யுனெஸ்கோ உலகப் பாரம்பரிய கலைச்சின்னமாக அறிவித்துள்ள ஹம்பி நகரம் கனவுகளை உயிர்ப்புடன் உலவ விட்டு கல்லிலே கலை வண்ணக் காவியம் படைத்து சிறந்த சுற்றுலாத்தலமாக விளங்குகிறது...
நமது பாரம்பரிய நினைவுச் சின்னங்களை அழியாமல், எதிர்கால சந்ததியினருக்கு கொண்டு செல்லும் வகையில் ஹம்பியை மிகவும் பாதுகாப்போடு பராமரித்து வருகிறது இந்திய தொல்பொருள் ஆராய்ச்சிக் கழகம்.
இந்தியாவில் தற்போது இருக்கும் ஒரே சிதிலமான புராண கால நினைவு நகரம் கலையும், கடவுளும் ஒருங்கேக் காணக் கூடிய வாய்ப்பு மிக்க கர்நாடக மாநிலத்தின் பெல்லாரி மாவட்டத்தில் உள்ள ஹம்பியில் அமைந்துள்ள தொல்லியல் அருங்காட்சியகத்தில், விசயநகரத்தோடு தொடர்புடைய பல அரிய சிற்பங்களும், நினைவுச் சின்னங்களும் இடம்பெற்றுள்ளன.
நம் கண் முன் தோன்றுவது வெறும் கற்கள் அல்ல..
பல வரலாற்று உண்மைகளின் பதிவுகள் எத்தனையோ நவீன தொழில்நுட்பங்கள் வளர்ந்த காலத்திலும் இனி இப்படி காலத்தை வென்று நின்று கதை சொல்லும் அற்புதத்தை அமைக்கமுடியுமா என்று சவால் விட்டு கம்பீரமாக காட்சியளித்தது ஹம்பி..
இந்திய தொல்லியல் ஆய்வகம் தனது முதல் அருங்காட்சியகத்தை இங்கு அமைத்தது. தற்போது இந்த அருங்காட்சியகம் நான்கு காட்சிக்கூடங்களைக் கொண்டதாக உள்ளது.
இந்த அருங்காட்சியக வாயிலில் விஜயநகரப் பேரரசின் புகழ் பெற்ற பேரரசரான கிருஷ்ணதேவராயர், அவரது அரசிகளின் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த அருங்காட்சியக வாயிலில் விஜயநகரப் பேரரசின் புகழ் பெற்ற பேரரசரான கிருஷ்ணதேவராயர், அவரது அரசிகளின் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
ஹரிஹரர் புக்கர் சகோதரர்கள் வேட்டையாடிய போது ஹம்பியில் அவர்களது வேட்டைநாயை ஒரு முயல் துரத்தி விரட்டியதால்,ஹம்பியைத் தலைநகராக்குமாறு அவர்களது குரு வித்யாரண்யர் கூறினார் .
ஹம்பி தலைநகரான பின் போர்களில் வாகைசூடி விஜயநகரப் பேரரசை ஸ்தாபித்தனர் ..
மாபெரும் இந்து பேரரசாக புகழ், மிக்க அரசர் கிருஷ்ணதேவராயர் காலத்தில் மிகச் சிறப்புற்றுத்திகழ்ந்தது..
விருபாட்சர் கோயில், விட்டலர் கோயில், ரங்கர் கோயில், பிரமாண்டமான லக்ஷ்மிநரசிம்மர் சிலை, கல் தேர், தாமரை மண்டபம் என கண்கவர் கலைநுட்பங்கள் நிறைந்த ஹம்பியின் கம்பீர வரலாற்றை அங்கு நிறைந்துள்ள கல்வெட்டுக்களே மவுன சாட்சியமாக பறைசாற்றின....
தொடக்கத்தில் இங்கு கிடைத்த சிற்பங்களும், கட்டிடக் கூறுகளும் ஆங்கிலேய அதிகாரிகளால் யானைப் பந்திகளில் சேகரித்து வைக்கப்பட்டன.
