Saturday, March 31, 2012

ஸ்ரீ ராம நாம மகிமை !



நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே, 
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே,
சென்மமும் மரணமும் இன்றி தீருமே, 
இம்மையே ராம என்றிரண்டெழுத்தினால்"
Ramnavami Ki Bahut Bahut Badhai
‘ராம என்பது மகாமந்திரம். அந்த மந்திரம், சைவாகமத்திற்கும், வைஷ்ணவாகமத்திற்கும் உரியது. 

இரண்டும் கலந்த சேர்க்கைதான் ராம மந்திரம்’ என்று விளக்கியிருக்கிறார். 
அவர் ராம நாமத்தை தொண்ணூறு கோடி வரை ஜபம் செய்தவராம். இராமபிரானையே தரிசனம் செய்த மகாபுண்ணியவான்.

விஷ்ணுவும் சிவமும் கலந்த கலவை ராம நாமம் ....

 “ஓம் நமோ நாராயணாயா” என்று அஷ்டாட்சரத்திலிருந்துள்ள ‘ரா’ என்ற சப்தத்தையும், “ஓம் நமசிவாயா” என்ற பஞ்சாட்சரத்திலிருந்து ‘ம’ என்ற சப்தத்தையும் வேறுபடுத்தி விட்டால் “நாயணாயா” என்றும் “நசிவாயா” என்றும் மாறுபடும். 
Wishing You A Blessed Ram Navami
அப்பொழுது அதன் அர்த்தமே அனர்த்தமாக ஆகிறது. அப்படியானால் இந்த இரண்டு நாமாக்களுக்கும் ஜீவனானது ‘ரா’வும் ‘ம’வுந்தான். அந்த இரு ஜீவன்களையும் ஒன்று சேர்த்தால் வருவதே ‘ராம’ மந்திரம்.

 இந்த சப்த ஒலியினால் அந்த மந்திரம் மகாமந்திரம் என்று பெருமை உடையதாகிறது. இரு மத சாராருக்கும் இந்த மந்திரம் பொதுவாகிறது என்பதால் இதுவே ‘தாரக மந்திரமாகும்’. “தாரகம்” என்றாலே சம்சாரமான சாகரத்தைக் கடக்க வல்லது என்பதாகிறது. 
நம்மைக் கரையேற்றும் அல்லது கரை சேர்க்கும் மந்திரம் ‘ராம’ மந்திரம்.

ரகு வம்ச மணி ராமன் விஸ்வரூபனுடைய ஒவ்வோர் அங்கத்திலும் லோகங்கள் இருக்கிறது. பாதாளம் அவரது சரணம் (பாதங்கள்). பிரம்மலோகம் அவரது சிரசு. கதிரவன் அவனது கண். மேகம் அவனது கேசம். 
அஸ்வினி குமாரர்கள் அவனது நாசி. அவர் இமைப்பதே இரவு பகல்.
பத்து திசைகளும் அவனது செவி. அவனது நாமம் ஒன்றே எல்லாப் பாவங்களையும் நொடிப் பொழுதில் போக்க வல்லது, என்று வேதம் ஒலிக்கிறது. 

எனவே சாட்சாத் ஸ்ரீராமனே தெய்வம் என்பதில் சந்தேகமில்லை. 
 
இதயத்தூய்மை பெற எண்ணுபவர்களுக்கு ராமநாமம் மகத்தானது. இதயத்தின் அடிஆழத்திலிருந்து ராமநாமம் எழவேண்டும். அப்போது நாடி நரம்பெல்லாம் உண்மையும் தூய்மையும் பரவத்தொடங்கும்.

 எல்லையற்ற பொறுமையும், விடாமுயற்சியும் உள்ளவர்களால் மட்டும் ராம நாமத்தை தொடர்ந்து ஜபிக்கமுடியும். 

