Tuesday, March 27, 2012

ஸ்ரீ ராம நவமி



ஆயிரம் நாமங்களுடைய தத்துவங்களையும் 
ராம என்ற நாமம் கொண்டுள்ளது. 
எனவே, ஒருவன், ராம நாமத்தை மூன்று முறை ஜபிப்பதால் 
அந்த ஆயிரம் நாமங்களையும் ஜபித்தவன்  ஆகிறான்"
ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே 
ஸஹஸ்ர நாம தத்துல்யம் ராம நாம வரானனே.  
ராம நாம வரானனே   என்று ராம நாமத்தை பார்வதி தேவியிடம்
சொல்லிக் கொண்டாடுபவர் சாட்சாத் சிவபெருமான்..
லட்ச தீப ஒளியில் ஒளிரும் ஸ்ரீ கோதண்ட இராமர்
[ramar7.JPG]
வால்மீகி என்ற மலையில் உற்பத்தியாகி, ராமன் என்ற கடலில் கலப்பதற்கு, பூமியைப் புனிதப்படுத்திக் கொண்டு செல்லுகின்ற மகாநதியே ராமாயணம்.

கிருஷ்ணாவதாரத்தில் என்ன நடக்கும் என்பது கிருஷ்ணனுக்குத் தெரியும். இராமாவதாரத்தில் என்ன நடக்கப் போகிறது என்பது மானுட அவதாரம் எடுத்த ராமனுக்குத் தெரியாது. அதுதான் இந்த அவதாரத்தின் மகிமை

ஸ்ரீராமனுடைய ஜனன காலத்தில் ஐந்து கிரகங்களும் மிகவும் உச்ச நிலையில் இருந்ததாம். 

அதனால் ஸ்ரீராமருடைய ஜாதகத்தை எழுதி பூஜை அறையில் வைத்து பூஜிப்பது மிகவும் விசேஷம்.. 

ஜாதகத்தை வைத்துப் பூஜிப்பவர்களுக்கும், வைத்திருப்பவர்களுக்கும், ஜாதக ரீதியாய் ஏற்படக்கூடிய நவக்கிரக நோஷ நிவர்த்தியும், 
ஸர்வ வியாதி நிவர்த்தியும், ஐஸ்வர்ய அபிவிருத்தியும், 
ஆயுள் ஆரோக்யமும் கிடைக்கும்.
 

 பத்து திசைகளிலும் ரதத்தை செலுத்த வல்லவன் என்பதால், அயோத்தி மன்னனுக்கு தசரதன் என்று பெயர்.

புத்திர காமேஷ்டி யாகம் செய்து யாகத்தில் தோன்றிய யாக 
புனித பாயசத்தை மூன்று மனைவியரும் உண்டார்கள். 


சுமித்திரைக்கு இரண்டு பங்கு பாயசத்தைக் கொடுத்துவிட லஷ்மணன் - சத்ருக்னன் என்று இருவர் பிறந்தனர். கௌஸல்யாவுக்கு ஸ்ரீராமனும், கைகேயிக்கு பரதனும் பிறந்தார்கள்.


புனர்ப் பூச நட்சத்திரமும், கடக ராசியும் ராமனுடையவை.
பரதன் - பூச நட்சத்திரம்; மீன லக்னம்.
லட்சுமணன் - ஆயில்ய நட்சத்திரம் - கடகலக்னம்.
சத்ருக்னன் - மக நட்சத்திரம் - சிம்மலக்னம்.
 
இவர்கள் பிறந்த மாதம் சித்திரை. சிறந்த லக்னம் கடக லக்னம். 
பதினோராம் இடத்திற்குரிய நான்கு கிரகங்களும் உச்ச நிலையில் இருந்தன.
ராமன் என்றாலே ஆனந்தமாக இருப்பவன் என்று பொருள்
சுகதுக்கங்களில் சலனம்அடையாமல் தான் ஆனந்தமாகவே இருந்து கொண்டு மற்றவர்களுக்கு ஆனந்தத்தை தருபவன்தான் ஸ்ரீராமன்.
 
