




ஓம் நமோ பகவதே தக்ஷிணாமூர்த்தயே மஹ்யம்
மேதாம் ப்ரக்ஞாம் ப்ரயச்ச ஸ்வாஹா ||
- மேதா தக்ஷிணாமூர்த்தி மந்திரம்.


வாழ்வில் ஏற்றம் பெற வியாழக்கிழமையில் குருஓரையில் சிவனுக்கு வலப்புறம் இருக்கும் குரு பகவான் எனப்படும் தட்சிணாமூர்த்தியை மஞ்சள் ஆடை,கொண்டைக்கடலை மாலை கோர்த்து முல்லைப்பூ அணிவித்து நேருக்கு நேராக நின்றுழிபட வேண்டும்..
குரு பார்த்தால் கோடி நன்மையுண்டு"

கல்லாலின் புடையமர்ந்து நான்மறை ஆறங்கமுதற் கற்றவேள்வி,
வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த பூரணமாய் மறைக்கு அப்பலாய்,எல்லாமாய் அல்லதுமாய் இருந்தனை இருந்தபடி இருந்து காட்டிச்,
சொல்லாமற் சொன்னவரை நினையாமல் நினைத்து
பவத் தொடக்கை வெல்வாம்.
ஆலமர் கடவுளாகிய குருபகவான் இந்த குரு துதியை பாராயணம் செய்து வழிபடுபவர்களுக்கு கல்வி,ஞானம். போன்றவற்றை தருவார் என்பது கண்கூடு.

இதில் பரப்ரம்ம தத்வத்தைச் சொல்வது வயதில் சிறியவராக உள்ள தக்ஷிணாமூர்த்தி. அவர் தத்துவம் கூறிய விதம் மௌனமொழி. சிறந்ததான சிஷ்யர்கள் நால்வருக்கும் அது எளிதில் விளங்கிவிட்டது. அற்புதமான ஓர் ஆசிரியரல்லவா தென்திசைக்கடவுள் தட்சிணாமூர்த்தி..

சுலபமான முறையில் வேதாந்தக் கருத்துகளை,
உலக நன்மைக்காக ஸ்தோத்ரங்களாக அருளிச் செய்தவர்
ஸ்ரீமத் ஆதிசங்கர பகவத் பாதர்கள்..
வேதாந்த ஸ்தோத்ரங்களுள் ‘ஸ்ரீ தக்ஷிணா மூர்த்தி வர்ணமாலா’
மந்திரம் மிகவும் பயன்தரும்..
தென் புலத்தவனாம் யமதர்மராஜன் நமக்குக் கொண்டு வரும் பாசக் கயிற்றினைத் தடுத்து, அது இனி நம்மிடம் வரவே முடியாத, ஜனன - மரணமற்ற நிலையை நமக்குண்டாக்கும் வல்லமை பெற்ற தத்வஞானத்தைத், தருவதற்காக தென்திசை நோக்கி அமர்தலே பொருத்தமாகும் என்று சிவபெருமான் அமர்ந்திருத்தலால் அவருக்கு தக்ஷிணாமூர்த்தி என்ற திருநாமம் வழங்கப் பெற்று வருகிறது.
நம் நாட்டிலுள்ள அனைத்துச் சிவாலயங்களிலும் இந்த மூர்த்தி இவ்வண்ணமே அமைக்கப்பட்டுள்ளது.
ஆலயத்துக்குச் செல்வோர் தக்ஷிணாமூர்த்தியின் முன் அமர்ந்து சிறிதுநேரம் தியானம் செய்வது என்பது இன்று வரை வழக்கிலுள்ளது.

அந்தர்யாமியாய் அனைத்து ஜீவராசிகளுள்ளும் உறைந்திருக்கும் பரமாத்மா ஸ்வரூபமான, தெற்கு நோக்கிய முகத்துடைய அந்த தக்ஷிணாமூர்த்தியையே நான் எப்போதும் என் மனத்தில் இருத்திக் கொள்கிறேன்

எத்தெய்வத்தின் பெயராக, ‘ஓம்’ என்ற ப்ரணவத்தை
பெரியவர்கள் ஏற்றிருக்கின்றனரோ,
ஆகாயம் முதலான எல்லாப் பொருள்களும் எவரின்
ஒளியினால் ப்ரகாசப் படுத்தப் படுகிறதோ,
ப்ரஹ்மா முதலான தேவர்கள் எல்லாரும் எவரின்
ஆணைக்குட்பட்டு தம் தம் ஸ்தானத்தில் நிலை கொண்டுள்ளார்களோ,
அந்தத் தெய்வமான தென்முகக் கடவுளை, தக்ஷிணாமூர்த்தியை எப்பொழுதும் மனத்தில் இருத்தியிருக்கிறேன்.

ஆசுதோஷியான எந்த தெய்வம், பக்தியுடன் தன்னை வணங்குபவர்களுக்கு வேண்டிய புருஷார்த்தங்களைக் கொடுத்து, உடனடியாக அவர்களால் எதிர் கொள்ளப்படும் ஆபத்துகளை விலக்குகிறதோ, அரக்க உருவாகிய அபஸ்மாரத்தைத் தன் இடக் காலின் கீழ் அடக்கியவர் எவரோ, அந்த தெய்வமாகிய தென்முகக் கடவுளான தக்ஷிணா மூர்த்தியை எப்போதும் மனத்தில் இருத்தியிருக்கிறேன்.
மஹதி’ என்ற வீணையை மீட்டுபவராகிய நாரதர், வியாஸருடைய புத்ரராகிய சுகர் போன்றவர்கள், எந்த தெய்வத்தை, தங்கள் அறியாமை அகலுவதற்காகப் பிரார்த்திக்கின்றனரோ, சின் முத்திரை, புத்தகம், வீணை, ருத்ராக்ஷ மாலை ஆகியவற்றைக் கையிலேந்திக் கொண்டிருக்கும் அப்பெருமானை, தக்ஷிண திசை நோக்கிய தக்ஷிணாமூர்த்தியை எப்போதும் மனத்திலிருத்தியுள்ளேன்.