ஜெபித்தோடு, ராமபிரான் வாழ்ந்து காட்டிய நெறிமுறைகளைப் பின்பற்றி உயர்வாழ்க்கை வாழ முயற்சிக்க வேண்டும்.
உடல் நோய்களை மட்டுமே மருத்துவரால் குணப்படுத்த முடியும். ஆனால், நம் உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றில் உண்டாகும் குறைகளையும் களையும் சக்தி ராமநாமத்திற்கு உண்டு.
sri rama navami
ஹனுமான், ஸ்ரீஇராமனின் சிறந்த பக்தர். சதா ராமநாமம் சொல்லும் மகா வியாகரண பண்டிதர். சிரஞ்சீவியான வாயுபுத்திரன். இராமனின் அடிமையான சேவகன். ராம நாமமே அவரின் உயிர் மூச்சு. ராம நாமம் ராம பாணத்தைவிடச் சிறந்தது என்று நிரூபித்தார்.
sriramanavami 2010

Friday, March 30, 2012

‘ஸ்ரீராமம் ரகுகுல திலகம்




‘ஸ்ரீராமம் ரகுகுல திலகம்
சிவதனுசாக் ருஹீத சீதா ஹஸ்தகரம்
அங்குல் யாபரண சோபிதம்
சூடாமணி தர்ஸன கரம்
ஆஞ்சநேயம் ஆஸ்ரயம்
வைதேஹி மனோகரம்
வானர ஸைன்ய ஸேவிதம்
சர்வ மங்கல கார்யானுகூலம்
சததம் ஸ்ரீராமசந்த்ரம் பாலயமாம்.


ஸ்ரீராம நவமி. அன்று சுருக்கமாக, ஒன்பது வரியில் உள்ள இந்த வரிகளைப் பாராயணம் செய்தால் மன அமைதி, மகிழ்ச்சி நிலவும். இதை தினமும் பாராயணம் செய்தால் ராமாயணம் முழுவதும் படித்த பலனைப் பெறலாம். எல்லா காரியங்களிலும் வெற்றி கிட்டும்.

ராமன் கதை கேளுங்கள்
ஸ்ரீரகுராமன் கதை கேளுங்கள்

2012 Feb6 Tirumanjanam 2 1 The Case of the Criminal Crow
அலங்காரச் சீதை அழகரசாளும் கோதை
விழி கண்டு.. குடி கொண்டு. அவள்
விழி கண்டு.. குடி கொண்டு..
மணமாலை தந்த ராமன் கதை கேளுங்கள்


சீதையின் சுயம்வரம் நிச்சயிக்கப்பட்ட நாளிலே
ஜனகனின் மண்டபத்தில் மாலை ஏந்தி வந்த ஜானகியை
வெண்ணிலா மண்ணிலா வந்ததென்று மன்னவரெல்லாம் பார்க்க,
ஸ்ரீ ராமசந்திர மூர்த்தி கண்ணெடுத்து பார்க்க மாட்டாரோ என்று கவலை கொண்டார்களாம் சீதாதேவியின் செல்லத்தோழிகள்
புலிகளின் பலம் கொண்ட புருஷர்கள் வந்திருந்தார்
யானையின் பலம் கொண்ட வேந்தர்கள் அங்கிருந்தார்
தோளில் மலையைத் தூக்கிய வீரர் வந்தார்
இடிகளைக் கையில் பிடிப்பவர் பலர் இருந்தார். ஆஹா…

நடந்தாள் சீதை நடந்தாள் விழி மலர்ந்தாள் சபை அளந்தாள்
வரவு கண்டு அவள் அழகு கண்டு
சிவ தனுசின் நாணும் வீணை போல அறுந்தது

ராமன் கதை கேளுங்கள், கதை கேளுங்கள்
வில்லொடிக்க அங்கு வந்த வேந்தர் தம் பல்லது உடைபட விழுந்தார் சிலர் எழுந்தார் தொடை தட்டி எழுந்தவர்கள் முட்டி தெறித்துவிடசிலர் சட்டென்று பூமியில் விழுந்தார். அஹா சட்டென்று பூமியில் விழுந்தார்
காலும் நோக இரு கையும் நோக தம் தோளது நோகவே அழுதார்
சிலர் இடுப்பைப் பிடித்தபடி சுளுக்கு எடுத்தபடி ஆசனம் தேடி அமர்ந்தார்

ஆஹா வீரமில்லையா வில்லொடிக்க ஆண்கள் யாரும் 
இல்லையா தக தையதக்கத்தாதிமி தா
ராமாயா ராமபத்ராய ராமச்சந்தராய நமஹ
தசரத ராமன்தான் தாவி வந்தான்
வில்லையே ஒரு கண்ணால் பார்த்து நின்றான்
சீதையை மறு கண்ணால் பார்த்து நின்றான்
மறு நொடியில் வில்லெடுத்து அம்பு தொடுத்தான்
படபட படபட படபட படபட ஒலியுடன் முறிந்தது சிவ தனுசு
அந்த ஒலியுடன் சிரித்தது அவள் மனசு
ஜெயஜெய ராமா சீதையின் ராமா ஜெயஜெய ராமா சீதையின் ராமாதசரத ராமா ஜனகனு மாமா தசரத ராமா ஜனகனு மாமா