கடலைத் தாண்டும் பொழுது அனுமனை அரவை என்ற அரக்கியும், சிம்ஹை என்ற அரக்கியும் தடுத்தனர். 
அவர்களைத் தாண்டிச் செல்ல ராம நாமத்தைதான் உச்சரித்தார் அனுமன். 
அப்பொழுதுதான் ராம நாம மஹிமையை உணர்ந்தான் அனுமன்.
 

`ராம' என்னும் பெயர் சிறப்பை கம்பர் அற்புதமாக எடுத்துக் காட்டுகிறார்.

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
திண்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமு மின்றித் தீருமே

இம்மையே ராமவென் றிரண்டெழுத்தினால்'' என்கிறார்.
பள்ளி எழுச்சி பாடுகின்றோம்
     ராமா ஸ்ரீ ராம ராம ராமா ஸ்ரீ ராம ராம எழுந்தருளாய் நாதனே..

 ஸ்ரீராமர் பிறந்த நன்னாளை ஸ்ரீராம நவமி என்று கொண்டாடுகிறோம். இது மகிழ்ச்சி கலந்த நன்னாள். அதை விரத தினமாக அனுஷ்டிக்கிறோம்.
ஸ்ரீராம நவமி உற்சவம் பத்து தினங்கள் கோயில்களில் கொண்டாடுவார்கள்..
நல்ல கணவர், குழந்தைகள் இரண்டையுமே இந்த விரதம் தந்துவிடும்.
 

ஸ்ரீ ராமச் சந்திரனுக்கு ஜெய மங்களம் - 
நல்ல திவ்யமுகச் சந்திரனுக்கு சுப மங்களம்
மாராபி ராமனுக்கு மனு பரந்தாமனுக்கு 
ஈராறு நாமனுக்கு ரவிகுல சோமனுக்கு
 


 


துளசிதளத்தின் கொலுசு அணிந்த லக்ஷ்மி 
 

32 comments:

  1. ஸ்ரீராம நவமி புண்ணிய நாள் அன்று ஸ்ரீராமனைக் கொண்டாடுவோம்.

    ReplyDelete
  2. அன்பின் ராஜராஜேஸ்வரி,

    வண்ணப்படங்களும், வர்ணனைகளும் அருமை. ராம நவமியை நினைவூட்டிய நல்லதொரு பதிவு. வாழ்த்துகள்.

    அன்புடன்

    பவள சங்கரி.

    ReplyDelete
  3. Aha Fine post. Pictures are so divine. The last one, kolusu picture is so nice.Lakshmi is giving a dance pose.
    viji

    ReplyDelete
  4. கொலுசு அணிந்த யானையை இப்போதுதான் பார்க்கிறேன். ராமனின் சகோதரர்களின் நட்சத்திரங்கள் நிறைய தகவல்களுடன் ராமநவமி.

    ReplyDelete
  5. ஸ்ரீ ராமர் பற்றிய விஷயஙள் எத்தனை கேட்டாலும் படித்தாலும் இன்பம் பயப்பதே.

    ராம லக்ஷ்மணர்கள் நால்வரும் தொட்டிலில் குழந்தைகளாக இருக்கும் படம் அற்புதம்

    ஸ்ரீ ராமச்சந்திரனுக்கு ஜெய மஙளத்திற்கு பிறகு இருக்கும் ஃபோட்டோ ஸ்ரீ ரங்கநாதர் போல் தோற்றமளிக்கிறதே. (அல்லது , எங்கு சுற்றியும் ரங்கனைக் கண்டேன் என்பது போல் எனக்குத்தான் அப்படி தோற்றமளிக்கிறாரா? )

    ReplyDelete
  6. raji said...
    ஸ்ரீ ராமர் பற்றிய விஷயஙள் எத்தனை கேட்டாலும் படித்தாலும் இன்பம் பயப்பதே.

