Thursday, March 8, 2012

சர்வதேச மகளிர் தின சந்தோஷ வாழ்த்துகள்...!!!!!!!!!!!!!!!

Roses
சர்வதேச மகளிர் தின சந்தோஷ வாழ்த்துகள்..

ppt International Womens Day templates



"மங்கையராய் பிறப்பதற்கே நல்ல
மாதவம் செய்திடல் வேண்டும்

"ஆணுக்குப் பெண் இளைப்பில்லை" என்று வலம் வரும் பெண்களின் சமூக, பொருளாதார நிலை உயர்ந்துள்ளது. 
அவர்களால் சுயமாகச் சிந்திக்கவும், செயலாற்றவும் முடியும்.
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கும் உயிர்க்காற்றாய் அவனுக்காய் எல்லாமாகவும் ஆண்டாண்டுகாலம் ஒரு பெண் இருக்கிறாள் தாயாகவோ, மனைவியாகவோ சகோதரியாகவோ அல்லது மகளாகவோ என்பது மறுக்கமுடியாத உண்மை!

ஒவ்வொரு நிலையிலும் பெண்ணோடுதானே வாழ்வு பிணைந்திருக்கிறது!!

"வாழ்க்கை" என்பது ஒரு "தவம்", "ஒரு வரம்", "ஓர் அற்புதம்", "ஓர் ஆனந்தம்", என்றெல்லாம் அனுபவித்து வாழ்வது பெண்ணின் வாழ்வு..

glitters of Happy women's day
அரசியல், சமூக, பொருளாதாரத் துறைகளில் பெண்கள் அடைந்த முன்னேற்றங்களை குறிக்கும் முகமாகவும் பெண்களுக்கான சமத்துவம், உரிமைகளை வலியுறுத்துவதற்காகவும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.

உண்மையில் மார்ச் 8ஆம் நாள் சர்வதேச உழைக்கும் மகளிர் தினம் என்றுதான் அழைக்கப்படுகிறது.

1911 ஆம் ஆண்டு முதன் முதலில் ஜெர்மனியில் மார்ச் 19 அன்று நூற்றுக்கணக்கான உழைக்கும் மகளிர் ஆடவருக்கு இணையான ஊதியம் கேட்டு வீதிக்கு வந்து போராடி சர்வதேச மகளிர் தினத்தை அறிவித்தார்கள் 
2011-இல் மார்ச் 08- உலக பெண்கள் தினம் நூறாவது பெண்கள் தினமாகக் கொண்டாடப்பட்டது..

குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்வதில் ஆண்களுக்கு சற்று அதிகமான கடமை இருப்பது போன்று, இல்லற வாழ்க்கையில் பெண்கள், ஆண்களைவிடச் சற்று அதிகமான பொறுப்புகளை ஏற்றாகவேண்டியது நியதி. 

வேர்வையின் துளிகளில்
வேதனைகள் வீழ்ந்திடின்
வெற்றிக்கனிகள் பறிக்கும் தூரம்
வெகுவிரையில் பட்டொளி வீசிடும்!!

இந்திய பாராளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகளும், மகளிர் அமைப்புகளும் போராடிவருகிறார்கள். 

 இந்திய வரலாற்றில் பெண்கள் ஜனாதிபதியாகவும், பிரதம ராகவும், முதல்வராகவும், சபாநாயகராகவும், எதிர்கட்சி தலைவராகவும், ஆட்சியாளர்களாகவும், விண்வெளி வீராங்கனையாகவும், கல்வியில் சிறந்தவர்களாகவும் இடம் பெற்றுள்ளனர். 


 பெண்கள் தொழிலதிபர்களாகவும், நிகழ்ச்சி தொகுப் பாளர்களாகவும், குடும்பத்தலைவியாகவும் பல துறைகளில் மேம்பட்டவர்களாகவும் திகழ்கின்றனர். 


டாக்டர்களாகவும், இன்ஜினியர்களாகவும், பைலட்களாகவும், விளம்பர மாடலிங்காகவும் தங்களது திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். 

பெண்களுக்கு ஓட்டுரிமை அளித்திருப்பதில் உலகின் முதன்மையான நாடாக இந்தியா திகழ்கிறது. பெண்கள் ஆண்களுக்கு சமமாக சட்டரீதியான உரிமைகளை பெற்றுள்ளனர். பெண்கள் இன்று வேலைக்கு சென்று குடும்ப பொறுப்பை நிர்வகிக்கின்றனர். 


கடந்த சில ஆண்டுகளாக உலக பெண்கள் தினமானது முழுமனதுடன் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இனி வரும் காலம் பெண்களுக்கு பிரகாசமான, சமமான, பாதுகாப்பான வாழ்க்கை அமைய வேண்டும் என்பதே எல்லோருடைய விருப்பம்.

சர்வதேசப் பெண்கள் தினம் சாதாரண பெண்ணிற்கு தைரியம் அளித்து சாதனை படைக்கும் பெண்ணாக வரலாற்றில் உரிமை கோரும் பெண்ணாக உயர்த்தியது 

  • சர்வதேச ரீதியில் பத்துக்கும் குறைந்த எண்ணிக்கையிலான நாடுகளிலேயே பெண்கள் அரச தலைவர்களாக உள்ளனர். பெண்கள் அரசியலில் முக்கியத்துவம் பெற்றாலும் உயர்மட்ட வர்த்தகம், கைத்தொழில் துறைகளில் தீர்மானம் மேற்கொள்ளல் போன்றவற்றில் குறைந்தளவே பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்றனர் என ஐ.நா. தெரிவித்துள்ளது.
1977ல் ஐக்கிய நாடு பொதுச் சபையில் சர்வதேச பெண்கள் தினத்தை ஐக்கிய நாடு பெண்கள் தினமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது. அதே ஆண்டு பெண்கள் மாநாட்டுக்கும் ஐக்கிய நாடு ஏற்பாடு செய்தது. சர்வதேச அளவில் பெண்கள் தினம் கடை பிடிக்கப்பட்டதை அடுத்து பெண்கள் நலன் குறித்து சர்வதேச மாநாடுகளுக்கு அது ஊக்குவித்தது.


ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பான் கி மூன் விடுத்துள்ள செய்தியில் 'அனைத்து சமூகத்திலுள்ள பெண்களின் துன்பங்களையும் அறவே ஒழிக்க வேண்டும்" என்று வலியுறுத்தியிருந்தார். பெண்களுக்கு உரிய அதிகாரம் கிடைப்பது மட்டும் இலக்கு அல்ல; இவ்வுலகில் வாழ்வதற்கான நல்ல சூழலை ஏற்படுத்துவதே நமது நோக்கம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

மேற்கத்திய நாடுகள் உலகறிய தாங்கள்தான் பெண்கள் முன்னேற்றத்திற்காக பாடுபடுகிறோம் என்கிறார்கள்.


 மகளிர் அமைப்புகள் பெண்கள் சமஉரிமைக்காக போர்க்கொடி ஏந்தி போராடி வருகிறார்கள். இத்தகைய நிகழ்வுகளாலும், போராட்டங்களாலும், மகளிர் அமைப்புகளின் செயல்களாலும் பெண்சமுதாயம் முன்னேற்றமடைந்துவிட்டதா? பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்திருக்கின்றனவா? என்பது பதில் சொல்லமுடியாத கேள்வியாகவே தொக்கி நிற்கும்...
“பெண் அடிமை என்பது மனித சமூக அழிவு என்பதை நாம் நினைக்காததாலேயே, வளர்ச்சி பெற வேண்டிய மனித சமூகம் பகுத்தறிவு இருந்தும் நாள்தோறும் தேய்ந்து கொண்டே வருகிறது”


பெண் அடிமைத்தனம் எங்கு இருக்கிறன்றதோ அங்குதான் பெண் சுதந்திரம் மற்றும் பெண்கள் எழுச்சி தேவைப்படுகிறது. பெண்கள் முன்னேற்றம் மற்றும் சமஉரிமை மையமாக வைத்து கி.பி. 1909-ல் அமெரிக்க சோசலிஸ்ட் கட்சியினர் முதல் முதலாக மகளிர் தினத்தை பிப்ரவரி மாதம் 28ம் தேதி கொண்டாடினர்.
இதன் முடிவாக 1911, மார்ச் 19 அன்று ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி மற்றம் சுவிஸ்லாந்து ஆகிய நாடுகளில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் அரசு அலுவலகங்கள் முன் திரண்டு வேலைவாய்ப்பு மற்றும் அரசியலில் சமஉரிமை அளிக்கவேண்டும் எனப் போராடினர். இதனால் ஏற்பட்ட கிளர்ச்சியினால் ஜக்கிய ராஜ்யம், ருஷ்யா போன்ற நாடுகளில் வேறுபட்ட நாட்களில் 1917 வரை இவ்வாறான குரல்கள் ஒலித்து வந்தன. 1917-க்குப்பின் உலக மகளிர் அமைப்புகள் ஒன்று கூடி மகளிர் தினத்தை மார்ச்-8 என்று கட்டமைத்தனர். இத்தகைய பெண்கள் போராட்டங்களால் 1945-ல் சான் பிரான்ஸிஸ்கோவில் ஐக்கிய நாடுகள் ஒன்றுகூடி பெண்கள் சமஉரிமை (gender equality as a fundamental human rights) என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

மேற்கத்திய கலாச்சாரம் எல்லாவற்றிற்கும் ஒரு தினம் வரையறுத்துதான் வைத்துள்ளது. பெற்றோர்கள் தினம், அன்னையர் தினம், தொழிலாளர் தினம், ஏன் எய்ட்ஸ் விழிப்புணர்வுக்கும் ஒருதினம். இவ்வாறான தினங்களில் அதற்குறிய கொண்டாட்டங்கள் கொண்டாடுவது வழக்கம். உலகமகளிர் தினத்தில் பெண்கள் சம உரிமைகள் பற்றியும், முன்னேற்றம் பற்றியும் ஆய்ந்து பெண்சமுதாயம் வளர்ச்சியடைய பாடுபடப்போவதாக சொல்கிறார்கள்.
நிச்சயமாக பெண்களின் நிலையில் வேலையும், வெளியுலகமும், மாற்றத்தையும், தன்னம்பிக்கையும் தரும் என்பதுஆணித்தரமாக உணர்த்தப்படவேண்டிய கருத்து...

மாற்றங்களின் முதல் படி நம்மிலிருந்து நம் வீட்டிலிருந்து
தொடங்கவேண்டியது .

தன்னம்பிக்கையோடு வாழ்வை மேம்படுத்த உதவவேண்டியதும், பெண் என்பதற்காக சலுகைகளை எதிர்பர்க்காமல்,பெண் என்பதற்காக பழிக்கப்படும் போது, அடக்கப்படும்போது எதிர்க்க தைரியம் உள்ளவளாக வளர்க்கவும்  வளர்க்கக் கடமைப்பட்டுள்ளோம்...
மாபெரும் எழுச்சிமூலம் ஆடவருக்கு இணையான வேலை உத்தரவாதம் கேட்டு அடக்கு முறைக்கு எதிராகக் கிளர்ந்த சர்வதே மகளிர் தினத்தை இந்தியாவில் முதலில் அனுசரித்த பெருமை கேப்டன் லட்சுமியையே சாரும். பெண் உரிமையை ஸ்தாபித்து சக தோழமையான மரியாதையும் பாதுகாப்பும் பெண் அடையும் வரை சர்வதேச மகளிர் தினம் எத்தனை நூற்றாண்டானாலும் தொடரும்…தொடரவேண்டும். .....
 உலகம் முழுவதும் வீட்டிலிருக்கும் அதாவது சும்மா தமது வீட்டு வேலைகளை செய்யும் பெண்களின் பணியின் மதிப்பு அதாவது ஆண்டுக்கு 11 ட்ரில்லியன் டாலர்கள்

சமத்துவம், கல்வி, வேலை, சுதந்திரம், சமூக பாதுகாப்பு என பெண்கள் தங்களுடைய உரிமைகளுக்காக நீண்ட நெடிய போராட்டத்தை நடத்திப்பெற்ற நாள் இது!
இனம்,மொழி,கலாச்சாரம்,பொருளாதாரம், அரசியல் ஆகிய பல்வேறு வேறுபாடுகளை மறந்து பெண்கள் தினம் அனைத்து பெண்களாலும் கொண்டாடப்பட்டு வருகின்ற நிலையில், ஆண்களுக்கு இணையாக பெண்களும் தங்கள் உரிமைகளைக் கேட்டு போராடியதை
குறிப்பிடத்தான் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பழங்காலத்தில் கிரேக்கத்தில் போரை முடிக்கு கொண்டு வர பெண்கள் போராடினார்கள்.