சீதா கல்யாண வைபோகமே ஸ்ரீ ராம கல்யாண வைபோகமே
சீதா கல்யாண வைபோகமே ஸ்ரீ ராம கல்யாண வைபோகமே
காணக் காண அழகாகுமே இன்னும் ஆயிரம் கண் வேண்டுமே
சீதா கல்யாண வைபோகமே ஸ்ரீ ராம கல்யாண வைபோகமே
ஸ்ரீ ராமனே அதோ பாரப்பா

அலங்காரச் சீதை அழகரசாளும் கோதை
அவள் விழி கண்டு.. குடி கொண்டு.
மணமாலை தந்த ராமன் கதை கேளுங்கள் 
ஸ்ரீரகுராமன் கதை கேளுங்கள் ராமன் கதை கேளுங்கள்

இந்த உலகில் நம் பூமிக்கு அருகில் இருக்கும் ஒற்றை சூரியனே இவ்வளவு பிரகாசமாக இருக்கிறதே! இவனோ இந்த அண்ட ப்ரபஞ்சங்களை கடந்த பிரம்மாண்டமான வெளியில் சூரியனுக்கெல்லாம் சூரியனாக பிரகாசிக்கும் மஹா விஷ்ணுவாயிற்றே! 

இப்படி இவன் இவ்வளவு சீருடன் விளங்க எது காரணம் என்று நினைத்து மஹாலக்ஷ்மியான சீதையே அந்த பிரகாசமாக இருப்பதற்கு காரணம் என்று முடிக்கிறார் தேசிகர். 
விஷ்ணுவை மட்டும் வழிபடுவது முறை அல்ல – மஹா லக்ஷ்மியையும் சேர்த்தே வழிபட வேண்டும். அதனால் தான் பெரியோர் ஸ்ரீவைஷ்ணவம் என்றே இந்த சமயத்தை சொல்லுவார்கள். 
இதில் ஸ்ரீ என்பது மஹா லக்ஷ்மியையே குறிக்கிறது.
தோள் கண்டார், தோளே கண்டார்; தொடு கழல் கமலம் அன்ன
தாள் கண்டார், தாளே கண்டார்; தடக் கை கண்டாரும், அ·தே;
வாள் கொண்ட கண்ணார் யாரே, வடிவினை முடியக் கண்டார்? -
ஊழ் கொண்ட சமயத்து அன்னான் உருவு கண்டாரை ஒத்தார்.

- கம்பராமாயணம், உலாவியற்படலம்


ராம ராம ராம் ராம ராம ராம் ராம ராம ஹரே ராஜா ராம்
ராம ராம ராம் ராம ராம ராம் ராம ராம ஹரே சீதா ராம்

சுந்தர காண்டத்தில் ஹனுமான்  ஹ்ருதய கமலத்தில் 
ஸ்ரீ ராமனையும் சீதா பிராட்டியும் இருப்பதாக ஐதீகம். 


ஹனுமான் ஏற்கனவே நடந்த ஸ்ரீ ராம சீதா திருமணத்தை 
பார்க்க விரும்பினாராம். 
அந்த கல்யாணத்தை மானசிகமாக மறுமுறை நடத்தி பார்த்தாராம்.

தசரத மஹாராஜாவிற்கு வெகு காலம் பிள்ளை இல்லாமல் யாகம் செய்து,
பின் பாயச வடிவில் பகவான் மஹா விஷ்ணு வந்து, தசரதனுக்கு மகனாகப்
பிறந்தார். 
ஜனக மஹாராஜா சிறந்த ஞானியாக  வாழ்ந்தவருக்கு, பூமியிலிருந்து தேவியின் அம்சமாக சீதாதேவி கிடைத்தாள். 
Sri RanganAtha
இப்படி தேவதைகளின் நன்மைக்காகவும், உலகத்தில்தர்மத்தை நிலைநாட்டுவதற்காகவும் அயோத்தியிலும், மிதிலையிலும் அவதரித்த ராமனுக்கும், சீதைக்கும் மனித வாழ்க்கை முறைப்படி மனிதர்களுக்கு வாழ வேண்டிய வழி முறைகளை தெரிவிப்பதற்காகவே அவதாரம் எடுத்துக் கல்யாணம் முறைப்படி நடைபெறுகிறது.