    ராம லக்ஷ்மணர்கள் நால்வரும் தொட்டிலில் குழந்தைகளாக இருக்கும் படம் அற்புதம்

    ஸ்ரீ ராமச்சந்திரனுக்கு ஜெய மஙளத்திற்கு பிறகு இருக்கும் ஃபோட்டோ ஸ்ரீ ரங்கநாதர் போல் தோற்றமளிக்கிறதே. (அல்லது , எங்கு சுற்றியும் ரங்கனைக் கண்டேன் என்பது போல் எனக்குத்தான் அப்படி தோற்றமளிக்கிறாரா? )/

    எங்கு சுற்றியும் ரங்கனைச் சேவிக்க
    காட்சி அருளும் அரங்கனே அவர்! அவரே ஆப்தர் !

    ReplyDelete
  7. படங்கள் அருமை. நல்லதொரு பதிவு.

    ReplyDelete
  8. 2
    =

    ஸ்ரீராம்ஜயம்
    ===========

    ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்!
    ============================

    ஸ்ரீராமநவமி பற்றிய தங்கள் பதிவு வெகு அழகாக மனதுக்கு மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது.

    படங்கள் அத்தனையும் அருமை. காணக்கண்கோடி வேண்டும்.

    குழந்தை ராமர் வில்+அம்புகளுடன் தூங்குவது போல உள்ள படம் நல்ல அழகு.

    வெள்ளிக் கொலுசு அணிந்த யானை தன் கால்களை ஒய்யாரமாக வைத்து டான்ஸ் செய்வது போல நிற்பது அழகோ அழகு.

    தொட்டிலில் இட்டுள்ள நான்கு குழந்தைகள், அவர்களின் ஜன்ம நக்ஷத்திரம், லக்னம் முதலியன பற்றி கூறியிருப்பது சிறப்பு.

    பாராட்டுக்கள்.

    ReplyDelete
  9. பாதகமலங்கள் அருமை. சிறப்பான இடுகை சிறீ ராம..ராம...
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  10. வண்ண திரு உருவப் படங்களுடன்
    சிறப்புப் பதிவு மிக மிக அருமை
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  11. வண்ண திரு உருவப் படங்களுடன்
    சிறப்புப் பதிவு மிக மிக அருமை
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  12. அழகழகானத் தெய்வீகப் படங்களுடன் ஶ்ரீராமநவமி பற்றிய விஷயங்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  13. அழகான படங்களுடன் அருமையான பகிர்வு.

    ReplyDelete
  14. அருமையான படங்கள். நம்ம லக்ஷ்மியையும் சேர்த்துக்கிட்டதுக்கு நன்றிகள்.

    எனக்கு ரொம்பப் பிடிச்ச பண்டிகை ஸ்ரீ ராம நவமி. பிரஸாதம் செய்ய மெனெக்கெட வேணாம் பாருங்க:-)))))

    ReplyDelete
  15. கோதண்டராமர் படமும் பிரமாதம்.
    ராம நவமி போல் லட்சுமண பரத சத்ருக்னர் பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்களா யாராவது? அவர்களும் நாராயணனின் அம்சம் தானே? just curious.

    யானைக் கால்களில் கொலுசு - அதுவும் நடன போஸ்! அட்டகாசம்.

    ReplyDelete
  16. துளசி கோபால் said...
    அருமையான படங்கள். நம்ம லக்ஷ்மியையும் சேர்த்துக்கிட்டதுக்கு நன்றிகள்.

    எனக்கு ரொம்பப் பிடிச்ச பண்டிகை ஸ்ரீ ராம நவமி. பிரஸாதம் செய்ய மெனெக்கெட வேணாம் பாருங்க:-)))))

    வாங்க துளசி ! பூனையும் யானையுமா முதல் முறையாக வந்து சிறப்பித்ததற்கு இனிய நன்றிகள்..

    ReplyDelete
  17. அப்பாதுரை said...
    கோதண்டராமர் படமும் பிரமாதம்.
    ராம நவமி போல் லட்சுமண பரத சத்ருக்னர் பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்களா யாராவது? அவர்களும் நாராயணனின் அம்சம் தானே? just curious.

    யானைக் கால்களில் கொலுசு - அதுவும் நடன போஸ்! அட்டகாசம்.//

    கருத்துரைகளுக்கு இனிய நன்றிகள்..