 பிரெஞ்சு புரட்சியின் போது பெண்கள் சுதந்திரம் சமத்துவம் மற்றும் சகோதரத் தன்மை வேண்டி போராடினார்கள். ஆனால் கடந்த நூற்றாண்டில்தான் பெண்கள் தினம் கொண்டாடுவது ஒழுங்கமையக் கடைபிடிக்கப்படுகிறது.
சமுதாய விடுதலை என்பது பெண் விடுதலையில்லாமல் சாத்தியமில்லை”என்றார் தோழர் லெனின்.


இந்நாள் China, Armenia, Russia, Azerbaijan, Belarus, Bulgaria, Kazakhstan, Kyrgyzstan, Macedonia, Moldova, Mongolia, Tajikistan, Ukraine, Uzbekistan and Vietnam மற்றும் சில நாடுகளில் அதிகாரப்பூர்வ விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


அன்றைய தினத்தில் தாயார், மனைவி, சகோதரி மற்றும் சக பெண் பணியாளர்களுக்கு ஆண்கள் பரிசுகள் வழங்கி வருகின்றனர். சில நாடுகளில் அன்னையர் தினத்திற்கு சமமாக இத்தினத்தை கடைபிடிக்கின்றனர். 

மகளிர் சுய உதவிக்குழுவில் சிறப்பாக பணியாற்றிய சின்னப்பிள்ளையின் காலை தொட்டு அப்போதைய இந்தியப் பிரதமர் வாஜ்பாய் வணங்கினார். இதையே இந்தியாவில் ஏழை எளிய பெண்களுக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவமாக கருதலாம். ஏழ்மையிலும் நாட்டில் தலைசிறந்த பெண்மணியாக உருவாகலாம் என்பதையும் இந்த சம்பவம் எடுத்துக்காட்டியது.




  •  கடந்த பல வருடங்களாக, பெண் ஊழியர்கள் மட்டுமே கொண்ட ஏர் இந்திய விமானங்கள் பல பன்னாட்டு, உள்நாட்டுத் தடங்களில் தடங்கல் இன்றி பயணித்து வந்துள்ளனவாம்.
  • *ஒரு பெண் கல்வி கற்றால் எதிர்வரும் சந்ததியே மேன்மையுறும் என்கிறோம்.
  • உடல் ரீதியாக பெண் தான் ஆணைவிட பலசாலி.
  • சாலையோரத்தில் முதுகில் குழந்தையை கட்டிக்கொண்டு கடப்பாறையை தூக்கி கல்லுடைக்கும் வேலை செய்யும் உழைக்கும் வர்க்க பெண்ணை பாருங்கள். அவர்களையெல்லாம் பார்த்து பலவீனமானவர்கள் பெண்கள் என்று சொல்ல முடியுமா?
    இடுப்பில் குழந்தையை சுமந்து கொண்டு செங்கல்லை தலையில் சுமந்து கட்டிட வேலை செய்யும் உழைக்கும் பெண்களை பார்த்து சொல்லமுடியுமா பெண்கள் பலவீனமானவர்கள் என்று?
    கிராமங்களில் தண்ணீர் எடுப்பதற்காக தலையில் பானைகள் அடுக்கி நீர் கொண்டு வரும் உழைக்கும் பெண்களை பார்த்து சொல்ல முடியுமா பெண்கள் பலவீனமானவர்கள் என்று?

    ஆண்களை விட பெண்களே அதிக சக்தி வாய்ந்தவர்கள் என்கின்றனர் விஞ்ஞானிகள். பெண்களை குளிரும், உஷ்ணமும் அதிகமாகப் பாதிப்பதில்லை.இயற்கையிலேயே பெண்களுக்கு மனோ பலமும், உடல்பலமும் இருக்கிறது. பெண் குழந்தைகளே ஆண் குழந்தைகளை விட, இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவே நடக்கப் பழகி விடுகின்றன; விரைவில் பல் முளைப்பதும் பெண் குழந்தைகளுக்குத் தான்.வார்த்தைகளை சுத்தமாக உச்சரிப்பதும் பெண் குழந்தைகள் தான். பெண்களுக்குத் தான் புத்திக்கூர்மை அதிகம் என்கிறது விஞ்ஞான ஆய்வு முடிவு.

    பெண்களுக்கெதிரான வன்முறையை புறக்கணிப்பது முழுச் சமூகத்தினதும் பொறுப்பாகும்” 

     பொருளாதாரத்தில், உரிமையில், சமூக அமைப்பு என்று பல வகைகளில் ஆண்களுக்கு அடிமைப்பட்டு, அடைந்து கிடக்கும் பெண்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டவும், அவர்கள், ஆண்களுக்கு எந்த விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல என்ற நிலையை உருவாக்குவதற்காகவுமே இந்நாள் கொண்டடாட்டம் முக்கியத்துவம் பெறுகிறது...
 பாரதத்தில் பெண்மை போற்றப்பட்டதைப்போல வேறு

எந்த நாட்டிலோ இனத்திலோ போற்றப்பட்டது இல்லை. 
பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்

திட்டமிட்டுக் குடும்ப நிர்வாகம் நடாத்துவதும்

கட்டுப்பாடாய் இல்லறத்தை கவனமாக உயர்த்துவதும்

எட்டுத்திசை எங்கணுமே பெண்ணின் பெருமையதே!
பெண்கள் எந்த விதத்திலும் அறிவில்
சளைத்தவர்களாக இருந்தது இல்லை. 
விண்ணிலே ஒளிவிடும் நிலவினைப் போலவே
கண்ணவன் கணவனின் காரியம் யாவிலும்

பண்ணிலே இசையின் பரிமாணம் ஒலிப்பதுபோல்

வண்ணமாய்க் கலந்திடும் பெண்மையைப் போற்றுவோம்.
இந்தியப் பெண்கள் பொறுமை, நிதானம், தியாகம், கற்பு,

தாய்மை ஆகிய நற்குணங்களின் நிறைவை நோக்கிச் செல்வதில் தான் தங்களின் உண்மையான

முன்னேற்றம் உள்ளது என்று நம்பினார்கள். 

இன்றைய தலைமுறைப் பெண்களிடம் தெளிவு, துணிவு, தன்னம்பிக்கை, கடின உழைப்பு,

இலட்சியப்பற்று ஆகியவற்றுடன் தங்களின் "சுயத்தை" அவர்கள் அடையாளம் கண்டுணர்ந்து பெருமை கொள்கிறார்கள்..
சுயகட்டுப்பாடு, தன் முயற்சி, தெளிந்த சிந்தனை, திட நம்பிக்கை, கடின உழைப்பு,

இனிய சுபாவம், விட்டுக் கொடுத்தல் ஆகிய பண்புகளைப் பின்பற்றினால் ஒரு பெண்

தெய்வமாகப் போற்றப்படும் நிலைக்கு உயர முடியும்.

அறிவாற்றலே மூலதனம், அழகன்று என்று உணர வேண்டும். சலனமற்ற இதயம் இருந்தால்


சத்தியம் அங்கே உறையும். பெண்மை தாய்மையை நோக்கியே வளர்கிறது. தாய்மைதான் அதன்

நிறைவு. ஆழம் காண முடியாத இனிமை; பிரிக்க முடியாத பந்தம், நிழல் காண முடியாத
புனிதம் ஆகிய மூன்றும் சேர்ந்ததுதான் தாய்மை.
"அன்னைக்குக் கட்டுப்படாத அரக்கனும் உண்டோ?" எனவே தாய்மை மனது வைத்தால் நடந்து

கொண்டிருக்கின்ற அநியாயங்களும், அக்கிரமங்களும் காணாமல் போய்விடும்.

வன்முறைகள் வாய்பூட்டு போட்டுக் கொள்ளும். கொலையும், கொள்ளையும் இல்லாது ஒழியும். தீவிரவாதம் நில்லாது ஓடும்.
அவளுள்ளும் உள்ளது ஆற்றல்; உள்ளது ஒரு பெரிய சக்தி; அச்சக்தியை அவள் இச்சமுதாயம் பயனுற பயன்படுத்த வேண்டும். தங்களைச் சுற்றி என்ன தான் மாற்றங்கள் நிகழ்ந்தாலும், எந்த நிலையிலும் மாறாத, அழிவற்ற பொருள்களாகச் சிலவற்றைப்

பெண்கள் நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும். அவை தாம் அவள் மனத்தின், வாழ்வின்மையப்பொருளான கொள்கைகள். 


எந்தக் கொள்கைகளை உள்ளீடாகக் கொண்டு நாம் வாழப்போகிறோம் என்பதைத் தீர்மானம் செய்து கொள்ள வேண்டும். தீர்மானித்தபின்
எந்தக் காரணத்திற்காகவும் அக்கொள்கைகளை விட்டுக் கொடுக்கக் கூடாது.
ஆணுக்குப் பெண் சளைத்தவர் ஈங்கில்லை கண்டீர் என்கிற கவிஞனின் கனவு நனவாகிற உன்னதம் காண்கிறோம் 

நம் வெற்றி நமக்கு மட்டுமன்றி, பிறருக்கும் பயன்பட்டால் அது மேன்மையான வெற்றி.

