Friday, March 2, 2012

கோலாஹல கோல்ஹாபூர் மகாலக்ஷ்மி









யாதேவி ஸர்வ பூதேஷு லக்ஷ்மிரூபேண ஸமஸ்திதா 
நமஸ்தஸ்மை நமஸ்தஸ்மை நமஸ்தஸ்மை நமோ நம:



மகிஷனை அழிக்க,முப்பெரும் தேவியாக உருக் கொண்டு வந்த ஜகன்மாதாவான பராசக்தியே மகாலக்ஷ்மி என்கிறது தேவி மகாத்மியம்.

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த பொழுது தோன்றி விஷ்ணுவை மணந்து அவர் மார்பிலே நித்ய வாசம் செய்யும் லக்ஷ்மியைத் துதித்தாலே நாரணனும் கூட வந்து “லக்ஷ்மி நாராயணனாக” நமக்கு அருள்கிறான்.  
லக்ஷ்மியைத் துதிக்கப் பல ஸ்லோகங்கள், முக்கியமாக ஸ்ரீசூக்தம், லக்ஷ்மி சகஸ்ரநாமங்கள் உள்ளன.

மகாராஷ்டிர மாகாணத்தில் உள்ள கோல்ஹாபூர் மகாலக்ஷ்மியின் கடாக்ஷம் முழுவதுமாகக் கிட்டியுள்ளதால், மும்பை பணக்கார நகரமாகத் திகழ்கிறது எனலாம். 
கோல்ஹாபூர் என்றாலே எல்லார் நினைவிலும் எழில் கோலமாய் திகழ்வது, மகாலக்ஷ்மி அன்னைதான்.

 மிகச் சிறந்த புண்ணிய க்ஷேத்திரமான் கோல்ஹாபூரில் கோவில் கொண்டருளும்  மகாலக்ஷ்மியின்  பெருமை பத்ம புராணத்தில் கூறப்பட்டுள்ளது..


ஜகதாம்பாளின் வலக்கை விழுந்தபடியால் “கரவீர க்ஷேத்திரம்” என்றும், 
இங்கு உறையும் மகாலக்ஷ்மிக்கு “கரவீர நிவாசினி ஸ்ரீ மகாலக்ஷ்மி பிரசன்ன” என்ற பெயராலும் அழைக்கப்படுகிறாள். 


இந்த கோல்ஹாபூர் மகாபிரளயத்தில் கூட அழியாதது என்றபடியால் “அவிமுக்த க்ஷேத்ரம்” என்றும் அழைக்கப்படுகிறது. 
108 சக்தி பீடங்களுள் ஒன்று இந்தக் கரவீர பிரதேசம் ..
அம்பாளின் வலக்கை வீழ்ந்த சக்தி பீடமாக விளங்குவதால் இயற்கை அழிவிற்கு அப்பாற்பட்ட நகரம் ...


வைகுண்டம், பாற்கடலை விட மகாவிஷ்ணு பெரிதும் போற்றி,  வாசம் செய்வதால் தேவாதி தேவர்கள், முனிவர்கள், ஆகியோர் விஷ்ணுவையும் லக்ஷ்மியையும் காண இங்கு வருகிறார்களாம். 

ஸ்ரீதத்தாத்ரேயர் தினமும் பிக்ஷைக்காக பகலில் இங்கே வருகிறார் என்பது ஐதீகம். 
தக்ஷிண காசி என்று அழைக்கப்படுவதால் இவ் உலகு நீப்போரின் காதில் சிவனே ராமராம மந்திரத்தை ஓதுகிறார் என்றும் நம்பப்படுகிறது

 புராண காலத்தில் கோலஹாசுரன் என்னும் அரக்கன், தேவர்களைத் துன்புறுத்தியதால் அவர்கள் பிரம்மா, விஷ்ணு, சிவனை வேண்டினர், 
மும்மூர்த்திகளின் வேண்டுகோளுக்கிணங்க மகாலக்ஷ்மி கோலஹாசுரனைக் வென்று தேவர்களைக் காத்தாள். 

இறக்கும் தருவாயில் அசுரன் தேவியை வேண்டினான். 
ஹே தேவி! நான் இறந்த இடம் ஒரு நகரமாக விளங்க வேண்டும்” என்றான். தேவியும், அவன் விருப்பப்படி “அப்படியே ஆகட்டும்” என்றாள். அவன் இறந்த இடம் கோல்ஹாபூர் என்று அழைக்கப்படலாயிற்று. 
அழகான “சாயத்திரி” மலைப்பகுதியில் பஞ்ச கங்கா நதிக்கரையில் எழுந்துள்ளது இந்த கோல்ஹாபூர்.

40கிலோ எடை கொண்டுள்ள சுமார் 3அடி உயரத்தில் வைரத் துணுக்குகள் மின்ன மிகவும் விலை உயர்ந்த கல்லால் வடிவமைக்கப்பட்ட விக்ரஹம் அருளை அள்ளி வர்ஷிக்கிறது...
சதுர வடிவில் அமைந்துள்ள ஒரு கல் மேடையில் வடிவமைக்கப்பட்டுள்ளது...

நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீ பீடே ஸுரபூஜிதே
சங்கு சக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

அன்னை நான்கு கரங்களில் மேலே உள்ள வலக்கரத்தில்தரையைத் தொடும் வண்ணம் உள்ள “கௌமோதக் கதிர்” தாங்கி,  
கீழே உள்ள வலக்கையில் “மதுலிங்கம்” என்ற பழத்தைத் தாங்கியுள்ளாள். இட மேல் கரத்தில் கத்தி, கேடயமும், இடக் கீழ்ககரத்தில் பொற் கிண்ணத்தைத் தாங்கியுள்ளாள்.  
தலைக்கு மேல் கிரீடம், அதன் மேல் சேஷநாகம். சிலையின் பின்புறம் சிம்ஹவாகனம் உள்ளது.
மேற்கு நோக்கிய வண்ணம் அருள் புரியும் அன்னையை மேற்குப் புறச் சுவரில் ஒரு திறந்த ஜன்னல்.  வழியாக வருடத்தில் குறிப்பிட்ட தினத்தில் மாலைச் சூரியன் தன் பொற்கிரணங்களால் அன்னையை  ஆராதிப்பது அற்புதம்...
கிரணோத்சவம்
வருடாவருடம் ஜனவரி 31ஆம் தேதியும், நவம்பர் 9ஆம் தேதியன்று சூரியனின் கிரணங்கள் அம்மனின் பாதத்தில் விழுகின்றன. 
 பிப்ரவரி 1ஆம் தேதியும், நவம்பர் 10ஆம் தேதியும் சூரியனின் கிரணங்கள் அம்மனின் மார்பில் விழுகின்றன.
பிப்ரவரி 2ஆம் தேதியும், நவம்பர் 11ஆம் தேதியும் சூரியனின் கிரணங்கள் அம்மனின் முழு மேனியில் விழும் காட்சி தரிசிக்கத் தக்க மிகவும் அபூர்வமானது... 

சூரியன் தன் பொற்கிரணங்களால் அன்னையைத் தொழுவதாக ஐதீகம். இவ்வகையில் சூரியகிரணம் விழும் வகையில் கர்ப்ப கிரகத்தில் ஜன்னலை அமைத்தது அந்நாளைய கட்டடக் கலைஞரின் திறன் வியந்து போற்றத்த்குந்தது...
தென்னாட்டில் சிவாலயங்களில் அபிஷேகம்
விஷ்ணு ஆலயங்களில் அலங்காரம், 
திருவண்ணாமலை தீபம் என்பது போல், 
கோல்ஹாபூர் மகாலக்ஷ்மி கோவிலில் ஆரத்திகள் மிகவும் சிறப்பு மிக்கது.


காலை 4.30 மணிக்கு லக்ஷ்மியின் பாத பூஜை தொடர்ந்து எடுக்கப்படும் ஆரத்தி “காகட்” ஆரத்தி..


மஹாபூஜையில் வாசனை மிகுந்த மலர்களாலும், குங்குமத்தாலும் பூஜிக்கப்படுகிறாள் அன்னை.அரிசியால் செய்த விசேஷ நைவேத்தியம் படைக்கப்பட்டு மங்கள ஆரத்தியும், கற்பூர ஆரத்தியும் காட்டப்படுகிறது. 


இரவு 10மணிக்கு சக்கரை கலந்த பால் நைவேத்தியம் செய்யப்பட்டு இரவு ஷேஜ் ஆரத்தி எடுக்கப்படும். பள்ளி அறைக்குச் செல்லும் சமயம் நித்ர விதா என்னும் பாட்டு பாடப்படும். 


ஒவ்வொரு வெள்ளி அன்று விசேஷ அலங்காரங்கள் செய்யப்பட்டு, நைவேத்தியம், ஆரத்தியும் செய்த பின்னர் அன்னையின் ஆபரணங்களைக் கழற்றி, கோவில் கஜானாவில் சேர்க்கிறார்கள்.


ஒரு நாளைக்கு 5முறை ஆரத்தி 4ஆரத்தி வெள்ளித் தட்டிலும், 
ஓர் ஆரத்தி தாமிரத் தட்டிலும் எடுக்கிறார்கள். 


திருவிழாக்காலம், ரதோத்ஸ்வம், அஷ்டமி ஜாகர், கிரகண புண்ய காலம், நவராத்திரி உற்சவம், கிரஹணோச்சவம் நாளிலும் விசேஷ ஆரத்திகள் எடுக்கப்படுகின்றன.



தீபாவளி பௌர்ணமியிலிருந்தும் கார்த்திகை பௌர்ணமி வரை திருவிழா நடத்தப்பட்டு விசேஷ ஆரத்திகள் எடுக்கப்படுகின்றன.

ஏப்ரல் மாதத்தில் ரத உற்சவம் கொண்டாடப்படுகிறது. 


வெள்ளி ரதத்தில் அன்னையை அலங்கரித்து வீதி உலாவாக எடுத்து வரப்படுகிறாள். 
ரதம் கோவிலை அடைந்ததும் பீரங்கி வெடிக்கச் செய்கிறார்கள்.  
மிலிட்டரி பேண்ட் வாத்தியம் வாசிக்கப்படுகிறது.
 ரதம் செல்லும் வழியில் பல வர்ணங்களில் ரங்கோலி போடப்பட்டு, வாணவெடியும் வெடிக்கச் செய்து மக்கள் உற்சாகத்துடன் ரத உற்சவத்தில் கலந்து கொள்கிறார்கள்.
வெள்ளி , பௌர்ணமி அன்றும் அன்னை வீதி உலா வருவதுண்டு.

அக்டோபர் மாதம் வரும் நவராத்திரி ஒன்பது நாளும் கோல்ஹாபூரில் கோலாஹலம்தான். 
தினமும் அபிஷேகம், ஆரத்தியுண்டு. 
பலவித ஆபரணங்களால் அலங்காரம் செய்யப்படுகிறது. 
பலவிதப் பூக்களாலும் வண்ண விளக்குகளாலும் அலங்காரம் செய்யப்பட்டு மகாலக்ஷ்மி ஊர்வலம் வருகிறாள்.  
கருட பந்தலில் அம்மன் வைக்கப்பட்டு பலவித கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

Goddess_Mahalaxmi_Kolhapur.jpg














17 comments:

  1. இதுவரை அறிந்திராத கோவில்
    பதிவும் படங்களும் ம்க மிக அருமை
    குறிப்பாக கழுகுப் பார்வையில் கொடுக்கப் பட்டுள்ள
    கோவிலின் ஒட்டு மொத்தத் தோற்றம்
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  2. Thank you...For showering us with the blessings and grace of Sri Mahalakshmi on this wonderful Friday morning.

    ReplyDelete
  3. கோலாப்பூர் மஹாலட்சுமி அம்மையின் தரிசனம் அற்புதம்.. பகிர்வுக்கு மிக்க நன்றி..

    http://anubhudhi.blogspot.in/

    ReplyDelete
  4. மும்பை பக்கம்தான் இருக்கு இந்த க்கோவில் போயிருக்கேன் படங்களும் பகிர்வும் நல்லா இருக்கு.

    ReplyDelete
  5. கோல்ஹாபூர் மஹாலக்‌ஷ்மயைப் பற்றி கேள்வி பட்டிருக்கிறேன்.சென்று தரிசனம் செய்ததில்லை. அழகிய படங்களுடன் சிறப்பான தகவல்கள். நன்றி பகிர்வுக்கு.

    ReplyDelete
  6. ”கோலாஹல கோல்ஹாபூர் மஹாலக்ஷ்மி” தலைப்பே அருமை.

    வெள்ளிக்கிழமைக்கு ஏற்ற கோலாஹலமான பிரும்மாண்டப் பதிவாக கொடுத்துள்ளது மிகச்சிறப்பு, தனிச்சிறப்பு. ;)

    ReplyDelete
  7. மூன்றாவது படம் பிரமிக்க வைக்கிறது.

    மஹாவிஷ்ணு இருக்க வேண்டிய இடத்தில், எப்போதும் அவரின் வக்ஷஸ்தலத்தில் வீற்றிருக்கும் மஹாலக்ஷ்மி விஸ்வரூபமாகத் தோன்றி காட்சியளிப்பது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது.

    எப்படித்தான் இதுபோன்ற அபூர்வப் படஙளைத்தேடித்தேடி வெளியிடுகிறீர்களோ! ;)))))

    அந்த அம்பாளின் புடவைக்கட்டு அடடா, ரொம்ப அழகு.

    அதுவும் அந்த பச்சைக்கலர் ஜரிகைக் கரையை விசிறி மடிப்பாக முன்புறம் தொங்கவிட்டுள்ளது சூப்பராகத் தானே இருக்கிறது!

    இவரின் வக்ஷஸ்தலத்தில் பெருமாளின் நாமமோ? நகைகளோ?

    எனக்கென்னவோ அது திவ்ய நாமம் போன்றே காட்சியளிக்கிறது. ;)))))

    அம்பாள் இப்போது எங்கிருந்தாலும்
    எந்த ஊரிலிருந்தாலும் வாழ்க வாழ்கவே ! ;)))))

    ReplyDelete
  8. அனைத்துமே மிகச்சிறப்பான தகவல்கள்.

    மீண்டும் மீண்டும் பொறுமையாக ஒவ்வொன்றாக படித்து ரஸிப்பேன்.

    மனமார்ந்த வாழ்த்துகள். பாராட்டுக்கள்.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  9. கோலாப்பூர் மஹாலஷ்மி பற்றிய அழகான படங்களுடன் நல்ல பகிர்வு.

    ReplyDelete
  10. அருமையான பதிவு.
    அற்புதமான படங்கள்.
    அரிய விஷயங்கள்.
    வாழ்த்துகள் அம்மா.

    ReplyDelete
  11. Aha Ahha
    Arputha darshanam Rajeswari.
    I never had gone to this temple.
    Even if i gone. i dont think i can see such a varities alankarams.
    very nice post dear.
    Thanks a lot.
    viji

    ReplyDelete
  12. மராட்டியர்களின் இஷ்ட தெய்வமாச்சே இவங்க. அதுவும் அந்த நவ்வாரி ஸ்டைல் புடவைக்கட்டில் அம்சமா இருக்காங்க.

    ReplyDelete
  13. மாராட்டிய பெண்கள் அணியும், நகை, மூக்குத்தி, புடவை கட்டுடன் அன்னை அழகு.

    மும்பை போய் தரிசனம் செய்யும் ஆவலை ஏற்படுத்தும் பதிவு.

    நன்றி.

    ReplyDelete
  14. அழகான படங்கள்! அருமையான விளக்கங்கள்!! வாழ்த்துக்கள்!!!பாராட்டுக்கள்..

    ReplyDelete
  15. மும்பை செல்வந்தர்கள் நிறைந்த நகரமாக இருப்பதற்குக் காரணம் புரிந்தது - எத்தனை எத்தனை படங்கள் - விளக்க்ங்கள் - கருத்துரைகள் - நீண்ட பதிவாக இடுவது எவ்வளவு கடினமான செயல் - அதுவும் தினமொன்று - பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  16. 33. கோவிந்தா ஹரி கோவிந்தா

    ReplyDelete