    ReplyDelete
  18. வை.கோபாலகிருஷ்ணன் said...
    2
    =

    ஸ்ரீராம்ஜயம்
    ===========

    ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்!
    ============================

    ஸ்ரீராமநவமி பற்றிய தங்கள் பதிவு வெகு அழகாக மனதுக்கு மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது.

    படங்கள் அத்தனையும் அருமை. காணக்கண்கோடி வேண்டும்.

    குழந்தை ராமர் வில்+அம்புகளுடன் தூங்குவது போல உள்ள படம் நல்ல அழகு.

    வெள்ளிக் கொலுசு அணிந்த யானை தன் கால்களை ஒய்யாரமாக வைத்து டான்ஸ் செய்வது போல நிற்பது அழகோ அழகு.

    தொட்டிலில் இட்டுள்ள நான்கு குழந்தைகள், அவர்களின் ஜன்ம நக்ஷத்திரம், லக்னம் முதலியன பற்றி கூறியிருப்பது சிறப்பு.

    பாராட்டுக்கள்./

    சிறப்பான கருத்துரைகளுக்கு இனிய நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  19. Ramani said...
    வண்ண திரு உருவப் படங்களுடன்
    சிறப்புப் பதிவு மிக மிக அருமை
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

    அருமையான கருத்துரைகளுக்கு இனிய நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  20. நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...
    அன்பின் ராஜராஜேஸ்வரி,

    வண்ணப்படங்களும், வர்ணனைகளும் அருமை. ராம நவமியை நினைவூட்டிய நல்லதொரு பதிவு. வாழ்த்துகள்.

    அன்புடன்

    பவள சங்கரி./

    முத்தான கருத்துரைகளுக்கு இனிய நன்றிகள்

    ReplyDelete
  21. பழனி.கந்தசாமி said...
    ஸ்ரீராம நவமி புண்ணிய நாள் அன்று ஸ்ரீராமனைக் கொண்டாடுவோம்.

    ஸ்ரீராம நவமி கருத்துரைகளுக்கு இனிய நன்றிகள்

    ReplyDelete
  22. viji said...
    Aha Fine post. Pictures are so divine. The last one, kolusu picture is so nice.Lakshmi is giving a dance pose.
    viji //

    கருத்துரைகளுக்கு இனிய நன்றிகள் தோழி !

    ReplyDelete
  23. விச்சு said...
    கொலுசு அணிந்த யானையை இப்போதுதான் பார்க்கிறேன். ராமனின் சகோதரர்களின் நட்சத்திரங்கள் நிறைய தகவல்களுடன் ராமநவமி.

    அருமையான கருத்துரைகளுக்கு இனிய நன்றிகள்

    ReplyDelete
  24. கோவை2தில்லி said...
    அழகான படங்களுடன் அருமையான பகிர்வு.//



    அருமையான கருத்துரைகளுக்கு இனிய நன்றிகள்

    ReplyDelete
  25. கீதமஞ்சரி said...
    அழகழகானத் தெய்வீகப் படங்களுடன் ஶ்ரீராமநவமி பற்றிய விஷயங்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி.

    அழகான கருத்துரைகளுக்கு இனிய நன்றிகள்

    ReplyDelete
  26. kovaikkavi said...
    பாதகமலங்கள் அருமை. சிறப்பான இடுகை சிறீ ராம..ராம...
    வேதா. இலங்காதிலகம்.//


    கருத்துரைகளுக்கு இனிய நன்றிகள்

    ReplyDelete
  27. yathan Raj said...
    Alaku pakthi arumai

    கருத்துரைகளுக்கு இனிய நன்றிகள்

    ReplyDelete
  28. சித்த மருத்துவத்தில் சிறந்த இடத்தைப் பெரும் மூயகளில் இந்த சரக் கொன்றையும் ஒன்று சிறந்த இடுகை பாராட்டுகள் .

    ReplyDelete
  29. அருமையான பதிவு.
    வாழ்த்துகள்.

    ReplyDelete