஜெயஹனுமான்
    மாருதிராயா ஜெய ஹனுமான்
    வாயு குமாரா ஜெயஹனுமான்
    ராமதூதா ஜெயஹனுமான்
    ராம் ராம் ராம் ராம் ராம் ராம்

    ReplyDelete
  5. அனுமன் விக்ரகஹா படங்கள் கருத்துக்கள் அருமை . நன்றி

    ReplyDelete
  6. வீர ஆஞ்சனேயருக்கு வணக்கம். பகிர்வுக்கும் படங்களுக்கும் நன்றிங்க.

    ReplyDelete
  7. அன்ந்தமங்கலம்,திரி நேத்திர ஆஞ்சனேயர் பற்றி தகவல் அருமை. சிறந்த படங்களுடன் சிறப்பான பதிவு.

    ReplyDelete
  8. ஆஞ்சநேயருடைய அருள் எல்லாருக்கும் கிடைக்கட்டும். தகவல்களும்,படங்களும் சிறப்பாக இருக்கு. நன்றி.

    ReplyDelete
  9. அனுமன் ஜெயந்தி சிறப்பு பகிர்வு அருமை. அனுமனை வணங்கி அனைத்து நலன்களும் பெறுவோம்.
    நன்றி.
    ஜெய் அனுமான், ஜெய் அனுமான்
    ஜெய் ஜெய் அனுமான்.

    ReplyDelete
  10. படங்கள் மெய்சிலிர்க்க வைக்கின்றன !
    ஜெய் ஹனுமான் !

    ReplyDelete
  11. ஸ்ரீ ராம ஜெயம்
    ஸ்ரீ ராம ஜெயம்
    ஸ்ரீ ராம ஜெயம்...

    ReplyDelete
  12. உடல் பலத்தோடு ஆன்ம பலத்தையும் சேர்த்து தரும் ஆஞ்சிநேயரை வணங்கி அருள் பெற்ற பாக்கியம் அடைந்தேன்...

    ReplyDelete
  13. குடும்பத்துடன் தரிசித்து மகிழ்ந்தோம்
    திருவுருவப் படங்களுடன் பதிவு மிக மிக அருமை
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. காலையிலேயே அனுமனின் தரிசனம், மனதிற்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. பணியைத் தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. ஆஞ்சநேய வணக்கம் அருமையான பதிவும் படங்களும்.
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  16. திரி நேத்ர தஸ புஜ ஹனுமனைப்பற்றிய அழகான பதிவு. படங்களும் விளக்கங்களும் அருமை.

    ReplyDelete