ஒரு கோயிலைப் போன்ற அமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ள நடுக்கூடம் சிவலிங்கம், நந்தி, வாயில் மண்டபம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
அரும்பொருட்களோடு, விசயநகரக் காலத்தைச் சேர்ந்த செப்பு நாணயங்களும், பொன் நாணயங்களும் இரண்டாம் காட்சிக்கூடத்தில் உள்ளன.
புஷ்கரிணி என்னும் படிக்குளம் அக்காலத்தில் அர்ச்சகருக்காக மட்டும் கட்டப்பட்டதாம்.
அதனருகில் அரச குழந்தைகளுக்கான நீச்சல் குளம், பொது மக்கள் குளிக்க பெரிய குளம், குளத்துக்கு தண்ணீர் கொண்டு வரும் தண்ணீர் குழாய்கள், பெரிய பெரிய சாப்பாடுத் தட்டுகள் - அதுவும் கல்லினால் ஆனது.
வீரர்களுக்கு உணவு அதில் பரிமாறி பின்னர், தண்ணீரால்
அதைக் கழுவி விட ஏற்பாடு.
மஹாநவமி திப்பா எனப்படும் அரசரின் அரண்மனை எல்லாம்
விஜய நகர காலத்திற்கே அழைத்துச் செல்லும்..
பிரம்மனின் மகளான பம்பா , சிவபெருமானின் அருளைப் பெற தவம் செய்த இடம் என்பதால் பம்பா என்ற பெயரைப் பெற்று , பிற்காலத்தில் ஹம்பி என்று மருவியதாக ஒரு ஐதீகம் .
இதற்கு ' பம்பா தவம் செய்த பம்பசரோ வரையும் முக்கண்ணனாக சிவபெருமான் காட்சியளித்த விருபாட்சர் கோயிலும் சாட்சி
ஹம்பியின் சுற்றுப்பகுதிதான், ராமாயண கால வாலி , அங்கதன் ஆட்சி புரிந்த கிஷ்கிந்தா என்று ஒரு ஐதீகம் .
ரிஷிமுக பர்வதம், ஆஞ்சநேயர் மலை, மாதுங்க முனிவர் மலை என ராமாயண இடங்கள் நிறைந்த ஹம்பியில் அனுமன் சிலைகளும் ஏராளம் .இப்போதும் குரங்குகள் கூட்டம் கூட்டமாகக் காணப்படும் மிகப் பெரிய அனுமன் சிலை, ரங்கர் கோயிலில் உள்ளது..
ஒரு கோட்டை போன்ற தோற்றமளித்த ஹம்பியில் மன்னரும் மன்னர் குடும்பமும் ப்ரத்யேக வழிபாடு செய்வதற்காக விஜய நகர மன்னர் காலத்தில் ஒரே கல்லில் செதுக்கியுள்ள 12 அடி பிள்ளையார் முதலில் கண்களில் நிறைந்தார்
செல்லமாக இவரை கடலெகளு கணேசா என்று வணங்குகின்றனர்.
முகலாயர்களின் படையெடுப்பால் வயிற்றுப் பகுதியும் தும்பிக்கையும் உடை பட்டுள்ளதைக் கண்டோம்.
பிள்ளையாரின் மிக அருகிலேயே மன்னரின் அரச மண்டபத்தில் அழகாக செதுக்கப்பட்ட கல் தூண்கள் தற்பொழுது சற்றே சிதிலமான நிலையில் உள்ளன.
ஹேமகூடா மலைகளை அடைந்து பிரமித்தோம்.
செங்குத்தான பாறைகளின் மேல், ஜைனர் முறை கோயில்கள் - சிலைகள் ஏதும் இல்லாமல் மூன்று கோயில்கள் கொண்ட தொகுதிகளாகக் காணப்பட்டன.
உலகப் புகழ் பெற்ற விருபாட்சர் கோயில் 15ம் நூற்றாண்டின் முன் பகுதியில் கட்டப்பட்டு பின்னர் கிருஷ்ணதேவ ராயரால் 16ம் நூற்றாண்டு புதுப்பிக்கப்பட்டதாகும்.
வாயிலில் தசாவதார தூண்கள்,
தல மூர்த்தி விருபாட்சேஸ்வரர்,
அன்னை பம்பா தேவியுடன்
விஜய நகர மன்னர்களின் குல தெய்வமான புவனேஸ்வரி சன்னதியில் வீற்றிருக்கும் காட்சி மிகவும் அழகு.
தரிசனம் முடிந்தவுடன் வலம் வரும் வழியில் பிரகாரத்தின் ஓரத்தில் கோயில் கோபுரத்தின் எதிர் மறை நிழல் விழுவதைக் கண்டு வியந்தோம்...
பின்ஹோல் காமெரா என்ற தற்கால அறிவியல் சாதனம்
15ம் நூற்றாண்டில்...
குடிமக்களின் வழிபாட்டிற்காக செதுக்கப்பட்டுள்ள சசிவெகளு கணேசா சிற்ப அற்புதம்..ஒரே சிலையில் முன்பக்கம் கணேசர் போலவும், பின் பக்கம் பார்வதி தன் குழந்தை கணேசரைத் தூக்கி வைத்திருப்பது போலவும் செதுக்கப்பட்டுள்ள இச்சிலை நம் மூதாதையரின்கலை நயத்துக்கு சான்று பகன்று நிறைகிறது.
தண்ணீருக்கு நடுவில் உள்ள ஜலாந்த சிவலிங்கம் கூரையேதுமின்றி உடையாமல், சிதையாமல் இப்பொழுதும் ஊர் மக்களால் வழிபட்டு வரப்படுகிறது. .
விஸ்வரூபமாக . 6.7 மீட்டர் உயரத்தில் அருளும்ம் லட்சுமி நரசிம்மரின் கைகள் உடைந்து, லட்சுமி சிலையும் இல்லாதிருப்பதால் இப்பொழுது உக்ர நரசிம்மராக வழிபடுகின்றனர்.
யானைகள் பராமரிக்கப்பட்டு வந்த கொட்டில் பிரம்மாண்டமாக காட்சியளித்தது... ..
தன் மனம் கவர் ராணி நாட்டிய மங்கைசென்னா தேவிக்காகக் கட்டியிருக்கும் அரண்மனையே தாமரை மஹால்.
ஹம்பியின் மிக முக்கியமான இடங்களின் சிகரம்
தாமரை இதழ்கள் போன்ற விரிப்புகள் வெளிப்புறத்தை வெகு நேர்த்தியாக அலங்கரிக்கிறது.
இரண்டு மாடிக் கட்டிடமாகக் கட்டப்பட்டுள்ள இந்த மஹால் அக்காலத்திலேயே குளிர் சாதன வசதிகளைக் கொண்டிருந்ததாம்...
விட்டலா கோயிலின் நுழைவாயிலிலேயே வரவேற்பது அழகான கல்லால் ஆன ரதம்.
இதன் சிறப்பு, அக்காலத்தில், உண்மையாகவே சுழலும் சக்கரங்களைக் கொண்டதாகும்.
இசைக்கவைக்கும் இசைத்தூண்கள்.......
கனவுகளைக் கற்களால் வசீகரமாக கலைவண்ணம் தோன்ற படைத்த அற்புத நகரம் ஹம்பி..
Sunset at Hampi
Watch Tower near Zenana Enclosure, Hampi
1968 ல் நான் ஹம்பி சென்றிருக்கிறேன்.
ReplyDelete44 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஹம்பிக்கே சென்றது போன்ற உணர்வு தங்கள் பதிவில் உள்ள படங்களைப்பார்த்தபோது.
அழகான படங்கள்! அருமையான விளக்கங்கள்!! வாழ்த்துக்கள்!!!
கல்லிலே கலை வண்ணம் கண்டேன், உங்கள் கேமரா கைவண்ணம் அழகு.
ReplyDeleteபதிவு அருமை.
நல்ல புகைப்படங்கள்... தகவல்களும் அருமை....
ReplyDeleteஹம்பியை பற்றிய மிக நல்ல விளக்கமான பதிவு...
ReplyDeleteகண்ணையும் கருத்தையும் கொள்ளை கொள்ளும் படங்கள்...உரைகள்...