நமது திறமைகளையும், ஆற்றல்களையும் சக்தியையும் பலரது அமைதிக்காகவும், மனநிறைவிற்காகவும் செலவழித்தால் அதுதான் உண்மையான ஆனந்தமான வாழ்வு.


இளம் பெண் ஒருத்தி உடம்பு முழுக்க தங்க நகைகளை அணிந்துகொண்டு எவ்வித அச்சமுமின்றி நள்ளிரவில் தன்னந்தனியாக வெளியே சென்று பத்திரமாக வீட்டுக்குத் திரும்ப முடியும் என்கிற நிலை என்று ஏற்படுகிறதோ, அன்று தான் நாடு உண்மையான விடுதலை அடைந்ததாக அர்த்தம்" என்றார் மகாத்மா. மகாத்மாவின் கனவு நனவாக இந்த சர்வதேச பெண்கள் தினத்தில் உலகில் உள்ள ஒவ்வொருவரும் உறுதி எடுத்துக் கொள்ளவேண்டும். 


வெற்று ஆடம்பரமும், ஆரவாரமும் வாழ்க்கை ஆகாது. அடுத்தவர் முகம் சுளிக்கும்படி நம் உடையும், உள்ளமும் இருத்தல் ஆகாது. "ஆணாதிக்கம்", "பெண்ணியம்" என்றெல்லாம் பேசிக்கொண்டும், ஒருவர் மீது மற்றவர் குற்றம் சுமத்திக் கொண்டும் இருக்காமல்,

சமுதாயச் சிந்தனை ஒன்றைப் பிரதானமாகக் கொண்டு, ஒற்றுமையுடன் செயல்பட்டால் எல்லா நாட்களுமே மானுடம் உள்ளமட்டும்  மகளிர் தினங்களாகத் திகழும் பெருமை பெறும்..

20 comments:

  1. மங்கையரைக் கொண்டாடும் மகத்தானப் பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள். இணைக்கப்பட்டப் படங்கள் இன்னும் அழகு சேர்க்கின்றன பதிவுக்கு. என்றென்றும் பெண்மை போற்றுவோம்.

    ReplyDelete
  2. அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துகள்....

    ReplyDelete
  3. பெண்கள் நாட்டின் கண்கள்......!!!

    ReplyDelete
  4. நம் இந்திய நாட்டின் பெண்களின் பொறுமை இருக்கே.....!!! அந்த பொறுமைதான் நம்மை வாழ வைத்து கொண்டு இருக்கு உண்மையும் அதுவே நன்றி...

    ReplyDelete
  5. சிறப்பான பதிவு
    அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. மனம் நிறைந்த மகளிர் தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. இனிய மங்கையர் தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. மிக மிக மிக மிக மிக மிக அருமையான அழகான அனைத்து விஷயங்களையும் அள்ளித்தந்த பதிவு.

    “சர்வதேச மகளிர் தினம்” இனிய வாழ்த்துகள்.

    பாராட்டுக்கள்.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  10. மனம் நிறைந்த மகளிர் தினவாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. சிறப்பான பதிவு
    அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. சர்வதேச மகளிர் தின சந்தோஷ வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  13. மகளிர் தின வாழ்த்துக்கள். விரிவான பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete
  14. Nice write up and fentastic photos dear.
    Happy wishes to you too.
    viji

    ReplyDelete
  15. மிகச் சிறப்பான பதிவு !
    அனைவருக்கும் மகிழ்ச்சியான மகளிர் தின வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  16. நல்ல பதிவு.
    வாழ்த்துகள் அம்மா.

    ReplyDelete
  17. மிகச் சிறப்பான மகளிர் தின பதிவு... மனம் நிறைந்த மகளிர் தின நல்வாழ்த்துகள் சகோதரி...

    ReplyDelete
  18. அன்பின் இராஜ இராஜேஸ்வரி - மகளிர் தினத்திற்கான பதிவு அருமை. படங்களூம் விளக்க்ங்களும் கொண்ட நீண்ட பதிவு. பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  19. 40. தர்ம ஸம்ஸ்தாபக கோவிந்தா

    ReplyDelete