இருவருடைய உள்ளத்தில் ஒரே சிந்தனை, ஒரே எண்ணம், ஒரே செயல் இவையெல்லாம் இருந்துவிட்டால் இதுதான் அமைதியுள்ள பாதையில் நமது வாழ்க்கையை எடுத்துச் செல்ல ஒரே மேட்சிங்.

இதைத்தான் சீதாதேவி தன் வாழ்நாளில் ராமருடன் கல்யாணம் ஆனது
முதல், அரண்மனையில் வாழ்க்கை நடந்தாலும், காட்டில் வாழ்க்கை நடந்தாலும் இரண்டையும் சமமாகப் பாவித்து கணவனைப் பிரியாமல் ஒரு மனதாக வாழ்க்கை நடத்த வேண்டுமென்பதை எடுத்துக் காட்டினாள். இதை வைத்துத்தான், "சீதா கல்யாண வைபோகமே" என்று பாடினார்கள்.









Thursday, March 29, 2012

சக்ரவர்த்தித் திருமகன்கள்..

Image DetailEarth-14-june.gif (23976 bytes)Image Detail
2012 ஆம் ஆண்டின் 100 வது பதிவு..
 ராம ராம’என்பது இனிமையான தாரக மந்திரம் . தாரகம்’ என்றால் கண்மணி. இம்மந்திரத்தைச் சொல்வோரை கண்மணி போல் பாதுகாப்பான் பத்துத் திக்குகளிலும் தேர் செலுத்த வல்லவரான அயோத்தி சக்ரவர்த்தி தசரதன் நவமியில் நமக்களித்த சக்ரவர்த்தித் திருமகனான ஸ்ரீராமன்
 
ஸ்ரீ ராம் ஜெயராம் ஜெய ஜெய ராம் 

ஆபதாமபஹர்த்தாரம் தாதாரம் ஸர்வஸம்பதாம்
லோகாபிராமம் ஸ்ரீராமம் பூயோ பூயோ நமாம்யஹம்

ராமாய ராமபத்ராய ராமசந்த்ராய வேதஸே
ரகுநாதாய நாதாய ஸீதாய பதயே நம:

ஸ்ரீ ராமராமராமேதி ரமே ராமே மனோரமே
ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராமநாம வரானனே
Triprayar
கேரள மாநிலம் திருச்சூருக்குத் தென்மேற்கே திருப்பரையார் ராமர் ஆலயத்தில் அனுமன் அரூபமாக திருஷ்டா சீதா, திருஷ்டா சீதா (கண்டேன் சீதையை) என்று சொல்லிக் கொண்டு இரவும் பகலும் ஆலயத்தை வலம் வருவதாகவும்; அதைக் கேட்டு ராமபிரான் மகிழ்கிறார் என்பது ஐதீகம்...
 

 கண்டேன், கண்டேன், கண்டேன் சீதையை கண்டேன் ராகவா!
அண்டருங் காணாத அரவிந்த வேதாவை 
லங்காபுரத்திலேயே தரவந்த மாதாவை(கண்)
காவி விழிகளில் உன் உருவெளி மின்ன 

 

கனிவாய்தனிலே உன் திருநாமமே பன்ன
ஆவித்துணையைப் பிரிந்த மடஅன்னமானால் 
நான் சொல்லுவதென்ன

பூவை திரிதடை நித்தம் நித்தம் சொன்ன 
புத்தி வழியே தன்புத்தி நிலைமை என்ன
பாவி அரக்கியர் காவல்சிறை துன்ன பஞ்சுபடிந்த பழம்சித்திரம் என்ன  
கண்டேன்

 

ஆலய மடப்பள்ளியில் எவ்வளவு பெரிய பாத்திரத்தில் பிரசாதம் தயார் செய்தாலும், பணியாளர் ஒருவரே எவர் உதவியுமின்றி பாத்திரத்தை கீழே இறக்கி வைத்து விடுகிறார். 

காரணம், பிரசாதம் இறக்கும்போது அனுமனும் ஒரு கை கொடுத்து உதவுவதாக நம்பிக்கை...

Triprayarappan
Triprayar Sree Rama
மஹா விஷ்ணுவைப் போல் அருட்காட்சி தரும் ஸ்ரீ ராமர், இலட்சுமணன், பரதன் சத்ருக்னரின் விக்ரகங்கள் ஆற்றில் மிதந்து வந்து கரை சேர்ந்த விக்ரகங்கள் முறையாக 
திருப்ரையார், திருமூழிக்களம்,  கூடல்மாணிக்கம் பாயம்மெல் 
போன்ற இடங்களில் வக்கெல் கைமால் என்பவரால்
நான்கு திருக்கோவில்களில் பிரதிட்டை செய்யப்பட்டது..

