Thursday, March 8, 2012

மகளிர் தின மகிழ்ச்சி வாழ்த்துகள்…


Happy women's day animations



சர்வதேச அளவில் பெண்மையை போற்றுவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட மார்ச் எட்டாம் நாள் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. முதன் முதலில் சர்வதேச உழைக்கும் மகளிர் தினம் என அழைக்கப்பட்ட இந்த மகளிர் தினம், பொருளாதார, அரசியல் மற்றும் சமூக ரீதியில் சாதனை புரிய முயலும் பெண்களின் மீது மரியாதை, மதிப்பு, அன்பு ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில் பொதுவாக கொண்டாடப்படுகிறது.
மகளிர் தினத்தினை சீனா, ரஷ்யா, பல்கேரியா, வியட்நாம் போன்றபல நாடுகள் விடுமுறை தினமாக பிரகடனப் படுத்தியுள்ளது. 

இனம், மொழி, கலாசாரம், பொருளாதாரம், அரசியல் ஆகிய பல்வேறு வேறுபாடுகளை மறந்து பெண்கள் தினம் அனைத்து பெண்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது. 

Happy women's day animations
பெண்கள் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களின் உரிமைகளுக்குப் பங்கம் விளைவிக்காமல் சாதனைகளை கொண்டாடும் வகையிலும் கடைபிடிக்க வேண்டும். 

மகளிர் தினக் கொண்டாட்டங்களில் குறிப்பாக உலகம் முழுவதும் இயங்கிக் கொண்டிருக்கும் ஆக்கபூர்வமான பெண்ணிலைவாதச் செயற்பாட்டாளர்கள் தனியாகவும் குழுக்களாகவும் அமைப்புக்கள் சார்ந்தும், அக்கபூர்வமான செயல் விவாதங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அனைவரும் ஒருசேர இணைந்து முன்னேற்றப் பாதையில் அணிவகுத்து செல்வோம்!.. நம்மை நாமே வலுப்படுத்திக்கொண்டு, அதிகாரத்தில் பங்கு பெற நமக்கு நாமே பாடுபட்டு அதன் மூலம் வலுவான இந்தியாவை உருவாக்குவோம். 

 காற்றில் ஏறி விண்ணையும் சாடி விடடார்கள் இன்று பெண்கள்- கல்பனா சாவ்லாக்களாக.
Women's Day Orkut Scraps
ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்று அஞ்சியிருந்த காலம் கப்பலேறிப் போய் விட்டது. 

கல் உடைப்பதிலிருந்து, கற்றுக் கொடுப்பதிலிருந்து, சிலை வடிப்பதிலிருந்து, சில்லறை வியாபாரம் செய்வதிலிருந்து, சுய உதவிக் குழுக்கள் மூலம் தொழில் வல்லுனர்களாகவும், சாதனை படைத்து சிகரத்தை நோக்கி பயணித்துக் கொண்டுள்ளனர் இன்றைய மகளிர்.
எழுதுங்கள் இனி உலக ஏடுகளில் - புதியதோர் உலகம் படைக்கப் புறப்பட்டு விட்டனர் எங்கள் மகளிர் என்று.



பாடுங்கள் இனி  புத்தம் புதியதோர் உலகம் படைக்கப்புறப்பட்டுவிட்டனர் பாவையர் என்று..

நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில் எறிந்த காலம் மலையேறிப்போகட்டும்..

எத்துறையிலும் மகளிரின் சாதனைத் தடத்தைப் பார்க்க புறப்படு பெண்ணே புவியசைக்க

மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா'' 

உலகில் நடைபெறக் கூடிய அனைத்து செயல்களையும் ஆக்குபவளும் பெண்ணே, தீயவற்றை, அநீதியை அடியோடு அழிப்பவளும் பெண்ணே.

அதனால்தான் ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே என்ற கூற்று இன்று வரை நிலவி வருகிறது.

பெண்களின் கல்வி, பொருளாதார முன்னேற்றத்திற்கு  பெண்களே நாட்டின் கண்கள் என்று போற்றிப்பாடுவோம். 

காலம்காலமாக கண்ணீருடன் வாழ்ந்து வரும் பெண் இனம், காத்துவரும் கண்ணிய உணர்வால்தான் இந்த மண்ணில் மனிதநேயம் உயிர்த்து இருக்கிறது. மக்கள்தொகையில் சரி பாதியாக இருக்கும் பெண்களின் முன்னேற்றமே, ஒட்டுமொத்த உயர்வுக்கு வழிவகுக்கும். 


பெண்ணுரிமைக்காக போராடிய போராளிகளை பற்றியும் பெண்கள் போர்க்குணத்துடன் கட்டியமைத்த இயக்கங்கள் பற்றியும் இந்நாளில் நன்றியுடன் நினைத்து சிறப்புசெய்ய வேண்டும்..