இதுவரை சினிமாவில் மட்டுமே பார்த்த அழகான ஹம்பி கோவில் மற்றும் குளம் etc பற்றி எழுதியதற்கு மிக்க நன்றி...
ஆஹா! பாரதத்தின் பெருமை தான் என்னே!!
ReplyDeleteபகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி தோழி!
காலங்கள் கடந்தாலும்
ReplyDeleteகண்களில் விசித்திரம் காட்டும்
சித்திரங்கள்...
”கல்லிலே கலைவண்ணக் காவியம் ஹம்பி” தலைப்புத் தேர்வு அருமை. சமீபத்தில் எங்கேயோ கேட்ட ஞாபகம்.;)))))
ReplyDeleteஹம்பியைப் பற்றி சிறப்பான தகவல்கள் அறிந்து கொள்ள முடிந்தது.படங்கள் மிகவும் சிறப்பாக இருக்கு.நன்றி பகிர்வுக்கு.
ReplyDeleteஇந்தியாவில் இருக்கும் ஒரே சிதிலமான புராண கால நினைவு நகரம். கலையும் கடவுளும் ஒருங்கேக் காணக் கூடிய வாய்ப்பு மிக்க கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் உள்ள ஹம்பி - அது தங்கக்கம்பியே! ;)
ReplyDeleteஒவ்வொரு சிலைகளும், ஒவ்வொரு சிற்பங்களும், ஒவ்வொரு கட்டடங்களும் எவ்வளவு பாரம்பர்யத்தையும், வரலாறுகளையும், புராணங்களையும், கலை கலாச்சாரப் பெருமைகளையும் பறைசாற்றுவதாக இன்றும் காட்சியளிக்கிறது! ;)))))
ReplyDeleteவிஜயநகர சாம்ராஜ்யத்தின் பல இடங்களுக்கு நானும் நேரில் போய்ப் பார்த்து, வியந்து போய் உள்ளேன்.
ReplyDeleteஸ்ரீரங்கப்பட்டிணமும், அங்குள்ள மிகப்பிரும்மாண்டமான கோயிலும் கூட ஒரு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. சுல்தான்கள் ஆட்சியிலும், ஸ்ரீரங்கப்பட்டிணத்திற்கு நிறைய உதவிகள் சுல்தான் தன் ஆட்சியில் செய்திருப்பதாகக் கேள்விப்பட்டேன்.
கருங்கல்லில் செதுக்கியுள்ள தேர்ச் சக்கரங்களும், யானைகளும் எவ்ளோ அழகாகக் காட்சியளிக்கின்றன! ;))))
ReplyDeleteநம் முரட்டு தொந்திப்பிள்ளையாரும் கருங்கல்லிலே அழகோ அழகாகவே வீற்றியிருக்கிறார் பாருங்களேன் ;)
யோக நரசிம்ஹரும், பள்ளிகொண்ட பெருமாளும் [அதுவும் வக்ஷஸ்தலத்திலிருந்து புறப்பட்டு கொடிபோல நீண்டு அமர்ந்துள்ள லக்ஷ்மியும், பெருமாள் பாதத்தினருகில் அமர்ந்துள்ள ஸ்ரீதேவி, பூதேவியும் எவ்வளவு கஷ்டப்பட்டு வடித்திருக்கிறார்கள் அந்தக்கால சிற்பக்கலை நிபுணர்கள்.
ReplyDeleteதலைவணங்கிப் பாராட்ட வேண்டியதோர் கலைப்பொக்கிஷம் அல்லவா! கவனமாகப் பராமரித்து வந்தால் ஆயிரம் ஆயிரம் தலைமுறைகளுக்கு நமது கலை கலாச்சாரப்பெருமைகளைக் கொண்டு செல்லலாம் என்பதில் எந்தவிதமான மாற்றுக்கருத்தும் இருக்கவே முடியாது!
அழகிய ஆச்சர்யமான பகிர்வை இன்று தந்துள்ளது மனதுக்கு மிக மிக மகிழ்ச்சியாக உள்ளது.
ReplyDeleteமனமார்ந்த பாராட்டுக்கள்.
மன மகிழ்ச்சியுடன் வாழ்த்துகள்.
பகிர்வுக்கு நன்றியோ நன்றிகள். !
வாழ்க வாழ்கவே !
தொடரட்டும் தங்களின் இது போன்ற நற்பணிகள்.
வழக்கம் போல படங்களும் , பதிவும் அருமை... உங்களின் தொடர்களை தொடர்ந்து படித்து வந்தாலே சுற்றுலா சென்று வந்தது போல ஒரு திருப்தி
ReplyDeleteஅடேங்கப்பா... அக்காலத்தில் நம் முன்னோர்கள் எத்தனை திறமை வாய்ந்தவர்களாக இருந்திருக்கின்றனர். பிரமிப்பு! பிரமிப்பு! படங்களும், விளக்கமுமாக தேர்ந்த ஒரு கைடுடன் சென்று பார்த்து வந்தது போன்ற ஒரு உணர்வு! மிக்க நன்றி!
ReplyDeleteவழக்கம்போல படங்களும் பகிர்வும் நல்லா இருக்கு நன்றி வாழ்த்துகள்.
ReplyDeleteபடங்களுடன் பதிவு அருமை!!
ReplyDeleteI never had been here.
ReplyDeleteBut somewhat seen the Ganesha and Narasimha.
I know I never can go over here.
Happy viewing through this post.
Thanks Rajeswari.
viji
நாங்களே ஹம்பி சென்று வந்த ஒரு உணர்வைக் கொடுத்தது.. படங்களும் விளக்கங்களும் அருமை.
ReplyDeleteபகிர்வுக்கு மிக்க நன்றி..
http://anubhudhi.blogspot.in/
அருமையான பகிர்வு. படங்களும் அழகு.
ReplyDeleteவியந்து வியந்து வாசித்தேன்.அத்தனை அதிசயம்.தேடிக்கிடைக்காத விஷயங்களை எங்களுக்கு இருந்த இடத்தில் தருகிறீர்கள் தோழி.உங்களின் முயற்சிக்கு எவ்வளவு நேரங்கள் எடுத்துப் பதிவாக்குகிறீர்கள் என்று நினைத்து பார்க்கவே மகிழ்ச்சியும் பாராட்டும் !
ReplyDeleteஅழகான படங்கள்! அருமையான விளக்கங்கள்!! வாழ்த்துக்கள்!!!பாராட்டுக்கள்..
ReplyDeleteகம்பியின் கலைவண்ணம் எம்மையும் தம்வசம் இழுத்துக்கொள்கின்றது.
ReplyDeleteஹம்பி சென்று மகிழ்ந்திருக்கிறேன்.
ReplyDeleteநினைவுகளை திரும்பவும் மீட்டச் செய்தது இப்பதிவு.
35. வேணுகானப் பிரியா கோவிந்தா
ReplyDeleteஎன்னுடைய ஐந்தாவது வயதில்(1953) ஹம்பி சென்றிருக்கிறேன். பெரிய பிள்ளையார் சிலையும், துங்கபத்ரா ஆற்று நீரில் மூழ்கி நின்ற மண்டபங்களும் சிதைக்கப்பட்ட சிலைகளும் இடிபாடுகளும் மிகவும் ஒரு சோகத்தை மனதில் எழுப்பியது. மட்டும் நினைவில் உள்ளது. தங்கள் பதிவில் உள்ள படங்களும் விவரங்களும் என்னை அந்த காலத்திற்கு அழைத்து சென்று விட்டது. தற்போது தொல்லியல் துறை நன்றாக அந்த இடத்தை நன்றாக பராமரிப்பது மகிழ்ச்சியை தருகிறது. நல்லதொரு பதிவினை தந்தமைக்கு பாராட்டுக்கள்
ReplyDeleteகர்நாடகாவில் நீண்ட நாட்களாக இருந்தும் இன்னும் ஹம்பி போய் வரவில்லை. உங்களின் இந்தப் பதிவைப் பார்த்ததும் ரொம்பவும் ஏக்கமாக இருக்கிறது.
ReplyDeleteஒவ்வொரு இடமும் எப்போது வரப் போகிறாய் என்று கேட்பதுபோல உள்ளது.
2404+8+1=2413
ReplyDelete