நாலம்பலம் என்று வழங்கப்படும் இந்த நான்கு சகோதரர்களின் ஆலயத்தையும் ஒரே நாளில் தரிசிப்பது மிகவும் விசேஷம்...

கோவையில் சில டிராவல்கள் இதற்கான ஏற்பாடுகள் செய்கிறார்கள்..

ஸ்ரீ ராமர் கரன் என்ற அரக்கனை போரில் வென்றார்..
மூலவர் விகரஹம் பிரம்மா , சிவன் ஆகிய அம்சங்களும்
அடங்கியுள்ளதால்,  த்ரிமூர்த்தியாகவும் மக்கள் போற்றுகின்றனர்.
கோவிலின் வெளிப்பிரகாரத்தில் ஐயப்ப சுவாமியின் கோவிலும் அமைக்கப்பட்டுள்ளது...
முக்கியமாக கொண்டாடப்படும் திருவிழாக்களில் பூரம் திருவிழா - மலையாள வழக்கப்படி மீனம் மாதத்தில் கொண்டாடப்படுகிறது..

ஏகாதசித் திருவிழா ...  நவம்பர்-டிசம்பர் மாதங்களில் கொண்டாடப்படுகிறது.. 

ராமர் கோவிலில் மீனூட்டு (மீன்களுக்கு உணவு அளித்தல்) என்ற மிகவும் பிரபலமான வழிபாட்டு முறை - நேர்த்திக்கடன் - மிகவும் விசேஷம், 

பக்தர்கள் கோவிலின் எல்லையில் இருக்கும் நதிக்கரையில்,
மீன்களுக்கு அரிசி தானியங்களை வழங்குகிறார்கள்..

கொச்சியில் இருந்து சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது..
திருச்சூரிலிருந்து சாலை வழியாக எளிதாக திரிப்ரையார் வந்தடையலாம்  

Triprayar Sree Rama temple- view from the Bridge.

Deepastambham Mahayshwariyam!!
a traditional lamp-post carved from stone, before Triprayar Sree Rama Temple

 TRIPRAYAR RAMA TEMPLE
 

Wednesday, March 28, 2012

தங்க மழை சொரியும் சரக் கொன்றை


 



பொன்னெனமலர்ந்த கொன்றை மணியெனத்
தேம்படு காயா மலர்ந்த தொன்றியொடு
நன்னலம் எய்தினை புறவே  -- என்கிறது ஐங்குறுநூறு 
சரக்கொன்றை மரங்கள் கண்ணைப் பறித்த பொன்னிறப் பூங்கொத்துக்களைச் சரம் சரமாகத் தொங்க விட்டுக் கொண்டு பரந்து  தங்க மழை போன்று சொரியும்  மஞ்சள் பூக்கள் மனதிற்கு மகிழ்ச்சிதரும்.. 
 
பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை யணிந்தவனே

மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே

அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே.
 
தென்னாடுடைய சிவன் ! எந்நாட்டவர்க்கும் இறைவனாம் மாசற்ற மாணிக்க ஜோதியாய் பொன்னாய் ஒளிரும் முக்கண்ணனின் மின்னல் செஞ்சடைமேல் அணியும் அழகுமல்ர் !
பக்தனுக்கு பூத்தொடுக்கும் சிரமம் கூட தராமல் தானே சரம் சரமாய் கொத்துக் கொத்தாய் மலர்ந்து ஈசனின் சடையிலும், பக்தர்கள் மனதிலும் ஜாஜ்வல்யமாய் ஜொலிக்கும் தங்கப் பொன்மலர் சரக்கொன்றை .. 

கோடைக்காலத்தில் இலைகளே தெரியாமல் தங்க நகை அணிந்த மங்கையாய் மஞ்சள் மலர் சூடிய மணப்பெண்ணாய் மனம் கவரும்.. 

 
சிவகங்கை மாவட்டம் திருப்புத்துரின் புராண பெயர் கொன்றைவனம். 

 பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சரக்கொன்றை மரங்கள் நிறைந்த கொன்றை வனமாக திகழ்ந்து தவம் செய்வதற்கு ஏற்ற பூமியாக சிறந்த தவநிலையுடைய இடம் என்ற பேறுபெற்ற ஸ்தலமாக  திருத்தளிநாதர் கோயில் திகழ்கிறது,,

பல்வேறு தாண்டவங்களை நிகழ்த்திய ஈஸ்வரனின் சிறப்பான கௌரி தாண்டவம் காண விரும்பி இறைவனை நோக்கிக் கடுந்தவம் புரிந்த.ஸ்ரீ மகாலட்சுமிக்குக் காட்சி தந்து, கௌரி தாண்டவம் ஆடிக்காட்டிய இடம்.  

திரு (மகாலட்சுமி) வழிபட்ட ஆலயம் என்னும் பொருள் தரும்படியாக 'திருத்தளிநாதர்' ஆலயம் என்று அழைக்கப்படுவதாகத் தலபுராணம் கூறுகின்றது. இங்குள்ள ஸ்ரீ மகாலட்சுமியை வணங்குபவர்களுக்கு வளமும், நலமும் கிட்டும் என்பது நம்பிக்கை 

உமாதேவியும், மகாலட்சுமியும் பூஜித்து அருள் பெற்றிருக்கிறார்கள். இந்திரனின் மகன் ஜயந்தன் இங்கு வந்து இறைவனை வழிபட்டிருக்கிறான். .

இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார் 
திருத்தளிநாதர் கோவிலில் தனிச் சன்னதியில் எழுந்தருளி கம்பீரத்துடன் அமர்ந்து அருள் பாலிக்கும் ஸ்ரீயோக பைரவர்தான் ஆதிபைரவர்.  

காலச் சக்கரத்தினை இயக்கும் பரம்பொருள் பைரவரே! நம்மை ஆட்டிப் படைக்கும் கிரகங்களை ஸ்ரீயோக பைரவர் ஆட்டிப் படைத்து ஆட்சி செய்கிறார். 

இந்த பைரவர் மிக உக்ரமானவர். அவர் தம் உக்ரத்தைக் குறைக்க, வேறு எந்த ஆலயத்திலும் இல்லாத சிறப்பாக, அவரை சங்கிலியால் பிணைத்து வைத்துள்ளதே இதற்குச் சான்று. . 

பூஜை முடிந்த பிறகு அவர் அமர்ந்திருக்கும் பகுதிக்கு ஆலய அர்ச்சகர்களே கூட செல்ல மாட்டார்கள். அந்த அளவிற்கு உக்கிரமானவர். 

தேய்பிறை அஷ்டமி அன்று பைரவருக்கு வடை மாலை சாற்றி வழிபடுகின்றனர். ராகுகாலம் போன்ற நேரங்களிலும் இவருக்கு சிறப்பு வழிபாடு செய்யப்படுகின்றது. 

சத்ரு தொல்லை, ஏவல், பில்லி, சூனியம், காரியத்தடை, திருமணத்தடைகள் போன்றவை விலக பைரவரை வழிபடுதல் சிறப்பு. அதற்காக ஹோமங்களும் அர்ச்சனை வழிபாடுகளும் சிறப்பாகச் செய்யப்படுகின்றன. 

 கடலூர் மாவட்டம் திருவதிகை ஸ்ரீவீரட்டேஸ்வரர் கோயில், மதுரை மாவட்டம் திருப்பனூர் கொன்றை வேந்தனார் ஆலயம் உள்ளிட்ட பல ஆலயங்களின் தலவிருட்சம்- சரக்கொன்றையே! 


ஆட்சிபுரீஸ்வரர், உமைஆட்சீஸ்வரர் என இரண்டு மூலவர்கள் தனித்தனி கருவறைகளில் அருள்பாலிக்கும் அச்சிறுபாக்கம் ஆலயப் பிரகாரத்தில் உள்ள சரக்கொன்றை மரத்தின் அடியில் கொன்றையடியீஸ்வரர் சன்னதியில் சிவனை வணங்கிய கோலத்தில் திரிநேத்ரதாரி இருக்கிறார். இக்கொன்றை மரத்தில் சித்திரை மாத திருவிழாவின் போது மட்டும் பூக்கள் மலர்வது சிறப்பு.

சரக்கொன்றை இலை உடல் அரிப்பை நீக்கும்

க்கொன்றை மரத்தின் பூவும் காயும், மரப்பட்டையும் பல மருத்துவ குணங்கள் கொண்டவை

  http://capnbob.us/blog/wp-content/uploads/2008/08/crassula.jpgYellow and Purple Flowers Photographic PrintPurple and Yellow Flower, Malaysia Photographic Print