எவருடைய மந்திரத்தின் அக்ஷரங்களை முதலெழுத்தாகக் கொண்டு, இனிய மத்த மயூரம் என்ற விருத்தத்தில், மயிலின் விரித்த தோகையில் உள்ள அழகான வண்ணங்களையும் வடிவையும் ஒத்ததான இந்த வர்ணமாலையானது அமைக்கப் பெற்றுள்ளதோ, முனிபுங்கவரான, தேசிக ராஜாவாகிய, தக்ஷிணாமூர்த்தி ஸ்வரூபமான அந்தப் பரமாத்மா, இந்த வர்ணமாலையை கிருபையுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

மனமாகிய புஷ்பத்துடன் அந்த மாலையை தக்ஷிணாமூர்த்தி தெய்வத்திடம் சேர்த்து பிறவிப் பெரும் பிணியைத் தீர்த்திட்லாம்.."தக்ஷிணாமூர்த்தியே நம: ஸ்வாஹா"






வியாழக் கிழமை காலையிலேயே தக்ஷிணாமூர்த்தியின் தரிசனம்.
ReplyDeleteபல ஊர்களின் தக்ஷிணாமூர்த்தியின் உருவங்களின் தரிசனம் ஒரு சேர இந்த வியாழன் கிடைக்கப் பெற்றேன்.
படங்களுக்கும் விளக்கங்களுக்கும் நன்றி
திவ்ய தரிசனம் கண்டேன்.
ReplyDeleteமகதி - வீணை. மிக நன்று .வாழ்த்துகள்.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
தட்சிணாமூர்த்தியின் திவ்ய தரிசனம் அற்புதம்.. ஓம் தேவ குரவே நமஹ...
ReplyDeletehttp://anubhudhi.blogspot.in/
படங்களும் பதிவும் நல்லா இருக்கு
ReplyDeleteதென்திசை சிவனின்
ReplyDeleteவியாழ பகவானின்
திவ்ய தரிசனம் கிடைக்கப் பெற்றேன் சகோதரி.
இன்று குருவாரம் [வியாழக்கிழமைக்கு] ஏற்ற நல்ல பதிவு. சந்தோஷம்.
ReplyDeleteமாதா பிதா குரு தெய்வம் என்பார்கள்.
ReplyDelete[இங்கு காலை 9-12, பிற்பகல் 3-6 எங்கள் பகுதியில் நிரந்தர மின்தடை.
பிறகு இரவு ஓரிரு மணி நேரங்கள் மீண்டும் போய்ப்போய் வரும். அதற்கு சரியான நேரம் ஏதும் கிடையாது. இன்வெட்டெர்+லாப்டாப் மூலம் ஓரளவே சமாளிக்க முடிகிறது]
மாதா பிதாவுக்கு அமாவாசையாகிய இன்று மின்தடை நேரத்தில் நீர்க்கடன் செலுத்தி விட்டு, பிறகு மின் இணைப்பு கிடைத்த மகிழ்ச்சியில் உங்கள் பதிவுக்கு வந்தால் மாதா பிதாவுக்கு அடுத்த குருவான் ஆதிசங்கரர் தெய்வமான தக்ஷிணாமூர்த்தி தரிஸனம் ஆனது. ;)மகிழ்ச்சி.
அனைத்துப்படங்களும் பல விளக்கங்களும் மகிழ்வளிப்பதாக உள்ளன.
ReplyDeleteதேனி, வேதபுரீ ஆதிகுரு ஸ்ரீ ப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி படம் இன்றைய ஸ்பெஷல் விருந்து எங்கள் கண்களுக்கு.
ReplyDeleteஆதிசங்கரர் படமும் கொடுத்து, அவரைப்பற்றியும் கொஞ்சம் எழுதியுள்ளது மனநிறைவாக உள்ளது.
என் நேற்றைய பதிவுக்கு வந்த பின்னூட்டங்களில் திருமதி சந்த்ரவம்சம் அவர்களும், திருமதி ராஜி [கற்றலும் கேட்டலும்] அவர்களும், [தாங்கள் எனக்கு காலத்தினால் செய்த உதவிகளுக்காக] தங்களை மிகவும் பாராட்டி எழுதியுள்ளனர்.
ReplyDeleteதிரு சீனா ஐயா அவர்களும் கூடக் இதைக் குறிப்பிட்டுள்ளார்கள்.
அதற்காக நான் மீண்டும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ;)))))
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி !
நல்ல தரிசனம்...
ReplyDeleteநாம் எல்லோருமே கடவுளால் ஆட்டி வைக்கப்படும் பொம்மைகள்தானே?
ReplyDeleteதென்திசைக்கடவுள் தட்சிணாமூர்த்தியை வணங்குவோம்.
ReplyDelete57. அபயஹஸ்தா கோவிந்தா
ReplyDelete2554+6+1=2561
ReplyDelete