Thursday, March 15, 2012

அரண்டவர்களுக்கருளும் அரகண்டநல்லூர் அரன்



துஞ்சலும் துஞ்சல் இல்லாத போழ்தினும்
நெஞ்சகம் நைந்து நினைமின் நாள்தொறும்
வஞ்சகம் அற்றடி வாழ்த்த வந்த கூற்று
அஞ்ச உதைத்தன அஞ்செ ழுத்துமே.
திருஞானசம்பந்தர் அருளிய பஞ்சாக்கரத் திருப்பதிகம்
 

அரகண்டநல்லூர் தலத்திற்கு வந்த ஞான சம்பந்தப் பெருமான், 
இங்கிருந்த வண்ணமே திருவண்ணா மலை ஈசனைப் பாடியுள்ளார்
 

தற்போதும் அண்ணாமலையில் ஏற்றப்படும் கார்த்திகை மகாதீபத்தை இக்குன்றின் ஒரு பகுதியிலிருந்து தரிசிக்கலாம். இங்கிருந்து 36 கி.மீ. தூரத்தில் உள்ளது திருவண்ணாமலை! 


மிருகண்டு முனிவருக்கு யோக சித்தியும் ஞான சித்தியும் அருளிய ஈசன் நீலகண்ட முடையார் என்னும் திருப்பெய ரோடு எழுந்தருளியிருக்குமிடம் அரகண்டநல்லூர். 
மிருகண்டு முனிவர் அரனை (சிவபெருமானை)க் கண்ட தலமாதலால், இவ்வூர் அரகண்டநல்லூர் என்னும் பெயர் பெற்றது. 
"ஓம்' என்னும் பிரணவ மந்திரத்தை- அதற்குரிய துல்லியமான நாதத்தோடு ஈசன் உமாதேவிக்கு உபதேசித்ததால், இவர் அதுல்யநாதீஸ்வரர் என்னும் பெயராலும் அழைக்கப்படுகிறார். 
 திருக்கோவிலூருக்கு எதிர்க்கரையில் பெண்ணையாற்றின் வடகரையில் அமைந்துள்ள சிறு குன்றின்மீது அமைந்துள்ள திருக்கோவிலில் மேற்கு நோக்கி அருள்புரிகிறார் சிவபெருமான்.
 
பஞ்சபாண்டவர்களும் பாஞ்சாலியும் தங்கள் வனவாச காலத்தின்போது வந்து தங்கி ஈசனை வழிபட்ட தலம்
அர்ச்சுனன் பிரம்மாஸ்திரம் வேண்டி ஈசனை வழிபட்ட தலமும் இதுவே....

இதற்குச் சான்று பகர்வது கோவிலை அடுத் துள்ள பகுதியில் மலையைக் குடைந்து அமைக்கப்பட்ட ஐந்து அறைகள் பஞ்சபாண்டவர் குகை என்னும் பெயராலேயே அழைக்கப்படுகின்றன. 
 

பாஞ்சாலி நீராடுவதற் காக பீமன் ஒரு குளம் வெட்டினா னாம். அது தற்போது பீமன் குளம் என்றே அழைக்கப்படுகிறது. 

A view of Bheema Theertham and the Draupadi temple over the rock 
 
வனவாசம் முடிந்து, 18 நாட்கள் போருக்குப்பின் நாட்டைத் திரும் பப் பெற்ற பாண்டவர்கள், பட்டாபி ஷேகம் முடிந்ததும் குடும்பத்தினரோடு மீண்டும் இங்கு வந்து வழிபட்டுச் சென்றனராம் 
Lingodhbhavar
 

பாண்டவர்கள் அரகண்டநல்லூர் இறைவனை வழிபட்டுச் சென்று இழந்த நாட்டை மீண்டும் பெற்றதுபோல, பதவி இழந்தவர்கள், சொத்து சுகங்களை இழந்தவர் கள் இங்கு வந்து வழிபட்டால் மீண்டும் அவற்றைப் பெறலாம். இக்கருத்தை ஞானசம்பந்தரே முன் மொழிந்துள்ளார். 
இத்தல தட்சிணா மூர்த்தி அறிவாற்றல் அருளும் வள்ளலாகத் திகழ்கிறார்.
Dhakshinamoorthy

பாண்டவர் வரலாற்றோடு தொடர்புடைய இத்தலம் முற்கால மன்னர்களுடனும் தொடர்புடையதாகத் திகழ்கிறது. 