கடந்த கால வரலாற்றை, அதில் நடந்த தவறுகளை திறந்த மனதோடு இருபாலாறும் கற்று ஆய்ந்து தீர்வை காண வேண்டும், கண்ட பின்பு கடந்த காலத்திலேயே உழல்வது அவசியமில்லை 


யாரையும் நம்பியதில்லைதன்னையே நம்புகிறாள்! தன்னம்பிக்கை’ இருப்பதால்


மதியோடு பெண் இருக்கிறாள்அதனால் தான் மதிப்பெண்ணிலும் முதலிடம் பெற்று மதிப்புப் பெறுகிறாள்!


மக்கள் தொகையில் சரிபாதியான பெண்களின் முக்கியத்துவத்தை புறக்கணிக்கும் எந்த சமுகம் வளர்ச்சி என்னும் நிலையை அடையாது. 

அன்பிற்கு அடையாளமாகயும், தெய்வங்களாகவும், தெய்வ தன்மை சூட்டப்பட்டாலும்,பெண்சமூகத்தை மிகவும் கீழான நிலையிலேயே இந்திய சமூகம் வைத்திருத்திந்தது என்பது வரலாற்று உண்மை. 

பெண்களின் பேச்சு சுதந்திரம் என்பது கூட சமூக அமைப்பை பாதிக்காத வரையிலும் அனுமதிக்கப்பட்டது. பெண்ணின் சிந்தனைகளை தீர்மானிக்கும் உரிமையை நீண்ட நாட்களுக்கு இந்த சமூகமே வைத்திருந்தது. \\

அடிமைப்படுத்தப்பட்ட நிலையை பெருமைமிகுந்ததாக பெண்களை நம்ப வைத்ததும் இதன் அடிப்படையிலே. கடந்த நூற்றாண்டு பல மாற்றங்களை சமூகத்தில் ஏற்படுத்தியது. கல்வி வாய்ப்புகளும் வேலை வாய்ப்பு ஏற்படுத்திய பொருளாதார சுதந்திரமும் பெண்களிடையே பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 


வல்லமை மின் இதழில் வெளியான எமது ஆக்கத்தை பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி...

http://www.vallamai.com/literature/articles/17517/

அன்பின் ராஜ ராஜேஸ்வரி,

தங்களுடைய மகிழ்ச்சி மகளிர் தின வாழ்த்துகளை வல்லமையில் இணைத்து விட்டோம்..
 மிக நன்று. தொடர்ந்து எழுதுங்கள்.

அன்புடன்

பவள சங்கரி.








14 comments:

  1. ;)

    வல்லமையில் வெளியான வல்லமை மிக்க பதிவைப் பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

    வாழ்த்துகள். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. மேடம் இராஜ ராஜேஷ்வரி அவர்களுக்கு மகளிர் தின வாழ்த்தைத் தெரிவிப்பதில் மகிழ்கிறேன்.
    வல்லமையில் வெளியான தங்களது மகளிர் தின சிறப்புக் கட்டுரையில் எழுதியுள்ளது போல் இன்றைய தினம் மகளிர் மேம்பாட்டுக்காக உழைத்த மங்கையரை நன்றியுடன் நினைவு கூர வேண்டியது நம் கடமை.
    வல்லமையில் உங்கள் கட்டுரை வெளியானதற்குப் பாராட்டுக்கள் மேடம்.

    ReplyDelete
  3. "மக்கள் தொகையில் சரிபாதியான பெண்களின் முக்கியத்துவத்தை புறக்கணிக்கும் எந்த சமுகம் வளர்ச்சி என்னும் நிலையை அடையாது."
    அருமையான கருத்தை கூறி இருக்கிறீர்கள். நல்ல பொருத்தமான பதிவு.
    ஆண்கள் சார்பாக மகளிர் தின சிறப்பு பதிவை நானும் அர்ப்பணித்திருக்கிறேன்.

    ReplyDelete
  4. பாராட்டுக்கள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. இனிய மகளிர் தின வாழ்த்துகள் அன்பு தோழி.....

    ReplyDelete
  6. பெண்ணின் பெருமைகளை, அருமைகளை, அறிவினை, ஆற்றலை, பாசத்தை, பண்புகளை, தெய்வாம்சத்தை, புத்திசாலித்தனத்தை இன்னும் என்னென்ன நற்குணங்கள் உண்டோ அத்தனையும் ஒருங்கே பெற்ற உங்கள் மூலம் எழுதப்பட்ட இந்தப்பதிவினைப் படித்ததில் எனக்கு மிக மிக மகிழ்ச்சி ஏற்பட்டது. வாழ்த்துகள். பாராட்டுக்கள். பகிர்வுக்கும் தகவலுக்கும் நன்றியோ நன்றிகள். -
    வை. கோபாலகிருஷ்ணன். /

    பாராட்டுக்களுக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  7. இனிய மகளிர் தின நல்வாழ்த்துகள்..

    ReplyDelete
  8. இனிய மகளிர் தின வாழ்த்துகள்
    Vetha. Elangathilakam

    ReplyDelete
  9. இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்..

    http://anubhudhi.blogspot.in/

    ReplyDelete
  10. மகளிர் தின நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. மகளிர் தின வாழ்த்துகள் - பதிவு நன்று - வல்லமையில் பகிர்ந்ததற்கு பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete