Saturday, March 10, 2012

தேரு வருதே ...







காரமடை ரங்கநாதர், ஸ்ரீதேவி, பூதேவி


குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார் படுதுயர் ஆயின எல்லாம்
நிலந்தரஞ்செய்யும் நீள்விசும்பு அருளும் அருளொடு பெருநிலம் அளிக்கும்
வலந்தரும் மற்றுந் தந்திடும் பெற்ற தாயினும் ஆயின செய்யும்
நலந்தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன் 
நாராயணா வென்னும் நாமம்.


கருடாழ்வாருக்கு திருமால்மகாலட்சுமியின் திருமணக்கோலம் காட்டியருளிய திருத்தலம் காரமடை..

பிரம்ம தீர்த்தம்
[Gal1]















செல்வ வளம் தரும் சீர் அரங்கன்சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளினார்.  காரை மரங்கள் நிறைந்த வனமாக இருந்த காரமடைப் பகுதியில்
கேட்டதெல்லாம் தரும் கற்பக விருட்சத்தைப்போல், செல்வ வளம் பெருகுவதற்காக வணங்கப்படும் தெய்வாம்சம் பொருந்திய பசு ஓரிடத்தில் காரை மரத்தின் அடியில் இருந்த புதர் மீது பால் சொரியவே அப் புதரை வெட்டியபோது, ரத்தம் பீறிட்டது. அசரீரி தோன்றி, சுவாமி சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளிருந்ததை உணர்த்தியதால் கோயில் எழுப்பப்பட்டது...

 ராமானுஜர்
ராமானுஜர்கர்நாடக மாநிலத்திலுள்ள திருநாராயணபுரம் தலத்திற்கு சென்றபோது இங்கு சுவாமியை வழிபட்டுச் சென்றுள்ளார்
மூலஸ்தானத்தில் சுவாமி சதுர வடிவில்சுயம்பு மூர்த்தியாக காட்சி தருகிறார்இவரது மேனியில் வெட்டுப்பட்ட தழும்பு இருக்கிறது.

உற்சவர் மூலஸ்தானத்திற்கு செல்வதில்லை..  எப்போதும் சன்னதி முன்மண்டபத்தில்தான் காட்சி தருகிறார்

இத்தலத்தில் சுயம்புவாக தோன்றிய அரங்கநாதர்சிறிய மூர்த்தியாக இருக்கிறார்
இவருக்கான உற்சவர்பெரிய சிலை வடிவில் இருக்கிறார். 


இவரை மூலஸ்தானத்தில் வைத்தால்மூலவரை தரிசிக்க முடியாது என்பதால் முன்மண்டபத்திலேயே வைத்திருக்கின்றனர்

மூலவர் சந்நிதியில் சடாரிக்கு பதிலாக, ஆசியளிக்கும் ராமபாணம் 
ஸ்ரீசுதர்ஸனர், ஆதிசேஷன் ஆகியோரின் வடிவம் உள்ளது..
வழக்கம்போல் உற்ஸவரிடம் மட்டுமே சடாரி ஆசிர்வாதம் செய்யப்படுகிறது   
ஆயுதபூஜையன்று ஒருநாள் மட்டும் இந்த இராமபாணத்திற்கு பூஜை செய்யப்படுவது விசேஷம்...



காரமடை தலத்தில் சுவாமி கீழேயும்அருகிலுள்ள மலையில் ரங்கநாயகி  காட்சி தரும் தாயார் பெயர் பெட்டத்தம்மன் ..சுவாமிஇந்த தாயாரையே திருக்கல்யாணம் செய்து கொள்வதாக ஐதீகம்

மாசி பிரம்மோத்சவத்தின் ஐந்தாம் நாளில்இக்கோயிலில் இருந்து அர்ச்சகர் மலைக்கோயிலுக்குச் சென்றுகும்பத்தில் தாயாரை ஆவாஹனம் செய்து(எழுந்தருளச்செய்துகோயிலுக்கு கொண்டு வருகிறார்

அப்போது பெருமாள் சன்னதியில் இருந்து இராமபாணத்தை வெளியில் கொண்டு சென்று தாயாரை வரவேற்கும் வைபவம் நடக்கிறதுஅதன்பின் கலசத்தை மூலஸ்தானத்தில் வைத்து பூஜிக்கின்றனர்மறுநாள் அதிகாலையில் சுவாமி திருக்கல்யாணம் நடக்கிறது.

ரங்கநாதருக்கு வலப்புறத்தில் ரங்கநாயகி 
தனிச்சன்னதியில் அருள்கிறார்..

மாசி பிரம்மோத்சவத்தின்போது மகம் நட்சத்திரத்தில் சுவாமி தேரில் எழுந்தருளுகிறார்

 தேர் நிலைக்கு வந்ததும் தேன்பழம்கற்கண்டுசர்க்கரைதேங்காய் ஆகிய பொருட்கள் கலந்த பிரசாதத்தை வைத்துக்கொண்டு
ங்கன் வருகிறான்,கோவிந்தன் வருகிறான்” எனச்சொல்லி ஒருவருக்கொருவர் கொடுக்கிறார்கள்
கவாள சேவை” என்று இதற்குப் பெயர்..
சுவாமியின் பாதத்தில் தண்ணீர் விடும் தண்ணீர் சேவை“, கையில் பந்தம் ஏந்திக்கொண்டு சுவாமியை வணங்கும்பந்த சேவை” என்னும் சேவைகளும் நடக்கிறது
சுவாமி சுயம்புவாக இருந்ததை கண்டறிந்தபோது இந்த வைபவங்கள் செய்யப்பட்டது போலவே இந்நிகழ்ச்சி நடக்கிறது.
அமாவாசைதோறும் காலையில் சுவாமிக்கு பாலபிஷேகம் நடக்கிறது. 
சுவாமி சன்னதியின் இடப்புறம் உள்ள ஆஞ்சநேயர்,சுவாமியை பார்த்து காட்சி தருகிறார்இந்த ஆஞ்சநேயர் சிலை,பெரிய சதுரக்கல்லில் வித்தியாசமாக வடிக்கப்பட்டிருக்கிறது.

ஸ்தல விருட்சமான காரைமரத்தில் கயிறு கட்டி நேர்ந்துகொண்டால் குழந்தை பாக்கியம், திருமண யோகம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

தவழும் சந்தான கோபாலனும்.. கருடனும்.......

சுற்றுலா மையமாகத் திகழும் நீலகிரிக்கு மேட்டுப்பாளையம் வழியே ரயில் பாதை அமைக்கும்போது, இந்தக் கோயில் இருக்கும் பாதையில்தான் ரயில்பாதை வரைபடம் தயாரித்தார் ஆங்கிலப் பொறியாளர் ஒருவர். 


அதன்படி கோயில் இருக்கும் பாதையில் ரயில் பாதை அமைக்க எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. அவரின் கனவில் வெண்குதிரையில் ஏறி அரங்கநாதர் வரும் காட்சி தோன்றியதாம். 


வியப்பில் ஆழ்ந்த அவர், தன் முயற்சியைக் கைவிட்டு, கோயிலுக்கு வந்து ரங்கநாதரை வணங்கி மரத்தாலான வெண்குதிரையை உற்ஸவங்கள் நடக்க காணிக்கையாக செலுத்தினாராம். 


இன்றும் அந்தக் குதிரை வாகனத்தில்தான் பெருமாள் உற்ஸவ காலங்களில் புறப்பாடு கண்டருள்கிறாராம்.


கோவை பகுதியின் இரண்டாவது புராதனமான கோயில் மற்றும் சுயம்பு வடிவில் அரங்கன் காட்சிதரும் வைணவத் திருத்தலம் 


இருப்பிடம்: கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் 30 கி.மீ., தூரத்தில் காரமடை உள்ளது.

புதுமணத்ம்பதிகளும் ,தாய்மை நிலையில் இருப்பவர்களும் தேரின் கலசம் அசைவதைப்பார்க்கூடாது என்பது ஐதீகம்..
அதன் உச்சகட்ட காஸ்மிக் அதிர்வுகள் அவர்களைப் பாதிக்க நேரும் என்ற விஞ்ஞான விளக்கமும் கிடைத்தது...



தேரேறித் திருவிழா காணும் அரங்கன்...



தேரின் மீது பழங்கள் வீசுகிறார்கள்..
தார் கணக்கில் வீசுவது பிரார்த்தனையாம்.

மஞ்சள் , நவதானியங்கள் மலர்கள் எல்லாம்
மக்களால் தேர் மீது வீச்ப்படுகிறது....
ஊர் கூடினால் தேர் ஓடும்..
தனி ஒருவன் ஊரிலுள்ள பெரிய தேரினை இழுக்க முடியாது. 
ஊரார் அனைவரும் சேர்ந்து வந்து வடம் பிடித்து இழுத்தால் 
மட்டுமே தேரினைப் பாதுகாப்பாக இழுக்க இயலும். 




காரமடை சிறப்பு தேர் வடிவ தேர் மிட்டாய்...






Chariot of Arulmigu Aranganatha Swamy Thirukovil Karamadai


















23 comments:

  1. நேரில் சென்ற அனுபவம்...எங்க ஊர் கோவில்...

    ReplyDelete
  2. தேர்த் திருவிழா... கோலாகலம்...

    ReplyDelete
  3. பெருமாளையும் தாயாரையும் சேவிப்பதற்கு நீங்கள் தந்த வாய்ப்பு எனக்கு ஒரு
    பெரும் பிரசாதம். துளசி தீர்த்தம்.

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  4. பெருமாளையும் தாயாரையும் சேவிப்பதற்கு நீங்கள் தந்த வாய்ப்பு எனக்கு ஒரு
    பெரும் பிரசாதம். துளசி தீர்த்தம்.

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  5. பெருமாளின் இன்னொரு ஆலயத்தினை சேவிக்கும் பேறுபெற்றேன் தாய் பெட்டத்தம்மன் அதன் காட்சிகளும் தேர் படங்களும் பக்தி நெறியின் தூய்மையைக்காட்டுகின்றது. அரங்கநாதன் வலம் வரும் காட்சிப்படம் பரவச உணர்வு நன்றி பகிர்வுக்கு!

    ReplyDelete
  6. வைணவக்கோவில்களுக்கு சேவார்த்தியாக பிரதிக்ஞை எடுப்பவர்கள் தங்கள் தோள்களில் சங்கு சக்கர முத்திரை பதிக்கும் வழக்கம் உண்டு. அந்த வழக்கம் இந்தக் கோவிலுக்கும் உண்டு. கோவை ஜில்லாவிலுள்ள கவுண்டர், நாயுடு சமூகத்தினர் பலர் இப்படி முத்திரை வைத்துள்ளனர். அவர்கள் இந்த தேர் திருவிழா சமயத்தில் கட்டாயம் கோவிலுக்குச் சென்று ஏதாவது சேவை செய்து வரவேண்டும்.

    ReplyDelete
  7. அப்பாடி தேரோட்டம்லாம் பார்த்தே வருடக்கணக்கு ஆச்சு உங்க பதிவு படங்களின் மூலம் தேரோட்டம் பார்த்த திருப்தி கிடைத்தது. நன்றி

    ReplyDelete
  8. திருப்பிப்படித்தாலும் தேருவருதே !

    ReplyDelete
  9. முதல் படம் மிக அருமை. தேரோட்டம் பற்றி படத்துடன் கூறியிருப்பது அருமை

    ReplyDelete
  10. ;))))) திரும்பத்திரும்பப் பார்த்தாலும் படித்தாலும் தேருவருதே! அருமையோ அருமை.

    ReplyDelete
  11. கற்பனைகள் கடந்த கற்பகம் தேருக்குப்பின்னால் வருவாளோ?

    ReplyDelete
  12. இன்று 4 படங்கள் திறக்கப்படாமல் உள்ளன.

    திறந்து தரிஸிக்கும் பாக்யம் கிடைத்த அனைத்துப்படங்களும் நன்றாக உள்ளன.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு என் நன்றிகள்.

    ReplyDelete
  13. தேர் அசைந்து ஆடி வருவதும், நிறை மாத கர்ப்பணிப் பெண்கள் நடந்து வருவதும் ஒன்று போல எனக்கு என் கற்பனையில் தோன்றுவதுண்டு. ;)))))

    ReplyDelete
  14. காரமடை தேர் தரிசனம் கண்கொள்ளா காட்சி.

    ReplyDelete
  15. இரண்டொரு முறை காரமடைக்கு சென்று தரிசித்திருக்கிறேன்.காரமட தேரை இன்று உங்க பதிவில் பார்க்க முடிந்தது. நன்றிங்க.

    ReplyDelete
  16. Aha Karamadai ther.
    My father make me sit on his shoulder and hold my brother tietly inhis hand, we enjoyed chakaramittai,baloon, kathadi....
    The happiness longlast for days together....
    Now years together....
    I went to the olden days.
    Very nice pictures Rajeswari.
    I enjoyed much.
    viji

    ReplyDelete
  17. அருமையான பதிவு.
    அற்புதமான படங்கள்.
    அரிய செய்திகள்.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  18. அரங்கரின் தரிசனம் அற்புதம்... ரங்கா ரங்கா கோவிந்தா கோவிந்தா...

    பகிர்வுக்கு மிக்க நன்றி..

    http://anubhudhi.blogspot.in/

    ReplyDelete
  19. காரமடைத் தேர் திருவிழா நேரில் கண்டது போல் இருக்கிறது - படங்களும் விளக்கங்களும் அருமை. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  20. ஓம் நமோநாராயண நமக ஸ்ரீரங்கண் தரிசணம் அருமை அருமை கோவிந்தா கோவிந்தா கோவிந்தா வேலுசாமி வெள்ளரிவெள்ளி

    ReplyDelete