கொடை வள்ளல் பாரியின் மகள்களான அங்கவை, சங்கவை ஆகியோரை இப்பகுதியை ஆண்ட தெய்வீகன் என்னும் மன்னனுக்குத் திருமணம் செய்து கொடுக்கத் தீர்மானிக்கப்பட்டது. 


இதை யறிந்த மூவேந்தர்களும் தெய்வீகனைச் சிறைபிடித்துச் சென்றுவிட்டனராம். அப்போது இத்தல ஈசனே சென்று தெய்வீகனை மீட்டு வந்தார்  என்பது வரலாறு..
எல்லா ஆலயங்களிலும் துர்க்கையம்மன் வடக்கு நோக்கி காட்சி யளிப்பாள். ஆனால் இங்கிருக்கும் துர்க்கை தெற்கு நோக்கி காட்சி தருவது சிறப்பான அம்சம் 
South Facing Durgai 

 

அதே போல இங்கு நவகிரக சந்நிதியில் அமைந் துள்ள சனீஸ்வரரும் சிறப்பு வாய்ந்தவர். தன் வாகனமான காகத்தின்மேல் அமர்ந்த வண்ணம் காட்சி தருகிறார். 


காகத்தின் மேல் அமர்ந்த கோலத்தில் சனிபகவான் காட்சி தரும் இடங்கள் மூன்று. ஒன்று தரைமட்டத்துக்குக் கீழும், மற்றொன்று சமதளத்திலும், இன்னொன்று மலைமீதும் அமைந்துள்ளது. 


அவ்வகையில் குன்றின்மீது அமைந்த கோவில் இந்த அரகண்டநல்லூர் தலமாகும். 


(தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள, எட்டயபுரம் ஜமீன்களின் குலதெய்வமாக விளங்கும் கழுகாசலமூர்த்தி ஆலயம் தரை மட்டத்துக்குக் கீழேயும்; விழுப்புரம் மாவட்டம், அன்னியூர் ராமநாதீஸ்வரர் ஆலயம் சமதளத்திலும் அமைந்துள்ள மற்ற தலங்களாகும்.) 
"அட்டமச்சனி நடைபெறுபவர்கள் அரகண்டநல்லூர்  வந்து வழிபட்டு தோஷம் நீங்கப் பெறுகிறார் கள். 

திருமணத்தடை போன்ற தோஷங்கள் விலகவும், இழந்த செல்வத்தை மீண்டும் பெறவும் அரகண்டநல்லூர்  வந்து இறைவனை மனமுருக வழிபட; எண்ணங்கள் யாவும் ஈடேறும்' 
 
இத்தலத்தைச் சுற்றி திருக்கோவி லூர் உலகளந்த பெருமாள் கோவில், வீரட்டானேஸ்வரர் கோவில், அந்திலி நரசிம்மர் கோவில், ஞானானந்தகிரி சுவாமிகள் தபோவனம் போன்றவை சில கி.மீ. தொலைவிலேயே அமைந் துள்ளன. அவற்றையும் தரிசித்து மகிழலாம்.

அரகண்டநல்லூர் கோவிலில் தீமிதி விழா பிரசித்தி பெற்றது..
ர்ச்சுணன் மாடு விரட்டும் நிகழ்ச்சி,  அரவான் களபலி முடிந்து ஊர்வலம் ,தென்பெண்ணை ஆற்றில் அலங்கரிக்கப்பட்ட கரகம், அக்னி சட்டியுடன் மேலதாளம் முழங்க கோவிலை அடையும் நிகழ்ச்சிகள். திரவுபதி சமேத அர்ச்சுணன் எழுந்தருளி, அவர் முன்பாக அக்னி குண்டத்தில் கரகம் இறங்கியதைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக் கடன் செலுத்துவார்கள்..
தீர்த்தவாரி: ஆற்றில் திரண்ட ஆயிரக்கணக்கானோர் 





 










சிவ பெருமான், காய் கனி அலங்காரம்.
ஓம் நம சிவாய, சிவாய நம ஓம், ஓம் சிவ சிவ ஓம்!!!





21 comments:

  1. அரகண்டநல்லூர் அரன் அருமை.

    ReplyDelete
  2. அரகண்டநல்லூர் செய்திகளும் சிவன் விநாயகருடன் இருக்கும் படமும் அருமை. எப்படித்தான் இவ்வளவு செய்திகளும் தொகுத்து படங்களுடன் கொடுக்கிறீங்களோ! உங்கள் உழைப்பு அலாதியானது.

    ReplyDelete
  3. பழமையான ஒரு கோவில் பற்றிய விவரங்கள் அறிந்து மகிழ்ச்சி....

    ReplyDelete
  4. மனம் ஈர்க்கும் அழகழகான படங்கள். நித்திரையில் ஆழ்ந்திருக்கும் குழந்தை சிவன் கொள்ளை அழகு.


    தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன் நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி.
    http://blogintamil.blogspot.com.au/2012/03/blog-post_15.html

    ReplyDelete
  5. காய்கனி அலங்காரம் இப்போது தான் பார்க்கிறேன்.

    (அரகண்டநல்லூர் எங்கிருக்கிறது என்று கேட்க நினைத்தேன்... திருவண்ணாமலை அரகண்டநல்லூருக்குப் பக்கத்தில் இருப்பதாகப் படித்தேன்.. அதுவும் சரிதான் :)

    ReplyDelete
  6. அரகண்டநல்லூருக்கு அனைவரையும் அழைத்து சென்று தரிசனம் செய்வித்ததற்கு மிக்க நன்றி..

    http://anubhudhi.blogspot.in/

    ReplyDelete
  7. வழக்கம்போல படங்களும் பதிவும் ரொம்ப நல்லா இருக்கு நன்றி வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. அரகண்ட நல்லூர் அரனைப் பற்றிய பதிவு அருமை. படங்கள் அத்தனையும் கன்ணைக் கவர்கின்றன. ஞானசம்பந்தப் பெருமான் இங்கிருந்தே திருவண்ணாமலை ஈசனைப் பாடியுள்ளார் - மேற்கு நோக்கி அமர்ந்திருக்கும் சிவன் - வனவாசத்தில் பாண்டவர் வழி பட்ட தலம் - பீமன் வெட்டிய குளம் - அங்கவை சங்கவையை மீட்ட அரன். துர்க்கை தெற்கு நோக்கிக் காட்சி அளிக்கும் சிறப்பு - சனீஸ்வரர் அமர்ந்த நிலையில் இருக்கும் காட்சி - தீமிதி விழா - தீர்த்தவாரி - விளக்கம் அனைத்தும் அருமை- நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  9. ”தன்வந்தரி”யுடன் மீண்டும் வலைச்சரத்தில் இன்று உங்கள் பதிவு அடையாளம் காட்டப்பட்டுள்ளதற்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  10. அரண்டவன் கண்களுக்கு இருண்டதெல்லாம் பேய் என்று தான் கேள்விப்பட்டுள்ளேன்.

    அரண்டவர்களுக்கருளும்
    அரகண்டநல்லூர் அரன்

    இருக்க இனி என்ன கவலை?

    நல்லதொரு நம்பிக்கையூட்டும் தலைப்பு.

    ReplyDelete
  11. படங்களும் விளக்கங்களும்
    வழக்கம் போல அருமை.

    ReplyDelete
  12. இரண்டாவது படம் புதுமை.

    தொந்திப்பிள்ளையார் கஷ்டப்பட்டு அமர்ந்து சிரத்தையாக தந்தையார் சிவலிங்கத்திற்கு பூஜை செய்யும்போது, சிவன் கழுத்திலிருந்து பாம்பு புறப்பட்டு வந்து லிங்கத்தை முத்தமிடத்துடிக்கிறதே!

    பிள்ளையாருக்குக் கோபம் வந்து அதைப்பிடித்து தன் மாபெரும் தொந்தியில் இறுக்கி பெல்ட் போலக் கட்டிக்கொண்டு விடப்போகிறார் பாருங்கள். ! )

    ReplyDelete
  13. நான்காவது படமும் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு.

    பொடிக்குழந்தைகளை தூக்கி வைத்துக்கொள்ளும் போது அவை நம் மூக்குக்கண்ணாடி, பேனா, செல்ஃபோன் முதலிய எதையாவது டக்கென கையில் பிடித்து இழுத்துவிடுவதுண்டு தானே!

    அதுபோல இந்தக்குழந்தை விநாயகர் தன் அப்பாவின் தலையில் உள்ள பிறைச் சந்திரனையே, பிடித்து இழுப்பது போன்று அழகாகக் காட்டியுள்ளது, அதை வரைந்த ஓவியரின் தனித்திறமையைக் காட்டுவதாக உள்ளது.

    அதைத்தேடிக் கண்டுபிடித்து இந்தப் பதிவினில் கொண்டுவந்து காட்டியுள்ளது உங்களின் தனித்திறமையைக் காட்டுவதாக உள்ளது.

    மொத்தத்தில் அப்பப்பா .. ஆங்காங்கே
    எத்தனை திறமைசாலிகள் ! ;)))))

    ReplyDelete
  14. வை.கோபாலகிருஷ்ணன் said...
    இரண்டாவது படம் புதுமை.

    தொந்திப்பிள்ளையார் கஷ்டப்பட்டு அமர்ந்து சிரத்தையாக தந்தையார் சிவலிங்கத்திற்கு பூஜை செய்யும்போது, சிவன் கழுத்திலிருந்து பாம்பு புறப்பட்டு வந்து லிங்கத்தை முத்தமிடத்துடிக்கிறதே!

    பிள்ளையாருக்குக் கோபம் வந்து அதைப்பிடித்து தன் மாபெரும் தொந்தியில் இறுக்கி பெல்ட் போலக் கட்டிக்கொண்டு விடப்போகிறார் பாருங்கள். ! )//

    பாம்பு பாலாபிஷேகம் செய்வதாகவும் கணேசர் மலரால் அர்ச்சனை செய்வதாகவும் எண்ணி படத்தைத் தேர்ந்தெடுத்தேன் ஐயா..

    தங்களின் வித்தியாசமான சிந்தனைகளுக்கும் , அருமையாக வழங்கிய அத்தனைக் கருத்துரைகளுக்கும் மனம் நிறைந்த நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  15. காய்கனி அலங்கார சிவனும் நல்லாயிருக்கு.

    கடைசியில் தூங்கும் சிவனை ஏற்கனவே ஒருநாள் காட்டியிருந்தீர்கள். அன்று தூங்க ஆரம்பித்த நான் இப்போது தான் விழித்துக்கொண்டேன்.

    மீண்டும் இந்த சிவக்கொழுந்து தூங்குவதைப்பார்க்கும் போது எனக்கும் மீண்டும் தூங்க வேண்டும் போல ஆவல் ஏற்படுகிறது.

    தூக்கம் என்பதே துக்கம் மறைய நல்ல மருந்தாக இருக்கிறது.

    அந்தத் தூக்கமும் எனக்கென்னவோ லேசில் வருவதில்லை.

    எல்லாவற்றிற்கும் [நிம்மதியாகப் படுத்தவுடன் தூங்குவதற்கும் கூட] ஒரு கொடுப்பினை வேண்டும் போலிருக்கு!

    ReplyDelete
  16. சிவனின் சிறுவயது படத்தை இப்போது தான் முதன் முறையாக பார்க்கிறேன்.

    இவ்வளவு இடங்களையும் சென்று பார்க்க உங்களுக்கு நேரம் எப்படி கிடைக்கிறது மேடம்?

    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  17. அரகண்டநல்லூர் பற்றி தெரிந்து கொண்டேன்.

    படங்கள் எல்லாம் அழகு.
    குழந்தைசிவன் படம் எங்கள் வீட்டில் உள்ளது, எனக்கு மிகவும் பிடிக்கும்.

    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  18. Interesting information, nicely depicted. Enjoyed reading it.

    with love
    Lakshmi :)

    ReplyDelete
  19. அருமையான பதிவு.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  20. 49. ஸ்ரீ முத்ராங்கித கோவிந்தா

    ReplyDelete